சித்த மருத்துவத்தைப் பேசி பேசுனா பட்டி டிங்கரிங் பாத்துடலாம். ஆனா, டீச்சர் என்ன கிள்ளி வச்சுட்டான் ரேஞ்சுக்கு அழத் தொடங்கிடுவாங்க.
மூலிகை, இலை, தழை, தண்டு, வேர், பட்டை எல்லாம் கரிம / கனிம வேதிப்பொருட்களால் ஆனவை என்பது அறிவியல் அறிந்தவர் அறிந்ததே. 👇
எந்த ஒரு வேதிப்பொருளும் வெவ்வேறு வகையாக வினைகளில் ஈடுபடும் என்பதும், அந்த வினைகளில் நமக்குத் தேவையில்லாத வினைகளும் இருக்கும் (அதாவது பக்கவிளைவு) என்பதும் அறிவியல் சொல்கிறது.
இப்படி இருக்க, இந்த இலையின் சாறு இத்தனை ஆழாக்கு குடிக்கணும்னு ஒரு மருத்துவமுறை சொல்ல, அதில் என்னென்ன 👇
வேதிப்பொருட்கள் இருக்குன்னு, அது எப்படி எப்படி வேலை செய்யும், அதுக்கு என்னென்ன பக்கவிளைவுகள் இருக்கு என்பதைப் பற்றி எந்தத் தகவலும் கேட்டா, பக்கவிளைவுகளே இல்லை என்பது பதிலாக வருகிறதுன்னு வச்சுக்குவோம்.
பக்கவிளைவே இல்லையா பக்கவிளைவுகள் குறித்த தகவல் இல்லையான்னு தோனுமா இல்லயா? 👇
கடல்நீரைக் குடிநீராக்கல் (Desalination) குறித்து, சு.சா போன்ற புல்லறிவாளர்களேப் பேசும் போது, அத்துறையில் பணி புரியும் நானும் தெரிந்ததைச் சொல்ல இந்த இழை... 👇👇👇
உவர்நீக்கல் - Desalinationக்குச் சரியான தமிழாக்கமாக இருக்கலாம். கடல்நீரின் உவர்ப்புச்சுவை நீக்கி குடிக்க ஏற்ற நீராய் மாற்றல்.... கடல் நீரில் கரைந்துள்ள உப்பு, கரியமில வாயு ஆகியவற்றை நீக்கி, பின் குடிக்க ஏதுவாக சில உப்புக்களைக் கலந்து குடிநீராக்கல்...
உப்பு நீக்கல் பொருத்து, பொதுவாக இருவகைப்படும்... 1. காய்ச்சி வடித்தல் (Distillation) 2. எதிர்மறை சவ்வூடுபரவல் (Reverse Osmosis)