#எம்ஜிஆர்_மோசடி

மாடி வீட்டு ஏழை படப்பிடிப்பு நின்று விட்டது குறித்து, சந்திரபாபு கூறியது: விதி எனும் காலதேவன் அந்த அறைக்குள் காத்திருந்ததை எப்படி அறிவேன்!
சுமார், 45 நிமிடங்கள், ராமனுக்கும், ராவணனுக்கும் நடந்ததே யுத்தம்... அதுபோன்று உள்ளே நடந்தது...
'வாங்க பாபு...'
'வணக்கம் மிஸ்டர் சக்கரபாணி, சவுக்கியமா... உங்க தயவு தான் வேணும்...'
'நான் என்ன பண்ணனும் சொல்லுங்க...'
'மிஸ்டர் எம்.ஜி.ஆர்., கால்ஷீட் கொடுத்தீங்கன்னாத்தான் நாங்க தப்பிக்க முடியும்; கொஞ்சம் பாத்து செய்யுங்க...'
'பாபு, நீங்க ஏன் எம்.ஜி.ஆரை போட்டு படம் எடுக்க நினைக்கிறீங்க...
நல்லா சம்பாதிக்கணும்ன்னு தானே... அப்படின்னா, நாங்க சொல்ற வரைக்கும் பொறுத்து தான் இருக்கணும். நீங்க நினைக்கிறபடி எல்லாம் எங்களால கால்ஷீட் கொடுக்க முடியாது...'
'நாங்க நினைக்கிறபடி, கால்ஷீட் கொடுக்க வேணாம்; நீங்க நினைக்கிறபடியே கால்ஷீட் கொடுங்க...'
'அத, அப்பப்ப தெரியப்படுத்தறோம்...'
'அதை, எப்பப்ப கொடுப்பீங்கன்னு ஒரு பேப்பர்ல தேதி வாரியா எழுதி, எந்தந்த மாசம்ன்னு போட்டு டைப் பண்ணி, கையெழுத்து போட்டு கொடுத்துட்டீங்கன்னா, எங்களுக்கு சவுகரியமா போயிடும். வினியோகஸ்தர்கள் எல்லாம் நம்ப மாட்டேங்குறாங்க; நீங்க எழுதிக் கொடுக்கிறத வைச்சுத் தான் அவங்கள நம்ப வைக்க முடியும்
'அப்படி எல்லாம் செய்ய முடியாது. எப்பப்ப கால்ஷீட் கொடுக்கணும்ன்னு எங்களுக்கு தெரியும்; அப்பப்ப போன் பண்றோம்...'
'உங்களுக்கு கொஞ்சமாவது சென்ஸ் இருக்கா... மத்தவங்க கஷ்டத்த புரிஞ்சுக்குங்க; இது ஒரு தொழில்...'
'அது, எங்களுக்கும் தெரியும்டா...' என்று சக்கரபாணி சொன்னதும், 'என்னடா
சொன்னே...' என்று ஆத்திரத்துடன் எழுந்தேன். என் பொறுமை, அமைதி எல்லாம் பறந்து போய், நான் அமர்ந்திருந்த நாற்காலியை தலைக்கு மேல் துாக்கி விட்டேன்.
உடன் இருந்த என் நண்பர்கள் என்னை மடக்கி, நாற்காலியை பிடுங்கினர்.
'சக்கரபாணி, நீங்க ரொம்ப பேசிட்டீங்க...
இருந்தாலும், நாங்க பொறுத்துக்குறோம்...' என சொல்லி, என்னை பலவந்தமாக வெளியே இழுத்து வந்தனர்.
அவர்கள் என்னை தடுத்திருக்கா விட்டால், அங்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும்.
சுப்பையா ஒடுங்கி விட்டார்; வி.ஜி., ஊரை விட்டே ஓடி விட்டார்.
பங்குதாரர் பத்திரத்தில் கையெழுத்திட்ட காரணத்துக்காக, படத்துக்காக வாங்கிய கடன் சுமை என் தலையில் விழுந்தது. முதலுக்கே மோசம் வந்துவிடப் போகிறதே, மோசக்காரர்கள் நம்மை தெருவில் நிறுத்தப் போகின்றனரே என்ற ஆத்திரம் ஏற்பட்டது. நான் எவ்வளவு பணிந்து போனேன் தெரியுமா...
என் கற்பனையில் உதித்த அழகான திட்டப்படி, சென்னை அடையாறில், 20 கிரவுண்டில் பெரிய பங்களா ஒன்றை அப்போது கட்டி வந்தேன். வெளியிலிருந்து காரில் வந்தால், காரை அப்படியே மாடிக்கு கொண்டு செல்லும் விதமாக வீட்டை கட்டச் சொல்லியிருந்தேன்.
என் பலநாள் கனவு, பாதி வரை உருப்பெற்றிருந்தது. இந்த வீடு மற்றும் என் மற்ற நிலங்களின் பெயரில், 4 சதவீத வட்டிக்குக் கடன் வாங்கி, 3,000 அடி படம் எடுத்திருந்தேன். தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், மலேஷியா, சிங்கப்பூர் ஏரியாக்களுக்கும் வட்டிக்கு கடன் வாங்கி
செலவழித்திருந்தேன். எங்களிடையே நடைபெற்ற உரையாடல், அவர், என்னை தரக்குறைவாக திட்டியது, நான், அவரை அடிக்கப் போனது எல்லாம் திரை உலகில் வேகமாக பரவி, எது நடந்து விடக் கூடாது என்று நினைத்தேனோ, அது, நடந்து விட்டது.
வினியோகஸ்தர்கள் பயந்து விட்டனர்;
அதன் விளைவு, கட்டி முடிக்கப்படாத என் வீடு, நிலம் எல்லாம் ஏலத்துக்கு வந்தது.
- இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட இந்த பிரச்னையால், சந்திரபாபுவின் பெயர் கெட்டுப் போனது. இதனால், மேலும் குடிக்கத் துவங்கினார், சந்திரபாபு.
கடன் அதிகமானது; நடிப்பிலும் சரியாக கவனம் செலுத்தவில்லை. படப்பிடிப்புகளுக்கு ஒழுங்காக போகாததால், வாய்ப்புகள் குறையத் துவங்கின. திரை உலகில், சந்திரபாபுவின் தேய்பிறைக் காலம் துவங்கியது.
சந்திரபாபுவின் நெருங்கிய நண்பர், நாவல் பிலிம்ஸ் சுந்தரம். கல்கி இதழில்,
ஜெயகாந்தன் எழுதிய, 'உறங்குவது போலும்' என்ற சிறுகதையை பற்றி கேள்விப்பட்ட சந்திரபாபு, ஜெயகாந்தனை பார்க்க விரும்பினார். சந்திரபாபு ஒருவரை சந்திக்க ஆசைப்பட்டு விட்டால், சந்திக்கும் வரை தவியாய் தவிப்பார்; சந்திக்கும் போதோ, உற்சாகத்தால், துள்ளிக் குதிப்பார்.
'அக்காலத்தில் நடிகர்கள் எல்லாம் ரசித்துப் பார்க்கத் தகுந்த பல சிறப்புகள் வாய்ந்த நடிகராக இருந்தார், சந்திரபாபு. அவருடைய அங்க அசைவுகளுக்கு, அவர் எண்ணாத புதிய அர்த்தங்களை கண்டு பிடித்து, ரசிகர்கள் ஆர்ப்பரித்த காலம் அது. சந்திரபாபுவின் நடிப்பில் எனக்கும் ஈடுபாடு உண்டு...'
என்று, 'ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்' என்ற தன் புத்தகத்தில் கூறியிருந்தார், ஜெயகாந்தன்.
சந்திரபாபுவை சந்திப்பதற்காக, ஜெயகாந்தனை அழைத்துச் செல்ல வந்தார், சுந்தரம். மறுநாள் வரச்சொன்னார், ஜெயகாந்தன். மறுநாள் மாலை, சொன்ன நேரத்தில், பெரிய
காரில் ஜெயகாந்தனை அழைத்துச் செல்ல வந்தார், சுந்தரம்.
கார், பீமண்ண முதலி கார்டன் தெருவில், சந்திரபாபுவின் வீட்டுக்கு சென்றது. அலங்கார பொருட்களுடன் கூடிய வரவேற்பறை; ஆனால், வரவேற்கத்தான் ஆள் இல்லை. இது குறித்து ஜெயகாந்தன் கூறியது:
'செம்மறி ஆட்டுக் கிடாவை, பருந்து ஒன்று தன் கூரிய நகங்களால் கொத்தி, பறந்து செல்லும் பாவனையில், ஒரு மர சிற்பம், வரவேற்பு அறையின் நடுவில் இருந்தது என்னை வசீகரித்தது. நான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து வலது கை மூலையில், ஒரு ரேடியோகிராம்;
அது மாதிரி ஒன்று வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
'சந்திரபாபுவிடமிருந்து நான் ஆசைப்பட்டது அவரது ரசனை மிகுந்த உள்ளத்தை மட்டுமே! ஆயினும், என்னை வரவழைத்து, வீட்டு வரவேற்பு அறையில் உட்கார சொல்லக் கூட ஆள் இல்லாமல், அவர் குளித்துக்
கொண்டிருந்தது, உசிதமான நாகரிகமாக எனக்குப் படவில்லை. 'குளித்து முடித்து, அலங்காரம் செய்த பின் எனக்கு கார் அனுப்பி இருக்கலாமே...' என எண்ணி, மனதுக்குள், 100 எண்ணிவிட்டு புறப்பட்டு விடலாம் என்று காத்திருந்தேன்.
'அந்த நேரம், 'என்னை மன்னிச்சிடுங்க
மிஸ்டர் ஜெயகாந்தன்... உங்கள காக்க வைச்சுட்டேன்...' என்று சொல்லியபடி வந்தார், சந்திரபாபு.
'அதற்கு முந்தைய வினாடி, நான் போக நினைத்ததை எண்ணி வருத்தப்பட்டேன்; அப்போது டெலிபோன் அடித்தது. போனில், ஒரு பிரபல கவர்ச்சி நடிகை பேசினார்...'

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

28 Jul
சற்றேறக்குறைய ஏழெட்டு வருடங்களுக்கு மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில்கூட ஒரு சாதாரணப் பொதுக்கூட்டத்தையும் அனைத்திந்திய அண்ணா திமுகவினால் நடத்த முடியவில்லை என்பது சாதாரண விஷயம் அல்ல! இவற்றையெல்லாம் சொல்வதனால் நான் அழகிரியின் அரசியலை ஆதரிக்கிறேன் என்பதல்ல.
சில நிகழ்வுகளின் பின்னணிகளில் நடைபெறுகின்ற நடைமுறைகளின் அலசல்தான் இது.
மதுரை என்பது இன்றல்ல அன்றையிலிருந்தே எம்ஜிஆரின் கோட்டை என்றே இருக்கிறது..அதனைத் தகர்த்தாக வேண்டும். என்ன செய்யலாம்? தவிர அதனை இந்த வகையில் கட்டிக்காத்துக் கொண்டிருப்பவர் மதுரை முத்து. அவரைத் தொடர்ந்து பழக்கடை பாண்டி. மதுரைமுத்துவும் பழக்கடைப் பாண்டியும் பரமஹம்சரின் சீடர்களோ,
Read 22 tweets
27 Jul
தொண்டன் தன் மனவருத்தத்தை தெரியப்படுத்தலாம்.
கழக பொதுச்செயலாளர் இப்படி பேசலாமா?
தன் கட்சியினரை பற்றி இப்படிப்பட்ட
குற்றச்சாட்டுகள் பொதுச்செயலாளர் பேசலாமா?
தவறு செய்தவர்களை அழைத்து தண்டனை வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர் இப்படி பேசலாமா?
ஆதாரங்கள் எல்லாம் இருக்கும் போது சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க என்ன தயக்கம்.
நீங்கள் சொல்வதை பார்த்தால் சம்பந்தப்பட்டவர்கள் உங்களுக்கு எதிராக அல்ல கழகத்திற்கு துரோகம் செய்திருக்கிறார்கள்..
பொதுவெளியில் பேசாமல் டெலிபோனில் உரையாடியதற்காக திருவண்ணாமலை
சாவல்பூண்டியார்,குடியாத்தம் குமரன், இளைஞரணி நெல்லை துரை போன்றோர் தண்டிக்கப்பட்ட போது கட்சிக்கு துரோகம் செய்தவர்களை ஏன் தண்டிக்கவில்லை..
-+--+----------------------------------------------------------+
Read 12 tweets
27 Jul
#எம்ஜிஆர்_மோசடி

எம்.ஜி.ஆர், சந்திரபாபு, ஜெயலலிதா என மூவரும் சாப்பிட அமர்ந்திரு க்கிறார்கள். முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திர்ருந்த எம்.ஜி.ஆருக்கு அவர் வீட்டிலிருந்து உணவு வந்துவிட்டது. சந்திர பாபுவுக்கோ வரவில் லை! “என்ன சாப்பிடலையா?” என கேட்ட எம்.ஜி.ஆர்,
“இன்னைக்கு என் சாப்பாட்டைசாப்பிடுங்கள்” என ‘ஒரு மாதிரி’யாகக் கூறி விட்டு எழுந்துபோயிருக்கிறார். ஏன் கோவ மாக இருக்கிறார் என குழம்பியி ருந்த சந்திரபாபுவிடம் “நான் உங்களைப் பிடித்து தூக்கினேன் இல்லையா? அது அவ ருக்குப் பிடிக்கவில்லை” என ஜெயலலிதா சொல்லி தெளிவித்திருக்கிறார்!!!!!
இதில் என்ன கொடுமை என்றால் சந்திரபாபு ஜெயலலிதாவின் குடு ம்ப நண்பர். சிறுவயதில் இருந்தே ஜெயலலிதா சந்திரபாபுவை “அங்கிள்” என்றுதான் அன்பொழுக கூப்பிடுவா ராம்! அப்படி உறவு கொண்டிருந்த ஒருவரைக் காப் பாற்றியதற்காகத்தான் எம்.ஜி.ஆரு க்கு அப் படி கோபம்!!
Read 52 tweets
26 Jul
#எம்ஜிஆர்_வெண்ணிற_ஆடை_நிர்மலா

“நினைத்ததை நடத்தியே முடிப்பவன்
நான்” ..என எம்.ஜி.ஆர். முடித்து வைத்த
இன்னொரு விஷயம்...சட்டமன்ற மேலவை...!
எம்.ஜி.ஆர். காலம்வரைக்கும் , சட்டசபையில்
மேலவை என்று தனியாக
ஒரு சபை இருந்து வந்தது...
அந்த மேலவைக்கு 1986 - ல் வெண்ணிற
ஆடை நிர்மலாவை உறுப்பினராக நியமனம்
செய்தார் எம்.ஜி.ஆர்...
நிர்மலா ஏப்ரல் 23, 1986 இல் பதவிப் பிரமாணம்
எடுத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன...
நினைத்ததை முடித்த நிம்மதியில் இருந்த
எம்.ஜி.ஆரின் இந்த திட்டத்திற்கு எதிர்பாராத
ஒரு சட்டச் சிக்கல் எழுந்தது....
வெண்ணிற
ஆடை நிர்மலா ஏற்கனவே முன்பு ஒருமுறை திவாலானவர்.....
இந்திய அரசியலமைப்பின் 102-(1)c
பிரிவின்படி திவாலான ஒருவர் நாடாளுமன்ற
உறுப்பினராகவோ, மாநில
Read 9 tweets
26 Jul
ஆட்சியில் தலையிட்ட ஆளுநர் சென்னா ரெட்டியை ஜெயலலிதா எப்படி எதிர்த்தார் தெரியுமா?

தமிழக ஆளுநராக எம்.சென்னாரெட்டி இருந்த காலம் அது. முதல்வராக ஜெயலலிதா முதல் முறை அதிகாரத்திற்கு வந்திருந்ததும் அந்த காலகட்டம்தான். 1993 ஆகஸ்ட் மாதம் சென்னை எழும்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்.
அலுவலகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. பெருத்த சேதத்துடன் உயிர் பலியும் ஏற்பட்டது. ஆளுநராக இருந்த சென்னாரெட்டி பதறியடித்து ஓடிவந்து நேரடியாக வந்து கள ஆய்வு செய்தார்.
பிரதமருக்கு கடிதம் இப்படி ஒரு இடர் காலத்திலும் கூட, ஆளுநர் அங்கு சென்றதற்கு, ஜெயலலிதா கடுமையான
ஆட்சேபணை எழுப்பினார். இதன்பிறகு 1995ல் மதுரை காமராஜ் பல்கலை பட்டமளிப்பு விழாவிற்குச் சென்ற சென்னாரெட்டி மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்குக் கூப்பிட்டுச் சில விவரங்கள் கேட்டார். ஆனால் அதையும் எளிதில் விடவில்லை ஜெயலலிதா. ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனம்
Read 8 tweets
26 Jul
''பட்ஜெட் கிழிப்பு... மூக்குகண்ணாடி உடைப்பு... சேலை கிழிப்பு..!'' சட்டசபையில்
தமிழக சட்டசபை வரலாற்றில் 1989 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி கலஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் மறக்க முடியாத நாள். தமிழக மக்களுக்கும்தான். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த
தி.மு.க அரசுக்கு பட்ஜெட் கூட்டத்தின் முதல் நாள். முதல்வராக கலைஞர் வீற்றிருந்தார். எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா அமர்ந்திருந்தார். முதல்வரும் நிதி அமைச்சருமான கலைஞர், தமிழக பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய எழுந்த போது, '
பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது' என்று அ.தி.மு.க தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல் கடுமையாகக் கிளம்பியது. தன்னுடைய போன் ஒட்டு கேட்கப்படுவதாகவும் 'அதற்கு பதில் சொல்ல வேண்டும்' என்று உரிமை மீறல் பிரச்னையை எழுப்பினார் ஜெயலலிதா. அப்போது நடந்த களேபரத்தில்,
Read 35 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(