ஒரு வாரத்திற்கு ஒரு லட்சத்து எண்பத்தாறாயிரம் டாலர்கள் சம்பாதிக்கும் "Sadio Mane of Senegal" (West Africa) என்றழைக்கப்படும் உலகப்புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் தனது டிஸ்பிளே உடைந்த மொபைலுடன் ஆங்காங்கேத் தோன்றினார்.
ஒரு நேர்காணலில் அதுகுறித்துக் கேட்கப்பட்டபோது
நான் அதைச் சரி செய்துவிடுவேன் என்று சொல்லியிருந்தார். மீண்டும் “ஏன் நீங்கள் அதைச் சரிசெய்வதற்குப் பதிலாகப் புதிய மொபைலை வாங்கக்கூடாது?” என்று கேட்கப்பட்டபோது “என்னால் ஆயிரம் மொபைல்கள், 10 பெராரி கார்கள், 2 ஜெட் விமானங்கள், வைரங்கள் பதிக்கப்பட்ட கைக்கடிகாரங்களை வாங்கமுடியும்.
ஆனால் நான் ஏன் அவற்றை வாங்க வேண்டும்?” என்று பதில் கேள்வி கேட்டார்.
தொடர்ந்து “நான் வறுமையைப் பார்த்திருக்கிறேன், என்னால் படிக்க முடியவில்லை, அன்று எனக்கு விளையாடக் காலனிகள் இல்லை, நல்ல ஆடைகள் இல்லை, உணவு இல்லை; ஆனால் இப்போது என்னிடம் ஏராளம் இருக்கிறது, அதை வெளிக்காட்டிக்
கொள்வதற்குப் பதிலாக என் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கவே விரும்புகிறேன்.” என்று முகத்தில் அறைந்தார் போலப் பதிலளித்தார்.
கடந்த வாரம்தான் பாக்கிஸ்தானில் உள்ள ஒரு நகரமும், ஐக்கிய அரபு எமீரகத்தில் ஒரு நகரத்திலும் “வெட் பல்பு வெப்பநிலையை” (wet-bulb) எட்டிவிட்டது என்று கவலையோடு @Poovulagu குழுவில் விவாதித்து கொண்டிருந்தோம்,ஆனால் இன்று சென்னை நகரமே அந்த வெப்பநிலையை நெருங்கி கொண்டிருப்பதாக செய்திகள்
வருகின்றன. ஒவ்வொரு நகரத்திற்கும் பகுதிக்கும், அதன் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் (humidity) இவற்றைக்கொண்டு இந்த வெட் பல்பு வெப்பநிலை கணக்கிடப்படுகிறது. இந்த வெப்பநிலையை ஒரு பகுதி எட்டிவிட்டால் அதன்பிறகு நம் உடல் தன்னைத்தானே குளிர்வித்துக் கொள்ளும் தன்மையை இழந்துவிடும். அதற்குபிறகு
குளிர்சாதன வசதியில்லாமல் இருக்கமுடியாது. அப்படியெனில் விவசாயம், கட்டிடவேலை போன்ற வெளிப்புரத்தில் நடைபெறக்கூடிய வேலைகளை செய்யமுடியாது. எவ்வளவுதான் அதிக வெப்பத்திற்கு பழகியிருந்தாலும் இந்த WBT 32’டிகிரியை எட்டிவிட்டாலே அதன்பிறகு எந்தவேலையும் செய்யமுடியாது, 35டிகிரியை எட்டிவிட்டால்
தமிழ்நாட்டை இராணுவமயமாக்க ஒன்றிய அரசுகள் தொடர்ந்து முயற்சி செய்துவருகின்றன. இந்தியாவிலேயே இரண்டு இடங்களில் அணுவுலைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான், உலகமே கைவிட்ட ஈனுலைகள் மூன்று கல்பாக்கத்தில் அமைக்கப்படுகின்றன. ஈனுலைகள்தான் ப்ளுட்டோனியத்தின் ஊற்று, இந்தியாவில் உள்ள கனநீர் உலைகளின்
அணுக்கழிவுகள் கல்பாக்கத்தில்தான் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இரண்டாவது மறுசுழற்சி மையமும் கல்பாக்கத்தில் அமைகிறது, மறுசுழற்சி மையங்களில் அணுக்கழிவுகளில் இருந்து ப்ளுட்டோனியம் பிரித்தெடுக்கப்படுகிறது என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. கூடங்குளத்தில் 6உலைகளும் அமைக்கப்படும்
பட்டச்சத்தில் உலகில் ஒரே இடத்தில் 6000மெவா உற்பத்தி செய்யும் அணுவுலைகளின் பட்டியலில் இணைந்துவிடும், இங்கேயே மென்நீர் உலைகளிலிருந்து வரும் அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான ஆலைகள் அமைக்கப்படும்.இன்னும் 20-30ஆண்டுகளில் நியூட்ரினோ ஆயுதங்களை உருவாக்க பயன்படும்ஆய்வகம் தமிழ்நாட்டில்
ஆண்டிபயாடிக்ஸ் பயன்பாடு குறித்த ஒருங்கிணைந்த நெறிமுறையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அளவிற்கு அதிகமாக அல்லது தேவையில்லாமல் பயன்படுத்தப்படும் ஆண்டிபயாடிக்ஸால் நம் உடம்பில் உள்ள “நோய்க் கிருமி எதிர்ப்பு கட்டமைப்பு” வலுவிழக்கிறது. ஆங்கிலத்தில் Anti-microbial resistance (AMR) என்று
அறியப்படும் இந்த கட்டமைப்புதான் பல்வேறு கிருமிகளால் நமக்கு ஏற்படும் நோய்கள் வராமல் தடுக்கிறது. ஏஎம்ஆர்தான்“சுகாதார துறையின் காலநிலை மாற்றம் என்கின்றன” ஆய்வுகள்.அடுத்த 30 ஆண்டுகளில் இதனால் 1கோடிக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மருத்துவ துறையில்
பயன்படுத்தப்படும் மருந்துகளை தவிர தொழில்முறை இறைச்சி உற்பத்தியிலும் பயன்படுத்தபடும் ஆண்டிபயாடிக்ஸ் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளும் ஏம்எம்ஆரை வலுவிழக்கச் செய்யும் வேலையை செய்கிறது. அதனால்தான் “மருந்தை மீறிய காசநோய் மற்றும் மலேரியா நோய்கள்”(drug resistant TB &Malaria) அதிகமாகின்றன.
கொரோனா தொற்று நமக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறது. இனிமேல் மனித நலன் என்ற ஒன்று தனியாக கிடையாது, காட்டுயிர் நலன், தாவர நலன், சூழலியல் நலன் இவை எல்லாமும் இணைந்ததுதான் மனித நலனாக இருக்க முடியும். காலநிலை மாற்றம் தாவரங்களின் ஊட்டச்சத்து அளவை (Nutritional value) சுமார் 10-12% வரை
குறைக்கிறது, அதனால் நமக்கு தேவைப்படும் உணவின் அளவு அதிகரிக்கும். காடுகள் அழிக்கப்படுவதால் காட்டுயிர்களின் வாழ்விடங்கள் சுருங்குகின்றன, இவை எல்லாம் மனித நலனில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
உலகநாடுகள் எல்லாம் "ஒருங்கிணைந்த நலன்" (One Health) குறித்த முன்னெடுப்புகளைதான்
அறிவித்து வருகின்றன. தமிழகத்திலும் இது குறித்த விவாதங்கள் துவங்கவேண்டும். ஒருங்கிணைந்த நலன் எதை குறிக்கும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமுறைகளின் ஒருங்கிணைந்த மருத்துவம் எவ்வாறு நடக்கவேண்டும் என்பது குறித்தெல்லாம் இன்று இரவு 9.15 மணிக்கு நம்முடன் ட்விட்டர் ஸ்பேசஸில்
மீண்டும் பீட்டா:-மாட்டுப்பாலை பயன்படுத்துவதற்கு பதிலாக“தாவரப் பாலை”(plant milk)பயன்படுத்துமாறு @Amul_Coop க்கு @PetaIndia கடிதம் எழுதியுள்ளது.இந்த அறிவுரைக்கு சொல்லப்பட்டுள்ள காரணம்,“உலகம் முழுவதும் வீகன் (vegan)உணவை அதிகமாக உட்கொள்ள ஆரம்பித்திருப்பதுதான்”என்று சொல்லப்பட்டுள்ளது.
பீட்டா சொல்லும் தாவர பால், மரபணு மாற்றப்பட்ட சோயாவிலிருந்து(GM Soya) உற்பத்தி செய்யப்படுகிறது. அனைத்து நாடுகளிலும் மரபணு மாற்றப்பட்ட உணவு பயிர்களுக்கு எதிரான மனநிலை உருவாகிவரக்கூடிய நிலையில் தங்கள் நிறுவனங்களின் மரபணு விதைகளுக்கு புதிய சந்தையை தேடும் முகமூடிதான் இந்த தாவரப் பால்.
பீட்டாவின் இந்த “அறிவுரைக்கு” தக்க பதிலை தந்துள்ளார் @Rssamul . கால்நடைகளை வளர்த்து அமுல் நிறுவனத்திற்கு பால் கொடுக்கும் 10கோடி பங்குதார்ர்களில் அதிகமானோர் நிலமற்றவர்கள் எனவும், பலபத்தாண்டுகளுக்கு முன்னர் அமுல் கூட்டுறவு இவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தை கெடுக்கவே இந்த
இந்தியாவில் இதுவரை 12% மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது,3.2% பேர் மட்டுமே இரண்டு டோஸ்களும் போட்டுள்ளனர்.
நம் நாட்டில் உள்ள 18 முதல் 44 வயது உள்ள 59.5 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு சுமார் 119கோடி டோஸ் தேவை.
இதைத்தவிர 45 வயதிற்கு மேற்பட்ட 34கோடி பேருக்கு தடுப்பூசி
போடுவதற்கு 68.8 கோடி டோஸ் வேண்டும். இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் பாதுகாக்க கிட்டத்தட்ட 180 கோடி டோஸ் தடுப்பூசிகள் வேண்டும், தலையே சுற்றுகிறது.
இன்றைய நிலையில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் இரண்டையும் சேர்த்து ஒரு மாதத்திற்கு 7 கோடி தடுப்பூசிகள் மட்டுமே உற்பத்தி
செய்யமுடியும். இந்தியாவில் உள்ள இரண்டு நிறுவனங்களுக்கும் சேர்த்து, சில வாரங்களுக்கு முன்னர்,உற்பத்தி திறனை அதிகரிக்க 4,500கோடி ரூபாயை அரசு முன்பணமாக கொடுத்துள்ளது.இதன் மூலம் இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து ஒரு மாதத்திற்கு 15கோடி டோஸ்களை வரும் ஜூலை மாதத்திலிருந்து உற்பத்தி செய்யும்