பாபுவுக்கும் தமக்குமான உறவை பகிரங்கமாக ஜெயலலிதா எழுதியது ஏன் என்பதை வார்த்தை சித்தர் வலம்புரிஜான் ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்திலேயே நக்கீரன் வார இதழில் எழுதிய வணக்கம் தொடரில் அம்பலப்படுத்தினார்.
1செய்துள்ளார்.
978-80களில் ஜெயலலிதா குமுதம் வார இதழில் சோபன் பாபு உள்ளிட்டோர் பற்றி தொடரை எழுதினார். அந்த காலகட்டத்தில் எம்ஜிஆரின் நம்பிக்கைக்குரியவராக இருந்து அவரது சொந்த வெளியீடான தாய் பத்திரிகையை ஆசிரியராக இருந்து நடத்தியவர் வலம்புரிஜான்.
தாய் பத்திரிகை காலத்தில் இருந்து
எம்ஜிஆர் மறைவு வரை எம்ஜிஆர்-ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவராகவர் இருந்தவர் வலம்புரிஜான். ஜெயலலிதாவின் தொடக்க கால அரசியலில் அவரது பேச்சுகளை எழுதிக் கொடுத்தவரும் வலம்புரிஜான்.
ஜெயலலிதாவின் 1991-96 அராஜ ஆட்சி காலம் குறித்து நக்கீரன் வார இதழில் "வணக்கம்" என்ற தலைப்பில்
வலம்புரிஜான் எழுதிய தொடர் பெரும் பரபரபை ஏற்படுத்தியது. அத்தொடர் நக்கீரன் வெளியீடாக புத்தகமாகவும் வந்துள்ளது. அதில் சோபன் பாபுவுக்கும் தமக்குமான உறவை ஜெயலலிதா ஏன் பகிரங்கப்படுத்தினார் என்பது குறித்து "சோபன்பாபுவுடன் ஜெயலலிதா" என்ற அத்தியாயத்தில் வலம்புரிஜான் எழுதியிருப்பதாவது:
ஜெ.வின் பரமபத விளையாட்டு
சோபன்பாபு என்கிற தெலுங்கு நடிகரோடு ஜெயலலிதா பரமபதம் விளையாட்டில் ஈடுபட்டிருந்தார் என்பதை சினிமாக்காரர்கள் எல்லோருமே அறிவார்கள். அவரே குமுதத்தில் தனது வாழ்க்கை வரலாற்றை விவரித்தப்போது இதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்..
ஜெ.வை அறியவில்லை
ஜெயலலிதா ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சோபன் பாபுவைக் குறிப்பிட்டு, 'I am going steady' என்று நாவாடியிருந்தார். இதுவழக்கமான சினிமாக்காரிகள் அம்மணமாக நின்று கொண்டு, அழுக்குத் துணிகளை பகிரங்கமாக துவைக்கிற பச்சைத்தனம் என்று எவரேனும் நினைத்தால் நீங்கள் ஜெயலலிதாவை
அறிந்துகொள்ளவே ஆரம்பிக்காதவர்கள் என்று அர்த்தம்.
பரபரப்புக்கா எழுதினார் ஜெ?
சோபன்பாபுவோடு தான் வாழ்ந்த காலத்தைக் குறித்து ஜெயலலிதா எழுதியவை எல்லாம் பரபரப்பை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் சொல்லப்பட்டவைகளும் அல்ல. சத்தியத்திற்குச் சாட்சியம்
சொல்லுவதற்காக சரிந்தவைகளும் அல்ல. இந்த நேரத்தில் உறுதியாக ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். சினிமாக்காரியான ஜெயலலிதாவிற்கு நேர்ந்த ஒரு தொழில் விபத்தைக் கொச்சைப்படுத்துவது எனது நோக்கம் அல்ல. எந்தப் பெண்ணுக்கும் களங்கம் கற்பிப்பது எனக்கு உடன்பாடானது அல்ல.
கடந்த கால இருட்டிற்குள் வெளிச்சத்தைப் பாய்ச்சுகிற போது நெளிகிற உண்மைகளை நிகழ்காலத்திற்கு எடுத்துக் காட்டுவது எழுத்தாளனின் கடமையாகிறது.
எம்ஜிஆரை நோகடிக்கவே...
வேறொருவரும் எடுத்துச் சொல்ல இயலாத வண்னம் தனது வாழ்க்கையைப் பற்றி தானே வெளிச்சம்போட்டுக் காட்ட
வேண்டிய அவசியம் ஜெயலலிதாவுக்கு என்ன வந்தது? இங்கேதான் ஜெயலலிதாவை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். ' எம்ஜிஆர் எனது அரசியல் ஆசான்' என்று எப்போதாவது ஒருமுறை குறிப்பிட்டுக் கொள்கிற ஜெயலலிதா,
எம்.ஜி.ஆரை நோகடிப்பதற்காகவே இவ்வாறெல்லாம் தனது வாழ்க்கையின் அந்தரங்கத்தைப் பகிரங்கப்படுத்தினார்.
ஊரறிய உல்லாச வாழ்க்கை
ஒரு காலத்தில் எம்ஜிஆரோடு இணைந்திருந்து ஏறத்தாழ அவரது மாற்று மனைவி என்று மக்களாலேயே கருதப்பட்ட ஜெயலலிதா, எம்ஜிஆரை விட்டு ஒதுங்கினார். ஒதுக்கப்பட்டார்.
அந்த காலகட்டத்தில் இழந்த தன்னை நினைத்து எம்.ஜி.ஆர். ஏற்க வேண்டும் என்பதற்காகவே தனது உல்லாச வாழ்க்கையை ஜெயலலிதா ஊரறிய வைத்தார்.எம்ஜிஆருமே காரணம்
இந்த மோதலுக்கும் ஜெயலலிதாவின் இவ்வாறான முடிவிற்கும் எம்.ஜி.ஆரும் காரணம் என்பதை நான் மறுக்கவில்லை.
ஆனால் இங்கே எடுத்துக்காட்ட விரும்புவதெல்லாம் ஜெயலலிதாவிடம் பழிவாங்குகிற குணம் பதுங்க ஆரம்பித்ததற்கு அவரது கடந்த காலம் ஒரு காரணம் என்பதுதான்.
இவ்வாறு வலம்புரிஜான் பதிவு
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சற்றேறக்குறைய ஏழெட்டு வருடங்களுக்கு மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில்கூட ஒரு சாதாரணப் பொதுக்கூட்டத்தையும் அனைத்திந்திய அண்ணா திமுகவினால் நடத்த முடியவில்லை என்பது சாதாரண விஷயம் அல்ல! இவற்றையெல்லாம் சொல்வதனால் நான் அழகிரியின் அரசியலை ஆதரிக்கிறேன் என்பதல்ல.
சில நிகழ்வுகளின் பின்னணிகளில் நடைபெறுகின்ற நடைமுறைகளின் அலசல்தான் இது.
மதுரை என்பது இன்றல்ல அன்றையிலிருந்தே எம்ஜிஆரின் கோட்டை என்றே இருக்கிறது..அதனைத் தகர்த்தாக வேண்டும். என்ன செய்யலாம்? தவிர அதனை இந்த வகையில் கட்டிக்காத்துக் கொண்டிருப்பவர் மதுரை முத்து. அவரைத் தொடர்ந்து பழக்கடை பாண்டி. மதுரைமுத்துவும் பழக்கடைப் பாண்டியும் பரமஹம்சரின் சீடர்களோ,
மாடி வீட்டு ஏழை படப்பிடிப்பு நின்று விட்டது குறித்து, சந்திரபாபு கூறியது: விதி எனும் காலதேவன் அந்த அறைக்குள் காத்திருந்ததை எப்படி அறிவேன்!
சுமார், 45 நிமிடங்கள், ராமனுக்கும், ராவணனுக்கும் நடந்ததே யுத்தம்... அதுபோன்று உள்ளே நடந்தது...
'வாங்க பாபு...'
'வணக்கம் மிஸ்டர் சக்கரபாணி, சவுக்கியமா... உங்க தயவு தான் வேணும்...'
'நான் என்ன பண்ணனும் சொல்லுங்க...'
'மிஸ்டர் எம்.ஜி.ஆர்., கால்ஷீட் கொடுத்தீங்கன்னாத்தான் நாங்க தப்பிக்க முடியும்; கொஞ்சம் பாத்து செய்யுங்க...'
'பாபு, நீங்க ஏன் எம்.ஜி.ஆரை போட்டு படம் எடுக்க நினைக்கிறீங்க...
நல்லா சம்பாதிக்கணும்ன்னு தானே... அப்படின்னா, நாங்க சொல்ற வரைக்கும் பொறுத்து தான் இருக்கணும். நீங்க நினைக்கிறபடி எல்லாம் எங்களால கால்ஷீட் கொடுக்க முடியாது...'
'நாங்க நினைக்கிறபடி, கால்ஷீட் கொடுக்க வேணாம்; நீங்க நினைக்கிறபடியே கால்ஷீட் கொடுங்க...'
'அத, அப்பப்ப தெரியப்படுத்தறோம்...'
தொண்டன் தன் மனவருத்தத்தை தெரியப்படுத்தலாம்.
கழக பொதுச்செயலாளர் இப்படி பேசலாமா?
தன் கட்சியினரை பற்றி இப்படிப்பட்ட
குற்றச்சாட்டுகள் பொதுச்செயலாளர் பேசலாமா?
தவறு செய்தவர்களை அழைத்து தண்டனை வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர் இப்படி பேசலாமா?
ஆதாரங்கள் எல்லாம் இருக்கும் போது சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க என்ன தயக்கம்.
நீங்கள் சொல்வதை பார்த்தால் சம்பந்தப்பட்டவர்கள் உங்களுக்கு எதிராக அல்ல கழகத்திற்கு துரோகம் செய்திருக்கிறார்கள்..
பொதுவெளியில் பேசாமல் டெலிபோனில் உரையாடியதற்காக திருவண்ணாமலை
சாவல்பூண்டியார்,குடியாத்தம் குமரன், இளைஞரணி நெல்லை துரை போன்றோர் தண்டிக்கப்பட்ட போது கட்சிக்கு துரோகம் செய்தவர்களை ஏன் தண்டிக்கவில்லை..
-+--+----------------------------------------------------------+
எம்.ஜி.ஆர், சந்திரபாபு, ஜெயலலிதா என மூவரும் சாப்பிட அமர்ந்திரு க்கிறார்கள். முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திர்ருந்த எம்.ஜி.ஆருக்கு அவர் வீட்டிலிருந்து உணவு வந்துவிட்டது. சந்திர பாபுவுக்கோ வரவில் லை! “என்ன சாப்பிடலையா?” என கேட்ட எம்.ஜி.ஆர்,
“இன்னைக்கு என் சாப்பாட்டைசாப்பிடுங்கள்” என ‘ஒரு மாதிரி’யாகக் கூறி விட்டு எழுந்துபோயிருக்கிறார். ஏன் கோவ மாக இருக்கிறார் என குழம்பியி ருந்த சந்திரபாபுவிடம் “நான் உங்களைப் பிடித்து தூக்கினேன் இல்லையா? அது அவ ருக்குப் பிடிக்கவில்லை” என ஜெயலலிதா சொல்லி தெளிவித்திருக்கிறார்!!!!!
இதில் என்ன கொடுமை என்றால் சந்திரபாபு ஜெயலலிதாவின் குடு ம்ப நண்பர். சிறுவயதில் இருந்தே ஜெயலலிதா சந்திரபாபுவை “அங்கிள்” என்றுதான் அன்பொழுக கூப்பிடுவா ராம்! அப்படி உறவு கொண்டிருந்த ஒருவரைக் காப் பாற்றியதற்காகத்தான் எம்.ஜி.ஆரு க்கு அப் படி கோபம்!!
“நினைத்ததை நடத்தியே முடிப்பவன்
நான்” ..என எம்.ஜி.ஆர். முடித்து வைத்த
இன்னொரு விஷயம்...சட்டமன்ற மேலவை...!
எம்.ஜி.ஆர். காலம்வரைக்கும் , சட்டசபையில்
மேலவை என்று தனியாக
ஒரு சபை இருந்து வந்தது...
அந்த மேலவைக்கு 1986 - ல் வெண்ணிற
ஆடை நிர்மலாவை உறுப்பினராக நியமனம்
செய்தார் எம்.ஜி.ஆர்...
நிர்மலா ஏப்ரல் 23, 1986 இல் பதவிப் பிரமாணம்
எடுத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன...
நினைத்ததை முடித்த நிம்மதியில் இருந்த
எம்.ஜி.ஆரின் இந்த திட்டத்திற்கு எதிர்பாராத
ஒரு சட்டச் சிக்கல் எழுந்தது....
வெண்ணிற
ஆடை நிர்மலா ஏற்கனவே முன்பு ஒருமுறை திவாலானவர்.....
இந்திய அரசியலமைப்பின் 102-(1)c
பிரிவின்படி திவாலான ஒருவர் நாடாளுமன்ற
உறுப்பினராகவோ, மாநில
ஆட்சியில் தலையிட்ட ஆளுநர் சென்னா ரெட்டியை ஜெயலலிதா எப்படி எதிர்த்தார் தெரியுமா?
தமிழக ஆளுநராக எம்.சென்னாரெட்டி இருந்த காலம் அது. முதல்வராக ஜெயலலிதா முதல் முறை அதிகாரத்திற்கு வந்திருந்ததும் அந்த காலகட்டம்தான். 1993 ஆகஸ்ட் மாதம் சென்னை எழும்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்.
அலுவலகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. பெருத்த சேதத்துடன் உயிர் பலியும் ஏற்பட்டது. ஆளுநராக இருந்த சென்னாரெட்டி பதறியடித்து ஓடிவந்து நேரடியாக வந்து கள ஆய்வு செய்தார்.
பிரதமருக்கு கடிதம் இப்படி ஒரு இடர் காலத்திலும் கூட, ஆளுநர் அங்கு சென்றதற்கு, ஜெயலலிதா கடுமையான
ஆட்சேபணை எழுப்பினார். இதன்பிறகு 1995ல் மதுரை காமராஜ் பல்கலை பட்டமளிப்பு விழாவிற்குச் சென்ற சென்னாரெட்டி மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்குக் கூப்பிட்டுச் சில விவரங்கள் கேட்டார். ஆனால் அதையும் எளிதில் விடவில்லை ஜெயலலிதா. ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனம்