Disclaimer: மனம் புண்படும் வாய்புள்ளவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம். 🙏🏻
பைபிள் லயே கொஞ்சம் soft ஆனா ஆளுண்ணு பாத்திங்கன்னா அது நம்ம Isaac தான்.
Isaac Rebekah கல்யாணம் முழுக்க முழுக்க பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கல்யாணம் தான்.
ஏன் நம்ம ஈசாக் லவ் பண்ணல அப்படினு ஆராய்ச்சி பண்ணேன்.🤔
ஈசாக் ஒரு நல்ல பையன், கீழ்ப்படிதல் மற்றும் பெற்றோருக்கு அடிபணிந்தவர். எந்த அளவுக்கு அடிபணிந்தவர் அப்படின்னா அப்பா உன்னை பலியிட போறேன் என்று சொல்லி கழுத்து மேல கத்தியை வைக்கும்போது கூட அமைதியா இருக்கிற அளவுக்கு அடிபணிந்தவர்.
இல்ல பயம் அப்படினு கூட இருக்கலாம். ஏன்னா இதே அப்பா தான் அண்ணா இஸ்மாயீல் and அவங்க அம்மா Hager அ கொண்டு போய் நடு பாலைவனத்தில் விட்டுவிட்டு வந்தவர்.😦 அதனால் பயமா கூட இருக்கலாம்.
சில version ல Abraham Isaac அ கொன்று விட்டதாகவும் பின் கடவுள் அவனை உயிர்த்தெழ செய்ததாகவும் சொல்றாங்க.
அப்படின்னா அது இன்னும் மோசம் அப்பா கொன்னே போட்றுவாரு ன்னு இன்னும் கூட Isaac க்கு திகிலா இருக்கும்.
இஸ்மாயில் போனவுடன், ஐசக் வீட்டில் ஒரே குழந்தை, அவரது பெற்றோரின் வாழ்க்கை அவரைச் சுற்றி வந்தது. Isaac ஒருபோதும் எதையும் விரும்பவில்லை.
அதனால் தான் பாருங்க 40 வயசு ஆகியும் எந்த பொண்ணையும் பார்க்காம பயத்துலயே இருந்து இருக்காரு. அப்பா கோவபட்டு பாலைவனத்தில் விட்டாலும் விடலாம் அல்லது கத்தியை தூக்கினாலும் தூக்கலாம் எதுக்கு வம்பு? இப்படி பயந்த பிள்ளையவே இருந்து இருக்காரு பாவம்.
சாரா இறந்த அப்புறம் தான் ஆபிரகாம் க்கு மகன் பற்றிய சிந்தனையே வருது. என்னடா இவன் இன்னும் கல்யாணம் ஆகாமல் இருக்கானே என்று. உடனே வேலைக்காரனை கூப்பிட்டு கானான் நாட்டில் இருந்து பொண்ணு வேணாம் அவங்க எல்லாம் மோசமானவங்க (அவங்க இருக்கிறதே கானான் தேசம்.
அதனால் தான் Isaac லவ் பண்ணலையோ என்னமோ ஏற்கனவே வாய்க்கா தகராறு இதுல கானான் பொண்ணை கூட்டிட்டு வந்தா அவ்ளோதான் என்று நினைச்சு இருப்பான். பாவம் பயந்த புள்ள.)
நீ போய் வடக்கு மெசொப்பொத்தேமியாவில் ஷேமின் சந்ததியினரில் இருந்து ஒரு பொண்ணை பார்த்து கூட்டிட்டு வா என்று சொல்றாரு.
அப்படி அந்த வேலைக்காரன் போய் பார்த்து கூட்டிட்டு வந்த பொண்ணு தான் Rebekah. ஆபிரகாமின் சகோதரனின் பேத்தி ரெபெக்கா.
வேலைக்காரன் போற வழி எல்லாம் Rebekah கிட்ட Isaac புகழ் பாடிகிட்டே போறான். ஐசக் ஒரு அடக்கமான (வழக்கமாக இதை ஒரு பொண்ணுக்கு தானே அந்த காலத்துல சொல்லுவாங்க.
ஒருவேளை அப்படி இருக்குமோ? 🤔), லேசான நடத்தை உள்ள, அமைதியான மனிதர். சண்டையைத் தவிர்ப்பதற்காக அவர் எந்த அளவிற்கும் செல்வார் (ஆதி 26:18-25). அவர் ஒரு தியான மனிதர், விரைவான சிந்தனையாளர் அல்ல மாறாக அமைதியாகவும் ஒதுங்கியே இருப்பவர் (ஒரு வேளை பொண்ணுங்க தான் Isaac அ விரும்பலையோ என்னமோ)
அப்புறம் கல்யாணம் ஆகி குழந்தை இல்லாதப்போ வழக்கமாக மனைவியின் பணிப்பெண் மூலமாக ஒரு குழந்தை பெற்று கொள்வார்கள் ஆனா மாதொருபாகன் காளி மாதிரி Isaac நினைத்து இருக்கலாம். அப்படியும் குழந்தை பிறக்காமல் போனால் என்ன செய்வது என்று?
அல்லது நம்ம அம்மா சாரா Hager அ விரட்டி விட்ட மாதிரி Rebekah வும் செய்தால் என்ன ஆவது? முதல் குழந்தையை பாலைவனத்தில் கொண்டுவிடும்படியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டால் என்ன செய்வது? இப்படி எல்லாம் யோசித்து பயந்து இருக்கலாம். பயந்த புள்ள தானே நம்ம Isaac.
சரி நம்ம prayer மட்டும் பண்ணுவோம் safe bet என்று முடிவு எடுத்து இருக்கலாம்.🤗
Isaac எந்த அளவுக்கு பயந்த ஆளு அப்படின்னா அப்பா இறந்த பிறகு பஞ்சம் உண்டாயிற்று. எனவே ஈசாக்கு கேரார் நகருக்குப் போனான். ஈசாக்கின் மனைவியான Rebekah மிகவும் அழகானவள்.
அங்குள்ளவர்கள் அவளைப்பற்றி ஈசாக்கிடம் கேட்டனர். அதற்கு ஈசாக்கு, அவர்களிடம் Rebekah தன் மனைவி என்று சொல்ல அஞ்சி, “அவள் என் சகோதரி” என்று சொன்னான். தன்னைக் கொன்று அவளை அபகரித்துக்கொள்வார்கள் என எண்ணினான்.🤦🏻♀️ எப்படி பாருங்க? இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் எப்படி துணிஞ்சு காதலிப்பாங்க?
இல்ல இந்த மாதிரி ஆளை தான் எந்த பொண்ணு விரும்பும்?
இந்த Rebekah pregnant ஆ இருந்தபோது கடவுள் அவகிட்ட நிறைய பேசி இருக்காரு. ஆனா இவ எதையும் Isaac கிட்ட சொல்லல. (ஆதி 25:23) ஐசக்கிடம் எதைப் பற்றியும் பேசுவது ஏன் அவளுக்கு மிகவும் கடினமாக இருந்தது?
அவன்கிட்ட சொல்றதும் ஒண்ணு தான் சொல்லாம இருகிறதும் ஒண்ணுதான் என்று நினைத்து இருக்கலாம். காதல்ல முக்கியமான விஷயம் communication. நல்லா பேச முடிந்த ஒரு ஆளை தானே பெண்கள் விரும்புவார்கள்.
ஆக தவறு செய்ய வாய்ப்பு கிடைத்தும், தவறு செய்ய துணிச்சல் இருந்தும் தவறு செய்யாதவன் தான் நல்லவன்
தவறு செய்ய வாய்போ அல்லது தவறு செய்ய தைரியம் இன்றி தவறு செய்யாமல் இருப்பவன் புனிதன் அல்ல. ("காதல் ஒன்றும் தவறு அல்ல".)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Mel Gibson ஒரு தீவிர யூத வெறுப்பாளர். Winona Ryder ஐ ஒருமுறை இவர் oven dodger (இது ஒரு மோசமான சொல். இரண்டாம் உலகப் போரின் போது நாஜி மரண முகாம்களில் யூத கைதிகள் படுகொலை செய்யப்பட்ட விதத்தை கேலியாக குறிக்கிறது.) என்று அழைத்ததாக புகார் எழும்பியது.
இது மட்டுமல்ல இது போல பல பேர் அவர் மேல் புகார் அளித்து இருக்கின்றனர்.
ஒருமுறை குடிபோதையில் ஒரு காவலரை இது போன்ற வார்த்தைகளில் திட்டியத்திற்கு மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
அவருடைய The Passion of the Christ படமும் கூட பல விமர்சனங்களை கொண்டது தான்.
யூதர்களை கோரமான, கொக்கி மூக்குடைய பரிசேயர்களாக சித்தரித்து இருக்கிறார் என்றும், யூத எதிர்ப்பு stereotype கள் ஆழமாக வேரூன்றியுள்ளது என்றும் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
Mel Gibson சிறுவயதில் ஒரு கத்தோலிக்க உயர்நிலைப்பள்ளி மாணவராக இருந்தார், சமையல்காரர் அல்லது ஒரு பத்திரிகையாளராக ஆவதுதான் அவர் சிறுவயது லட்சியங்களாக இருந்தன. Mad Max திரைப்படத்தில் நடிக்கும் முன்னர் நிறைய சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.
சதுரங்க வேட்டை படத்துல "நாம சொல்ற பொய்ல கொஞ்சம் உண்மையும் கலந்து இருக்கணும் அப்போதான் மக்கள் நம்புவாங்க" அப்படினு ஒரு வசனம் வரும். அது போல இந்த கம்பி கட்டுன கதையிலும் சில உண்மைகள் இருக்கு. அவங்க அப்பா Mel Gibson 12 வயதாக இருந்தபோது தனது குடும்பத்தை நியூயார்க்கில் இருந்து
ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு மாற்றினார். Mad Max audition க்கு முந்தைய நாள் இரவு, ஒரு சண்டையில் அவரது முகம் நன்கு அடிபட்டது. பின்னர் அவர் Mad Max audition க்கு காயம்பட்ட, வீங்கிய, முகத்துடன் சென்றார். சிலநாட்களில் பழைய நிலைக்கு அவரது முகம் திரும்பிவிட்டது.
Mel Gibson அ எல்லாருக்கும் தெரியும். அவர் நடிச்ச Brave Heart படம் பார்த்து உருகி இருப்போம். அவர் இயக்கிய Apocalypto படம் பார்த்து உறைந்து இருப்போம்.
அவரை பற்றி DGS தினகரன் ஒரு முறை உருக்கமான கதை ஒண்ணு சொன்னாரு. கேட்டு கண்ணுல ஜலம் வைக்காத குறை. 👇
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கடின உழைப்பாளி தனது குடும்பத்தை நியூயார்க் மாநிலத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பிழைப்பதற்காக அழைத்துச் சென்றார். இந்த மனிதனுக்கு ஒரு அழகான இளம் மகன், அவர் சர்க்கஸில் ஒரு ட்ரேபீஸ் கலைஞராக அல்லது ஒரு நடிகராக சேர விரும்பினார்.
இந்த அழகிய இளைஞன், ஒரு சர்க்கஸ் வேலை அல்லது சினிமா வாய்ப்பு வரும் வரும் வரை உள்ளூர் கப்பல் கட்டடங்களில் பணிபுரிந்து கொண்டு இருந்தார், இது நகரத்தின் மோசமான பகுதியின் எல்லைக்குள் இருந்தது, அதாவது குற்ற சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதி.
மனிதனைப் போலவே, காலெண்டர்களும் உருமாறி கொண்டே இருக்கின்றன. ரோமன் காலண்டர் பின் ஜூலியன் காலண்டர் , தற்போது நாம் பயன்படுத்துவது 1582 ஆம் ஆண்டில் போப் கிரிகோரி XIII அறிமுகப்படுத்திய கிரிகோரியன் காலண்டர்.
சமீப காலமாக சில இடங்களில் நீங்கள் CE அல்லது BCE என்று வருடங்களை குறிப்பிடுவதை பார்த்து இருக்கலாம். அவை AD (anno Domini) மற்றும் BC (before Christ) என்பதின் புதிய வடிவம். CE (Common Era) மற்றும் BCE (Before Common Era).
எளிமையாகச் சொன்னால், BCE (Before Common Era) என்பது கி.மு. BC (கிறிஸ்துவுக்கு முன்/Before Christ) இன் மதச்சார்பற்ற பதிப்பாகும். CE (Common Era) என்பது AD (ann Domini) இன் மதச்சார்பற்ற சமமானதாகும், ann Domini பொருள் லத்தீன் மொழியில் “கர்த்தருடைய ஆண்டில்”.
குரோமோசோம் பற்றி நாம் எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். பெண் என்றால் இரண்டு X குரோமோசோம் (XX) ஆண் என்றால் ஒரு X மற்றும் ஒரு Y குரோமோசோம் (XY).
ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்பதை முடிவு எடுப்பது ஆணிடம் இருந்து வரும் அந்த Y குரோமோசோம் தான். இதெல்லாம் உங்களுக்கு தெரிந்து இருக்கும்.
தெரியாத ஒன்று ஆதியில் வெறும் X குரோமோசோம் மட்டும் தான் இருந்தது. Y
குரோமோசோம் பின்னர் X
குரோமோசோமில் இருந்து உருவானது. அப்படின்னா முதலில் உருவானது பெண் தான் பெண்ணில் இருந்து உருவானவன் தான் ஆண். ஆதாம் தான் முதலில் வந்தான் என்கிற கதை வெறும் கதை தான்!
Y குரோமோசோம் மற்றும் X குரோமோசோம் இவை இரண்டும் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோசோம் களில் இருந்து “செக்ஸ்” குரோமோசோம்களாக பரிணமித்தன. இது முக்கியமானது, ஏனென்றால் பல உயிரினங்களுக்கு நம்மைப் போல ஒவ்வொரு பாலினத்திற்கும் ஒரு தனிப்பட்ட குரோமோசோம் இல்லை.
பெண்கள் வரதட்சிணை கொடுமை பற்றி பேசும்போது எல்லாம் ஆண்கள் "பெண்கள் நல்ல வேலை, வீடு எல்லாம் ஆண்களிடம் எதிர்பார்க்கிறார்கள் அது சரியா?" என்ற வாதத்தை எடுத்து கொண்டு வருகிறார்கள். All men என்று சொல்லும்போது not all men என்று சொல்லி பிரச்சனையை நீர்த்து போக வைப்பது போன்றதே இதுவும்.
வரதட்சிணையும் சரி நல்ல வேலை போன்ற எதிர்பார்ப்புகளும் சரி patriarchy அமைப்பின் மூலம் விளைந்த தீமைகள் தான். ஆணாதிக்கம் பெண்களை மட்டும் பாதிப்பது இல்லை. இது ஆண்களையும் பாதிக்கிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு இதுதான்.
ஆணாதிக்கம் என்பது ஆண்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற சித்தாந்தம். அது ஆண் எப்படி இருக்க வேண்டும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்கிற விதிமுறைகளையும் கட்டமைக்கிறது. ஒரு ஆண் என்பவன் வீரம் மிகுந்தவனாக இருக்க வேண்டும், அவனது வீட்டு பெண்களை காப்பாற்ற வேண்டும், தனது உணர்ச்சிகளை வெளிக்காட்ட