#AnugraheethanAntony#PCMreview#Malayalam IMDB - 8/10.தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை."தவறவிடக்கூடாத ஒரு அருமையான படம்".OTT - அமேசான் பிரைம்(US). டெலிகிராம் - பயோ/DM.பொதுவாக மலையாள சினிமாவில் 95 சதவீத படங்கள் நன்றாக இருக்கும்.அதிலும் சில படங்கள் என்றும் அனைவரின்
மனதிலும் நிலைத்திருக்கும்.அப்படிப்பட்ட படங்களின் வரிசையில் இந்த படமும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.ஹீரோ சன்னி வெயின் ஜாலியாக ஊர்சுற்றும் வாலிபர்.ஹீரோயின் 96 படப்புகழ் கௌரி கிஷன்.இவர் ஓவியம் வரைபவர்.ஹீரோ தன் நண்பருடன் தவறுதலாக வேறு வீட்டிற்கு செல்ல அங்க ஹீரோயினை காண்கிறார்.
பார்த்ததும் காதல் தான்.அடுத்த நாள் ஹீரோயினின் அப்பாவிற்கு சொந்தமான மாவு அரைக்கும் மில்லிர்க்கு நண்பருடன் செல்கிறார்.அங்கு ஹீரோயினை பார்க்க நேர,தினமும் ஏதாவது அரைக்க எடுத்து சென்று அங்கு சென்று ஹீரோயினை பார்க்கிறார்.இப்படியே நாட்கள் செல்ல,ஒரு நாள் விபத்தில் அடிபட்டு ஹீரோ
இறந்து விடுகிறார்.இதன் பின் நடக்கும் காட்சிகள் தான் மீதிக்கதை.படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த காட்சியையும் ஸ்கிப் செய்யாமல் பார்க்கும் அளவிற்கு ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்கள் பிரின்ஸ் ஜாய் மற்றும் தீபு மேத்யூ.அந்த அளவிற்கு திரைக்கதையை அருமையாக
செதுக்கியிருக்கிறார்கள்.இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வரும் சூரஜ் வெஞ்சரமுடு சிறிய நேரமே வந்தாலும் கண்கலங்கவைத்துவிட்டு செல்கிறார்.ஹீரோவின் அப்பாவாக வரும் சித்திக்,ஹீரோவின் மாமாவாக வரும் ஜாஃபர் இடுக்கி என இருவரும் இரண்டாம் பாதியில் நம்மை படத்தை ஒன்றி பார்க்க வைப்பதோடு
கண்கலங்க வைக்கும் அளவிற்கு நடித்திருக்கிறார்கள்.முக்கியமாக படத்தில் வரும் இரு கோல்டன் ரெட்ரீவர் நாய்கள் அருமையாக நடித்துள்ளன.குறை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு படத்தில் வரும் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.நான் ரசித்து கேட்டது இப்படத்தில் வரும் பாடல்கள்.அனைத்தும் தரம்.
முக்கியமாக மழை வரும் போது வரும் பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது.பின்னணி இசையும் கேட்க கேட்க அருமையாக இருக்கிறது. யூடியூப் விளம்பரத்தில் வரும் Resso App இல் வரும் வயலின் இசை இந்த படத்தில் வருவது தான்.அந்த அளவிற்கு இசை மற்றும் ஒளிப்பதிவு தரமாக உள்ளது.படம் பார்த்து முடித்த பிறகு
உங்கள் கண்களில் கண்ணீர் இருக்கும் என்பது நிச்சயம்.படத்தின் பல காட்சிகளில் நம்மை கண்கலங்க வைத்தது இறுதி காட்சியில் கண்கலங்க வைத்து ஒரு அருமையான படத்தை பார்த்தா உணர்வை கொடுக்கிறது இப்படம்.கண்டிப்பாக தவறாமல் பாருங்கள்.அருமையான படம் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🥳🥳🥳🎉🎉🎉🎉🤗🤗🤗
#Fearstreettrilogy#PCMreview "இரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு தரமான ஹாரர் திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை.கண்டிப்பாக(18+).OTT - நெட்பிளிக்ஸ். டெலிகிராம் - பயோ/DM. கதை 1994லில் ஆரம்பித்து அப்படியே பின்னோக்கி 1666 இல் முடிகிறது.அதாவது 1666 இல் ஆரம்பிக்கும் ஒரு கதையை மூன்று பாகங்களாக
கொடுத்திருக்கிறார் இயக்குனர்.Shadyside மற்றும் Sunnyvale என இரு பள்ளிகள்.எப்பொழுதும் இந்த இரண்டு பள்ளிகளுக்கும் ஆகாது.ஒரு நாள் Shadyside மாலில் முகமூடி அணிந்த நபர் ஒரு பெண்ணை கொல்கிறார்.இது Shadyside கொலையாளி தான் என Sunnyvale பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முடிவு செய்கிறார்கள்.
இதனால் Shadyside பள்ளி மாணவர்கள் மீது இன்னும் வெறுப்பு அதிகரிக்கிறது.ஒருவர் பின் ஒருவராக முகமூடி அணிந்த நபரால் கொல்லப்படுகிறார்கள்.இதற்கு காரணம் சாரா பியர் என்கிற ஒரு பெண்ணுடைய சாபம் தான் என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது.அந்த பெண்ணின் சாபம் இன்னொருவர் மீது புகுந்து அவர் மற்றவரை
#VaazhlOnSonyLIV#PCMreview "வாழ்கையை நமக்கு பிடித்த மாதிரி வாழ வேண்டும்" "இயற்கையோடு வருடத்தில் ஒரு 30நாள் பயணம் செய்யவேண்டும்" என்ற இரண்டு வசனங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.ஹீரோ பிரதீப் ஆண்டனி,ஹீரோயின் பானு, திவா தவான்,சிறுவன் ஆரவ் என நான்கு முக்கிய கதாபாத்திரங்கள்
தான் இந்த படம் முழுக்க.முதல் பாதியில் ஹீரோ மற்றும் ஹீரோயின் அவர்களின் நடிப்பால் திரையை ஆக்கிரமிக்கிறார்கள்.இரண்டாம் பாதியில் ஹீரோவும்,சிறுவன் ஆரவும்,இன்னொரு ஹீரோயின் திவா என மூன்று கதாபாத்திரங்கள் தான்.ஆனால் இரண்டாம் பாதி முழுக்க பாடல்கள்,ஒளிப்பதிவு மட்டுமே.பல நகரங்களின் அழகு,
மலைகள்,இயற்க்கை என கண்ணுக்கு குளிர்ச்சியாக பல காட்சிகள்.நான்கு கதாபாத்திரமும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.முதல் பாதி விறுவிறுப்பாகவும் இரண்டாம் பாதி மிகவும் மெதுவாகவும் நகர்கிறது திரைக்கதை.பின்னணி இசை தான் இந்த படத்தில் பெரிய பலம்.சுவாரஸ்யமான முதல் பாதி மற்றும் அழகான பின்னணி
#specialops#PCMreview "மற்றுமொரு தரமான ஹிந்தி ஆக்சன் திரில்லர் வெப் சீரியஸ்".தமிழ் டப்பிங் இருக்கிறது.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - டிஸ்னி + ஹாட்ஸ்டார்.டெலிகிராம் - பயோ/DM.கடந்த 2001ஆம் ஆண்டு நமது நாட்டின் பாராளுமன்றம் லஷ்கர் இ தய்பா மற்றும் ஜெய்க்ஷ் இ முஹம்மத் ஆகிய இரு தீவிரவாத
இயக்கங்களால் தாக்கப்பட்டது.இதில் 9 காவல்துறையினர்,5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.18 பேர் காயமடைந்தனர்.இந்த சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது தான் இந்த வெப் சீரியஸ்.ஒரே சீசன் தான்.8 எபிசோடுகள்.இரண்டாம் சீசன் விரைவில் வரப்போகிறது.தீவிரவாதிகள் திட்டம் இடுவது,அதை எவ்வாறு
செயல்படுத்தினார்கள்,இதற்கு பிண்ணனியில் இந்தியாவில் இருந்து ஆதரவு தெரிவித்தது யார்?இதை எப்படி கண்டுபிடித்தார்கள்?என்ற பல கேள்விகளுக்கு விரிவான விடையாக இந்த சீரியஸ் அமைந்திருக்கிறது.ஹீரோ கே கே மேனன் டாஸ்க் ஃபோர்ஸ் குழுவின் தலைவராக நடித்திருக்கிறார்.தான் குழுவில் உள்ள ஆட்களுக்கு
#MyClientsWife#PCMreview "பல பல டுவிஸ்டுகள்.யூகிக்க முடியாத கிளைமாக்ஸ் டுவிஸ்ட் கொண்ட மிஸ்டிரி திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை.கண்டிப்பாக 18+.OTT - அமேசான் பிரைம்/ஜியோ சினிமாஸ்.டெலிகிராம் - பயோ/DM. "தீரன்" படத்தின் வில்லன் வேடத்தில் ஒமா பாவாரியாவாக நடித்த அபிமன்யு சிங், ஃபேமிலி
மேன் வெப் சீரியஸில் கலக்கிய ஷரீப் ஹாஸ்மி மற்றும் காலா படத்தில் நடித்த அஞ்சலி பாட்டில் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.ஹீரோ அபிமன்யு சிங் தன் மனைவியான அஞ்சலி பாட்டிலை அடித்து துன்புறுத்திவிட்டதாக காவல்துறை கைது செய்து சிறையில் அடிக்கிறது.இவரின் வக்கீலாக ஷரீப் இவரை வெளியே கொண்டு வர
முயற்சி செய்கிறார்.சிறையில் ஹீரோவின் வக்கீல் அவரிடம் விசாரணை செய்கையில் தன் மனைவிக்கு யாருடனோ கள்ள தொடர்பு இருப்பதாகவும்,அதனால் அவர் என்மேல் வீண்பழி சுமத்துகிறார் எனவும் கூறுகிறார்.இதனால் யார் உண்மையை கூறுகிறார்கள் என்று கண்டுபிடிக்க களம் இறங்குகிறார் வக்கீல் ஷரீப்.இதில் யார்
#SarasOnPrime#PCMreview "தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - அமேசான் பிரைம்.டெலிகிராம் - பயோ/DM. ஹெலன் படப்புகழ் அன்னா பென் ஹீரோயினாக நடித்திருக்கும் Sara's எப்படி இருக்கிறது? ஹீரோயினுக்கு பெரிய இயக்குனர் ஆக வேண்டும் என்று ஆசை.அதற்காக பல படங்களில் உதவி இயக்குனராக
இருக்கிறார்.இவருக்கு திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் பெற்றுக்கொள்வதில் விருப்பம் இல்லை.இதனால் இதே கருத்துடைய ஒருவரை திருமணம் செய்யவேண்டும் என்று நினைக்கிறார்.இவரின் சொந்த படம் சம்மந்தமாக பிரேத பரிசோதனை செய்யும் ஒரு பெண் மருத்துவரை சந்திக்க செல்ல அங்கு மருத்துவரின் தம்பியை
சந்திக்க,இருவருக்கும் காதல் மலர்கிறது.ஹீரோவுக்கும் குழந்தைகள் பெற்று கொள்வதில் விருப்பம் இல்லாததால் இருவருக்கும் ஒத்துப்போகிறது.இதன் பின் இருவரும் திருமணம் செய்கிறார்கள்.சில மாதங்களில் ஹீரோயின் கர்ப்பம் ஆகிறார்.இதற்கு பின் என்ன ஆனது என்பதே மீதிக்கதை! தன் இயக்குனர் கனவு
#Blackmail#PCMreview "வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் டார்க் காமெடி திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை.குடும்பத்துடன் பார்க்க இயலாது.OTT - அமேசான் பிரைம் (தமிழ் சப் டைட்டில் உள்ளது).டெலிகிராம் - பயோ/DM. ஹீரோ இர்ஃபான் கான் ஒரு நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணிபுரிகிறார்.எப்பொழுதும்
வீட்டிற்க்கு லேட்டாக தான் செல்வார்(தன் மனைவியுடன் சில பிரச்சனை காரணமாக).இதனால் இவரது நண்பர் ஆனந்த் இவரிடம்"பூ வாங்கிகொண்டு சர்ப்ரைஸாக சென்று அசத்தினால் மனைவியுடன் நெருக்கம் உண்டாகும்" என்று கூறுகிறார்.எனவே இவரும் பூ எடுத்துக்கொண்டு வீட்டிற்க்கு செல்கிறார்.ஆனால் அங்கு இவருக்கு
அதிர்ச்சி காத்திருக்கிறது.கட்டிலில் இவர் மனைவியுடன் வேறு ஒருவர் இருக்கிறார்.இதனால் கோபமும் வருத்தமும் அடையும் ஹீரோ அமைதியாக அங்கு இருந்து வந்துவிடுகிறார். வீட்டு கடன், இ எம் ஐ என பல செலவுகள் இருப்பதால் தன் மனைவியின் காதலனை பணம் வேண்டும் என்று பிளாக்மெயில் செய்கிறார்.ஆனால் இங்கு