எம்.ஜி.ஆர், சந்திரபாபு, ஜெயலலிதா என மூவரும் சாப்பிட அமர்ந்திரு க்கிறார்கள். முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திர்ருந்த எம்.ஜி.ஆருக்கு அவர் வீட்டிலிருந்து உணவு வந்துவிட்டது. சந்திர பாபுவுக்கோ வரவில் லை! “என்ன சாப்பிடலையா?” என கேட்ட எம்.ஜி.ஆர்,
“இன்னைக்கு என் சாப்பாட்டைசாப்பிடுங்கள்” என ‘ஒரு மாதிரி’யாகக் கூறி விட்டு எழுந்துபோயிருக்கிறார். ஏன் கோவ மாக இருக்கிறார் என குழம்பியி ருந்த சந்திரபாபுவிடம் “நான் உங்களைப் பிடித்து தூக்கினேன் இல்லையா? அது அவ ருக்குப் பிடிக்கவில்லை” என ஜெயலலிதா சொல்லி தெளிவித்திருக்கிறார்!!!!!
இதில் என்ன கொடுமை என்றால் சந்திரபாபு ஜெயலலிதாவின் குடு ம்ப நண்பர். சிறுவயதில் இருந்தே ஜெயலலிதா சந்திரபாபுவை “அங்கிள்” என்றுதான் அன்பொழுக கூப்பிடுவா ராம்! அப்படி உறவு கொண்டிருந்த ஒருவரைக் காப் பாற்றியதற்காகத்தான் எம்.ஜி.ஆரு க்கு அப் படி கோபம்!!
ம்.ஜி.ஆரைப் பற்றிய சந்திரபாபுவின் அனுபவங் களை அவர் எழுத் திலேயே உணர்ச்சி பொங்க படிக்கும் போது, “what you see is the tip of an iceberg” என மனிதர்களின் குணத்தைப் பற்றி சிக் மண்ட் ஃப்ரா ய்டு சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது! மனிதர்கள் முழுமை யான புரிதலுக்கு அப்பாற்ப்பட்டவர்கள்.
அவர்களை நல்லவர்கள், கெட்டவர்கள் என அவ்வளவு சுலபமாக அட்டவ ணைப்படுத்திவிட முடியாது! மனிதனின் குணம் ஆழமானது, புதிரா னது. அதை முற்றி லும் புரிந்துகொள்ள நிச்சயமாக வேறொரு மனித னால் முடியாது! ஏன்? சில நேரங்களில் அந்தந்த மனிதனுக்கே கூட அது முடியாத காரியம் தான்!!
எம்ஜியாரை நம்பி நாசமாப் போனவர்கள் பலருண்டு.
அதில் ஒருவர் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு.
நாடோடி மன்னன் படத்தின் வெற்றிக்கு
சந்திரபாபுவின் நகைச்சுவை நடிப்பும் ஒரு காரணம்.
ஆரம்பத்தில் இருவரும் இணக்கமாகத்தான் இருந்தார்கள்.
எம்ஜியாரிடம் இல்லாத சில சிறப்புகள்
சந்திரபாபுவிடம் இருந்தன.நடனத்திறமை
ஆங்கில புலமை ஸ்டைல் குறிப்பாக ...
பெண்களைக் கவரும் திறமை ோன்றவை.
மனசில பட்டதை யாருக்கும் பயப்படாமல்
பேசும் துணிச்சலும் பாபுவுக்கு உண்டு.
இதெல்லாம் வாத்தியாருக்கு ஒரு கடுப்பை பாபுமேல் ஏற்படுத்திக் கொண்டிருந்தன.
வெளியே காட்டிக் கொள்வில்லை.
இந்த கடுப்பையெல்லாம் தெரிந்து
கொள்ளாத சந்திரபாபு 1961 ல்
மாடி வீட்டு ஏழை பட அறிவிப்பை வெளியிட்டார் .
கதாநாயகன் எம்.ஜ.ஆர்.
தினத்தந்தியில் முழுப்பக்க விளம்பரம்.
ரசிகர்களுக்கு மகிழ்ச்சி .
பல லட்சங்கள் கடன் வாங்கி செட்டெல்லாம் போட்டிருந்தார் சந்திரபாபு.
அப்போது நடைபெற்ற ஒரு திரையுலக
பார்ட்டியில் எம்ஜிஆர் கலந்து கொண்டார். சந்திரபாபுவும்...
வெஜ் , நான் வெஜ் எல்லாம் உண்டு.
பார்ட்டியில் நான்வெஜ் சாப்பிட்டு முடித்த
வாத்தியார் ஆசுவாசமாக ஒரு குச்சியால் பல் குத்திக் கொண்டிருந்தார்.
பக்கத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த சந்திரபாபு ....
" மிஸ்டர் எம்ஜிஆர் .... பப்ளிக்ல இப்படி பண்றது நாகரீகமில்லே ..." ன்னு மெதுவாகச் சொன்னார்.
எம்ஜிஆருக்கு கோபத்தில்
முகம் சிவந்தது.
ஆனாலும் ...
சிரித்தபடியே சென்று விட்டார்.
அப்புறம் ...
சந்திரபாபு போட்டிருந்த செட்டில் சூட்டிங் நடக்கவேயில்லை.
இன்று நாளை என்று கால்ஷீட் கொடுத்த
வாத்தியார் அந்த பக்கமே போகவி்ல்லை.
வட்டிக்கு கடன் வாங்கி செட் போட்ட
சந்திரபாபு கடனை திருப்பிக் கொடுக்க
முடியாமல் வீட்டை வித்து காரை வித்து
நடுத்தெருவுக்கு வந்தார்.
மாடி வீட்டு ஏழை படம் எடுக்க ஆசைப்பட்ட சந்திரபாபு
வாத்தியாரால்
நடுத்தெரு ஏழை ஆக்கப்பட்டார்.
“செத்துட்டா? மன்னிச்சிரலாமா? அப்போ ஹிட்லரையும் மன்னிச்சிர லாமா?” என விஸ்வரூபம் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். இறந்தவர்கள் கடவுள்களாக வணங்கப் படும் நம் சமூக வாழ்க்கையில் அவர்களின் பெரு மை பேசி, புகழ் பரப்ப மட்டுமே செய்கிறோ மேயொழிய அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் செய்துபோன
பிழைக ளையும், அப் பிழைகள் நம்மிடையே விட்டு ச்சென்ற நிரந்தர வடுக்களையும் நாம் கவனத்தில் கொள்வதில்லை.
நமக்கு நம் சமகால அரசியல் வாதிகளின் குணங்களைப் பற்றி தெரிகிறது. ஆனால் நம் முந்தைய தலை முறை அரசியல்வாதிகள் மீதான நம்மது எண்ணம் பெரும்பாலும் ‘glorify’ செய்யப்
பட்டதாகவே இருக்கிறது. முத்து ராமலிங்கம் (தே வர்), எம்.ஜி.ஆர், ராஜாஜி, பாலகங்காதர் திலகர் என இந்தப் பட்டியலின் நீளம் மிக மிக அதிகம். இந்த தலைவர்களின் ஒருசில முகங்கள் நல்ல வைகளாக இருந்திருக்க லாம். ஆனால் இற ந்துவிட்டா ர்கள் என்ற ஒரே
காரணத்திற்காக அந்த நல்ல முகங்களை மட்டுமே பிரதானப் படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. இந்த க் குறிப்பிட்ட பதிவு எம்.ஜி.ஆரின் ஒரு உண் மை முகத்தைப் பற்றி.
சந்திரபாபு எனக்கு மிகவும் பிடித்த நடிகர், பாடகர், இசையமைப்பாள ர் (அவர் பாடிய நிறைய பாடல் களுக்கு Ghost music
directorஆக இருந் திருக்கிறார்), நடனக் கலை ஞர். 46 வயதிலேயே இறந்துவிட்ட அவரைப் பற்றி பேசும்போதெல்லா ம் பெரியவ ர்கள், “பாவம். அவன கொன்னதே எம்.ஜி,ஆர்தான்” எனக் கூறக் கேட்டிருப்போம்.
சந்திரபாபு திரையுலகத்தில் கொடிகட்டிப் பறந்த காலம் அது. மன தில் பட்டதை
ஒளிவுமறைவில்லாமல், எந்த மேற்பூச்சும் இல்லாமல் வெளிப்படையாகச் சொல்லக் கூடிய கர்வ மிகு கலைஞன் சந்திர பாபு. சிலர் அவரது இந்த குணத்தை திமிராகவும், சிலர் பைத்தி யக் காரத்தனமாகவும் கூட வர்ணித்திரு க்கிறார்கள். ஆனால் உண்மை யில் சந்தி ரபாபுவின் இயல்பே
அப்படித்தான்! ஒரு வேளை சோற்று க்குக் கூட வழியில்லாத நேரத்தில், சிகரட் வாங்கித்தருகிறேன் என யாரேனும் நண்பர்கள் சொல்லும்போது, “என் ப்ராண்ட் கோல்டு ஃப்ளாக். ஒன்னு பதினைஞ்சு பைசா. முடிஞ்சா அத வாங்கி க்கொடு. இல்லேனா வேணாம்” என்பாராம் ! அதனால் சந்திரபாபுவின் திமிர் இடை
யில் வந்ததல்ல என்பதை நாம் தெரிந்து கொள் ளலாம்.
எம்.ஜி.ஆரை சின்னவர், வாத்தியார் என சினிமாத்துறை அழைத்துக் கொண்டிருக்க, ‘மிஸ்டர் எம்.ஜி.ஆர்’ என அழைத்த ஒரே ஆள் சந்திர பாபு. அப்போதைய சினிமா பத்திரிக்கைகளில் தான் அளித்த பேட்டிக ளிலும், கட்டுரைகளிலும் அப்படியே
குறிப்பிட்டிருக் கிறார். “எம்.ஜி. ஆர் அனைவரும் தன்னை மட்டுமே புகழ வேண்டும். எல்லாவற்றி லும் தான் மட்டுமே தெரிய வேண்டும் என நினைப்பவர் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் சந்திரபாபு. சிவா ஜி நல்ல நடிகர் ஆனால் அவரைச் சுற்றி இருக்கும் ஜால்ரா கூட்டத்தை அவர் விளக்க வேண்டும்,
ஜெமினி கணேசனின் பணம் சம்பாதிக்கும் தந்திர குணம் தனக்கு எப்படி உதவியது என்பது குறித்து கூட வெளிப்படை யாக எழுதி அவர்களின் கோபத்தை சம்பாதித்திருக்கிறார். ஆனால் வெளிப்படையாக கோபத்தை காட்டாத மனிதர் எம்.ஜி.ஆர். சந்திர பாபு மீது தனக்கு உள்ளுக்குள் கணன்று கொண்டிருந்த கோபத்தை, பழியை
தீர்த்துக்கொள்ள எம்.ஜி.ஆருக்கு ஒரு அருமை யான சந்தர் ப்பம் ஏற்பட்டது. கர்வம் நிறைந்த வெள்ளந்தியான சந்திரபாபுவே அதற்கும் வழி அமைத்துக் கொடுத்தார்!
விஜி எனப்படும் வி.கோவிந்தராஜூலுவும், தயாரிப்பாளர் சுப்பையாவும் படம் தயாரிப்பதைப் பற்றி சந்திரபாபு விடம்
பேசிக்கொண்டிருந்த போது, தன் மனதில் இருந்த மாடிவீட்டு ஏழை கதையைச் சொன்னார் சந்திரபாபு. மிகவும் புரட்சிகரமான கருத்துக்களை நகைச்சுவையாய் சொல்லும் கதையாக இருந்ததால் அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்ட து. ஆனால் அப்போது பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த எம். ஜி.ஆர் தான்
கதா நாயகனாக நடிக்க வேண் டும் என்று கண்டிஷன் போட, சந்திர பாபுவும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து எம்.ஜி,ஆரைச் சந்திக்கப்போனபோது இருவரும் ஏதே தோ பேசிவிட்டு, இறுதியில் விசயத்திற்கு வந்தார்கள். உடனே ஒப்பு க்கொண்ட எம்.ஜி.ஆர் தன் சம்பளமாக ஒரு பெரிய ஆறிலக்கத் தொகையைக் கேட்டார்.
அதில் பாதியை வெள்ளையா கவும், மீதியை கறுப்பாகவும் கொடுக்க வேண்டும் என்ற கண்டிஷனுடன். ( இதை எல்லாம் பிலிமாலயா பத்திரிக் கையில் தன் ‘மாடி வீட்டு ஏழை ‘ தொ டரில் எழுதியிருக்கிறார் சந்திரபாபு ) கண்டி ஷன்களுக்கு ஒப்புக்கொண்ட சந்திரபாபு பூஜை தேதியை அறிவிக்கும்போது முன்
பணம் 25000 ரூபாயைக் கொடுக்கிறேன் என கூறிவிட்டு வந்தார்.
பின் விஜியும், சுப்பையாவும் சந்திரபாபுவையும் ஒரு பங்குதாரராக வற்புறுத்த கதை மேல் கொண்ட நம்பிக்கையில் சம்மதித்து அனைத் து பத்திரங்களிலும் கையெழுத்தும் போட்டார் சந்திரபாபு. தேதி குறிக்கப்பட்டு சந்திரபாபுவின் தோழி சாவித்ரி
கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப் பட்டார். கண்ணதாசன் இரண்டு பாடல்களை எழுதி 10000 ரூபாய் வாங்கிக் கொண்டார். அடுத்து எம்.ஜி. ஆருக்கு முன் பணம் கொடுக்கவேண்டிய கட்டம்.
இந்த காலகட்டத்தில் சுப்பையாவிடம் நிறைய பண ம் புழங்கியதால் ஒரே நேரத்தில் எட்டு படங்களை அறிவித்து
யாருமே எதிர்பாரா வண்ணம் மொத்த மாக திவாலானார் சுப்பையா. வி.ஜியோ தலை மறைவே ஆகிவிட்டார்! அதிர்ச்சியடைந்த சந்திர பாபு சாவித்ரியிடம் 25000 ரூபாய் கடன் வாங்கி அதை எம்.ஜி.ஆரின் தோட்டத்தில் அவ ரைச் சந்தித்துக் கொடுத்தார். இந்த சம்பவத்தை சந்திரபாபு, “25000 ரூபாய்
பணத்தைப் பெற்றுக்கொண்டு, “பாபு சார். அருமை யாகச் செய்துவிடுவோம். போய் வேலை யைப் பாருங்கள்” எனக்கூறி விட்டு ஒரு மரத்தடிக்குச் சென்று ரூபாய் நோட்டுக் களை இடுப்பில் செருகிக் கொண்டார். அவ்வளவுதான். அவர் வயிற்றில் என் பணம் சங்கமம் ஆகிவிட்டது” என எழுதி யிருப்பதைப்
படிக்கும் போது நமக்கே வயிற்றைக் கலக்குகிறது.
பின்தான் எம்.ஜி.ஆரின் பழிவாங்கும் படலம் ஆரம்பித்தது. சந்திர பாபுவோ கடனுக்கு மேல் கடன் வாங்கி படத்தை வளர்க்க, எம்.ஜி. ஆரோ நான்கு நாட்கள் மட்டும் படப்பிடிப்பிற்கு வந்துவிட்டு பின் வருவதையே நிறுத்திக்கொண் டார்.
சந்திரபாபு அலையாய் அலைந்து ஒரு ஸ்டூடியோவின் வாசலில் எம்.ஜி.ஆரைக் கண்டு பிடித்து அவரிடம் பேசப் போயிரு க்கிறார். பாபுவைக் கவனித்துவிட்ட எம்.ஜி. ஆர் அங்கிருந்த அசோக னை அழைத்து அரைமணி நேரம் ஏதேதோ பேசி பாபுவை கவனிக் காதவர் போலவே அரை மணி நேரத்திற்கும் மேலாக கால்கடுக்க நிற்க
வைத்திருக்கிறார். பின் ஒரு வழியாக ‘கால்ஷீட்டை எல் லாம் அண்ணன் தான் பார்த்துக்கொள் கிறார். அவரிடம் பேசிக்கொள்ளு ங்கள்” எனக் கூறி சென்று விட் டாராம் புரட்சி த்தலைவர்மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
பாபு தன் சொத்துக்கள் அனைத்தின் மீதும், புதிதாக 19 கிரவுண்டில் தான் கட்டிவந்த வீட்டின் மீதும் கடன் வாங்கி 3000 அடிவரை படத் தை எடுத்தபின் படம் எம்.ஜி.ஆரின் கால்ஷீட்டின்மையால் நின்றிருக் கிறது. ஆசை ஆசையாகக் கட்டிய இந்த வீட்டைப் பற்றி மனோரமா விடம் அடிக்கடி,
“மனோரமா.. கீழேயிருந்து கார் நேரா ரெண்டாவது மாடிக்கு போய் நிக்கிற மாதிரி 19 கிரவுண்டுல ஒரு வீடு கட்டிட்டு இருக்கேன். அப்படி ஒரு வீட்டை எங்க யாவது பாத்தா சொல்லு.. குண்டு வச்சிடுவோம்..” என்று வேடிக்கையாகச் சொல்வாராம். “படப்பிடி ப்பு நாள் தள்ளிப்போக தள்ளிப்போக
விநியோகஸ் தர்களு ம், கடன் கொடுத்தவர்களும் என் கழுத்தை நெறிப்பார்கள். தயவு செய்து எம்.ஜி.ஆரின் கால் ஷீட் கொடுங்கள்” என சக்கரபாணியைப் பார்த்துக் கெஞ்சிய சந்திரபாபுவிற்கு அவமரியாதையும், கெட்ட வார் த்தைகளில் அர்ச்சனையும் மட்டுமே கிடைத்திருக்கிறது.
கோவமடைந்த சந்திரபாபு ஒருகட்டத்தில் பொ றுமையிழந்து அங்கிருந்த ‘சேர்’ஐ எடுத்து சக்கரபாணியை அடிக்கப் பாய்ந்திருக்கிறார். அன் றோடு அவ்வளவுதான்!! புகழின் உச்சியில், பணத்தின் உச்சியில் இருந்த சந்திரபாபு ஒட்டுமொத்தமாய் சரிந்து விழுந்து செத்ததற்கு முத்தாய்ப்பு இந்நிகழ்வு தான்.
சந்திரபாபு குடி விரும்பி. அதுவும் மேல் நாட்டு ஸ்டைலில் குடிப்பதை மிகவும் விரும்புகிறவர். ஆனால் அவரிடம் இரு ந்த ஒரு நல்ல பழக் கம், படப்பிடிப்பு நாளில் என்ன ஆனாலும் குடிக்க மாட்டார். அப்படி ப்பட்ட
சந்திரபாபு முழுநேரக் குடிகாரனாக, போதை மருந்துக்கு அடிமையாக மாறியதை இப்படிச் சொல்கிறார், “தினமும் அளவோடு குடிப்பவன் நான். என்றைக்கு ‘மாடி வீட்டு ஏழை’ படம் எடுக்கத் துணி ந்தேனோ அன்றிலிருந்து மொடாக்குடிய னாக மாறி விட்டேன். பின் அதுவும் பத்தாமல்
‘பெத்தடின்’ எனும் போதை மரு ந்து க்கும் அடி மையாகிவிட்டேன்”.
எம்.ஜி.ஆரின் ஒரு முகம் இப்படியென் றால் சந்திரபாபுவின் வாழ்க் கையில் நடந்த இன்னொரு குட்டிச் சம்பவம் எம்.ஜி.ஆரின் இன்னொரு கோர முகத்தையும் காட்டுவதாய் இருக்கிறது.
மாடி வீட்டு ஏழை நட்டத்திற்குப் பின் சீரழியத்துவங்கிய சந்திரபாபு வின் வாழ்க்கை நாளடைவில் மொத்த மாகக் கெட்டது. போதைப் பழக்கத் தால் உடல்நிலை கெட, பட வாய்ப் புகளும் இல்லை. எப்போ தாவது ஏதாவது ஒரு படம் என வாய்ப்பு வந்தது. இரண்டு வருடங் கள் கழித்து
எம்.ஜி.ஆருடன் ‘பறக்கும் பாவை’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. உணவுக்கே கஷ்டப்பட்ட நிலையில் அதற்கு ஒப்புக் கொண் டார் சந்திரபாபு.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சந்திரபாபு மூவரும் அப் படத்தில் சர்க்கஸ் கலைஞர்கள். ஒரு காட்சியில் சந்திரபாபுவும்,
ஜெயலலிதாவும் ஒரு சுவர் மேல் ஏறி தப்பிப்பதைப் போல் காட்சி. சந்திரபாபு தவறி விழப் போக அவரை தாங்கிப் பிடித்து காப்பாற்றி யிருக்கிறார் ஜெயலலிதா. அதோடு படப்பிடிப் பிற்கு ப்ரேக் விடப்பட்டிருக்கிறது
இதில் என்ன கொடுமை என்றால் சந்திரபாபு ஜெயலலிதாவின் குடு ம்ப நண்பர். சிறுவயதில் இருந்தே ஜெயலலிதா சந்திரபாபுவை “அங்கிள்” என்றுதான் அன்பொழுக கூப்பிடுவா ராம்! அப்படி உறவு கொண்டிருந்த ஒருவரைக் காப் பாற்றியதற்காகத்தான் எம்.ஜி.ஆரு க்கு அப் படி கோபம்!!
இதைப் படித்த போது இன்று தமிழக முதல்வராக, அமைச்சரவை யையே தன் காலடியில் கிடத் தியிருக்கும் ஜெயலலிதாவின் அந்த காலத்தைய வாழ்க்கையை நினைத்தபோது வேதனையும், பரிதாப முமே ஏற்படுகிறது.
ஒரு சிலருக்கே ஆண்டவன் தனித்துவமான குரல் வளத்தையும், நடனம் ஆடும் ஆற்றலை இறைவன் வழங்கி இருப்பான். அவ்வாறு இரண்டையும் ஒரு சேர பெற்றவர் தான் சந்திரபாபு. அவரது பாட்டிற்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அவர் பாடிய அனேக பாடல்கள் எல்லாம் இன்றும் மக்கள் மனதில் நிலைத்து இருக்கும்
. அவரது நடனமும் தனித்துவம் வாய்ந்தது. அது மட்டும் இல்லாமல் நகைச்சுவையில் பின்னி எடுப்பார். நகைச்சுவையால் பலரை மகிழ்வித்த அவரது சொந்த வாழ்க்கை மிக சோகமானது. அவரை பற்றிய ஒரு நினைவு பதிவு.
சந்திரபாபு எம்.ஜி.ஆரை வைத்து மாடி வீட்டு ஏழை படத்தை தயாரித்த போது சென்னையில் பிரமாண்ட வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருந்தார். முதல் மாடிவரை கார் போவது போன்று வடிவமைக்கப்பட்ட வீடு. வீடு பாதியில் நிற்கும் போது படமும் பாதியில் நின்றது. நாயகிக்கு நடிக்க தெரியலை, ஆளை மாற்று என்றார்
எம்.ஜி.ஆர். எழுபது சதவீதம் படம் முடிந்த பிறகு எப்படி மாற்றுவது? - இது சந்திரபாபு. ஆளை மாற்றினால்தான் ஆச்சு என்று எம்.ஜி.ஆர். அடம்பிடிக்க, எடுத்தவரைக்குமான ஃபிலிம்களை தீயிட்டு கொளுத்தினார் சந்திரபாபு.
அவருக்கு பைனான்ஸ் செய்தவர்களும் பெரிய இடத்து பிரஷர் காரணமாக சந்திரபாபுவை நெருக்க, அவர் ஆசையோடு கட்டி வந்த வீடு கடன்காரர்களின் கைக்கு போனது. அப்படி மாடி வீட்டு ஏழையை தயாரித்து, ஏழையானார் சந்திரபாபு.
மேற்கத்திய கலாச்சார பாதிப்பில் வளர்ந்தவர் சந்திரபாபு. அண்ணே என்று பவ்யமாக மற்றவர்கள் எம்.ஜி.ஆரை சுற்றி நிற்க, கால் மேல் கால் போட்டு மிஸ்டர் ராமச்சந்திரன் என்று பெயர் சொல்லிதான் அழைப்பாராம் சந்திரபாபு. அவரை மட்டுமில்லை, சிவாஜி கணேசனும் அவருக்கு மிஸ்டர் கணேசன்தான்.
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை
புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...
சந்திரபாபு புத்திசாலி.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சற்றேறக்குறைய ஏழெட்டு வருடங்களுக்கு மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில்கூட ஒரு சாதாரணப் பொதுக்கூட்டத்தையும் அனைத்திந்திய அண்ணா திமுகவினால் நடத்த முடியவில்லை என்பது சாதாரண விஷயம் அல்ல! இவற்றையெல்லாம் சொல்வதனால் நான் அழகிரியின் அரசியலை ஆதரிக்கிறேன் என்பதல்ல.
சில நிகழ்வுகளின் பின்னணிகளில் நடைபெறுகின்ற நடைமுறைகளின் அலசல்தான் இது.
மதுரை என்பது இன்றல்ல அன்றையிலிருந்தே எம்ஜிஆரின் கோட்டை என்றே இருக்கிறது..அதனைத் தகர்த்தாக வேண்டும். என்ன செய்யலாம்? தவிர அதனை இந்த வகையில் கட்டிக்காத்துக் கொண்டிருப்பவர் மதுரை முத்து. அவரைத் தொடர்ந்து பழக்கடை பாண்டி. மதுரைமுத்துவும் பழக்கடைப் பாண்டியும் பரமஹம்சரின் சீடர்களோ,
மாடி வீட்டு ஏழை படப்பிடிப்பு நின்று விட்டது குறித்து, சந்திரபாபு கூறியது: விதி எனும் காலதேவன் அந்த அறைக்குள் காத்திருந்ததை எப்படி அறிவேன்!
சுமார், 45 நிமிடங்கள், ராமனுக்கும், ராவணனுக்கும் நடந்ததே யுத்தம்... அதுபோன்று உள்ளே நடந்தது...
'வாங்க பாபு...'
'வணக்கம் மிஸ்டர் சக்கரபாணி, சவுக்கியமா... உங்க தயவு தான் வேணும்...'
'நான் என்ன பண்ணனும் சொல்லுங்க...'
'மிஸ்டர் எம்.ஜி.ஆர்., கால்ஷீட் கொடுத்தீங்கன்னாத்தான் நாங்க தப்பிக்க முடியும்; கொஞ்சம் பாத்து செய்யுங்க...'
'பாபு, நீங்க ஏன் எம்.ஜி.ஆரை போட்டு படம் எடுக்க நினைக்கிறீங்க...
நல்லா சம்பாதிக்கணும்ன்னு தானே... அப்படின்னா, நாங்க சொல்ற வரைக்கும் பொறுத்து தான் இருக்கணும். நீங்க நினைக்கிறபடி எல்லாம் எங்களால கால்ஷீட் கொடுக்க முடியாது...'
'நாங்க நினைக்கிறபடி, கால்ஷீட் கொடுக்க வேணாம்; நீங்க நினைக்கிறபடியே கால்ஷீட் கொடுங்க...'
'அத, அப்பப்ப தெரியப்படுத்தறோம்...'
தொண்டன் தன் மனவருத்தத்தை தெரியப்படுத்தலாம்.
கழக பொதுச்செயலாளர் இப்படி பேசலாமா?
தன் கட்சியினரை பற்றி இப்படிப்பட்ட
குற்றச்சாட்டுகள் பொதுச்செயலாளர் பேசலாமா?
தவறு செய்தவர்களை அழைத்து தண்டனை வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர் இப்படி பேசலாமா?
ஆதாரங்கள் எல்லாம் இருக்கும் போது சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க என்ன தயக்கம்.
நீங்கள் சொல்வதை பார்த்தால் சம்பந்தப்பட்டவர்கள் உங்களுக்கு எதிராக அல்ல கழகத்திற்கு துரோகம் செய்திருக்கிறார்கள்..
பொதுவெளியில் பேசாமல் டெலிபோனில் உரையாடியதற்காக திருவண்ணாமலை
சாவல்பூண்டியார்,குடியாத்தம் குமரன், இளைஞரணி நெல்லை துரை போன்றோர் தண்டிக்கப்பட்ட போது கட்சிக்கு துரோகம் செய்தவர்களை ஏன் தண்டிக்கவில்லை..
-+--+----------------------------------------------------------+
“நினைத்ததை நடத்தியே முடிப்பவன்
நான்” ..என எம்.ஜி.ஆர். முடித்து வைத்த
இன்னொரு விஷயம்...சட்டமன்ற மேலவை...!
எம்.ஜி.ஆர். காலம்வரைக்கும் , சட்டசபையில்
மேலவை என்று தனியாக
ஒரு சபை இருந்து வந்தது...
அந்த மேலவைக்கு 1986 - ல் வெண்ணிற
ஆடை நிர்மலாவை உறுப்பினராக நியமனம்
செய்தார் எம்.ஜி.ஆர்...
நிர்மலா ஏப்ரல் 23, 1986 இல் பதவிப் பிரமாணம்
எடுத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன...
நினைத்ததை முடித்த நிம்மதியில் இருந்த
எம்.ஜி.ஆரின் இந்த திட்டத்திற்கு எதிர்பாராத
ஒரு சட்டச் சிக்கல் எழுந்தது....
வெண்ணிற
ஆடை நிர்மலா ஏற்கனவே முன்பு ஒருமுறை திவாலானவர்.....
இந்திய அரசியலமைப்பின் 102-(1)c
பிரிவின்படி திவாலான ஒருவர் நாடாளுமன்ற
உறுப்பினராகவோ, மாநில
ஆட்சியில் தலையிட்ட ஆளுநர் சென்னா ரெட்டியை ஜெயலலிதா எப்படி எதிர்த்தார் தெரியுமா?
தமிழக ஆளுநராக எம்.சென்னாரெட்டி இருந்த காலம் அது. முதல்வராக ஜெயலலிதா முதல் முறை அதிகாரத்திற்கு வந்திருந்ததும் அந்த காலகட்டம்தான். 1993 ஆகஸ்ட் மாதம் சென்னை எழும்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்.
அலுவலகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. பெருத்த சேதத்துடன் உயிர் பலியும் ஏற்பட்டது. ஆளுநராக இருந்த சென்னாரெட்டி பதறியடித்து ஓடிவந்து நேரடியாக வந்து கள ஆய்வு செய்தார்.
பிரதமருக்கு கடிதம் இப்படி ஒரு இடர் காலத்திலும் கூட, ஆளுநர் அங்கு சென்றதற்கு, ஜெயலலிதா கடுமையான
ஆட்சேபணை எழுப்பினார். இதன்பிறகு 1995ல் மதுரை காமராஜ் பல்கலை பட்டமளிப்பு விழாவிற்குச் சென்ற சென்னாரெட்டி மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்குக் கூப்பிட்டுச் சில விவரங்கள் கேட்டார். ஆனால் அதையும் எளிதில் விடவில்லை ஜெயலலிதா. ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனம்
''பட்ஜெட் கிழிப்பு... மூக்குகண்ணாடி உடைப்பு... சேலை கிழிப்பு..!'' சட்டசபையில்
தமிழக சட்டசபை வரலாற்றில் 1989 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி கலஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் மறக்க முடியாத நாள். தமிழக மக்களுக்கும்தான். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த
தி.மு.க அரசுக்கு பட்ஜெட் கூட்டத்தின் முதல் நாள். முதல்வராக கலைஞர் வீற்றிருந்தார். எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா அமர்ந்திருந்தார். முதல்வரும் நிதி அமைச்சருமான கலைஞர், தமிழக பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய எழுந்த போது, '
பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது' என்று அ.தி.மு.க தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல் கடுமையாகக் கிளம்பியது. தன்னுடைய போன் ஒட்டு கேட்கப்படுவதாகவும் 'அதற்கு பதில் சொல்ல வேண்டும்' என்று உரிமை மீறல் பிரச்னையை எழுப்பினார் ஜெயலலிதா. அப்போது நடந்த களேபரத்தில்,