வேண்டுதல்களை நிறைவேற்றும் விநாயகர் அகவல்.

எந்தக் கிழமைகளில் விநாயகரை வழிபட மறந்தாலும்,வெள்ளிக்கிழமை மற்றும் சதுர்த்தி நாட்களில் மறக்காமல் வணங்க வேண்டும்.அவ்வாறு,விநாயகரை வணங்கும் போது நமது நினைவிற்கு வரவேண்டிய மற்றொருவர் ஒளவையார்.
அவர்‘சீதக்களப செந்தாமரைப்பூம்..’என்று தொடங்கும் விநாயகர் அகவல் என்னும் பாமாலையை பாடியருளியவர்.
#அகவல்_பிறந்த_கதை

திருமாக் கோதை என்னும் சேரமான் பெருமாள் மன்னர்,சுந்தரமூர்த்தி நாயனாருக்கு நெருங்கிய நண்பர்.

ஒரு நாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லறம் வெறுத்து,கைலாயம் செல்ல எண்ணி சிவபெருமானைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தார்.
சிவன் அவரை கைலாயத்திற்கு அழைத்துச் செல்ல ஐராவதம் என்னும் தேவலோக யானையையும்,
தேவர்களையும் அனுப்பினார்.

சுந்தரரும் யானை மீது கிளம்பி விட்டார்.அப்போது வெளியில் சென்றிருந்த சேரமான் பெருமாள்,வானத்தில் இந்த அதிசயத்தைப் பார்த்தார்.
அவருக்குச் சுந்தரரைப் பிரிய மனமில்லை.எனவே,தன் குதிரையில் ஏறிய அவர் அதன் காதில் #சிவாயநம என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதினார்.உடனே குதிரையும் கைலாயத்தை நோக்கிப் பறந்தது.
இதை அறிந்த மன்னரின் படைத் தலைவர்கள் அவரைப் பிரிய மனமின்றி தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டனர்.அவர்களது உயிரும் கைலாயத்தை நோக்கிப் பறந்தது.
இப்படி சென்ற சுந்தரரும்,சேரமான் பெருமாளும்,கீழ் நோக்கிப் பார்த்தனர்.ஓரிடத்தில் ஔவையார் விநாயகர் பூஜையில் இருப்பதைக் கண்டு"நீயும் வாயேன் பாட்டி"என்று அழைத்தனர்.
பூஜையை முடித்து விட்டு வருகிறேன் என்று அவ்வைப் பாட்டி பதில் அளித்தாள்.அப்போது விநாயகர் அவ்வையார் முன் தோன்றி, "நீயும் கைலாயம் போக வேண்டுமா?' என்றார்."நீ இருக்கும் இடமும்,உன்னைப் பூஜிக்கும் இடமுமே எனக்கு கைலாயம் போலத் தான்.
நீ விருப்பப்பட்டால் என்னை கைலாயத்திற்கு கொண்டு போ' என்றார் அவ்வையார்.

"ஔவையே! நீ குழந்தைகளுக்காக நிறைய பாடியிருக்கிறாய்.தெய்வக் குழந்தையான என்னைப் பற்றி ஒரு பாட்டுப் பாடு'என்றதும், "சீதக்களப''என ஆரம்பிக்கும் அகவலைப் பாடினார்.
பாடி முடிந்ததும்,விநாயகர் மகிழ்ச்சியில் அவளைத் தும்பிக்கையால் தூக்கி,சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாயம் சென்று சேர்வதற்கு முன்பாகவே கொண்டு சேர்த்து விட்டார்.
கைலாயத்தை அடைந்த பிறகு ஔவையாரை சுந்தரரும்,சேரமான் பெருமாளும் ஆச்சரியப்பட்டு நடந்த விபரத்தைக் கேட்டனர்.விநாயகர் முதற் கடவுள்.அவரை வணங்குவோர் எல்லாவற்றிலும் முதல்நிலையில் தான் இருப்பார்கள் என்றாள் அவ்வை.
இப்படி பிறந்தது தான் விநாயகர் அகவல் என்னும் தேன் தமிழ் பாடல்.

விநாயகர் அகவலை,சதுர்த்தியன்று பாடினால்,நாம் பிள்ளையாரிடம் எது வேண்டினாலும்,அதை அவர் இரட்டிப்பாகத் தருவார்.
விநாயகர் அகவல் படிப்பது வீட்டிற்கும்,நாட்டிற்கும் மட்டுமல்ல, உலகிற்கே நல்லது”என்று சொல்லியிருக்கிறார் காஞ்சி மகா பெரியவர்.

#ஜெய்ஹிந்த் 🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

9 Jul
*#சங்கடங்களை_உடனடியாக_நீக்குவார்_சக்கரத்தாழ்வார்*

*#சக்கரத்தாழ்வார்_பின்னால்_நரசிம்மர்_இருப்பத_ஏன்*

திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்பர்.

திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது.
சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக
தீரும் என்பது ஐதீகம். Image
பக்தனான பிரகலாதனை காக்க திருமால், நரசிம்மாராக அவதரித்தார்.

தாயின் கருவில் இருந்து வராததாலும் , கருடருடன் வராத காரணத்தாலும், இந்த அவதாரத்தை அவசர திருக்கோலம் என்பர்.

பக்த பிரகலாதனுக்காக ஓடிவந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார்.
நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம்
சொல்லிவிட்டால் போதும் அவர் வேகமாகச் சுழல்வார்.
அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர்
நம் முன்னே வந்து உடனடியாக குறைகளைத் தீர்ப்பதாக ஐதீகம்.
Read 6 tweets
9 Jul
இது உங்கள் இடம்: தி.மு.க., ஒன்றும் குடும்ப கட்சியல்ல!

வி.எம்.கலைப்பித்தன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: தமிழக மேற்கு மண்டல தி.மு.க., பொறுப்பாளராக, முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி பொறுப்பேற்க உள்ளாராம்... இதிலிருந்து என்ன தெரிகிறது?
'உதயநிதி தான், அடுத்ததாக பட்டம் பெற போகும் இளவரசர்' என, தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் காய் நகர்த்துகிறார். தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி எப்படி ஸ்டாலினை உருவாக்கினாரோ, அவ்வாறே உதயநிதியையும் கட்சியில் உயர வழி ஏற்படுத்தப்படுகிறது.
அரசியல்வாதிகள் ஒன்றை மறந்து விடுகின்றனர்; இது மன்னர் ஆட்சியல்ல!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே பட்டம் ஏற்க முடியும். அரசியல் கட்சி, குடும்ப சொத்தாக மாறினால் என்னவாகும் என்பதற்கு காங்கிரஸ் ஓர் உதாரணம். ஜனநாயக நாட்டில், குடும்ப ஆட்சி வெகுகாலம் நீடிக்க முடியாது.
Read 9 tweets
9 Jul
*#16_கரங்களுடன்_உக்கிர_நரசிம்மராககாட்சி_தரும்_லட்சுமி_நரசிம்மர்*

சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் லட்சுமி நரசிம்மர் உக்கிர நரசிம்மராக 16 திருக்கரங்களுடன், மேற்கு பார்த்து நின்று இரணியனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறார்.

🙏🇮🇳1 Image
வசிஷ்டர் தவம் இருந்த இடம் சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவில் ஒரேநாள் நரசிம்மர் வழிபாட்டில் மூன்றாவதாக நிறைவாக செல்ல வேண்டிய ஆலயமாகும். தமிழ்நாட்டில் அமைந்துள்ள நரசிம்ம தலங்களில் இத்தலம் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்தது.

🙏🇮🇳2
புராண காலத்தில் கிருஷ்ணா ரண்யசேத்திரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிங்கிரிகுடி கோவிலில் சித்திரை சுவாதி நரசிம்மர் ஜெயந்தியன்று தேர்த்திருவிழா, மாசி மகத்தன்று புதுச்சேரி கடலில் தீர்த்தவாரி, ஐப்பசியில் பவித்ர உற்சவம், 🙏🇮🇳3
Read 12 tweets
7 Jul
புதிய அமைச்சரவை

பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். 7 பெண்கள் மற்றும் 8 மருத்துவர் உள்ளிட்ட 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இவர்களில், தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகன் உள்ளிட்ட 36 பேர் புதுமுகங்கள். 7 பேர் ஏற்கனவே அமைச்சரவையில் இருந்தவர்கள்.
புதிதாக அமைச்சரவையில் இடம் பெற்றவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சர்கள் இலாக்க விவரம்:

1) நரேந்திர மோடி: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை (கூடுதல் பொறுப்பு)
Read 21 tweets
7 Jul
திருக்கண்டியூர்

மங்களாம்பிகை உடனுறை பிரம்மசிரகண்டீசுவரர் (வீரட்டேஸ்வரர், பிரமநாதர், ஆதிவில்வவனநாதர்)
பதமே தஞ்சம்

அட்டவீரட்டானத் தலங்களில் இது முதலாவது தலம்

பிரம்மாவின் தலையைக் கிள்ளியதால் ஈசனுக்கு ஏற்பட்ட பிரமஹத்தி தோஷம் இத்தலத்தில் மஹாவிஷ்ணுவால் நீங்கியது

🙏🇮🇳1
சாப விமோசனம் பெறக் காரணமாக இருந்த ஸ்ரீ ஹரசாப விமோசனப் பெருமாள் எழுந்தருளி இருக்கும் திவ்யதேச ஆலயம் சிவன் கோவிலுக்கு மிக அருகில் இருக்கிறது

முருகப்பெருமானே இங்கு துவாரபாலர்கள் இடத்தில் ஞானகுரு, ஸ்கந்த குருவாக இருக்கிறார்

🙏🇮🇳2
இத்தலத்திலுள்ள செவிசாய்த்த விநாயகர் மிகவும் வரப்பிரசாதி.

திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் ஐந்தாவது தலமாகும்.

🙏🇮🇳3
Read 10 tweets
7 Jul
முன்கூட்டியே இயல்புக்கு திரும்புவதால் உரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ஜெனிவா: கோவிட் பெருந்தொற்று தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் மிகவும் முன்கூட்டியே அவசர, அவசரமாக முழு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. அதற்கான விலையை நாம் கொடுக்க வேண்டியிருக்கும்' என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அவசர சுகாதாரத் திட்டத்தின் தலைவர் மைக்கேல் ரியான் தெரிவித்து உள்ளதாவது:உலகம் முழுவதும் கோவிட் தொற்று பாதிப்பு முழுமையாக நீங்கவில்லை. இந்தியாவில் 2வது அலை முடிவுக்கு வரும் சூழலில், பல்வேறு நாடுகள் அடுத்தடுத்த அலைகளைச் சந்தித்து வருகின்றன.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(