மீண்டும் பீட்டா:-மாட்டுப்பாலை பயன்படுத்துவதற்கு பதிலாக“தாவரப் பாலை”(plant milk)பயன்படுத்துமாறு @Amul_Coop க்கு @PetaIndia கடிதம் எழுதியுள்ளது.இந்த அறிவுரைக்கு சொல்லப்பட்டுள்ள காரணம்,“உலகம் முழுவதும் வீகன் (vegan)உணவை அதிகமாக உட்கொள்ள ஆரம்பித்திருப்பதுதான்”என்று சொல்லப்பட்டுள்ளது.
பீட்டா சொல்லும் தாவர பால், மரபணு மாற்றப்பட்ட சோயாவிலிருந்து(GM Soya) உற்பத்தி செய்யப்படுகிறது. அனைத்து நாடுகளிலும் மரபணு மாற்றப்பட்ட உணவு பயிர்களுக்கு எதிரான மனநிலை உருவாகிவரக்கூடிய நிலையில் தங்கள் நிறுவனங்களின் மரபணு விதைகளுக்கு புதிய சந்தையை தேடும் முகமூடிதான் இந்த தாவரப் பால்.
பீட்டாவின் இந்த “அறிவுரைக்கு” தக்க பதிலை தந்துள்ளார் @Rssamul . கால்நடைகளை வளர்த்து அமுல் நிறுவனத்திற்கு பால் கொடுக்கும் 10கோடி பங்குதார்ர்களில் அதிகமானோர் நிலமற்றவர்கள் எனவும், பலபத்தாண்டுகளுக்கு முன்னர் அமுல் கூட்டுறவு இவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தை கெடுக்கவே இந்த
விவகாரத்தை பீட்டா கிளப்பிவிட்டிருப்பதாக சூட் தெரிவித்துள்ளார். மேலும் பன்னாட்டு நிறுவனத்தின் சந்தை சறுக்கலை தடுத்து அவர்களின் வணிகத்தை அதிகரிக்கவே தாவரப்பால் விவாகரத்தை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் பீட்டா தன்னுடைய விளையாட்டை ஆரம்பித்துள்ளது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்தியாவில் இதுவரை 12% மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது,3.2% பேர் மட்டுமே இரண்டு டோஸ்களும் போட்டுள்ளனர்.
நம் நாட்டில் உள்ள 18 முதல் 44 வயது உள்ள 59.5 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு சுமார் 119கோடி டோஸ் தேவை.
இதைத்தவிர 45 வயதிற்கு மேற்பட்ட 34கோடி பேருக்கு தடுப்பூசி
போடுவதற்கு 68.8 கோடி டோஸ் வேண்டும். இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் பாதுகாக்க கிட்டத்தட்ட 180 கோடி டோஸ் தடுப்பூசிகள் வேண்டும், தலையே சுற்றுகிறது.
இன்றைய நிலையில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் இரண்டையும் சேர்த்து ஒரு மாதத்திற்கு 7 கோடி தடுப்பூசிகள் மட்டுமே உற்பத்தி
செய்யமுடியும். இந்தியாவில் உள்ள இரண்டு நிறுவனங்களுக்கும் சேர்த்து, சில வாரங்களுக்கு முன்னர்,உற்பத்தி திறனை அதிகரிக்க 4,500கோடி ரூபாயை அரசு முன்பணமாக கொடுத்துள்ளது.இதன் மூலம் இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து ஒரு மாதத்திற்கு 15கோடி டோஸ்களை வரும் ஜூலை மாதத்திலிருந்து உற்பத்தி செய்யும்
இந்தியா ஆக்சிஜனுக்காக தத்தளித்த போது தேவையை விட நான்கு மடங்கு ஆக்சிஜன் எஃகு உருக்காலைகளின் சேமிப்பு தொட்டிகளில் இருந்தது என உச்சநீதி மன்றத்தில் மத்திய எஃகு அமைச்சகம் தகவல்.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து
வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன.
ஆனால் கொடுமை என்ன தெரியுமா?
கடந்த ஒருவாரமாக, அதாவது ஏப்ரல் 20ஆம் தேதி முதல் உச்சமாக ஆக்சிஜன் தேவைப்பட்ட நேரத்தில் இந்தியாவில் உள்ள sail எஃகு ஆலைகளில் மட்டும் சுமார் 16,500
டன் மருத்துவ திரவு ஆக்சிஜன் சேமிப்பு தொட்டிகளில் சேமிக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது என்று எஃகு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா நோயாளிகள் அதிகமாக இருந்த 12 மாநிலங்களில் உள்ளவர்களுக்கு தேவைப்பட்ட ஆக்சிஜன் அளவு 4,880 டன், ஆனால் சேமிப்பில் இருந்த கையிருப்பு தேவையை விட
உத்தரப்பிரதேசத்தில் ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடே இல்லை என்கிறார் அம்மாநில முதல்வர் யோகி. ஆனால், அங்கு தொடர்ந்து இழப்புகள் அதிகரித்துவருகின்றன. உண்மையில் அந்த மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து பிபிசியின் சமீராத்மஜ் மிஸ்ரா ஒரு அதிர வைக்கும் கட்டுரையை எழுதியிருக்கிறார்.
1. மாநிலம் முழுவதுமே கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் இடம் தேடி அலைகிறார்கள். அல்லது இடம் கிடைக்காமல் உயிரிழக்கிறார்கள். ஆனால், உத்தர பிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடோ மருத்துவமனை படுக்கை வசதிகள் இல்லாத நிலையோ கிடையாது என்கிறார் யோகி. 2. முதல்வரின் கூற்றுக்கு மாறாக,
உத்தர பிரதேசத்தின் பல மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன்,வென்டிலேட்டர், படுக்கை வசதிகள் கிடைக்காமல் பலநோயாளிகள் இறந்து போனதையும் அதற்கு முன்னதாக, நோயாளிகளின் உறவினர்கள் சமூக ஊடகங்கள் மூலம் உதவி கேட்டு அபயக்குரல் விடுத்த காட்சிகளையும் பார்க்க முடிந்தது. 3. உத்தர பிரதேசத்தில் முதல்வர்
ராகுல் காந்தி இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத சக்தி:-
கடந்த மார்ச் 15ஆம்தேதி The Hindu நாளிதழில் ராகுல் காந்தி குறித்த ஒரு கட்டுரையை Rajesh Mahapatraவும் Rohan D'Souzaவும் எழுதியிருந்தனர்.இந்திய அரசியலில் பிரதமர் மோதியின் ஆபத்தான அரசியலுக்கு மாற்று ராகுல் காந்தி மட்டுமே என்பதை
அந்தக் கட்டுரையில் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அந்தக் கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு இது: 1. இந்தியாவில் இருவிதமான குடிசைத் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒன்று, ராகுல் காந்திக்கு தொடர்ந்து அறிவுரைகள் கூறுவது. மற்றொன்று, அவரெல்லாம் ஒரு ஆளா என்று ஒதுக்கித் தள்ளுவது.
ஆனால், இந்த இருதரப்பாலும் புரிந்துகொள்ள முடியாத ஒன்று, ராகுல் எப்படி பா.ஜ.கவுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் என்பதைத்தான். 2. மோதியைப் பொறுத்தவரை சீன பாணியிலான அரசியல் சூழலையே விரும்புகிறார். சீன கம்யூனிஸ்ட் கட்சியைப் போல பா.ஜ.க. இந்தியாவை ஆதிக்கம் செலுத்த வேண்டுமென நினைக்கிறார்.
#கடல்_அட்டை (Sea cucumber):-
பார்ப்பதற்கு நீண்ட உருளையான உருவத்துடன் (உருண்டை வடிவ சிற்றினங்களும் உண்டு) காணப்படும் இக்கடலுயிரினம் ஆங்கிலத்தில் sea cucumber என அழைக்கப்படுகிறது. முட்த்தோலி வகையைச் சார்ந்த இவ்வுயிரினம் தமிழில் கடல் அட்டை, கடல் வெள்ளரி (தமிழ்ப்படுத்தப்பட்ட
வார்த்தை என்று நினைக்கிறேன்) என்ற பெயர்களால் சுட்டப்படுகிறது. (வேறு வட்டாரப் பெயர்கள் இருப்பின் நண்பர்கள் தெரிவியுங்கள்)
கடல் தரையில் மிதவை உயிரினங்களையும் மட்கியத் தாவரங்களையும் உண்டு வாழும் இவ்வுயிரினத்தின் உடலானது நெகிழும் தன்மையுள்ள சதைப்பற்றான தோலால் போர்த்தப்பட்டிருக்கிறது.
பொதுவாக இவை ஆபத்தற்றவை என்றாலும் ஆபத்துக்கு உள்ளாக்கப்படும்போது(சில உள்ளினங்களில்) ஒரு பிசுபிசுப்பான ஒட்டும் தன்மையுடையத் திரவத்தை வெளியேற்றுகின்றன. இத்திரவம் கண்களில் பட்டால் நிரந்தர பார்வையிழப்பை ஏற்படுத்தக் கூடியது.
உடலின் ஒருமுனையில் அமைந்திருக்கும் வாயில் குட்டி மரங்களை ஒத்த
கோவிட் வருவதற்கு முன்னர் தமிழ்நாட்டில் உள்ள 35அரசு மருத்துவமனைகளில் (குறிப்பு;- மாநிலத்தில் அல்ல,அரசு மருத்துமனைகளில் மட்டும்) உள்ள திரவ ஆக்சிஜன் உற்பத்தி திறன் 355கி.லி. கோவிட் தொற்றின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் இன்னும் அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்படும் என்று எண்ணிய தமிழக அரசு
இந்த உற்பத்தி திறனை அதிகரிக்க முடிவெடுத்தது. மேலும் 30 அரசு மருத்துவமனைகளில் 431கி.லி திரவ ஆக்சிஜன் உற்பத்தியை நிறுவியது. இதுவும் மீறி தேவைப்பட்டால் இருக்கட்டும் என்று இன்னொரு 100கிலி திறன் கொண்ட உருவாக்க ஆலைகளை அமைக்கிறது. இதைத்தவிர தமிழகம் எங்குமுள்ள ஆக்சிஜன் உருவாக்க ஆலைகளின்
திறனை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.
அப்படியே பாஜக ஆளக்கூடிய மத்திய பிரதேசம் செல்வோம், நான்கு தினங்களுக்கு முன்னர்தான் அந்த மாநில முதல்வர் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி, அம்மாநிலத்தில் உள்ள 37மாவட்டங்களிலும் ஆக்சிஜன் ஆலைகளை அமைக்க உத்தரவிட்டுள்ளார். அதாவது தமிழக அரசு 55-60