Thread (Part1)

Mel Gibson அ எல்லாருக்கும் தெரியும். அவர் நடிச்ச Brave Heart படம் பார்த்து உருகி இருப்போம். அவர் இயக்கிய Apocalypto படம் பார்த்து உறைந்து இருப்போம்.

அவரை பற்றி DGS தினகரன் ஒரு முறை உருக்கமான கதை ஒண்ணு சொன்னாரு. கேட்டு கண்ணுல ஜலம் வைக்காத குறை. 👇
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கடின உழைப்பாளி தனது குடும்பத்தை நியூயார்க் மாநிலத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பிழைப்பதற்காக அழைத்துச் சென்றார். இந்த மனிதனுக்கு ஒரு அழகான இளம் மகன், அவர் சர்க்கஸில் ஒரு ட்ரேபீஸ் கலைஞராக அல்லது ஒரு நடிகராக சேர விரும்பினார்.
இந்த அழகிய இளைஞன், ஒரு சர்க்கஸ் வேலை அல்லது சினிமா வாய்ப்பு வரும் வரும் வரை உள்ளூர் கப்பல் கட்டடங்களில் பணிபுரிந்து கொண்டு இருந்தார், இது நகரத்தின் மோசமான பகுதியின் எல்லைக்குள் இருந்தது, அதாவது குற்ற சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதி.
ஒரு நாள் மாலை, வேளையில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்ற இந்த இளைஞன் ஐந்து கொள்ளையர்களால் தாக்கப்பட்டான். தனது பணத்தை கொடுக்காமல், அவர்களுடன் அவன் சண்டையிட்டான். அவனால் 5 பேரை எதிர்த்து சண்டை போட முடியவில்லை.
அவர்கள் அவனது முகத்தை பூட்ஸால் பிசைந்து, அவனை கொடூரமாக அடித்து, அவனை கொன்று போட்டுவிட்டார்கள்.

சவக்கிடங்கிற்கு செல்லும் வழியில் ஒரு போலீஸ்காரர் அவனது கை ஆடுவதை கண்டார், உடனடியாக அவனை மருத்துவமனையில் அவசர பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்.
அவனை பார்த்த மருத்துவர் அதிர்ந்து போய்விட்டார், அந்த இளைஞனுக்கு ஒரு முகம் இல்லை. ஒவ்வொரு கண் சாக்கெட்டும் அடித்து நொறுக்கப்பட்டு இருந்தது, மண்டை ஓடு, கால்கள் மற்றும் கைகள் முறிந்து இருந்தன, மூக்கு உண்மையில் முகத்தில் இருந்து தொங்கிக் கொண்டிருந்தது, பற்கள் அனைத்தும் போய்விட்டன,
மற்றும் தாடை முற்றிலும் கிழிந்து இருந்தது. அவனது உயிரைக் காப்பாற்றிய போதிலும், அவன் மருத்துவமனையிலேயே ஒரு ஆண்டு முழுவதும் இருக்க வேண்டி இருந்தது. அவன் இறுதியாக வெளியேறும்போது முகம் பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தது. எல்லோரும் போற்றிய அழகான இளைஞனாக அவன் இல்லை.
அந்த இளைஞன் மீண்டும் வேலை தேடத் தொடங்கியபோது, ​​அவன் முகத்தின் விகாரத்தின் காரணமாக அனைவராலும் நிராகரிக்கப்பட்டான். ஒரு circus முதலாளி அவனை சர்க்கஸில் நடந்த குறும்பு நிகழ்ச்சியில் 'The man who had no face" என்று அறிமுகம் செய்தார்.
அந்த நிகழ்ச்சியில் கோமாளித்தனமாக அவன் ஏதேதோ செய்து மக்களை கவர முயன்றான் ஆனால் யாரும் அவனை பார்க்க விரும்பவில்லை. அவனுக்கு தற்கொலை எண்ணங்கள் தோன்றின. இப்படியாக ஐந்து ஆண்டுகளாக போனது.

ஒரு நாள் அவன் ஒரு தேவாலயத்தைக் கடந்து செல்லும்போது யாரோ அவனை அழைப்பது போல இருந்தது.
தேவாலயத்திற்குள் நுழைந்த அவனை ஒரு பாதிரியாரை எதிர்கொண்டார். அவர் அவன் மீது பரிதாபப்பட்டு, அவன் சிறந்த கத்தோலிக்கனாக இருப்பேன் என்று உறுதியளித்தால், அவனது வாழ்க்கையை மீட்டெடுக்க செய்யக்கூடிய எல்லாவற்றையும் செய்வேன் என்று கூறினார்.
அவனது சித்திரவதை வாழ்க்கையிலிருந்து அவனை விடுவிப்பதற்கான கடவுளின் கருணையாக அவன் இதை பார்த்தான். அந்த இளைஞன் ஒவ்வொரு நாளும் சர்ச் க்கு சென்றான், தன் உயிரைக் காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி தெரிவித்து, மன அமைதியையும், கடவுளின் பார்வையில் தான் மிகச் சிறந்த மனிதனாக இருக்கும் கிருபையையும
் கொடுக்கும்படி கேட்டான்.

பாதிரியார், தனது தனிப்பட்ட தொடர்புகள் மூலம் ஆஸ்திரேலியாவின் சிறந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரின் சேவைகளைப் பெற முடிந்தது. மருத்துவர் பாதிரியாரின் சிறந்த நண்பராக இருந்ததால் அவர் அந்த இளைஞருக்கு எந்த செலவுமின்றி சிகிச்சை அளிக்க முன்வந்தார்.
அவன் மீண்டும் பழைய அழகிய இளைஞன் ஆனான். அவன் ஒரு அற்புதமான, அழகான மனைவி மற்றும் பல குழந்தைகளுடன் ஆசீர்வதிக்கப்பட்டான், மேலும் திரை துறையில் மிகப்பெரிய ஆளாக வந்தான். தன்னை ஆசிர்வதித்த இறைவனை பெருமைப்படுத்தும் படி " The Passion of the Christ" என்ற ஒரு திரைப்படத்தையும் எடுத்தான்.
தனது வாழ்க்கையையும் "The man without a face" என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தான்.

அந்த

இளைஞன். . .

மெல் கிப்சன்.

இப்படி ஒரு miracle உண்மையில் நடந்ததா அப்படினு ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இந்த கம்பி கட்டும் கதை எப்படி தோன்றியது என்று தெரிய வந்தது.

அதை அப்புறமா சொல்றேன்....

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Swathika

Swathika Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @swathikasarah

24 Jul
Disclaimer: மனம் புண்படும் வாய்புள்ளவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம். 🙏🏻

பைபிள் லயே கொஞ்சம் soft ஆனா ஆளுண்ணு பாத்திங்கன்னா அது நம்ம Isaac தான்.

Isaac Rebekah கல்யாணம் முழுக்க முழுக்க பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கல்யாணம் தான்.
ஏன் நம்ம ஈசாக் லவ் பண்ணல அப்படினு ஆராய்ச்சி பண்ணேன்.🤔

ஈசாக் ஒரு நல்ல பையன், கீழ்ப்படிதல் மற்றும் பெற்றோருக்கு அடிபணிந்தவர். எந்த அளவுக்கு அடிபணிந்தவர் அப்படின்னா அப்பா உன்னை பலியிட போறேன் என்று சொல்லி கழுத்து மேல கத்தியை வைக்கும்போது கூட அமைதியா இருக்கிற அளவுக்கு அடிபணிந்தவர்.
இல்ல பயம் அப்படினு கூட இருக்கலாம். ஏன்னா இதே அப்பா தான் அண்ணா இஸ்மாயீல் and அவங்க அம்மா Hager அ கொண்டு போய் நடு பாலைவனத்தில் விட்டுவிட்டு வந்தவர்.😦 அதனால் பயமா கூட இருக்கலாம்.

சில version ல Abraham Isaac அ கொன்று விட்டதாகவும் பின் கடவுள் அவனை உயிர்த்தெழ செய்ததாகவும் சொல்றாங்க.
Read 16 tweets
24 Jul
Thread (Part 3)

Mel Gibson ஒரு தீவிர யூத வெறுப்பாளர். Winona Ryder ஐ ஒருமுறை இவர் oven dodger (இது ஒரு மோசமான  சொல். இரண்டாம் உலகப் போரின் போது நாஜி மரண முகாம்களில் யூத கைதிகள் படுகொலை செய்யப்பட்ட விதத்தை கேலியாக குறிக்கிறது.) என்று அழைத்ததாக புகார் எழும்பியது.
இது மட்டுமல்ல இது போல பல பேர் அவர் மேல் புகார் அளித்து இருக்கின்றனர்.
ஒருமுறை குடிபோதையில் ஒரு காவலரை இது போன்ற வார்த்தைகளில் திட்டியத்திற்கு மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
அவருடைய The Passion of the Christ படமும் கூட பல விமர்சனங்களை கொண்டது தான்.
யூதர்களை கோரமான, கொக்கி மூக்குடைய பரிசேயர்களாக சித்தரித்து இருக்கிறார் என்றும், யூத எதிர்ப்பு stereotype கள் ஆழமாக வேரூன்றியுள்ளது என்றும் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
Read 11 tweets
24 Jul
Thread (Part 2)

Mel Gibson சிறுவயதில் ஒரு கத்தோலிக்க உயர்நிலைப்பள்ளி மாணவராக இருந்தார், சமையல்காரர் அல்லது ஒரு பத்திரிகையாளராக ஆவதுதான் அவர் சிறுவயது லட்சியங்களாக இருந்தன. Mad Max திரைப்படத்தில் நடிக்கும் முன்னர் நிறைய சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.
சதுரங்க வேட்டை படத்துல "நாம சொல்ற பொய்ல கொஞ்சம் உண்மையும் கலந்து இருக்கணும் அப்போதான் மக்கள் நம்புவாங்க" அப்படினு ஒரு வசனம் வரும். அது போல இந்த கம்பி கட்டுன கதையிலும் சில உண்மைகள் இருக்கு. அவங்க அப்பா Mel Gibson 12 வயதாக இருந்தபோது தனது குடும்பத்தை நியூயார்க்கில் இருந்து
ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு மாற்றினார். Mad Max audition க்கு முந்தைய நாள் இரவு, ஒரு சண்டையில் அவரது முகம் நன்கு அடிபட்டது. பின்னர் அவர் Mad Max audition க்கு காயம்பட்ட, வீங்கிய, முகத்துடன் சென்றார். சிலநாட்களில் பழைய நிலைக்கு அவரது முகம் திரும்பிவிட்டது.
Read 12 tweets
23 Jul
Before Common Era (BCE)/Common Era (CE)

மனிதனைப் போலவே, காலெண்டர்களும் உருமாறி கொண்டே இருக்கின்றன. ரோமன் காலண்டர் பின் ஜூலியன் காலண்டர் , தற்போது நாம் பயன்படுத்துவது 1582 ஆம் ஆண்டில் போப் கிரிகோரி XIII அறிமுகப்படுத்திய கிரிகோரியன் காலண்டர்.
சமீப காலமாக சில இடங்களில் நீங்கள் CE அல்லது BCE என்று வருடங்களை குறிப்பிடுவதை பார்த்து இருக்கலாம். அவை AD (anno Domini) மற்றும் BC (before Christ) என்பதின் புதிய வடிவம். CE (Common Era) மற்றும் BCE (Before Common Era).
எளிமையாகச் சொன்னால், BCE (Before Common Era) என்பது கி.மு. BC (கிறிஸ்துவுக்கு முன்/Before Christ) இன் மதச்சார்பற்ற பதிப்பாகும். CE (Common Era) என்பது AD (ann Domini) இன் மதச்சார்பற்ற சமமானதாகும், ann Domini பொருள் லத்தீன் மொழியில் “கர்த்தருடைய ஆண்டில்”.
Read 6 tweets
21 Jul
குரோமோசோம் பற்றி நாம் எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். பெண் என்றால் இரண்டு X குரோமோசோம் (XX) ஆண் என்றால் ஒரு X மற்றும் ஒரு Y குரோமோசோம் (XY).

ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்பதை முடிவு எடுப்பது ஆணிடம் இருந்து வரும் அந்த Y குரோமோசோம் தான். இதெல்லாம் உங்களுக்கு தெரிந்து இருக்கும்.
தெரியாத ஒன்று ஆதியில் வெறும் X குரோமோசோம் மட்டும் தான் இருந்தது. Y
குரோமோசோம் பின்னர் X
குரோமோசோமில் இருந்து உருவானது. அப்படின்னா முதலில் உருவானது பெண் தான் பெண்ணில் இருந்து உருவானவன் தான் ஆண். ஆதாம் தான் முதலில் வந்தான் என்கிற கதை வெறும் கதை தான்!
Y குரோமோசோம் மற்றும் X குரோமோசோம் இவை இரண்டும் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோசோம் களில் இருந்து “செக்ஸ்” குரோமோசோம்களாக பரிணமித்தன. இது முக்கியமானது, ஏனென்றால் பல உயிரினங்களுக்கு நம்மைப் போல ஒவ்வொரு பாலினத்திற்கும் ஒரு தனிப்பட்ட குரோமோசோம் இல்லை.
Read 7 tweets
26 Jun
பெண்கள் வரதட்சிணை கொடுமை பற்றி பேசும்போது எல்லாம் ஆண்கள் "பெண்கள் நல்ல வேலை, வீடு எல்லாம் ஆண்களிடம் எதிர்பார்க்கிறார்கள் அது சரியா?" என்ற வாதத்தை எடுத்து கொண்டு வருகிறார்கள். All men என்று சொல்லும்போது not all men என்று சொல்லி பிரச்சனையை நீர்த்து போக வைப்பது போன்றதே இதுவும்.
வரதட்சிணையும் சரி நல்ல வேலை போன்ற எதிர்பார்ப்புகளும் சரி patriarchy அமைப்பின் மூலம் விளைந்த தீமைகள் தான். ஆணாதிக்கம் பெண்களை மட்டும் பாதிப்பது இல்லை. இது ஆண்களையும் பாதிக்கிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு இதுதான்.
ஆணாதிக்கம் என்பது ஆண்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற சித்தாந்தம். அது ஆண் எப்படி இருக்க வேண்டும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்கிற விதிமுறைகளையும் கட்டமைக்கிறது. ஒரு ஆண் என்பவன் வீரம் மிகுந்தவனாக இருக்க வேண்டும், அவனது வீட்டு பெண்களை காப்பாற்ற வேண்டும், தனது உணர்ச்சிகளை வெளிக்காட்ட
Read 22 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(