''பட்ஜெட் கிழிப்பு... மூக்குகண்ணாடி உடைப்பு... சேலை கிழிப்பு..!'' சட்டசபையில்
தமிழக சட்டசபை வரலாற்றில் 1989 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி கலஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் மறக்க முடியாத நாள். தமிழக மக்களுக்கும்தான். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த
தி.மு.க அரசுக்கு பட்ஜெட் கூட்டத்தின் முதல் நாள். முதல்வராக கலைஞர் வீற்றிருந்தார். எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா அமர்ந்திருந்தார். முதல்வரும் நிதி அமைச்சருமான கலைஞர், தமிழக பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய எழுந்த போது, '
பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது' என்று அ.தி.மு.க தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல் கடுமையாகக் கிளம்பியது. தன்னுடைய போன் ஒட்டு கேட்கப்படுவதாகவும் 'அதற்கு பதில் சொல்ல வேண்டும்' என்று உரிமை மீறல் பிரச்னையை எழுப்பினார் ஜெயலலிதா. அப்போது நடந்த களேபரத்தில்,
பட்ஜெட் உரை கிழிக்கப்பட்டது; கலைஞர் மூக்கு கண்ணாடி உடைந்தது; ஜெயலலிதா சேலை கிழிந்தது. சட்டசபையோ அமளி துமளி ஆனது. 29 ஆண்டுகள் முடிந்து 30 ஆம் ஆண்டில் இன்று அந்த சம்பவம் அடியெடுத்து வைக்கிறது. அப்போது நடந்து என்ன? என்பதை இப்போது பார்ப்போம்.
1989 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் முடிவுகள், தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை தி.மு.க-விடம் ஒப்படைத்தது. மதுரை கிழக்கு, மருங்காபுரி தொகுதிகளைத் தவிர்த்து 232 தொகுதிகளுக்கு மட்டும் அப்போது தேர்தல் நடந்தது. 150 தொகுதிகளில் தி.மு.க ஜெயித்தது.
தி.மு.க 13 ஆண்டுக்கு பின் ஆட்சி பீடத்தை கைப்பற்றியது. அ.தி.மு.க (ஜெ) அணி 27 இடங்களையும் ஜி.கே.மூப்பனார் தலைமையில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கட்சி 26 இடங்களையும் அ.தி.மு.க (ஜா) அணி 2 இடங்களையும் கைப்பற்றி இருந்தது. 1989 ஆம் ஆண்டு
ஜனவரி 27 ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில் கலைஞர் 3- வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். எதிர்க்கட்சித் தலைவராக பிப்ரவரி 9 ஆம் தேதி, ஜெயலலிதா பதவி ஏற்றுக்கொண்டார். காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் போன்றவர்களோடு அரசியல் செய்த கலைஞருக்கு எதிரில் எதிர்க்கட்சித்
தலைவராக ஜெயலலிதா அமர்ந்தார். பதவி ஏற்றதோடு சரி, அதன்பிறகு சட்டசபைக்கு வருவதையே ஜெயலலிதா தவிர்த்தார்.
இதற்கிடையே, ஜா-ஜெ அணிகள் இணைந்தன. 1989 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த மருங்காபுரி, மதுரை கிழக்கு சட்டசபைத் தொகுதி தேர்தல்களில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தி.மு.க ஜெயிக்கும்
என்று ஆரூடங்கள் சொல்லப்பட்டன. தேர்தல் தோல்வியில் துவண்டு கிடந்த ஜெயலலிதா, இந்த இரண்டு தொகுதி தேர்தல் பிரசாரங்களுக்கும் போகவில்லை. ஆனால், 'இரட்டைஇலை' கிடைத்த மகிழ்ச்சியில் அ.தி.மு.க தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்ததை, வெற்றி சூத்திரமாக மாற்ற வியூகம் அமைத்துக்
கொடுத்தார் எம்.நடராஜன். மதுரை கிழக்கு தொகுதிக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர்., மருங்காபுரிக்கு திருநாவுக்கரசர் ஆகியோரைத் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்தார். தேர்தல் டெக்னிக்குகளை சொல்லிக் கொடுத்தார். தி.மு.க-வுக்கு அதிர்ச்சி கொடுத்து, அ.தி.மு.க ஜெயித்தது.
இதற்கிடையில் , சட்டசபை
பொதுத்தேர்தலில் 232 தொகுதிகளிலும் பிரசாரம் செய்து 27 இடங்களில் வெற்றி பெற்றது, தேர்தல் பிரசாரம் செய்யாமலேயே ஆளும்கட்சியை வீழ்த்தி இரண்டு தொகுதியில் அ.தி.மு.க ஜெயித்தது போன்றவை எல்லாம் ஜெயலலிதாவுக்கு ஒருவித அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த மன உளைச்சலால்
அரசியலை விட்டே அவர் போகப்போகிறார் என்றும் அப்போது சொல்லப்பட்டது. அந்த பரபரப்பான நேரத்தில், தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன். அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று ஜெயலலிதா எழுதிய கடிதம் ஒன்று நடராஜன் கையில் கிடைக்க... அந்த கடிதம் உரியவர்கள் கைக்குச்
செல்லாமல் தடுத்தார் நடராஜன்.
இந்நிலையில், தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நடைபெற்றன. டெல்லியில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் காங்கிரஸ்-அ.தி.மு.க கூட்டணிக்கு அச்சாரமிடப்பட்டது. அப்போது வர இருந்த நாடாளுமன்றத் தேர்தலை
அ.தி.மு.க-வுடன் சேர்ந்து சந்திப்பது என்று ராஜிவ்காந்தி முடிவு எடுத்து இருந்தார். இந்த புதிய உறவு, அ.தி.மு.க தலைவர் ஜெயலலிதாவை உற்சாகப்படுத்தியது. இந்தச் சூழ்நிலையில்தான், 1989 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி சென்னையில் தி.மு.க அரசை கண்டித்து கண்டனப்பேரணியை ஜெயலலிதா
நடத்தினார். பேரணியில் போனவர்கள், கருணாநிதியையும், சென்னை போலீஸ் கமிஷனர் துரையையும் கடுமையான திட்டினர். தகாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்தனர்.
இதற்கிடையில் 23 ஆம் தேதியும் 24 ஆம் தேதியும் நடந்த, அ.தி.மு.க சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில், அன்று நிலவிய
அரசியல் சூழ்நிலைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 25 ஆம் தேதி தி.மு.க பட்ஜெட் தாக்கல் கூட்டத்தில் 'அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்' என்றும் விவாதித்தனர். பட்ஜெட் அன்று அ.தி.மு.க வினர் கூட்டம் கூட்டமாக கோட்டைக்கு வந்தனர்.
பல கார்கள் புடைசூழ, எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா கோட்டைக்கு வந்தார். சட்டசபையில் தனது இருக்கையில் அமர்ந்தார். அப்போது மணி 10.50. முன்னரே, அ.தி.மு.க உறுப்பினர்களும் வந்திருந்தனர். காலை 11 மணிக்கு சபை கூடியது. சபாநாயகர் தமிழ்குடிமகன், ஒரு திருக்குறளை வாசித்தார்.
உடனே, சட்டசபை காங்கிரஸ் துணைத்தலைவர் குமரி அனந்தன் எழுந்து, ''ஜெயலலிதா கடிதம் விவகாரத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் துரை, சபையின் உரிமையை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். முதல்வர் கலைஞர் தூண்டுதலால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, கலைஞர் மீது உரிமை மீறல் பிரச்னை
கொண்டு வருகிறோம்' என்றார்.
அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா எழுந்து, ''முதல்வர் மீதும் போலீஸ் கமிஷனர் மீதும் உரிமை மீறல் தீர்மானத்தை கொடுத்துள்ளேன். எனது டெலிபோன் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது. முதல்வரும் அவரது அமைச்சரவையும் பதவி விலக வேண்டும். அதற்கான ஒத்திவைப்பு
தீர்மானத்தை கொண்டு வருகிறேன்'' என்று பேசினார். வழக்கத்துக்கு மாறாக, சஃபாரி உடையில் வந்திருந்த பி.எச்.பாண்டியன் பேசினார். அவர், 'தி.மு.க-வுக்கு ஆதரவாக பேசினார்' என்று அ.தி.மு.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநயகர் தமிழ்குடிமகன், '
பி.எச். பாண்டியன் இருக்கையில் அமர வேண்டும்' என்று உத்தரவு போட்டுவிட்டு, 'இங்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமை மீறல் பிரச்னை குறித்து அலசி ஆராய்ந்து வரும் திங்கள்கிழமை பதில் கூறுகிறேன். இப்போது பட்ஜெட் உரையை முதல்வர் வாசிக்கலாம்' என்று அறிவித்தார்.
கலைஞர் பட்ஜெட் உரையை வாசிக்க எழுந்தார்.
உடனே, ஜெயலலிதா குறுக்கிட்டு எழுந்து ஓர் அறிக்கையை வாசிக்கத் தொடங்கினார். ''முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்'' என்று அவர் சொன்னவுடன், கலைஞர், 'மைக்'கை தனது கையால் மூடிக்கொண்டு ஏதோ சத்தமாகச் சொன்னார்.
அதைக் கேட்ட, ஜெயலலிதா அதிர்ச்சி அடைந்தார். அ.தி.மு.க உறுப்பினர்கள் கொந்தளித்தனர். அ.தி.மு.க உறுப்பினர்கள் சிலர் முன்னேறி சென்று கலைஞர் கையில் இருந்த பட்ஜெட் உரையை கிழித்தனர். அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் கலைஞர் மூக்குகண்ணாடி உடைந்தது. பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து
செருப்புகள் வீசப்பட்டன. அ.தி.மு.க உறுப்பினர்கள் செங்கோட்டையன், அண்ணாநம்பி, திருநாவுக்கரசர், முசிறி தங்கவேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தி.மு.க-வைச் சேர்ந்த வீரபாண்டி ஆறுமுகம், மு.கண்ணப்பன், துரைமுருகன் ஆகியோர் அன்றைய களேபரத்தில் அவரவர் கட்சிகளில் கதாநாயகர்களாக வலம் வந்தார்கள்.
காயம் காரணமாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு போனார்கள்.
சபையில் இருந்து வெளியேறிய ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ''துரைமுருகன் எனது சேலையை பிடித்து இழுத்து கிழித்தார். அப்போது கீழே விழுந்ததில் எனது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
முதலமைச்சர் கலைஞர் மிகவும் ஆபாசமாக ஒரு வார்த்தையைச் சொல்லித் திட்டினார். தி.மு.க-வினர் என்னுடைய தலையைக் குறிபார்த்து தாக்குதல் தொடுத்தனர். சட்டசபைக் காவலர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருந்தார்கள். ஒரு பெண்ணையே, சட்டசபையிலேயே இப்படி
அவமானப்படுத்தினார்கள் என்றால் நாட்டு மக்கள் நிலை என்ன..? யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த அரசு நீக்கப்படவேண்டும்'' என்று ஆவேசமாக பேட்டி கொடுத்தார்.
இந்த சம்பவங்கள் நடந்து இப்போது, 29 ஆண்டுகள் ஆகிவிட்டன. 2003 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி
அ.தி.மு.க ஆட்சியில் பட்ஜெட் விவாதத்தின் போது மீண்டும் அந்த பிரச்னை காரசார விவாதமானது. அப்போது பேசிய ஜெயலலிதா, ''இதே சட்டசபையில் எம்.ஜி.ஆர் தாக்கப்பட்டார். அவர் மீது செருப்புகள் வீசப்பட்டன. 1989 ஆம் ஆண்டு சட்டசபையில் துரைமுருகன் என் சேலையை பிடித்து இழுத்தார்.
என் சேலை கிழிந்துவிட்டது. அப்போது நான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டேன். ஆளும்கட்சியினர் அப்போது என்னிடம் கண்ணியமாக நடந்து கொள்ளவில்லை'' என்றார்.
துரைமுருகன்: ''நீங்கள் கூறுவது தவறு. நான் உங்களைத் தாக்கவே இல்லை. நீங்கள் கூறும் இடத்தில் இருந்து நான் அதிக தூரத்தில் இருந்தேன்''.
ஜெயலலிதா: ''அங்கே இருந்திருக்கலாம். ஆனால், இடத்தை விட்டு முன்னேறி வந்து என்னைத் தாக்கினீர்கள். அவமானகரமாக நடந்துகொண்டீர்கள். வீரபாண்டி ஆறுமுகம் மேஜை மீது ஏறி என்னை நோக்கி ஓடிவந்தாரே..?''.
துரைமுருகன்: ''கிரிமினல் முதல்வர் என்றும் 'குத்துங்கடா' என்றும் நீங்கள்தான் சொன்னீர்கள். எங்கள் தலைவரை அ.தி.மு.க-வினர் உடனே தாக்கினர். அடித்து கண்ணாடியை உடைத்தனர்''.
ஜெயலலிதா: ''நீங்கள் சொல்வது போல் அன்று நான் எதையும் சொல்லவில்லை. கலைஞர் கண்ணாடியை உடைக்கவில்லை.
அன்றும் உண்மைக்கு புறம்பாக பேசினீர்கள். இன்றும் அப்படியே சொல்கிறீர்கள்''.
க.அன்பழகன்: ''அனைவரும் உணர்ச்சிவசப்படக்கூடிய அளவில் உண்மைக்கு மாறான தகவல்களை ஜெயலலிதா தருகிறார். அவர் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கற்பனை. அன்று சட்டசபையில் நானும் இருந்தேன். ஜெயலலிதா கூறுவது போல,
அன்று எந்த சம்பவமும் நடக்கவில்லை. அன்றைக்கு ஒரு ஆவேசமான சூழ்நிலை நிலவியது அவ்வளவுதான். அன்று கலைஞர் பட்ஜெட் வாசித்த போது, ''டோன்ட் ரீட், யூ கிரிமினல் டோன்ட் ரீட்.." என்று குரல் கேட்டது. அதை யார் கூறினார்கள் என்று நான் கூற விரும்பவில்லை.
அதன்பின்னர்தான் அசம்பாவிதம் நடந்தது. அந்த சம்பவத்தில் தன் கை உடைந்து விட்டதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமரி அனந்தன் கையில் கட்டு போட்டுக்கொண்டு வந்தார். இன்னும் இரண்டு நாள் கழித்து மற்றோரு கையிலும் கட்டு போட்டிருந்தார். இப்படித்தான் அந்த சமயத்தில் நடந்ததே தவிர வேறு எதுவும்
நடக்கவில்லை''.
ஜெயலலிதா: ''நான் சொல்வதுதான் உண்மை. என்னை கடுமையாக தாக்கினார்கள்''.
க.அன்பழகன்: நீங்கள் அன்று பதற்றத்துடன் இருந்தீர்கள். நான் அப்படி இல்லை. நேருக்கு நேர் அனைத்தையும் மிக அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். நீங்கள் கூறுவது போல எதுவும் நடக்கவில்லை''.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

28 Jul
சற்றேறக்குறைய ஏழெட்டு வருடங்களுக்கு மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில்கூட ஒரு சாதாரணப் பொதுக்கூட்டத்தையும் அனைத்திந்திய அண்ணா திமுகவினால் நடத்த முடியவில்லை என்பது சாதாரண விஷயம் அல்ல! இவற்றையெல்லாம் சொல்வதனால் நான் அழகிரியின் அரசியலை ஆதரிக்கிறேன் என்பதல்ல.
சில நிகழ்வுகளின் பின்னணிகளில் நடைபெறுகின்ற நடைமுறைகளின் அலசல்தான் இது.
மதுரை என்பது இன்றல்ல அன்றையிலிருந்தே எம்ஜிஆரின் கோட்டை என்றே இருக்கிறது..அதனைத் தகர்த்தாக வேண்டும். என்ன செய்யலாம்? தவிர அதனை இந்த வகையில் கட்டிக்காத்துக் கொண்டிருப்பவர் மதுரை முத்து. அவரைத் தொடர்ந்து பழக்கடை பாண்டி. மதுரைமுத்துவும் பழக்கடைப் பாண்டியும் பரமஹம்சரின் சீடர்களோ,
Read 22 tweets
27 Jul
#எம்ஜிஆர்_மோசடி

மாடி வீட்டு ஏழை படப்பிடிப்பு நின்று விட்டது குறித்து, சந்திரபாபு கூறியது: விதி எனும் காலதேவன் அந்த அறைக்குள் காத்திருந்ததை எப்படி அறிவேன்!
சுமார், 45 நிமிடங்கள், ராமனுக்கும், ராவணனுக்கும் நடந்ததே யுத்தம்... அதுபோன்று உள்ளே நடந்தது...
'வாங்க பாபு...' Image
'வணக்கம் மிஸ்டர் சக்கரபாணி, சவுக்கியமா... உங்க தயவு தான் வேணும்...'
'நான் என்ன பண்ணனும் சொல்லுங்க...'
'மிஸ்டர் எம்.ஜி.ஆர்., கால்ஷீட் கொடுத்தீங்கன்னாத்தான் நாங்க தப்பிக்க முடியும்; கொஞ்சம் பாத்து செய்யுங்க...'
'பாபு, நீங்க ஏன் எம்.ஜி.ஆரை போட்டு படம் எடுக்க நினைக்கிறீங்க...
நல்லா சம்பாதிக்கணும்ன்னு தானே... அப்படின்னா, நாங்க சொல்ற வரைக்கும் பொறுத்து தான் இருக்கணும். நீங்க நினைக்கிறபடி எல்லாம் எங்களால கால்ஷீட் கொடுக்க முடியாது...'
'நாங்க நினைக்கிறபடி, கால்ஷீட் கொடுக்க வேணாம்; நீங்க நினைக்கிறபடியே கால்ஷீட் கொடுங்க...'
'அத, அப்பப்ப தெரியப்படுத்தறோம்...'
Read 21 tweets
27 Jul
தொண்டன் தன் மனவருத்தத்தை தெரியப்படுத்தலாம்.
கழக பொதுச்செயலாளர் இப்படி பேசலாமா?
தன் கட்சியினரை பற்றி இப்படிப்பட்ட
குற்றச்சாட்டுகள் பொதுச்செயலாளர் பேசலாமா?
தவறு செய்தவர்களை அழைத்து தண்டனை வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர் இப்படி பேசலாமா?
ஆதாரங்கள் எல்லாம் இருக்கும் போது சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க என்ன தயக்கம்.
நீங்கள் சொல்வதை பார்த்தால் சம்பந்தப்பட்டவர்கள் உங்களுக்கு எதிராக அல்ல கழகத்திற்கு துரோகம் செய்திருக்கிறார்கள்..
பொதுவெளியில் பேசாமல் டெலிபோனில் உரையாடியதற்காக திருவண்ணாமலை
சாவல்பூண்டியார்,குடியாத்தம் குமரன், இளைஞரணி நெல்லை துரை போன்றோர் தண்டிக்கப்பட்ட போது கட்சிக்கு துரோகம் செய்தவர்களை ஏன் தண்டிக்கவில்லை..
-+--+----------------------------------------------------------+
Read 12 tweets
27 Jul
#எம்ஜிஆர்_மோசடி

எம்.ஜி.ஆர், சந்திரபாபு, ஜெயலலிதா என மூவரும் சாப்பிட அமர்ந்திரு க்கிறார்கள். முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திர்ருந்த எம்.ஜி.ஆருக்கு அவர் வீட்டிலிருந்து உணவு வந்துவிட்டது. சந்திர பாபுவுக்கோ வரவில் லை! “என்ன சாப்பிடலையா?” என கேட்ட எம்.ஜி.ஆர்,
“இன்னைக்கு என் சாப்பாட்டைசாப்பிடுங்கள்” என ‘ஒரு மாதிரி’யாகக் கூறி விட்டு எழுந்துபோயிருக்கிறார். ஏன் கோவ மாக இருக்கிறார் என குழம்பியி ருந்த சந்திரபாபுவிடம் “நான் உங்களைப் பிடித்து தூக்கினேன் இல்லையா? அது அவ ருக்குப் பிடிக்கவில்லை” என ஜெயலலிதா சொல்லி தெளிவித்திருக்கிறார்!!!!!
இதில் என்ன கொடுமை என்றால் சந்திரபாபு ஜெயலலிதாவின் குடு ம்ப நண்பர். சிறுவயதில் இருந்தே ஜெயலலிதா சந்திரபாபுவை “அங்கிள்” என்றுதான் அன்பொழுக கூப்பிடுவா ராம்! அப்படி உறவு கொண்டிருந்த ஒருவரைக் காப் பாற்றியதற்காகத்தான் எம்.ஜி.ஆரு க்கு அப் படி கோபம்!!
Read 52 tweets
26 Jul
#எம்ஜிஆர்_வெண்ணிற_ஆடை_நிர்மலா

“நினைத்ததை நடத்தியே முடிப்பவன்
நான்” ..என எம்.ஜி.ஆர். முடித்து வைத்த
இன்னொரு விஷயம்...சட்டமன்ற மேலவை...!
எம்.ஜி.ஆர். காலம்வரைக்கும் , சட்டசபையில்
மேலவை என்று தனியாக
ஒரு சபை இருந்து வந்தது...
அந்த மேலவைக்கு 1986 - ல் வெண்ணிற
ஆடை நிர்மலாவை உறுப்பினராக நியமனம்
செய்தார் எம்.ஜி.ஆர்...
நிர்மலா ஏப்ரல் 23, 1986 இல் பதவிப் பிரமாணம்
எடுத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன...
நினைத்ததை முடித்த நிம்மதியில் இருந்த
எம்.ஜி.ஆரின் இந்த திட்டத்திற்கு எதிர்பாராத
ஒரு சட்டச் சிக்கல் எழுந்தது....
வெண்ணிற
ஆடை நிர்மலா ஏற்கனவே முன்பு ஒருமுறை திவாலானவர்.....
இந்திய அரசியலமைப்பின் 102-(1)c
பிரிவின்படி திவாலான ஒருவர் நாடாளுமன்ற
உறுப்பினராகவோ, மாநில
Read 9 tweets
26 Jul
ஆட்சியில் தலையிட்ட ஆளுநர் சென்னா ரெட்டியை ஜெயலலிதா எப்படி எதிர்த்தார் தெரியுமா?

தமிழக ஆளுநராக எம்.சென்னாரெட்டி இருந்த காலம் அது. முதல்வராக ஜெயலலிதா முதல் முறை அதிகாரத்திற்கு வந்திருந்ததும் அந்த காலகட்டம்தான். 1993 ஆகஸ்ட் மாதம் சென்னை எழும்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்.
அலுவலகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. பெருத்த சேதத்துடன் உயிர் பலியும் ஏற்பட்டது. ஆளுநராக இருந்த சென்னாரெட்டி பதறியடித்து ஓடிவந்து நேரடியாக வந்து கள ஆய்வு செய்தார்.
பிரதமருக்கு கடிதம் இப்படி ஒரு இடர் காலத்திலும் கூட, ஆளுநர் அங்கு சென்றதற்கு, ஜெயலலிதா கடுமையான
ஆட்சேபணை எழுப்பினார். இதன்பிறகு 1995ல் மதுரை காமராஜ் பல்கலை பட்டமளிப்பு விழாவிற்குச் சென்ற சென்னாரெட்டி மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்குக் கூப்பிட்டுச் சில விவரங்கள் கேட்டார். ஆனால் அதையும் எளிதில் விடவில்லை ஜெயலலிதா. ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனம்
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(