#SarasOnPrime#PCMreview "தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - அமேசான் பிரைம்.டெலிகிராம் - பயோ/DM. ஹெலன் படப்புகழ் அன்னா பென் ஹீரோயினாக நடித்திருக்கும் Sara's எப்படி இருக்கிறது? ஹீரோயினுக்கு பெரிய இயக்குனர் ஆக வேண்டும் என்று ஆசை.அதற்காக பல படங்களில் உதவி இயக்குனராக
இருக்கிறார்.இவருக்கு திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் பெற்றுக்கொள்வதில் விருப்பம் இல்லை.இதனால் இதே கருத்துடைய ஒருவரை திருமணம் செய்யவேண்டும் என்று நினைக்கிறார்.இவரின் சொந்த படம் சம்மந்தமாக பிரேத பரிசோதனை செய்யும் ஒரு பெண் மருத்துவரை சந்திக்க செல்ல அங்கு மருத்துவரின் தம்பியை
சந்திக்க,இருவருக்கும் காதல் மலர்கிறது.ஹீரோவுக்கும் குழந்தைகள் பெற்று கொள்வதில் விருப்பம் இல்லாததால் இருவருக்கும் ஒத்துப்போகிறது.இதன் பின் இருவரும் திருமணம் செய்கிறார்கள்.சில மாதங்களில் ஹீரோயின் கர்ப்பம் ஆகிறார்.இதற்கு பின் என்ன ஆனது என்பதே மீதிக்கதை! தன் இயக்குனர் கனவு
நிறைவேறியதா?குழந்தை பெற்றுக்கொண்டாரா?ஹீரோயின் என்ன முடிவெடுத்தார்? என்பதற்கான விடையை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.ஹெலன் படத்தில் நடிப்பில் பட்டையை கிளப்பியிருப்பார் அன்னா பென்.இந்த படத்திலும் முத்திரை பதிக்கிறார்.அழகாகவும்,அதே சமயம் அற்புதமாகவும் நடித்திருக்கிறார்.ஹீரோவாக
சன்னி வெயின் தன் அக்காவின் குழந்தைகளை கவனித்து கொள்ளும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.இதை தவிர்த்து ஹீரோவின் அக்கா, பாட்டி,ஹீரோயின் அப்பா அம்மா என அனைவருக்கும் சமமான கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.படத்தில் ஒளிப்பதிவு நன்றாக
இருக்கிறது.கேரளாவின் சில இடங்களின் அழகையும் காட்டியிருக்கிறது.பாடல்கள் கேட்க இனிமையாக இருக்கிறது.பின்னணி இசையும் தரம்.முதல் பாதி வேகமாகவும் இரண்டாம் பாதி சற்று மெதுவாகவும் நகர்கிறது திரைக்கதை.ஒரு சிறிய விஷயத்தை இரண்டு மணி நேரத்தில் ரசிக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்
இயக்குனர்.ஆனால் ஒரு கேள்வி என்னவென்றால்,ஒரு காட்சியில் ஹீரோயின் அன்னா ஹீரோ வீட்டிற்க்கு செல்லும் பொது அங்கு மருத்துவரின் குழந்தை அழுதுகொண்டிருக்க,அழுகையை நிறுத்த தன்னுடைய மொபைலில் முல்லை பெரியாறு அணை உடைவது போன்ற கிராபிக்ஸ் காட்சியை காட்டுகிறார்.ஏற்கனவே முல்லை பெரியாறு அணை
உறுதியாக இல்லை என்று கூறி இன்னொரு அணையை கேரள அரசு கட்ட முயல, அதற்கு இன்னும் வலு சேர்ப்பது போல் இந்த காட்சி அமைந்திருக்கிறது.குழந்தையிடம் காட்ட எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்க,பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையிடம் இந்த காட்சியை காட்ட வேண்டிய அவசியம் என்ன?இன்னும் பிரச்சனையை பெரிதாக்க
#Blackmail#PCMreview "வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் டார்க் காமெடி திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை.குடும்பத்துடன் பார்க்க இயலாது.OTT - அமேசான் பிரைம் (தமிழ் சப் டைட்டில் உள்ளது).டெலிகிராம் - பயோ/DM. ஹீரோ இர்ஃபான் கான் ஒரு நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணிபுரிகிறார்.எப்பொழுதும்
வீட்டிற்க்கு லேட்டாக தான் செல்வார்(தன் மனைவியுடன் சில பிரச்சனை காரணமாக).இதனால் இவரது நண்பர் ஆனந்த் இவரிடம்"பூ வாங்கிகொண்டு சர்ப்ரைஸாக சென்று அசத்தினால் மனைவியுடன் நெருக்கம் உண்டாகும்" என்று கூறுகிறார்.எனவே இவரும் பூ எடுத்துக்கொண்டு வீட்டிற்க்கு செல்கிறார்.ஆனால் அங்கு இவருக்கு
அதிர்ச்சி காத்திருக்கிறது.கட்டிலில் இவர் மனைவியுடன் வேறு ஒருவர் இருக்கிறார்.இதனால் கோபமும் வருத்தமும் அடையும் ஹீரோ அமைதியாக அங்கு இருந்து வந்துவிடுகிறார். வீட்டு கடன், இ எம் ஐ என பல செலவுகள் இருப்பதால் தன் மனைவியின் காதலனை பணம் வேண்டும் என்று பிளாக்மெயில் செய்கிறார்.ஆனால் இங்கு
#ohmygod2012#PCMreview "அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய அருமையான படம்".தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - நெட்பிளிக்ஸ்/ஜியோ சினிமாஸ்.டெலிகிராம் - பயோ/DM. ஹீரோ பரேஷ் ராவல் ஒரு சிறிய கடை நடத்திவருகிறார்.இவருக்கு சுத்தமாக கடவுள் நம்பிக்கையே கிடையாது.அடிக்கடி கடவுளை
கேலி செய்துக்கொண்டே இருக்கிறார்.இது மற்றவர்களுக்கு பிடிப்பதில்லை.ஒரு நாள் இயற்கை சீற்றம் வந்து இவரின் கடையை மட்டும் சேதாரம் செய்கிறது.பக்கத்து கடைக்காரர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் இது கடவுளை பழிப்பதால் நேர்ந்த சம்பவம் என்று ஹீரோவை குறை கூறுகிறார்கள்.இதனால் கோபம் கொள்ளும்
ஹீரோ நீதிமன்றத்தில் கடவுளின் மேல் வழக்கு தொடர்கிறார்.இந்த செய்தி நாட்டையே உலுக்குகிறது.அக்ஷய் குமார் கடவுளாக வந்து ஹீரோவுக்கு உதவி செய்கிறார்.இதன் பின் என்ன ஆனது என்பதே மீதி கதை.காமெடி,ஆன்மீகம்,கடவுள் நம்பிக்கை,போலி சாமியார்கள் அனைத்தையும் பிரித்து வழங்கியிருக்கிறார் இயக்குனர்.
#TheStrangers2008#PCMreview "உண்மையாக நடந்த சம்பவங்களை கொண்டு எடுக்கப்பட்ட ஹாரர் ஸ்லாஷர் படம்" தமிழ் டப்பிங் இல்லை.குடும்பத்துடன் பார்க்க இயலாது.கதை சுருக்கம்:நீங்கள் விடுமுறையை களிக்க உங்கள் அத்தை மாமா இருக்கும் ஒரு ரிசார்டிர்க்கு குடும்பத்துடன் செல்கிறீர்கள்.அங்கு சென்ற பிறகு
உங்கள் அத்தை மாமா கொடூரமாக கொல்லபட்டுள்ளதை காண்கிறீர்கள்.அடுத்த சில நிமிடங்களில் உங்கள் குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக மூன்று முகமூடி அணிந்த நபர்களால் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள்.அவர்களிடமிருந்து நீங்கள் தப்பிச்செல்ல நினைக்கிறீர்கள்.ஆனால் தப்பிச்செல்ல வழி இல்லாதவாறு அந்த
மர்ம நபர்கள் பார்த்துகொள்கிறார்கள்.அவர்களிடமிருந்து நீங்கள் தப்பிச்செல்ல நினைக்க,அவர்கள் உங்களை துரத்த,இறுதியில் என்ன ஆனது என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே பதற்றம் உங்களை தொற்றிக்கொள்ளும்.நீங்களே அங்கு மாட்டிக்கொண்டது போல் உணர்வீர்கள்.
#Coldeyes#PCMreview "வங்கி கொள்ளை படங்களின் ரசிகர்களுக்காக ஒரு தரமான கொரியன் படம்".ஆபாச காட்சிகள் இல்லை.தமிழ் டப்பிங் இல்லை.OTT - எதிலும் இல்லை.டெலிகிராம் - பயோ/DM. கதை சுருக்கம் : ஆரம்ப காட்சியில் ஒரு பெண் ஒரு ரயிலில் ஒரு ஆணை பின்தொடர்கிறார்.அவர் என்னவெல்லாம் செய்கிறார்
என்பதை கவனிக்கிறார்.அதே சமயம் இன்னொரு காட்சியில் ஒரு பெரிய கட்டிடத்தின் உச்சியில் ஒருவர் நின்று காவல்துறையின் வாக்கி டாக்கியை ஒட்டு கேட்கிறார்.பின் அந்த கட்டிடத்தின் பேஸ்மெண்டில் இருக்கும் காரை வெடிக்க வைக்கிறார்.உடனே காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை அங்கு செல்கிறது.இவர்
ஒரு வண்டியில் காத்திருக்கும் இருவருக்கு சைகை கொடுக்கிறார்.உடனே அவர்கள் ஒரு வங்கியில் நுழைந்து கொள்ளையடிக்கின்றனர்.காவல்துறை அங்கு வருவதற்குள் அவர்கள் தப்பிவிடுகிறார்கள்.வில்லனும் சென்றுவிடுகிறான்.இப்பொழுது ஆரம்ப காட்சியில் ஆணை பின்தொடரும் பெண் ஒரு காபி ஷாப்பில் அந்த ஆணை நோட்டம்
#10Kalpanakal#PCMreview "அற்புதமான மலையாள க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - அமேசான் பிரைம்.
டெலிகிராம் - பயோ/DM.முக்கிய கதாபாத்திரங்கள் அனூப் மேனன்,மீரா ஜாஸ்மின்,கனிகா,பிரஷாந்த் நாராயணன் மற்றும் நம் "ஜோசப்" ஜோஜூ ஜார்ஜ்.கதை சுருக்கம்:
முன்னாள் காவல்துறை அதிகாரி மீரா ஜாஸ்மின் ஒரு காவல்துறை பயிற்சி அகாடமியில் சிறப்பு விருந்தினராக வந்து அங்கு இருக்கும் மாணவர்களிடம் அவர் எடுத்துக்கொண்ட ஒரு வழக்கை பற்றி விவரிக்கிறார்.இதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது.ஹீரோ அனுப் மேனன் வனத்துறை அதிகாரியாக இருக்கிறார்.இவரின் மனைவி கனிகா.
இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு சிறுமியுடன் மிகவும் பாசமாக இருக்கிறார்.சிறுவயதில் இருந்தே மிகவும் அன்பாக இருக்கிறார்.அந்த சிறுமியும் ஹீரோவின் மகனும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.ஒருநாள் அங்கு நடைபெறும் திருவிழாவில் அந்த சிறுமியை ஜோஜு ஜார்ஜ்
#theiceroad#PCMreview "திக் திக் திரைக்கதையுடன் அருமையான ஆக்சன் திரில்லர்". தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - நெட்பிளிக்ஸ்(இன்னும் இந்தியாவில் வெளியாகவில்லை).டெலிகிராம் - பயோ/DM."Marksman,Schindler's List,Cold Pursuit,Taken,etc." போன்ற பல படங்களில் தெறிக்கவிட்ட
லியம் நீசன் தான் இந்த படத்தின் ஹீரோ.கதை சுருக்கம்:அமெரிக்காவின் நார்த் டகோட்டா மாகாணத்தில் இருக்கும் கட்கா வைர சுரங்கத்தில் ஊழியர்கள் பணிசெய்துகொண்டு இருக்கும் பொழுது திடீரென ஏற்படும் சில கோளாறு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு சுரங்கம் மூடிகொள்கிறது.உள்ளே 25 நபர்கள்
மாட்டிக்கொள்கிறார்கள்.அவர்களை மீட்க அந்த சுரங்கத்தின் நிறுவனம் முயற்சி செய்கிறது.அதற்காக சுரங்கத்தை துளையிடும் ராட்சத கருவிகளை கொண்டு வர ஏற்பாடு செய்கிறார்கள்.அதன்படி 35 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு நிறுவனத்திடம் இருந்து 30 டன் எடைக்கொண்ட கருவிகளை மூன்று பெரிய லாரிகளில்