பெண்டாட்டி தான் சம்பாதிக்கிற பணத்தை வீட்டுக்கு தர முடியாது என்றும் புருசன் தான் சம்பாதிக்கிற பணத்தை வீட்டுக்கு தர முடியாது என்றும் வாதம்.
யார் வீட்டுக்கு பணத்தை தர முடியாது என்கிறீர்கள்? பெற்றோர் வீட்டுக்கா? என்று நீதிபதி கேட்டார்.
இல்லை. சம்பாதிக்கிற பணத்தை வீட்டுச் செலவுக்கு பகிர முடியாது என்று இருதரப்பும் வாதம்.
அப்படி என்றால் சமையல் கணக்கு எப்படி?
சமையலுக்கு ஆள் வைத்து மளிகை வாங்கி தனி தனி கணக்கு வைத்து உள்ளோம் என்று வாதம்.
சரி இப்போது எதற்கு விவகாரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளீர்கள்?
கணவர் ரூமில் உள்ள ஏசி உட்பட மின்சாரமெல்லாம் ஒரே மீட்டரில் ஓடி எனக்கு அதிக செலவு ஆகிறது அதனால் சேர்ந்து வாழ இயலாது என்று பெண் தரப்பு வாதம்.
என்னுடன் இணக்கமாக இருக்க மனைவி மறுக்கிறாள் கூட படுக்க காசு கேட்பது கஷ்டமாக உள்ளது என்று கணவர் தரப்பு வாதம்.
முதலில் இருவரும் கவுன்சிலிங் செல்லுங்கள் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
கவுன்சிலிங் ஒத்து வராததால் பின் திருமண வாழ்க்கையை நடத்த ஆணுக்கும் பெண்ணுக்கும் அருகதை இல்லை என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இதை விட மோசமான கதைகளும் இவ்வையகத்தில் உண்டு அதை பகிர விரும்பவில்லை.
// பின் குறிப்பு //
*ஆங்கிலம் பேச தெரியவில்லை
*உடனிருந்து மது அருந்த மறுப்பு
*குடும்பச்செலவு செய்ய மறுப்பு
*நிற அழகு குறைந்துவிட்டது
*குறட்டையால் தொந்தரவு
*குறைவான சம்பளம்
*உடன் படுக்க காசு
இன்னும் பல காரணத்திற்காக விவகாரத்து வழக்குகள் நடைபெற்ற வரலாறு உண்டு.
மேலும் நீதிமன்றம் வாயிலாக முறையான விவகாரத்து பெறாமல் பிரிந்து சென்றவர்களின் கதைகள் பலவிதம்.
நமக்கு பொதுவாக தெரிந்த திருமண விவாகரத்து கதைகள் "மலடி, ஆண்மைக் குறைவு, கள்ளத்தொடர்பு, வரதட்சணை" மட்டும் தான் ஆனால் நிறைய கதைகள் இருக்கிறது.
சண்டையில் ஈடுபடும் விவகாரத்து வழக்கில் "மலடி, வரதட்சணை, ஆண்மைக் குறைவு" தலைப்பே பெரும்பங்கு வகிக்கும் ஆனால் அதிலே உண்மை என்பது மிக குறைவாக தான் இருக்கும்.
வலுவான காரணமில்லாமல் விவாகரத்து எளிதாக கிடைக்காது என்பதால் "மலடி, வரதட்சணை, ஆண்மைக் குறைவு" ஒரு Tagline ஆக வலம் வருகிறது.
மேலும் மன உளைச்சலுக்கு நஷ்டஈடாக கொடுத்தை விட அல்லது பெற்றதை விட எக்கச்சக்கமாக பணம் கேட்டு தான் சில விவகாரத்து வழக்குகளின் மோட்டிவ் உள்ளது.
இப்படி இந்தியாவில் Mutual Consent Divorce இல்லாமல் விவாகரத்துக்கு செல்வது மிக சிக்கலுக்குரியதாக இருக்கிறது.
இதனால் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் விவகாரத்து கோரும் போது வழக்கின் தன்மை நீர்த்துப் போவது சகஜமாகிவிட்டது.
இந்து திருமண சட்டம் என்பதே இந்து மதத்தை பாதுகாக்கும் கேடயமாக உருமாறிவிட்டது. அதனால் தான் Mutual என்றால் விடுதலை இல்லையேல் யாராக இருந்தாலும் சட்டப் போராட்டம் தான்.
பிற நாட்டு பிற மத திருமண சட்டங்களை போல இந்து திருமண சட்டம் மாற்றி எழுதப்பட வேண்டும்.
மேலும் இங்கே 1 வருடத்தில் முடிந்த விவகாரத்து வழக்கும் உண்டு விவகாரத்து கேட்டு விண்ணப்பித்த சூழலில் தீடீரென கணவனோ மனைவியோ இறந்துவிட சொத்திற்கு மனுவை வாபஸ் பெற்று உரிமை கோரிய வழக்கும் உண்டு.
// Points to Remember //
கண்ட அனுபவங்களை சிறிது பகிர்ந்து கொள்ள விரும்பினேனே ஒழிய யாரை மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை.
விவாகரத்து என வந்துவிட்டால் இருதரப்பிலும் பிரச்சினை இருக்கவே செய்யும் ஆனால் அந்த பிரச்சனையின் "அளவில்" வேறுபாடு இருக்கும் என்பது மறந்துவிடல் கூடாது.
// திருத்தம் //
Infertility is gender neutral.
இருபாலரும் சந்திக்கக்கூடிய பிரச்சினையான மலட்டுத்தன்மை (மலடி) பெண்னை மட்டும் குறிக்க கூடிய சொல்லாக காலங்காலமாக புழங்கி நிலைத்துவிட்டது. அதே போல் பொருள்படும் வகையில் இங்கு மலடி என்ற சொல்லை எழுதியதற்கு வருந்துகிறேன். மன்னிக்கவும். 🙏
உலகளவில் நட்சத்திர ஹோட்டல்களில் மொட்டை மாடியில் ஹெலிகாப்டரை நிறுத்தும் ஹெலிபேட் அமைந்து இருப்பது வழக்கமானது.
ஆனால் அவ்வாறு தமிழ் நாடு நட்சத்திர ஹோட்டல்களில் ஹெலிபேட் அமையாமல் போக என்ன காரணம்?
விடை 🔽
தமிழகத்தில் பல இடங்களில் ஹெலிபேட் உள்ளது ஆனால் நட்சத்திர ஹோட்டல்களில் மொட்டை மாடியில் ஹெலிபேட் அமையாமல் போக காரணம் "ஜெயலலிதா" அதற்கு நோக்கம் எவனும் நம்மை விட கெத்தா இருக்கக்கூடாது என்பதே.
ஆனா பாருங்க கடைசில அவங்களுக்கு கால் இருந்துச்சா இல்லையா என்பது இன்றுவரை தெரியலை.
பின்குறிப்பு 🔽
# பொதுமக்கள் செல்ல நிறைய பாலம் கட்டினார் கலைஞர்.
# தான் மட்டுமே இறங்குவதற்கு நிறைய ஹெலிபேட் கட்டினார் ஜெயலலிதா.
அறிமுகம் மட்டுமே தமிழில் உள்ளது பின்னது ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உள்ளது.
புதியப்பறவை படம் பார்த்து இருக்கீங்களா? அதுல ஒரு வசனம் வரும் உருவம், குரல், உயரம் எல்லாம் ஒரே மாதிரி இருக்கலாம் ஆனா ரேகை? ரேகை? ஹான்? ரேகை ஒரே மாதிரி இருக்க முடியாது இருக்கவே முடியாது.
குமார் உண்மையை சொல்லி இந்த பேய்கள இங்கேயிருந்து விரட்டு. சொல்லு! கோபால் ஐ எம் சாரி! ரெண்டும் ரேகையும் ஒரே மாதிரி இருக்கு. ஹான்? விளையாடுறியா? ரெண்டு ரேகையும் எப்படி ஒரே மாதிரி இருக்க முடியாது?
புரிந்ததா? தடா அறிவியல் (Forensics Science) குறித்த அறிமுகத்தை தான் பார்க்க போகிறோம்.
தடய அறிவியல் (Forensic Science) பற்றி உங்களுடைய புரிதல் என்ன என்பதை பகிர்ந்து கொள்ளுங்கள்.
# பல விடைகளை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
# அறிவியல் உதவியுடன் குற்றச்செயல்களை ஆராய்வது தடய அறிவியல் துறையாகும்.
# கொலை, கொள்ளை, கையெழுத்து மோசடி உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் குறித்த தகவல்களை சேகரித்து தடய அறிவியல் துறையினர் காவல் துறையினருக்கு உதவுகின்றனர்.
# மருந்தியல் (Pharmacology), சோதனை ஆய்வு (Test Study), கணினி தடயவியல் (Computer Forensics), கள அறிவியல் (Field Science) போன்ற வகையில் தடவியல் பணிகள் அமைகிறது.
# அரசு துறை, காவல் துறை மற்றும் சட்ட துறை ஆகிய மூன்று துறைக்கும் பாலமாக செயல்படுவது தடய அறிவியல் துறையாகும்.