ஆண்டிபயாடிக்ஸ் பயன்பாடு குறித்த ஒருங்கிணைந்த நெறிமுறையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அளவிற்கு அதிகமாக அல்லது தேவையில்லாமல் பயன்படுத்தப்படும் ஆண்டிபயாடிக்ஸால் நம் உடம்பில் உள்ள “நோய்க் கிருமி எதிர்ப்பு கட்டமைப்பு” வலுவிழக்கிறது. ஆங்கிலத்தில் Anti-microbial resistance (AMR) என்று
அறியப்படும் இந்த கட்டமைப்புதான் பல்வேறு கிருமிகளால் நமக்கு ஏற்படும் நோய்கள் வராமல் தடுக்கிறது. ஏஎம்ஆர்தான்“சுகாதார துறையின் காலநிலை மாற்றம் என்கின்றன” ஆய்வுகள்.அடுத்த 30 ஆண்டுகளில் இதனால் 1கோடிக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மருத்துவ துறையில்
பயன்படுத்தப்படும் மருந்துகளை தவிர தொழில்முறை இறைச்சி உற்பத்தியிலும் பயன்படுத்தபடும் ஆண்டிபயாடிக்ஸ் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளும் ஏம்எம்ஆரை வலுவிழக்கச் செய்யும் வேலையை செய்கிறது. அதனால்தான் “மருந்தை மீறிய காசநோய் மற்றும் மலேரியா நோய்கள்”(drug resistant TB &Malaria) அதிகமாகின்றன.
அமெரிக்கா போன்ற நாடுகளில் மூன்றாம் நிலையில் கொடுக்கப்படும் ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் இந்தியாவில் முதல் நிலையிலேயே கொடுக்கப்படுகின்றன.முதல் நிலை மருந்துகள் இந்தியா போன்ற வளர்ந்தநாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்படுவதால் போதிய விலை கிடைக்காத்தால் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் அதுகுறித்த
கொரோனா தொற்று நமக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறது. இனிமேல் மனித நலன் என்ற ஒன்று தனியாக கிடையாது, காட்டுயிர் நலன், தாவர நலன், சூழலியல் நலன் இவை எல்லாமும் இணைந்ததுதான் மனித நலனாக இருக்க முடியும். காலநிலை மாற்றம் தாவரங்களின் ஊட்டச்சத்து அளவை (Nutritional value) சுமார் 10-12% வரை
குறைக்கிறது, அதனால் நமக்கு தேவைப்படும் உணவின் அளவு அதிகரிக்கும். காடுகள் அழிக்கப்படுவதால் காட்டுயிர்களின் வாழ்விடங்கள் சுருங்குகின்றன, இவை எல்லாம் மனித நலனில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
உலகநாடுகள் எல்லாம் "ஒருங்கிணைந்த நலன்" (One Health) குறித்த முன்னெடுப்புகளைதான்
அறிவித்து வருகின்றன. தமிழகத்திலும் இது குறித்த விவாதங்கள் துவங்கவேண்டும். ஒருங்கிணைந்த நலன் எதை குறிக்கும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமுறைகளின் ஒருங்கிணைந்த மருத்துவம் எவ்வாறு நடக்கவேண்டும் என்பது குறித்தெல்லாம் இன்று இரவு 9.15 மணிக்கு நம்முடன் ட்விட்டர் ஸ்பேசஸில்
மீண்டும் பீட்டா:-மாட்டுப்பாலை பயன்படுத்துவதற்கு பதிலாக“தாவரப் பாலை”(plant milk)பயன்படுத்துமாறு @Amul_Coop க்கு @PetaIndia கடிதம் எழுதியுள்ளது.இந்த அறிவுரைக்கு சொல்லப்பட்டுள்ள காரணம்,“உலகம் முழுவதும் வீகன் (vegan)உணவை அதிகமாக உட்கொள்ள ஆரம்பித்திருப்பதுதான்”என்று சொல்லப்பட்டுள்ளது.
பீட்டா சொல்லும் தாவர பால், மரபணு மாற்றப்பட்ட சோயாவிலிருந்து(GM Soya) உற்பத்தி செய்யப்படுகிறது. அனைத்து நாடுகளிலும் மரபணு மாற்றப்பட்ட உணவு பயிர்களுக்கு எதிரான மனநிலை உருவாகிவரக்கூடிய நிலையில் தங்கள் நிறுவனங்களின் மரபணு விதைகளுக்கு புதிய சந்தையை தேடும் முகமூடிதான் இந்த தாவரப் பால்.
பீட்டாவின் இந்த “அறிவுரைக்கு” தக்க பதிலை தந்துள்ளார் @Rssamul . கால்நடைகளை வளர்த்து அமுல் நிறுவனத்திற்கு பால் கொடுக்கும் 10கோடி பங்குதார்ர்களில் அதிகமானோர் நிலமற்றவர்கள் எனவும், பலபத்தாண்டுகளுக்கு முன்னர் அமுல் கூட்டுறவு இவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தை கெடுக்கவே இந்த
இந்தியாவில் இதுவரை 12% மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது,3.2% பேர் மட்டுமே இரண்டு டோஸ்களும் போட்டுள்ளனர்.
நம் நாட்டில் உள்ள 18 முதல் 44 வயது உள்ள 59.5 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு சுமார் 119கோடி டோஸ் தேவை.
இதைத்தவிர 45 வயதிற்கு மேற்பட்ட 34கோடி பேருக்கு தடுப்பூசி
போடுவதற்கு 68.8 கோடி டோஸ் வேண்டும். இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் பாதுகாக்க கிட்டத்தட்ட 180 கோடி டோஸ் தடுப்பூசிகள் வேண்டும், தலையே சுற்றுகிறது.
இன்றைய நிலையில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் இரண்டையும் சேர்த்து ஒரு மாதத்திற்கு 7 கோடி தடுப்பூசிகள் மட்டுமே உற்பத்தி
செய்யமுடியும். இந்தியாவில் உள்ள இரண்டு நிறுவனங்களுக்கும் சேர்த்து, சில வாரங்களுக்கு முன்னர்,உற்பத்தி திறனை அதிகரிக்க 4,500கோடி ரூபாயை அரசு முன்பணமாக கொடுத்துள்ளது.இதன் மூலம் இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து ஒரு மாதத்திற்கு 15கோடி டோஸ்களை வரும் ஜூலை மாதத்திலிருந்து உற்பத்தி செய்யும்
இந்தியா ஆக்சிஜனுக்காக தத்தளித்த போது தேவையை விட நான்கு மடங்கு ஆக்சிஜன் எஃகு உருக்காலைகளின் சேமிப்பு தொட்டிகளில் இருந்தது என உச்சநீதி மன்றத்தில் மத்திய எஃகு அமைச்சகம் தகவல்.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து
வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன.
ஆனால் கொடுமை என்ன தெரியுமா?
கடந்த ஒருவாரமாக, அதாவது ஏப்ரல் 20ஆம் தேதி முதல் உச்சமாக ஆக்சிஜன் தேவைப்பட்ட நேரத்தில் இந்தியாவில் உள்ள sail எஃகு ஆலைகளில் மட்டும் சுமார் 16,500
டன் மருத்துவ திரவு ஆக்சிஜன் சேமிப்பு தொட்டிகளில் சேமிக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது என்று எஃகு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா நோயாளிகள் அதிகமாக இருந்த 12 மாநிலங்களில் உள்ளவர்களுக்கு தேவைப்பட்ட ஆக்சிஜன் அளவு 4,880 டன், ஆனால் சேமிப்பில் இருந்த கையிருப்பு தேவையை விட
உத்தரப்பிரதேசத்தில் ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடே இல்லை என்கிறார் அம்மாநில முதல்வர் யோகி. ஆனால், அங்கு தொடர்ந்து இழப்புகள் அதிகரித்துவருகின்றன. உண்மையில் அந்த மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து பிபிசியின் சமீராத்மஜ் மிஸ்ரா ஒரு அதிர வைக்கும் கட்டுரையை எழுதியிருக்கிறார்.
1. மாநிலம் முழுவதுமே கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் இடம் தேடி அலைகிறார்கள். அல்லது இடம் கிடைக்காமல் உயிரிழக்கிறார்கள். ஆனால், உத்தர பிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடோ மருத்துவமனை படுக்கை வசதிகள் இல்லாத நிலையோ கிடையாது என்கிறார் யோகி. 2. முதல்வரின் கூற்றுக்கு மாறாக,
உத்தர பிரதேசத்தின் பல மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன்,வென்டிலேட்டர், படுக்கை வசதிகள் கிடைக்காமல் பலநோயாளிகள் இறந்து போனதையும் அதற்கு முன்னதாக, நோயாளிகளின் உறவினர்கள் சமூக ஊடகங்கள் மூலம் உதவி கேட்டு அபயக்குரல் விடுத்த காட்சிகளையும் பார்க்க முடிந்தது. 3. உத்தர பிரதேசத்தில் முதல்வர்
ராகுல் காந்தி இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத சக்தி:-
கடந்த மார்ச் 15ஆம்தேதி The Hindu நாளிதழில் ராகுல் காந்தி குறித்த ஒரு கட்டுரையை Rajesh Mahapatraவும் Rohan D'Souzaவும் எழுதியிருந்தனர்.இந்திய அரசியலில் பிரதமர் மோதியின் ஆபத்தான அரசியலுக்கு மாற்று ராகுல் காந்தி மட்டுமே என்பதை
அந்தக் கட்டுரையில் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அந்தக் கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு இது: 1. இந்தியாவில் இருவிதமான குடிசைத் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒன்று, ராகுல் காந்திக்கு தொடர்ந்து அறிவுரைகள் கூறுவது. மற்றொன்று, அவரெல்லாம் ஒரு ஆளா என்று ஒதுக்கித் தள்ளுவது.
ஆனால், இந்த இருதரப்பாலும் புரிந்துகொள்ள முடியாத ஒன்று, ராகுல் எப்படி பா.ஜ.கவுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் என்பதைத்தான். 2. மோதியைப் பொறுத்தவரை சீன பாணியிலான அரசியல் சூழலையே விரும்புகிறார். சீன கம்யூனிஸ்ட் கட்சியைப் போல பா.ஜ.க. இந்தியாவை ஆதிக்கம் செலுத்த வேண்டுமென நினைக்கிறார்.