குளித்தலை முதல் திருவாரூர் வரை... 13 முறை முத்திரை பதித்த கருணாநிதி!
'போட்டியிட்ட அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வென்ற தலைவர்' என்ற தன் கடந்த காலப் பெருமையை மீண்டும் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் திமுக தலைவர் கலைஞர். பெரிய பின்னணி எதுவும் இல்லாத எளிய
குடும்பத்தில் பிறந்து வளர்ந்த கலைஞர், பிற்போக்குத்தனங்கள் சமூகத்தில் புரையோடிப்போயிருந்த ஓர் காலகட்டத்தில் அரசியலில் நுழைந்தவர். அவரே சொல்லிக்கொள்வதுபோல், 13 வயதில் அரசியல் களத்தில் நுழைந்த அவர், இந்த 93 வயதிலும் அரசியல் செய்துகொண்டிருப்பது பெரும் சாதனைதான்.
இந்தியாவில் வேறு எந்த தலைவருக்கும் கிடைக்காத பெருமை இது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்ததாக பத்திரிகை செய்திகள் சொன்னாலும், அரசியலில் பழம் தின்று கொட்டைபோட்ட கலைஞரின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும், இந்த தேர்தலில்
வெற்றிபெற்றிருப்பது திமுகதான் என்பது. மக்களை கவரும் எந்த கூடுதல் அம்சங்களும் இன்றி காங்கிரஸ் தோழமையை மட்டுமே வைத்துக்கொண்டு தேர்தலை சந்தித்த திமுகவிற்கு இது எத்தகைய வெற்றி என்பது அரசியலில் ஆயிரம் பிறை கண்ட அவருக்கு மட்டுமே தெரியும்
கடந்த காலத்தை ஒப்பிட்டுப்பார்த்தால் திமுகவின் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை மும்மடங்காக எகிறியிருக்கிறது. வாக்கு சதவீதம் கூடியிருக்கிறது. கூடவே சட்டமன்றத்தில் பலமான எதிர்க்கட்சி என்ற கவுரவம்.
1949 ல், கொட்டும் மழையில் சென்னை ராபின்சன் பூங்காவில் அண்ணாவின் தலைமையில் உருவான கட்சி திமுக. கட்சி துவங்கிய 3 ஆண்டுகளுக்கு பின் முதல் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அமைப்பு ரீதியாக வளர்ந்திருந்தபோதிலும், தேர்தலில் பங்கெடுப்பதில்லை என 'வாக் அவுட்'
செய்தது திமுக. தேர்தல் அரசியலில் பங்கெடுக்க தம்பிகள் சிலர் ஆசைப்பட்டபோது, மாநாட்டிலேயே வாக்கெடுப்பு நடத்த சம்மதித்தார் அண்ணா.
தேர்தல் அரசியல் செய்வதற்கான சாதகமான சமிக்ஞையை தந்தது வாக்குப்பெட்டி. அடுத்துவந்த தேர்தலில் திமுக களம் கண்டது. அன்றிலிருந்து இப்போது நடந்து
முடிந்த தேர்தல்வரை, கலைஞருக்கு தான் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றிமுகம்தான்.
1957 சட்டமன்றத் தேர்தல்
திமுகவுக்கு மட்டுமல்ல; கலைஞருக்கும் இதுதான் முதல் தேர்தல். குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட கலைஞர், தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ. தர்மலிங்கத்தைவிட 8, 296
வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றார். முதன்முறையாக 15 உறுப்பினர்களுடன் சட்டமன்றத்திற்குள் காலடி வைத்தது திமுக. இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று, காமராசர் தமிழக முதல்வரானார்.
1962 சட்டமன்றத் தேர்தல்
காங்கிரஸ் மீண்டும் வெற்றிபெற்ற தேர்தல் இது. திமுக முன்பை விட கூடுதல் இடங்களில், அதாவது 50 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரசுக்கு கிலி கொடுத்தது. ஆனால் முந்தைய தேர்தலில் வென்றெடுத்த 15 தொகுதிகளை காங்கிரசிடம் திமுக இழந்திருந்தது. இந்த தேர்தலில் தஞ்சாவூர்
தொகுதியில் நின்றார் கலைஞர். 32,145 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற பரிசுத்த நாடார் (காங்கிரஸ்) 1, 928 வாக்கு வித்தியாசத்தில் கலைஞரிடம் தோல்வியை தழுவினார்.
1967 தேர்தல்
திமுகவை அரியணையில் அமர்த்திய முதல் சட்டமன்றத் தேர்தல். ஆச்சார்யார், குல்லுக பட்டர் என கடந்த காலங்களில் திமுகவால் கடும் விமர்சனத்துக்குள்ளான ராஜாஜி, காங்கிரசுடன் முரண்பட்டு அதிலிருந்து வெளியேறினார். அவர் துவங்கிய சுதந்திரா கட்சியுடன், இத்தேர்தலில் திமுக கூட்டணி
வைத்தது அரசியல் அதிர்ச்சி. திமுக அணியில் மேலும் முஸ்லிம் லீக் கட்சி, நாம் தமிழர், தமிழரசு கழகம், பார்வர்டு பிளாக் ஆகியவை தோழமையாக களத்தில் நின்றன.
அண்ணா அமைத்த இந்த சாதுர்ய கூட்டணி, தமிழகத்தில் பெரும் வெற்றி கண்டது. ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.
திண்டிவனம் தவிர்த்து, போட்டியிட்ட 233 தொகுதிகளில், 138 இடங்களில் வென்று திமுக முதன்முறையாக அரியணை ஏறியது. சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட கலைஞர், தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் விநாயக மூர்த்தியைவிட 20, 484 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
காங்கிரசுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைத்தது, தமிழகத்தில் இந்தியை புகுத்த நடந்த முயற்சி, திமுகவின் மீதான இளைஞர்களின் ஈர்ப்பு, எம்.ஜி.ஆர் சுடப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய சென்டிமென்ட் மற்றும் 'இப்போது நடைபெறுவது இந்தி வேண்டும் என்பவர்களுக்கும் இந்தி வேண்டாம் என்பவர்களுக்கும்
இடையே நடக்கும் தேர்தல்' என திமுகவின் திட்டமிட்ட பிரசாரம், அக்கட்சி ஆட்சியில் அமர காரணமானது.
1971 சட்டமன்றத் தேர்தல்
கலைஞரை ஆட்சியில் அமர்த்திய தேர்தல் இது. புற்று நோய் பாதிப்பில் இருந்து மீளாமல் அண்ணா எதிர்பாராமல் இறந்ததையடுத்து
முதல்வர் பொறுப்பேற்றார் கலைஞர். 1969 ம் ஆண்டின் மத்தியில் காங்கிரஸ் கட்சி இ.காங்கிரஸ் என்றும், தமிழகத்தில் ஸ்தாபன காங்கிரஸ் என்றும் பிளவுபட்டு காங்கிரஸில் ஸ்திரமற்ற அரசியல் சூழல் ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி பாராளுமன்ற தேர்தலுடன் முன்கூட்டியே மாநிலத்திலும் தேர்தல் நடத்த
திட்டமிட்டார் கலைஞர். 1971 ல் சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திமுக தலைமையிலான முற்போக்கு கூட்டணியில் இ.காங்கிரஸ், இ.கம்யூனிஸ்ட், பிரஜா சோஷலிஸ்ட் , மு.லீக் ,பார்வர்டு பிளாக் ,தமிழரசு கழகம் களத்தில் நின்றன. மீண்டும் சைதாப்பேட்டையில் நின்றார் கலைஞர்
ஸ்தாபன காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சுதந்திரா கட்சி, சம்யுக்த சோஷலிஸ்ட், குடியரசு கட்சி , உழைப்பாளர் கட்சி உள்ளிட்டவை தோள்கொடுத்தன. முந்தைய தேர்தலில் அண்ணாவின் மேடையில் நின்று காமராஜரை வசைபாடிய ராஜாஜி, இம்முறை தம் அரசியல் எதிரியான காமராஜருடன்
கைகோத்து திமுகவை எதிர்த்தார். தேர்தல் முடிவு, கலைஞருக்கு சாதகமாகவே வந்தது. போட்டியிட்ட 201 இடங்களில் 183 இடங்களை பெற்று ஆட்சியமைத்தது திமுக.
சைதாப்பேட்டையில் தம்மை எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கத்தை விட சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கலைஞர்
வென்றார். கலைஞர் பெற்ற வாக்குகள் 63,334.
முந்தைய திமுக ஆட்சி மீது பெரிய அளவு அதிருப்தியில்லாதது ,காலம் முழுவதும் இருதுருவங்களாக நின்ற ராஜாஜி -காமராஜரின் திடீர் நட்பை மக்கள் நாடகமாக கருதியது, இளைஞர்களிடையே கனன்று கொண்டிருந்த தீவிர மொழியுணர்வு போன்றவை திமுக வெற்றிக்கு
காரணங்களாக சொல்லப்பட்டன.
1977 சட்டமன்றத் தேர்தல்
தமிழக அரசியல் அரங்கில் புது அலை வீசிய தேர்தல் இது. திமுக - காங்கிரஸ் என அதுவரை மையம் கொண்டு இயங்கிய தமிழக அரசியல் திமுக - அதிமுக என வேறுதிசையில் இன்றுவரை உழலக் காரணமான தேர்தல் இதுதான். ஆம்...திமுகவில்
கலைஞர்-எம்.ஜி.ஆர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியே(ற்)றும் வரை சென்றது. அதிமுக என்ற கட்சியை உருவாக்கி, பெரும்பான்மை தொண்டர்களால் பலமான எதிர்ப்பை கலைஞருக்கு தந்தார் எம்.ஜி.ஆர். 1973- திண்டுக்கல் பாராளுமன்ற தொதியில் முதல் களம் கண்ட
அதிமுக, அதில் வெற்றியும் பெற்று களிப்பில் இருந்தது. திமுகவிற்கு அது கிலி கொடுத்தது. இந்தியாவில் எமர்ஜென்சியை அறிவித்திருந்த இந்திராவின் போக்கு பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் 1977 தேர்தல் வந்தது.
திமுக ஒரு அணியாகவும், அதிமுக அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் நின்றன. 3வது அணியாக காங்கிரஸ், இ.கம்யூனிஸ்ட்டுடன் கூட்டணி கண்டது. தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதிமுக 130 இடங்களை வென்று, முதன்முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. திமுக 48 இடங்களை மட்டுமே வென்றது.
திமுகவிற்கு வனவாசம் தந்ததாக அமைந்தது எம்.ஜி.ஆரின் இந்த வெற்றி.
அந்த சுனாமியிலும் கலைஞர், தான் போட்டியிட்ட அண்ணா நகர் தொகுதியில் 43, 076 வாக்குகள் பெற்று வென்றார். அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி பெற்ற வாக்குகள் 26, 638. திமுக மீதான சர்க்காரியா உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள்,
எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட எழுச்சி, எம்.ஜி.ஆரின் வலுவான பிரசாரம் ஆகியவைதான் கலைஞரை வனவாசத்திற்கு அனுப்பிய காரணங்கள்.
1980 சட்டமன்றத் தேர்தல்
1977 தேர்தலில் தமிழக அரசியல் களத்தில் தனித்து விடப்பட்ட கலைஞர், அடுத்த 2 வருடங்களில் இந்திராவுடன் நட்பை புதுப்பித்துக்கொண்டார். இதன்
காரணமாக 1980 ல் நடந்த பாராளுமன்றத்தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி உருவானது. மத்தியில் வெற்றிபெற்று பிரதமரான இந்திரா, யாரும் எதிர்பாராதவகையில் 9 மாநிலங்களின் ஆட்சியை கலைத்தார். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டது. (1977 ல் மத்தியில்
ஆண்ட ஜனதா அரசு, காங்கிரஸ் கட்சி ஆண்ட 9 மாநிலங்களை கலைத்தது குறிப்பிட்டத்தக்கது.)
இதனையடுத்து 1980 ல் தமிழக சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, ஜனதா கட்சி என மும்முனைப் போட்டி நிலவியது. திமுக அணியில் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள்,
அதிமுக அணியில் இ.கம்யூனிஸ்ட், வ.கம்யூனிஸ்ட், கா.கா.தே.கா, தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ், தமிழ்நாடு முஸ்லீம் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. ஜனதா கட்சி தனித்து நின்றது.
தேர்தல் முடிவுகள் அதிர்ச்சிகரமாக இருந்தது. அதிமுக 162 இடங்களை வென்று, மீண்டும் எம்.ஜி.ஆர்
ஆட்சிக்கு வந்தார். திமுக கூட்டணி 69 இடங்களை மட்டுமே வென்றது. அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட்ட கலைஞர் 51,290 ஓட்டுக்கள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் ஹண்டே 50 591 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார். வித்தியாசம் 699 மட்டுமே. நுாலிழையில் வெற்றியை
தக்கவைத்துக்கொண்டார் கலைஞர். இந்த வித்தியாசமே மக்களிடையே கலைஞருக்கு இருந்த அதிருப்தியை காட்டுவதாக இருந்தது.
தன்னிச்சையாக காங்கிரஸ், தமிழக அரசை கலைத்ததால் ஏற்பட்ட பச்சாதாபம், 'நான் என்ன தவறு செய்தேன்..?' என உருக்கமாக மக்களிடையே கேள்வி எழுப்பி எம்.ஜி.ஆர் செய்த பிரசாரம்
ஆகியவையே எம்.ஜி.ஆருக்கு வெற்றியை எளிதாக்கியது.
1984 சட்டமன்றத் தேர்தல்
அதிமுக அணி மற்றும் திமுக என 2 அணிகள் மோதிக்கொண்ட இந்த தேர்தலின்போது, அரசியல் அரங்கில் உருக்கமான பல நிகழ்வுகள் நிகழ்ந்தன. எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார். அதிமுக
இந்த முறை காங்கிரஸ் மற்றும் கா.கா.தே.கா, பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, 198 இடங்களை வென்றது. எம்.ஜி.ஆர் அமெரிக்காவிலிருந்தபடியே ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வென்று மீண்டும் முதல்வரானார்.
கடந்த முறை வென்று சட்டமன்ற உறுப்பினராகியிருந்த கலைஞர்,
இலங்கைத்தமிழர் பிரச்னையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின் மேலவை தேர்தலில் வென்று எம்.எல்.சியாக இருந்ததால் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிப்பினால் மக்களிடையே எழுந்த சென்டிமென்ட் , இந்திரா காந்தியின் மரணம் ஏற்படுத்திய அனுதாபம் ஆகியவை
அதிமுக வெற்றிக்கு முக்கியமாக காரணமானது
1989 சட்டமன்றத் தேர்தல்
தமிழகத்தின் பரபரப்பான தேர்தல் இது. எம்.ஜி.ஆர் மரணத்திற்கு பின் அதிமுக இரண்டாக பிரிந்தபோது எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி தலைமையில் (ஜா அணி) ஒரு அணியும், ஜெயலலிதா (ஜெ அணி) தலைமையில் மற்றொரு அணியும் அரசியல் களத்தை
அதகளப்படுத்தினர். ஜானகி தலைமையிலான ஆட்சி ஒரு மாதத்தில் கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்தது. பின்னர் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற தேர்தலில், 4 முனைப்போட்டி நிலவியது. திமுக அணி, காங்கிரஸ், அதிமுக (ஜா) ,அதிமுக (ஜெ) என தேர்தல் களம் அதகளமானது.
திமுக தலைமையிலான முஸ்லீம் லீக், ஃபார்வர்டு பிளாக் அடங்கிய திமுக அணி போட்டியிட்ட 232 இடங்களில் 170 இடங்களை பெற்று அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. காங்கிரஸ் கூட்டணி 27 இடங்களையும், ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி 32 இடங்களையும் பெற்றது. ஜானகி அணி ஒரே ஒரு தொகுதியில் மட்டும்
வென்றது. துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கலைஞர் 41, 632 வாக்குகளில் வென்றார்.
எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின் ஏற்பட்ட குழப்பமான அரசியல், முந்தைய நிலையற்ற அரசு, முந்தைய ஆண்டு சட்டமன்றத்தில் அதிமுகவின் இரு அணியினரும் கைகலப்பில் ஈடுபட்டதால் மக்களிடையே அதிமுக மீது ஏற்பட்ட வெறுப்பு
போன்றவையே திமுகவின் வெற்றிக்கு காரணங்களாக அமைந்தன. தேர்தல் முடிவுக்குப்பின் ஜானகி அணி, ஜெ அணி இணைந்தது குறிப்பிடத்தக்கது.
1991 சட்டமன்றத் தேர்தல்
பாராளுமன்றத்துக்கும் சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் நடந்த தேர்தலில் அதிமுக , காங்கிரசுடன் கூட்டணி கண்டது. இந்தக் கூட்டணி அமோக
வெற்றிபெற்றது. திமுக வேட்பாளர்களில் கலைஞரையும் (துறைமுகம் தொகுதி) பரிதி இளம்வழுதியும் ( எழும்பூர்) மட்டுமே வென்றது திமுக வரலாற்றில் அதிர்ச்சி தோல்வி. ஜெயலலிதா முதன்முறையாக தமிழக முதல்வரானார்.
திமுக தோல்விக்கு காரணங்கள்
ராஜீவ் மரணத்தினால் ஏற்பட்ட அனுதாப அலையும், விடுதலைப்புலிகளுக்கு திமுக ஆதரவளித்ததாக செய்யப்பட்ட பிரசாரமும் திமுகவிற்கு எதிரான மனநிலையை மக்களிடையே ஏற்படுத்தியதும் திமுக தோல்விக்கு காரணம்.
1996 சட்டமன்றத் தேர்தல்
திமுக-த.மா.கா- இந்திய கம்யூனிஸ்ட் ஒரு அணியாகவும் (அதிமுகவுடனான கூட்டணி தொடர்பாக முரண்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜி. கே. மூப்பனார் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். திமுக –த.மா.கா கூட்டணி உருவானது), அதிமுக-
காங்கிரஸ் ஓரணியாகவும், மதிமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஓரணியாகவும், திவாரி காங்கிரஸ்-பாட்டாளி மக்கள் கட்சி ஓரணியாகவும் போட்டியிட்டன. பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட்டது.
முந்தைய ஆட்சியில் பல ஊழல் குற்றச்சாட்டுகள், வளர்ப்பு மகன் சுதாகரன் திருமண விவகாரம் என பல அதிருப்திகள் ஜெயலலிதா மீது இருந்தது. நடிகர் ரஜினிகாந்த் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது பலம். திமுக கூட்டணி வெற்றி பெற்று கலைஞர் முதல்வரானார்.
த.மா.கா, பா.ம.க, காங்கிரசுடன் இணைந்து நின்ற ஜெயலலிதாவுக்கு டான்சி வழக்கில் தண்டனை பெற்றதால் ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் 4 தொகுதிகளிலும்
தள்ளுபடி செய்யப்பட்டன. திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தது. தேர்தலுக்கு சிறிது காலம் முன் வரை அக்கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சியும் (பாமக), மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் (மதிமுக) தேர்தல்
அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணியை விட்டு வெளியேறின. பாமக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) தலைமையிலான கூட்டணியில் இணைந்தது. மதிமுக தனித்துப் போட்டியிட்டது.
திமுக தனது ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் பல திட்டங்களை செயல்படுத்தியதால் திமுக ஆட்சிக்கு எதிராக பெரிய அளவில் எதிர்ப்பலை
ஏதும் இல்லை. அதே சமயம் திமுக - பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பும் மிகுந்தே காணப்பட்டது.
எதிர்க்கட்சியான அதிமுக, முக்கிய எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒன்றிணைத்து வலுவான கூட்டணியை உருவாக்கியது வெற்றிக்கு காரணமானது. அக்கூட்டணி 197 இடங்களில் வென்றது. சேப்பாக்கம் தொகுதியில்
நின்ற கலைஞர் 29,836 வாக்குகள் பெற்று வென்றார். வாக்கு வித்தியாசம் 4834.
2006 சட்டப் பேரவைத் தேர்தல்
இந்த தேர்தலில் திமுக அணியில், காங்கிரஸ், பா.ம.க மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணி அமைத்தன. ஜனநாயக மக்கள் கூட்டணி என்ற அதிமுக அணியில்
மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் இடம்பெற்றன. கலைஞர் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். விஜயகாந்த் தனித்து களம் கண்டார். ஜனநாயக முற்போக்கு கூட்டணி என அழைக்கப்பட்ட திமுக கூட்டணி, 163 இடங்களை பெற்று ஆட்சிப்பொறுப்பேற்றது. அதிமுக இந்த தேர்தலில் 63 இடங்களை மட்டுமே பெற்றது.
அரசு ஊழியர்கள் மீது அதிமுக காட்டிய அடக்குமுறை, ஆடு மாடு கோழிக்கு தடை விதித்ததால் எழுந்த அதிருப்தி, கலைஞர் கைது ஏற்படுத்திய அதிருப்தி, தேர்தல் அறிக்கையில் திமுக அள்ளிவிட்ட இலவச அறிவிப்புகள் திமுகவுக்கு கைகொடுத்தன. முதல்வரானார் கலைஞர்.
2011 சட்டமன்றத் தேர்தல்
2011 சட்டமன்றத் தேர்தலில் இரு பெரும் கூட்டணிகள் களத்தில் இருந்தன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு முன்னேற்றக் கழகம், முஸ்லீம் லீக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, இந்திய பொதுவுடமைக் கட்சி, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்), மனிதநேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்ற முன்னணி, ஃபார்வார்டு ப்ளாக், இந்திய
குடியரசுக் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, மூவேந்தர் முன்னணிக் கழகம் போன்றவை இடம் பெற்றிருந்தன.
இவ்விரு கூட்டணிகள் தவிர பாஜக, ஜனதா கட்சி மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் இணைந்த மூன்றாவது கூட்டணியும் தேர்தலில் போட்டியிட்டது. வேறு சில சிறிய கட்சிகளும் தனித்துப்
போட்டியிட்டன. அதிமுக உடனான தொகுதிப் பங்கீட்டுச் சிக்கலினால் முன்பு அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுக, அக்கூட்டணியில் இருந்து விலகியது. தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும் அறிவிப்பு செய்தது.
இந்த தேர்தலில் திமுக 31 இடங்களை மட்டும் பெற்றது. அதிமுக கூட்டணி
203 இடங்களை பெற்று ஆட்சிக்கு வந்தது. கலைஞர், தனது சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிட்டு 1,09, 014 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் எம். இராசேந்திரனை தோற்கடித்தார். வாக்கு வித்தியாசம் 50, 249.
13 வது முறையும் வெற்றி
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் சில சிறுபான்மை கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் கண்ட திமுக, 174 இடங்களில் போட்டியிட்டன. இதில் திமுக 89 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதுவரை தமிழக சட்டமன்றத்தில் இந்த எண்ணிக்கையில் எதிர்க்கட்சி
இயங்கியது கிடையாது என சொல்லப்படுகிறது. அரியணையை அலங்கரிக்க முடியவில்லையென்றாலும் மத்தியிலும் மாநிலத்திலும் அதிகார மையங்களை இழந்து தனித்துவிடப்பட்டிருக்கும் திமுகவுக்கு,
கட்சி சந்தித்துக்கொண்டிருக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஆக்சிஜன் தந்திருக்கும் விஷயம் இந்த எண்ணிக்கை.
அரசியலில் அதிகார மையத்தில் இருப்பதும் இல்லாததும் எந்த வகையில் சாதகம் பாதகம் என்பது கலைஞருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வசமாக சிக்கிய வாரிசுகள்! மோடியிடம் கெஞ்சிய இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்!
ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். திடீர் டெல்லிப் பயணத்தின் நோக்கங்கள் ஒவ்வொன்றாக மெல்ல வெளியே வரத் தொடங்கியுள்ளன. இருவரும் பாரதப் பிரதமருடன் நடத்தியது ஒரே ஒரு மீட்டிங். அதைப்பற்றி பாரதப்
பிரதமர் மோடிக்கு நெருக்கமான வட்டாரங்கள் இப்பொழுதுதான் வாய் திறக்கத் தொடங்கியுள்ளனர்.
டிசம்பர் மாதம் 2016-ஆம் ஆண்டு எடப்பாடியின் வாழ்க்கையில் மிக முக்கியமான சம்பவம் ஒன்று நடந்தது. அது தொடர்பாகத்தான் எடப்பாடி, பிரதமர் மோடியுடன் பேசியுள்ளார் என்கிறது பிரதமர் அலுவலக வட்டாரங்கள்.
2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அது கருப்புப் பணத்தை கருவறுக்கும் நடவடிக்கை என்று சொல்லப்பட்டதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக, புதிய 2000 ரூபாய் வைத்திருந்தவர்களைத் தேடி வருமானவரித்துறையும், சி.பி.ஐ.யும்
பொருள் விளக்கம்
கேளிர்= உறவினர். புதுவதன்று = புதியதல்ல
முனிவின் = வெறுப்பின் காரணமாக
புணை = தெப்பம். திறவோர் = ஆன்றோர்
இலம் = இல்லாமை. (இல்லையென்ற பொருளில் இங்கு வரும்)
(புறநானூறு - பாடல் 87, 91 - அவ்வையார்)
பொருள் விளக்கம்:
தெவ்விர் = பகைவீர்.
பொருநன் = வீரன்
வைகல் = ஒரு நாள்
வலித்த = செய்யப்பட்ட
வலம்படுவாய் வாள் = வெற்றிதரத் தவறாத வாள்
ஒன்னார் = பகைவர்
ஆர்கலிநறவு = ஆரவாரம் செய்கின்ற மது
அணிலின் வால் போல மீசை கொண்ட மன்னவன்
அதியமான் நெடுமான் அஞ்சி யெனும் தென்னவன்
ஆதிநாளில் தமிழ் மண்ணில் முதல் முதலாய்
அருங் கரும்பைக் கொண்டுவந்து விளைச்சல் செய்தார்
என்று சொல்லவேண்டும்> அதாவது, நன்றாக அடித்துக் கொல், கொல், கொல். அடிப்பதை நிறுத்தாதே என்று கூறியவாறு பசுவைக் கொலை செய்து அடுத்து அதன் சதையை முப்பத்தி ஆறு பங்குகளாக பிரித்து வழங்க வேண்டும் என்றும் இதனை முறைப்படி உணர்ந்தவன்
சுவர்க்கத்தை அடைகிறான் என்றும், இந்த யாகம் ரிஷிகளால் கண்டுபிடிக்கப் பட்டது என்றும் நம்பியவர்கள் வேதகால ஆரியர்கள்! யாகத்தில் பசு கொள்ளப் பட்ட பின் அதன் சதையை அறுதெடுக்க வேண்டிய முறைப் பற்றி (ஐதரேய பிராமணம் பஞ்சிகா 2 ,கண்டம் 6 }கூறுவதாவது: