தாயின் கருவில் இருந்து வராததாலும் , கருடருடன் வராத காரணத்தாலும், இந்த அவதாரத்தை அவசர திருக்கோலம் என்பர்.
பக்த பிரகலாதனுக்காக ஓடிவந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார்.
நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை சக்கரத்தாழ்வாரிடம்
சொல்லிவிட்டால் போதும் அவர் வேகமாகச் சுழல்வார்.
அப்போது பின்னால் இருக்கும் நரசிம்மர்
நம் முன்னே வந்து உடனடியாக குறைகளைத் தீர்ப்பதாக ஐதீகம்.
இது உங்கள் இடம்: தி.மு.க., ஒன்றும் குடும்ப கட்சியல்ல!
வி.எம்.கலைப்பித்தன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: தமிழக மேற்கு மண்டல தி.மு.க., பொறுப்பாளராக, முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி பொறுப்பேற்க உள்ளாராம்... இதிலிருந்து என்ன தெரிகிறது?
'உதயநிதி தான், அடுத்ததாக பட்டம் பெற போகும் இளவரசர்' என, தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் காய் நகர்த்துகிறார். தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி எப்படி ஸ்டாலினை உருவாக்கினாரோ, அவ்வாறே உதயநிதியையும் கட்சியில் உயர வழி ஏற்படுத்தப்படுகிறது.
அரசியல்வாதிகள் ஒன்றை மறந்து விடுகின்றனர்; இது மன்னர் ஆட்சியல்ல!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே பட்டம் ஏற்க முடியும். அரசியல் கட்சி, குடும்ப சொத்தாக மாறினால் என்னவாகும் என்பதற்கு காங்கிரஸ் ஓர் உதாரணம். ஜனநாயக நாட்டில், குடும்ப ஆட்சி வெகுகாலம் நீடிக்க முடியாது.
சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் லட்சுமி நரசிம்மர் உக்கிர நரசிம்மராக 16 திருக்கரங்களுடன், மேற்கு பார்த்து நின்று இரணியனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறார்.
🙏🇮🇳1
வசிஷ்டர் தவம் இருந்த இடம் சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவில் ஒரேநாள் நரசிம்மர் வழிபாட்டில் மூன்றாவதாக நிறைவாக செல்ல வேண்டிய ஆலயமாகும். தமிழ்நாட்டில் அமைந்துள்ள நரசிம்ம தலங்களில் இத்தலம் வரலாற்றுச்சிறப்பு வாய்ந்தது.
🙏🇮🇳2
புராண காலத்தில் கிருஷ்ணா ரண்யசேத்திரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிங்கிரிகுடி கோவிலில் சித்திரை சுவாதி நரசிம்மர் ஜெயந்தியன்று தேர்த்திருவிழா, மாசி மகத்தன்று புதுச்சேரி கடலில் தீர்த்தவாரி, ஐப்பசியில் பவித்ர உற்சவம், 🙏🇮🇳3
பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். 7 பெண்கள் மற்றும் 8 மருத்துவர் உள்ளிட்ட 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இவர்களில், தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகன் உள்ளிட்ட 36 பேர் புதுமுகங்கள். 7 பேர் ஏற்கனவே அமைச்சரவையில் இருந்தவர்கள்.
புதிதாக அமைச்சரவையில் இடம் பெற்றவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சர்கள் இலாக்க விவரம்:
1) நரேந்திர மோடி: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை (கூடுதல் பொறுப்பு)
எந்தக் கிழமைகளில் விநாயகரை வழிபட மறந்தாலும்,வெள்ளிக்கிழமை மற்றும் சதுர்த்தி நாட்களில் மறக்காமல் வணங்க வேண்டும்.அவ்வாறு,விநாயகரை வணங்கும் போது நமது நினைவிற்கு வரவேண்டிய மற்றொருவர் ஒளவையார்.
அவர்‘சீதக்களப செந்தாமரைப்பூம்..’என்று தொடங்கும் விநாயகர் அகவல் என்னும் பாமாலையை பாடியருளியவர்.
முன்கூட்டியே இயல்புக்கு திரும்புவதால் உரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ஜெனிவா: கோவிட் பெருந்தொற்று தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் மிகவும் முன்கூட்டியே அவசர, அவசரமாக முழு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. அதற்கான விலையை நாம் கொடுக்க வேண்டியிருக்கும்' என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அவசர சுகாதாரத் திட்டத்தின் தலைவர் மைக்கேல் ரியான் தெரிவித்து உள்ளதாவது:உலகம் முழுவதும் கோவிட் தொற்று பாதிப்பு முழுமையாக நீங்கவில்லை. இந்தியாவில் 2வது அலை முடிவுக்கு வரும் சூழலில், பல்வேறு நாடுகள் அடுத்தடுத்த அலைகளைச் சந்தித்து வருகின்றன.