[Movie - Horror] Color Out Of Space - 2019
ஹீரோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஊருக்கு ஒதுக்கு புறமாக உள்ள பண்ணை வீட்டுக்கு குடி வருகிறார்
ஒரு நாள் இரவு திடீரென இடி மற்றும் ஒருவித பிங்க் நிறத்தில் மின்னல் வருகிறது. பெரிய சத்தத்துடன் ஏதோ ஒன்று வீட்டின் முன் விழுகிறது. #Tamil
அதன் பின் குடும்பத்தினர் மனநிலை முற்றிலும் மாறி பல கொடூரமான சம்பவங்கள் நடக்கின்றன. எதனால் இவ்வாறு நடக்கிறது.. கடைசியில் குடும்பம் என்னாயிற்று என்பதை படத்தில் பாருங்கள்.
The Last Stand - 2013
நம்ம அர்னால்ட் ரொம்ப நாள் கழிச்சு நடிச்ச action படம் என்று நினைக்கிறேன்
ஒரு கிளாசிக் ஆக்ஷ்ன் திரில்லர்
ஒரு பெரிய போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜெயிலில் இருந்து தப்பி விடுகிறான்
கார் ஒன்றை எக்குத்தப்பாக modify பண்ணி மின்னல் வேகத்தில் வருகிறான் #Tamil
Mexico நாட்டிற்கு தப்பி செல்வது plan. எல்லா தடைகளையும் அடித்து நொறுக்கி விடுகிறான்.
மெக்சிகோ பார்டரில் உள்ளே நுழைவதற்கு ஒரே தடையாக இருப்பது சின்ன ஊரில் Sheriff ஆக இருக்கும் Arnold மற்றும் அவரது ஸ்டேஷனில் உள்ள போலீஸ் மட்டுமே
குற்றவாளிகளை பிடித்தார்களா என்பதை படத்தில் பாருங்கள்
நல்ல ஒரு ஆக்ஷன் திரில்லர். அர்னால்ட்க்கு ஏற்ற படம்.
லாஜிக் எல்லாம் பார்க்காமல் என்ஜாய் பண்ணலாம்
Gun fight, Car chase என பரபரவென போகும் படம்.
IMDb : 6.3
OTT ல இல்லை.எங்க இருந்து Download பண்னேன் என்பதும் மறந்து விட்டது. யாராவது பட Link வச்சுருந்தா pls DM. #Action#Thriller
ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்ந்தவன் திடீரென பழி வாங்க கிளம்பினால் அவன் என்ன பண்ணுவான் என்பதை படத்தில் காட்டி உள்ளனர்.
பெற்றோர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? பழி வாங்கினானா என்பதை படத்தில் பாருங்கள்.
Logan Lucky - 2017
இது ஒரு அருமையான Heist movie. Heist படம் என்றதும் சேசிங், gun fight , அழகான பெண்கள் என்ற டெம்ப்ளேட்டிற்குள் போகாமல் காமெடிக்குள் இறங்கி இருக்கிறார் இயக்குனர்
அண்ணன் தம்பி இரண்டு பேர் சேர்ந்து கார் ரேஸ் நடக்கும் கிரவுண்டில் இருந்து கொள்ளை அடிப்பது தான் பிளான்
இந்த பிளானுக்கு தேவையான முக்கிய ஆள் ஜெயிலில் இருக்கிறான்.
ஜெயிலில் இருந்து எவ்வாறு அவனை வெளியே கொண்டு வந்தார்கள்… பணத்தை கொள்ளையடித்தார்களா என்பதை கலகலப்பாக சொல்கிறது படம்.
ஜேம்ஸ் பாண்ட் Daniel Craig காமெடி கதாபாத்திரத்தில் கலக்கி இருப்பார்.
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
ப்ரைம் வீடியோவில் தமிழ் டப் இருக்கிறது. க்ளைமாக்ஸ்ஸில் நல்ல ட்விஸ்ட் வைத்து இருப்பார்கள்.
நம்ம ஹீரோ ரொம்ப அமைதியான வெகுளியான ஆளு, அழகான மனைவி.. வியாபாரம் பண்றேன்னு கடனை வாங்கி பலரால் ஏமாத்தப்படுகிறார்.
ஒரு நாள் நைட் வீட்டுக்கு வந்து பார்த்தா மனைவியை காணோம்.
யாரோ கடத்திச் சென்று விடுகின்றனர். போலீஸ் கம்ளெய்ன்ட் கொடுத்தும் ஒன்னும் நடக்காததால் ஒரு தனியார் துப்பறியும் ஏஜெண்ட் துணையும் மனைவியை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார்.
அவ்வளவு நாள் பாட்ஷா மாணிக்கம் மாதிரி அமைதியாக இருந்தவர்.விஸ்வரூபம் கமல் மாதிரி பொங்கி எழுகிறார்.
விசாரணையில் வில்லன் குரூப்பை எல்லாம் ஒரே பன்ச்ல் சாய்க்கிறார். மனைவியை கடத்தியது யார் ? மனைவியை காப்பாற்றினான? என்பதை படத்தில் பாருங்கள்.
நல்ல மாஸான டைம் பாஸ் ஆக்ஷ்ன் படம்... ஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும் போக போக செம ஸ்பீடு. கண்டிப்பாக பாருங்கள். நல்ல தரமான படம் 👌