கங்கையும் கடாரமும் கொண்ட ராஜேந்திரன் தன் தலைநகரில் வானளாவிய கங்கை கொண்ட சோழபுர ஆலயத்தை எழுப்பிக் கொண்டிருந்தான். திடீரென்று அவனுக்கு ஒரு சந்தேகம், ஆலயத்திற்கு இதுவரை எவ்வளவு செலவழிந்திருக்கும் என்று. தன்னுடைய அமைச்சரை அழைத்துக் கணக்குக் கேட்டான். அவருக்கு அதிர்ச்சி. காரணம்
ஆலயக் கணக்குகளை அவர் குறித்து வைத்திருக்கவில்லை. வேறு வழியில்லாமல் சோழபுரம் கோவிலில் உள்ள கனக விநாயகப் பெருமானை வேண்டினார். அவர் கனவில் அன்றிரவு தோன்றிய விநாயகர், அரசனிடம் ‘எத்து நூல் எண்பது லட்சம்’ என்று சொல்லும்படி கூறிவிட்டு மறைந்தார். மறுநாள் அமைச்சரும் அப்படியே சொல்லவே
ராஜேந்திரனும் அவரை அத்தோடு நிறுத்தச் சொன்னான். ஏனெனில் எத்து நூல் என்பது கட்டடங்களின் மட்டத்தைச் (level) சரிபார்க்கப் பயன்படும் நூல். அதுவே எண்பது லட்சம் என்றால் மற்ற பொருட்களின் கணக்கு எவ்வளவு இருக்கும் !! ஆகவே இந்த கோவிலின் கணக்குப் பார்ப்பதில் பயனில்லை என்று அரசன் அப்படிச்
சொன்னான். ஆனாலும் அமைச்சர் மனது கேளாமல் உண்மையைச் சொன்னார். நெகிழ்ந்த அரசன் அந்த விநாயகரை உடனே தரிசனம் செய்து அவருக்குத் தனிக்கோவில் அமைத்தான். இந்நிகழ்ச்சியை அங்கே உள்ள கல்வெட்டிலும் பொறித்து வைத்தான். கணக்கு விநாயகர் என்று அழைக்கப்படும் அவரையும் கல்வெட்டையும் இன்றும் காணலாம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நேற்று பலர் பகிர்ந்திருந்த இந்தப் படத்தைப் பார்த்தவுடன் நம் தமிழ் வேத மரபின் தொன்மை எனக்கு ஞாபகம் வந்தது,இதில் மூன்று விதமான யாக குண்டங்கள் இருப்பதைக் கவனியுங்கள். வட்ட வடிவமான குண்டத்தில் வளர்க்கப்படுவது கார்ஹபத்யம் என்ற அக்னி.இது எப்போதும் அணையாமல் எரிந்து கொண்டு இருக்கவேண்டும்
அதற்கு அருகே உள்ள அரைவட்ட வடிவமான குண்டத்தில் உள்ள அக்னிக்கு தக்ஷிணாக்னி என்று பெயர். இதில் நீத்தார்களுக்கான கடன்களையும் சில தேவதைகளுக்கான ஹோமங்களையும் செய்யவேண்டும். முன்னால் சதுர வடிவமாக இருக்கும் ஹோமகுண்டத்தில் ஆஹவநீயம் என்ற அக்னி வளர்க்கப்பட்டு அதில் தெய்வங்களுக்கான யாகங்கள்
செய்யப்படும். இந்த மூன்று வகை அக்னியை அந்தணர்கள் வளர்த்தனர் என்பதை பல சங்க கால நூல்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. புறநானூறு பாடல் 367ல் ஔவை பாடுகிறார்
“இருபிறப்பாளர் முத்தீப் புரையக் காண்தக இருந்த”
அதாவது இருபிறப்பாளரான அந்தணர் வளர்க்கும் மூன்று தீ வகைகளைப் போல
வ உ சி, சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பல சுதந்தரப் போராட்ட வீரர்களைக் கொடுமைப்படுத்தியவனும் திருநெல்வேலியில் அடக்குமுறைகளைக் கையாண்டு விடுதலை இயக்கத்தை ஒடுக்க முயன்றவனுமான ஆஷ் துரையைச் சுட்டுக்கொன்று வீரமரணம் எய்திய வாஞ்சிநாதனின் நினைவுதினம் இன்று
ஆஷ் திருநெல்வேலி மக்கள் மீது கையாண்ட அடக்குமுறைகளைப் பற்றி வ உ சி தனது சுயசரிதையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்
பாரத மாத இயக்கத்தைச் சேர்ந்த அனைவரும் சாதி வேறுபாடில்லாமல் ஒன்றாக இணைந்து பிரிட்டிஷ் அரசை அகற்றும் முனைப்போடு இருந்தனர் என்பதை இந்த வழக்கின் தீர்ப்பு இப்படிக் குறிக்கிறது
சிதம்பரத்தில் தில்லைவாழ் அந்தணர்களால் முடிசூட்டப்பட்ட ஒரே பாண்டிய மன்னன் என்ற பெருமைக்குரியவன் இவன்.இன்றளவும் ஶ்ரீரங்கநாதர் முன் உச்சரிக்கப்படும் ஒரே அரசனின் பெயரும் இவனுடையதுதான்.பாண்டியப் பேரரசை நெல்லூர் வரை விரிவடையச் செய்து எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள் என்ற பெயர் பெற்றவன்
ஶ்ரீரங்கத்தில் இவனும் இவன் அரசியும் யானை மேல் அமர்ந்து கொள்ள அதை ஒரு தெப்பத்தின் மீது ஏற்றி, அந்தத் தெப்பம் நீரில் எவ்வளவு அமிழ்கிறதோ அந்த அளவைக் கொண்டு அதற்குச் சமமான பொன்னும் பொருளும் ரங்கநாதருக்குச் சமர்ப்பித்து ‘ஆர்க்கிமீடீசுக்கு’ எல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவன்
தமிழகத்தின் இரு பெரும் கோவில்களான சிதம்பரத்திற்கும் ஶ்ரீரங்கத்திற்கும் இவன் பொன் வேய்ந்ததை திருப்புட்குழிக் கோவில் கல்வெட்டு இவ்வாறு புகழ்கிறது
வாழ்க கோயில் பொன்வேய்ந்த மகிபதி
வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன்
வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன்
வாழ்க சுந்தர பாண்டியன் தென்னனே
On the occasion of #WorldHeritageDay, it’s worthwhile to look into one of the great heritage sites of TN, Vaikuntha Perumal temple in Kanchipuram. Built by Pallavas, this Divya Desam, which is also called as Parameswara Vinnagaram has a set of panels depicting the Pallava History
Let’s look at some of the panels of this 8th century temple. This one illustrates how the Pallava dynasty was started. On the left, Aswathama, one of the warriors in the epic Mahabharata is doing penance & on right his child was put on creepers. The Child was hence named Pallava
Pallavas claim that they are descendants of Aswathama which is confirmed by the above panel.
The below one is Pallava King Kumara Vishnu doing Ashwamedha Yajna, with the horse tied to the Yupa. He ruled from Kanchi and was one of the earliest kings to perform this Yajna in TN.
என்று சிறுபாணாற்றுப்படை அந்தச் செய்தியைப் பதிவு செய்கிறது.
ஆனால் பூமியில் இருந்து பார்க்கும் போது மேட வீதி, இடப வீதி, மிதுன வீதி ஆகிய மூன்று வீதிகளில் சூரியன் செல்வது போல் தோன்றும். இந்த மூன்று வீதிகளையும்
“எரி, சடை, எழில் வேழம், தலையெனக் கீழ் இருந்து,
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்”
என்று குறிப்பிடுகிறது பரிபாடல்.
இந்த மூன்று வீதிகளிலும் தலா நான்கு ராசிகளாக பன்னிரண்டு ராசிகள் அமைந்திருந்தன.
“ஆறு இருமதியினும் காருக வடிப்பயின்று”
என்ற சிலப்பதிகாரத்தின் வரிகள் பன்னிரண்டு ராசிகள் இருப்பதைத் தெரிவிக்கின்றன. சூரியன் இந்தப் பாதைகளில் செல்லும் விதத்தை வைத்தே தமிழர் நாட்காட்டிகள் அமைந்தன.
வரலாற்றுப் புத்தகங்கள் பெரும்பாலும் கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவற்றின் அடிப்படையில் எழுதப்படுபவை. ஆனால் இந்தப் புத்தகம் எழுதப்பட்ட வரலாறே தனி. இதன் ஆசிரியர் சேதுராமனின் நண்பர் ரமணி ஹரித்வார் செல்கிறார். அங்கே ஒரு மகானைச் சந்திக்கிறார். ரமணியிடம் அவர் ஒரு ஓலைச்சுவடித் தொகுப்பை
அளித்து இது ஶ்ரீபுஜண்டர் சுவடி என்றும் இதை வைத்து வேண்டியவர்களுக்குப் பலன் சொல்லி வரவேண்டும் என்றும் சொல்லிவிட்டுச் செல்கிறார்.சில நாட்கள் கழித்து ரமணி, சேதுராமனைத் தேடி வருகிறார்.சுவடியின் சில பக்கங்களை தாராசுரம் கோவிலில் வைத்து வாசிக்கவேண்டும் என்று எழுதியிருப்பதாகச் சொல்கிறார்
அதன்படி தாராசுரம் கோவிலில் வைத்து வாசிக்கத் தொடங்குகின்றனர்.அதில் அக்கோவிலைக் கட்டிய இரண்டாம் ராஜராஜ சோழனின் வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. அதுவரை கிடைத்த சான்றுகளோடு ஒத்துப்போகும் தகவல்களோடு தெரியாத பல செய்திகளும் கிடைக்கின்றன. அவற்றை வைத்து எழுதப்பட்டதுதான் இந்தப் புத்தகம்.