இது உங்கள் இடம்: தி.மு.க., ஒன்றும் குடும்ப கட்சியல்ல!
வி.எம்.கலைப்பித்தன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: தமிழக மேற்கு மண்டல தி.மு.க., பொறுப்பாளராக, முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி பொறுப்பேற்க உள்ளாராம்... இதிலிருந்து என்ன தெரிகிறது?
'உதயநிதி தான், அடுத்ததாக பட்டம் பெற போகும் இளவரசர்' என, தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் காய் நகர்த்துகிறார். தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி எப்படி ஸ்டாலினை உருவாக்கினாரோ, அவ்வாறே உதயநிதியையும் கட்சியில் உயர வழி ஏற்படுத்தப்படுகிறது.
அரசியல்வாதிகள் ஒன்றை மறந்து விடுகின்றனர்; இது மன்னர் ஆட்சியல்ல!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே பட்டம் ஏற்க முடியும். அரசியல் கட்சி, குடும்ப சொத்தாக மாறினால் என்னவாகும் என்பதற்கு காங்கிரஸ் ஓர் உதாரணம். ஜனநாயக நாட்டில், குடும்ப ஆட்சி வெகுகாலம் நீடிக்க முடியாது.
காங்கிரஸ் குடும்ப கட்சியாக உள்ளதால் தான், வலுவான பா.ஜ.,வை எதிர்க்க முடியவில்லை. 2024 பார்லிமென்ட் தேர்தலிலும், காங்கிரஸ் வெற்றி பெறுமா என்பது சந்தேகம் தான்.
காங்கிரசில் வேறு யாராவது ஒருவர் தலைமை ஏற்றிருந்தால், மோடி அரசுக்கு கடுமையான போட்டியை கொடுத்து, வரும் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றலாம்.
அது முடியாததால் தான், சரத்பவார் தலைமையில் மூன்றாவது அணி முளைக்கும் அபாயம் ஏற்பட்டு விட்டது. இதுவும் வரும் தேர்தலில் தேறாது என, அவர்களுக்கே தெரியும்.
காங்., தலைவர்கள் 23 பேர், எப்போது சோனியா குடும்ப அரசியலை எதிர்த்து, 'நோட்டீஸ்' விட்டனரோ, அப்போதே அவர் ஒதுங்கியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், கட்சியை காப்பாற்றி இருக்கலாம்.
இதே கதி தி.மு.க.,வுக்கும் ஏற்படாதா என்ன... தி.மு.க., ஒன்றும் குடும்ப கட்சியல்ல. ஆனால் அத்தகைய தோற்றத்தை, கருணாநிதி சமயோஜிதமாக ஏற்படுத்தி விட்டார். முதல்வர் ஸ்டாலினுக்கு பின் அந்த நிலை மாறலாம்.
குடும்ப கட்சி வெறுப்பால், நெல்லிக்காய் மூட்டையை பிரித்தாற் போல தி.மு.க., சிதறி போகலாம்.குடும்ப கட்சி என்ற சிறையில் இருந்து தி.மு.க., வெளியேற வேண்டும். அது தான், அக்கட்சிக்கு நல்லது.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம், பேரணி எல்லாம் நடத்தப்படுகின்றன.
அந்த போராட்டங்களில் எல்லாம், 'மத்திய அரசை கண்டிக்கிறோம்' என்ற கோஷமே இருக்கிறது.பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றத்தில் மாநில அரசுக்கும் பங்குண்டு என்பது காங்கிரசாருக்கு நன்கு தெரியும்.
பெட்ரோலின் அடிப்படை விலை 39 ரூபாய், 30 காசுகளாக இருக்கும் நிலையில், அதன் மீது 32 ரூபாய், 90 காசுகளை மத்திய அரசு வரியாக விதிக்கிறது.
இதனால் 1 லிட்டர் பெட்ரோல் 72 ரூபாய், 20 காசுகளுக்கு மாநிலங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
எனும் கவிதை வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ தாண்டவமாடி அசுரன் அபஸ்மரனை ஒரு காலால் மிதித்து வதம் செய்து இன்னொரு காலை தூக்கி வைத்து நடனமாடிக் காட்சித் தந்து கொண்டிருக்கும் தில்லையம்பல நடராஜருக்கு இவ்வார்த்தைகள் தகும்.
திருநாளில் தானே நாட்டியம் களைக்கட்டும். எப்பொழுதுமே நடனமாடிக் கொண்டிருக்கும் சிவப்பெருமானுக்கு என்றுமே திருவிழாதான்.
நடராஜரின் வலது கால், முயலகன் என்பவன் மீது இருக்கிறது. இவனை, "அபஸ்மாரன்'என்பர்.
திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மத துவேஷத்தில் ஈடுபட்டதாக 4 பேர் கைது
திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த 6-ம் தேதி மாலை பேகம்பூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பெட்ரோல், டீசல், காஸ் என ஒரு பதாகையில் எழுதி, அதை பாடை கட்டி தூக்கி ஊர்வலமாகச் சென்றனர். உடன் மயானத்துக்கு ஈமக்கிரியை செய்ய ஒரு சிறுவன் செல்வதுபோல் அவருக்கு நாமமிட்டு, மாலை அணிவித்து, கையில் சட்டியைக் கொடுத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு திண்டுக்கல் மாவட்ட இந்து முன்னணி அமைப்பினர், இதில் தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாரை வலியுறுத்தினர்.
பொது சிவில் சட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
பொது சிவில் சட்டம் அவசியமானது. அதை அமல்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 44-வது பிரிவு பொது சிவில் சட்டத்தை பரிந்துரைக்கிறது.
இந்தியாவில் 2 சட்டங்கள் உள்ளன. ஒன்று சிவில் சட்டம், இன்னொன்று கிரிமினல் சட்டம்.இந்த கிரிமினல் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் சிவில் சட்டம் பொதுவானது இல்லை.
இந்த சட்டம் பல்வேறு சிக்கல்களை கொண்டது. மத ரீதியான நிறைய சிக்கல் இதனால் வரும். இந்த சட்டத்தின்படி இந்திய குடிமகன்கள் எல்லோருக்கும் திருமணம், சொத்து, விவாகரத்துஉள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் ஒரேவிதமான சட்டம் இருக்கும். அவர்கள் பின்பற்றும் மதம் சார்ந்த சட்டங்கள் செல்லுபடியாகாது.
புதுடில்லி : 'கூ' சமூக வலைதளத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் கணக்கு துவக்கப்பட்டுள்ளது.
'டுவிட்டர், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களை போல், 'கூ' என்ற பெயரில் சமூக வலைதளத்தை இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அப்ரமேயா ராதாகிருஷ்ணா, மயங்க் பிடாவட்கா ஆகியோர் துவக்கினர்.
இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ட சட்டவிதிகளை ஏற்க மறுத்து வருவதால், டுவிட்டருக்கும், மத்திய அரசுக்கும் மோதல் நீடித்து வருகிறது. இதையடுத்து இந்தியர்கள் பலரும், கூ சமூக வலைதளத்தில் கணக்கு துவக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.