Long thread: Tamil and Germany connections/ தமிழ்-ஜெர்மனி
தமிழ் நாட்டுக்கும், ஜெர்மனிக்கும் உள்ள தொடர்பு ஒரு மறக்கப்பட்ட வரலாறு. 1700-களிலிருந்து 1800-கள் வரை எறக்குறைய ஒரு நூற்றைம்பது ஆண்டுகள் வரலாறு. #tamil#tamilgermany
இங்கே ப்ரொட்டஸ்டன்ட் கிறிஸ்தவத்தைப் போதிக்க வந்தவர்கள், தமிழால் ஈர்க்கப்பட்டு வந்த வேலையை மறந்துவிட்டு, ஏகப்பட்ட தமிழ் நூல்களை ஜெர்மனியில் மொழி பெயர்த்து பதிப்பித்தார்கள். இப்போது அவற்றை தமிழர்களும் மறந்துவிட்டார்கள், ஜெர்மானியர்களும் மறந்துவிட்டார்கள். நிற்க.
‘மண்ணாங்கட்டி’ என்று அறிவில்லாதவனை, அறிவில்லாதவற்றை குறிக்க தமிழில் உபயோகிக்கும் வார்த்தை. எந்த சங்க இலக்கியத்தில் தேடினாலும் மண்ணாங்கட்டி என்ற வார்த்தை கிடைக்காது. #மண்ணாங்கட்டி#tamilgermany
தமிழில் பல வேற்று மொழி வார்த்தைகள் வேற்று மொழி வார்த்தைகளாகவே கலந்து - சாவி, ஜன்னல் முதல் கஸ்மாலம் வரை - புழக்கத்தில் வந்ததற்கு பல நூறு உதாரணங்கள் உள்ளன. #anotherhistory#tamilportugal
கிரேக்கம், லத்தின், சமஸ்கிருதம், பாலி, போர்சுகீஸ், பெர்சியன், உருது...கடைசியில் ஆங்கிலம் என்று இங்கே வந்தவர்களின் பல வார்த்தைகள் தமிழில் அப்படியே கலந்துவிட்டன. ஆனால் அப்படி எந்த ஜெர்மன் வார்த்தையும் தமிழில் புழக்கத்தில் வரவில்லை. #tamilgermany
அவர்கள் தமிழை இங்கு வரும் முன்னே ஐரோப்பாவிலோ, அவர்கள் வந்த கப்பல்களிலோ கற்றுக் கொண்டு பல ஜெர்மன் வார்தைகளைத் தமிழில் மொழி பெயர்த்து தமிழிலேயே புழங்க விட்டார்கள். அவற்றில் சிலதை இன்றுவரை உபயோகித்துக் கொண்டிருக்கிறோம். அதில் ஒன்றுதான் மண்ணாங்கட்டி.
பழைய காலத்து ஜெர்மனில் kludda என்றால் களிமண். இதுதான் clay என்று ஆங்கிலமானது. Clot என்றால் (மண்) கட்டி என்றானது. பைபிள் கதைப்படி முதல் மனிதனான ஆதாம் மண்ணிலிருந்து படைக்கப்பட்டவன். மண்ணாங்கட்டி. கடவுளுக்குக் கீழ்ப்படியாத ஒரு முட்டாள்.
மனிதன் மண்ணில் இருந்து படைக்கப்பட்ட ஒரு முட்டாள் என்று விளக்க ஜெர்மன் வார்த்தையை மண்ணாங்கட்டி தமிழில் என்று மொழிபெயர்த்தார்கள். ‘மண்ணாங்கட்டி மாப்பிள்ளையும் எலும்பி பொண்ணும்’ என்று ஒரு பழமொழியே அந்தக் காலத்தில் தமிழில் வந்து மறைந்தது. ஏவாள் ஆதாமின் எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள்
செடிலாட்டம் என்று ஒரு விளையாட்டு சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சில கடற்கரை ஊர்களில் பிரபலம். கொடூரமான விளையாட்டு. தசாவதாரம் படத்தில் முதல் பாட்டில் கமலஸாசன் முதுகில் கொக்கியைக் கோர்த்து ஒரு வட்டில் சுற்ற விடுவார்களே, அதுதான் அந்த விளையாட்டு.
அதை ஆங்கிலேயர்கள் தடை செய்ய அதை முற்றிலும் மறந்து விட்டோம். அந்த விளையாட்டைப் பற்றிய விளக்கங்கள் தெரிய அப்போது எழுதப்பட்ட ஜெர்மன் - தமிழ் புத்தகங்கள்தான் இன்றைய சாட்சி.
அன்றைய கால தமிழர்களின் மருத்துவமுறைகள் என்ன, எப்படி பாம்பு விஷத்தைக்கூட மருந்தாக உபயோகித்தார்கள், தமிழ் வைத்தியர்களின் ஃபார்முலாக்கள் என்ன என்றெல்லாம் குறிப்பெடுத்து எழுதி ஜெர்மனிக்கு அனுப்பினார்கள். எல்லாம் தமிழ் அதனுடன் ஜெர்மன் மொழி பெயர்ப்பு என்று எழுதப்பட்டன.
பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ் வாழ்வியலைத் தேட வேண்டுமென்றால் அதை ஜெர்மானிய நூலகங்களில்தான் தேட வேண்டும். தமிழர்களுக்கே தமிழைப் பற்றித் தெரியாத விஷயங்கள் இன்று ஜெர்மனியில் தேடினால்தான் கிடைக்கும்.
ஆதிச்சநல்லூரில் முதன் முதலாக அகழ்வாராய்ச்சி செய்து மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் இடுகாட்டை உலகிற்கு தெரியச் செய்தது அவர்கள்தான். அவர்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்த நம் மூதாதையரின் பொருட்கள் எங்கிருக்கின்றன என்று தேடக்கூட ஆர்வமில்லாத ஒரு கூட்டம்தான் நாம். #தமிழ்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh