#EighteenHours#PCMreview IMDb - 7.9/10. "பரபரப்புக்கு பஞ்சமில்லாத சர்வைவல் திரில்லர்". தமிழ் டப்பிங் இல்லை.கண்டிப்பாக (18+).OTT - Manorama Max/Simply South. டெலிகிராம் - பயோ/DM.கேரளாவில் இருந்து ஒரு பள்ளியை சேர்ந்த 6 மாணவிகள் பெங்களூருவில் நடக்கும் யூத் பெஸ்டிவலுக்கு விமானம்
மூலம் செல்ல விமான நிலையத்தில் காத்திருக்கிறார்கள்.சில காரணங்களால் விமானம் ரத்தாக,பேருந்தில் பெங்களூரு செல்கிறார்கள்.6 மாணவிகள் இரு ஆசிரியர்கள்,ஒரு முன்னாள் மாணவி என 9 பேர் பயணம் செய்கிறார்கள்.செல்லும் வழியில் 4 பேர் கொண்ட போதை கடத்தல் கும்பலின் வண்டி விபத்தாக இவர்களின் பேருந்தை
கடத்தி இவர்களை பணய கைதிகளாக வைத்து செல்கிறார்கள்.இவ்விஷயம் காவல்துறைக்கு தெரியவர,பள்ளி மாணவிகளை மீட்க முயற்சி செய்கிறார்கள்.மாணவிகள் தப்பித்தார்களா?கடத்தல் கும்பலை பிடித்தார்களா? என்பதே மீதிக்கதை.பார்த்து பழகிய கதை தான்.ஆனால் விறுவிறுப்பாக நகரும் வண்ணம் திரைக்கதை இருப்பதால்
#Janamaithri2019#PCMreview#Malayalam "அருமையான நகைச்சுவை திரைப்படம்".தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - அமேசான் பிரைம்.டெலிகிராம் - பயோ/DM. கதை சுருக்கம் : கேரள அரசாங்கம் மக்களுக்கும் காவல்துறைக்கும் நெருக்கம் ஏற்படுத்த ஒரு புதிய உத்தியை கையாள்கிறது.அதாவது இரவில்
கண்விழித்து வாகனம் ஓட்டுபவர்களை நிறுத்தி அவர்களுக்கு பிஸ்கட்,டீ தருவது தான்.இதற்காக காவல்துறை அதிகாரி இந்திரன் தலைமையில் ஒரு குழு சோதனைச்சாவடியில் நின்று இவ்வாறு செய்கிறது.அதே சமயத்தில் அந்த இரவில் ஒரு வீட்டில் மூன்று நபர்கள் ஒரு காரை திருட வருகிறார்கள்.அதற்கு பக்கத்து வீட்டில்
முகமூடி அணிந்த இரு நபர்கள் திருட வருகிறார்கள்.ஹீரோ சைஜு குருப் உடல் உபாதைகள் கழிக்க திருடர்கள் நுழைந்த வீட்டிற்க்கு செல்கிறார்.இவ்வாறு நான்கு கதைக்களம் ஒரே சமயம் நடக்க,இவர்கள் அனைவரும் என்ன ஆனார்கள் என்பதை காமெடி சரவெடியுடன் கூறியிருக்கிறார் இயக்குனர்.காமெடிக்கு பெயர் போன
#SEOBOK2021#PCMreview#Korean "ஒரு எமோஷனல் சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்சன் திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - TVING. டெலிகிராம் - பயோ/DM. கதை : மனித உடலில் இல்லாத ஒரு ஜீனை உருவாக்கி அதன் மூலம் குளோனிங் முறையில் ஒரு மனிதனை கொரிய விஞ்ஞானிகள் உருவாக்குகிறார்கள்.
அவ்வாறு உருவாக்கிய மனிதனின் ஸ்டெம் செல்லை எடுத்து அதை கேன்சர் நோயினால் விரைவில் சாக போகும் ஹீரோவின் மேல் சோதிக்க விரும்புகிறார்கள்.தான் உயிர் வாழவேண்டும் என்பதற்காக ஹீரோவும் சம்மதிக்கிறார்.ஆனால் அந்த மனிதனை கடத்த ஒரு கும்பல் முயற்சிக்கிறது.மனிதனை உருவாக்கிய வில்லனின் குழு இதைத்
தடுக்க அவனை வேறு ஒரு இடத்திற்கு மாற்றுகிறது.ஆனால் வழியில் இராணுவ குழு ஒன்று ஹீரோவையும் அந்த மனிதனையும் கடத்துகிறது.இவர்களிடமிருந்து ஹீரோவும் மனிதனும் தப்பித்தார்களா?இராணுவ குழுவை அனுப்பியது யார்?வில்லன் எதற்காக இந்த ஆராய்ச்சியை மேற்கொள்கிறார்?வில்லனின் உண்மையான திட்டம் என்ன?
#AnugraheethanAntony#PCMreview#Malayalam IMDB - 8/10.தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை."தவறவிடக்கூடாத ஒரு அருமையான படம்".OTT - அமேசான் பிரைம்(US). டெலிகிராம் - பயோ/DM.பொதுவாக மலையாள சினிமாவில் 95 சதவீத படங்கள் நன்றாக இருக்கும்.அதிலும் சில படங்கள் என்றும் அனைவரின்
மனதிலும் நிலைத்திருக்கும்.அப்படிப்பட்ட படங்களின் வரிசையில் இந்த படமும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.ஹீரோ சன்னி வெயின் ஜாலியாக ஊர்சுற்றும் வாலிபர்.ஹீரோயின் 96 படப்புகழ் கௌரி கிஷன்.இவர் ஓவியம் வரைபவர்.ஹீரோ தன் நண்பருடன் தவறுதலாக வேறு வீட்டிற்கு செல்ல அங்க ஹீரோயினை காண்கிறார்.
பார்த்ததும் காதல் தான்.அடுத்த நாள் ஹீரோயினின் அப்பாவிற்கு சொந்தமான மாவு அரைக்கும் மில்லிர்க்கு நண்பருடன் செல்கிறார்.அங்கு ஹீரோயினை பார்க்க நேர,தினமும் ஏதாவது அரைக்க எடுத்து சென்று அங்கு சென்று ஹீரோயினை பார்க்கிறார்.இப்படியே நாட்கள் செல்ல,ஒரு நாள் விபத்தில் அடிபட்டு ஹீரோ
#Fearstreettrilogy#PCMreview "இரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு தரமான ஹாரர் திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை.கண்டிப்பாக(18+).OTT - நெட்பிளிக்ஸ். டெலிகிராம் - பயோ/DM. கதை 1994லில் ஆரம்பித்து அப்படியே பின்னோக்கி 1666 இல் முடிகிறது.அதாவது 1666 இல் ஆரம்பிக்கும் ஒரு கதையை மூன்று பாகங்களாக
கொடுத்திருக்கிறார் இயக்குனர்.Shadyside மற்றும் Sunnyvale என இரு பள்ளிகள்.எப்பொழுதும் இந்த இரண்டு பள்ளிகளுக்கும் ஆகாது.ஒரு நாள் Shadyside மாலில் முகமூடி அணிந்த நபர் ஒரு பெண்ணை கொல்கிறார்.இது Shadyside கொலையாளி தான் என Sunnyvale பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முடிவு செய்கிறார்கள்.
இதனால் Shadyside பள்ளி மாணவர்கள் மீது இன்னும் வெறுப்பு அதிகரிக்கிறது.ஒருவர் பின் ஒருவராக முகமூடி அணிந்த நபரால் கொல்லப்படுகிறார்கள்.இதற்கு காரணம் சாரா பியர் என்கிற ஒரு பெண்ணுடைய சாபம் தான் என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது.அந்த பெண்ணின் சாபம் இன்னொருவர் மீது புகுந்து அவர் மற்றவரை
#VaazhlOnSonyLIV#PCMreview "வாழ்கையை நமக்கு பிடித்த மாதிரி வாழ வேண்டும்" "இயற்கையோடு வருடத்தில் ஒரு 30நாள் பயணம் செய்யவேண்டும்" என்ற இரண்டு வசனங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.ஹீரோ பிரதீப் ஆண்டனி,ஹீரோயின் பானு, திவா தவான்,சிறுவன் ஆரவ் என நான்கு முக்கிய கதாபாத்திரங்கள்
தான் இந்த படம் முழுக்க.முதல் பாதியில் ஹீரோ மற்றும் ஹீரோயின் அவர்களின் நடிப்பால் திரையை ஆக்கிரமிக்கிறார்கள்.இரண்டாம் பாதியில் ஹீரோவும்,சிறுவன் ஆரவும்,இன்னொரு ஹீரோயின் திவா என மூன்று கதாபாத்திரங்கள் தான்.ஆனால் இரண்டாம் பாதி முழுக்க பாடல்கள்,ஒளிப்பதிவு மட்டுமே.பல நகரங்களின் அழகு,
மலைகள்,இயற்க்கை என கண்ணுக்கு குளிர்ச்சியாக பல காட்சிகள்.நான்கு கதாபாத்திரமும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.முதல் பாதி விறுவிறுப்பாகவும் இரண்டாம் பாதி மிகவும் மெதுவாகவும் நகர்கிறது திரைக்கதை.பின்னணி இசை தான் இந்த படத்தில் பெரிய பலம்.சுவாரஸ்யமான முதல் பாதி மற்றும் அழகான பின்னணி