ஒரு சின்ன பையன் கடவுளை பார்க்க வீட்டில் இருந்து கிளம்பினான்.
அதிக தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்குமே என்று தின்பண்டங்களையும் மதிய உணவையும் பையில் எடுத்துக் கொண்டான்.
காலையில் இருந்து நடக்க ஆரம்பித்தவன்,
சிறிது நேரம் ஓய்வு எடுக்கலாம் என்று அருகில் உள்ள பூங்காவுக்குள் நுழைந்தான். அங்கு வயதான பெண்மணி ஒருவர் புறாக்கள் சாப்பிடுவதை பார்த்துக்கொண்டே இருந்தார்.
நடந்து வந்த களைப்பில் தாகம் எடுக்கவே தண்ணீர் பாட்டிலை திறந்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்தான் சிறுவன்.
அந்த பாட்டி அவனையே பார்த்து கொண்டிருந்தாள். ஒருவேளை பாட்டிக்கு தாகமாக இருக்குமோ என்று நினைத்து தண்ணீர் பாட்டிலை நீட்டினான். பாட்டியும் அவனை பார்த்து அழகாக புன்னகைத்துவிட்டு தண்ணீரை வாங்கி குடித்தாள்.
அந்த சிறுவன் இதுவரை அவ்வளவு அழகான புன்னகையை பார்த்ததில்லை,
அதனால் திரும்பவும் அவர்கள் புன்னகையை பார்க்க தான் கொண்டு வந்து உணவு பொட்டலத்தை பிரித்து கொடுத்தான்.
அந்த பாட்டியும் மீண்டும் அவனை பார்த்து புன்னகைத்துவிட்டு அவன் கொடுத்த உணவை சாப்பிட ஆரம்பித்தாள். இரண்டு பேரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை,
ஆனால் அடிக்கடி ஒருவரை பார்த்து ஒருவர் புன்னகைத்து கொண்டே இருந்தனர்.
நேரம் ஆக ஆக அம்மா ஞாபகம் வந்தது சிறுவனுக்கு, அதனால் எழுந்து வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தான். சிறிது தூரம் நடந்தவன் சட்டென திரும்பி குடுகுடுவென்று ஓடி சென்று பாட்டியை கட்டி அணைத்தான்.
பாட்டி அவன் செயலைப்பார்த்ததும் மிகவும் பிரகாசமாக சிரித்தாள்....
சிறுவன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவன் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதை பார்த்த அவன் அம்மா என்ன நடந்தது என்று கேட்டாள்.
’நான் மதியம் கடவுளுடன் சாப்பிட்டேன்’ என்றான்.
கடவுளின் புன்னகை மாதிரி நான் இதுவரை எங்கும் பார்த்ததில்லை என்றான்.....
அதே நேரம் அந்த பாட்டி அவர்கள் வீட்டில் நுழையும்போது என்ன அம்மா இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று அவள் மகன் கேட்டான்.
"இன்று மதியம் நான் கடவுளுடன் சாப்பிட்டேன்’ என்றாள்,
அது மட்டும் இல்லை நான் நினைத்ததை விட கடவுள் மிக சிறிய வயது கொண்டவராக இருந்தார் என்றாள்.
அறிமுகம் இல்லாதவர்களிடம் ஒரு சின்ன புன்னகை,
ஆறுதலான வார்த்தை,
சின்ன உதவி,
செய்து பாருங்கள் நீங்களும் கடவுள்தான். கடவுள் வேறெங்கும் இல்லை நம்மிடம் தான் இருக்கிறார்...
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்......🙏🙏🙏🙏🙏🙏🙏
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்.... 🙏🙏🙏🙏🙏 நன்றி அண்ணன் @nethaji321
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அவனிதனிலே பிறந்து... மதலை எனவே தவழ்ந்து.. அழகு பெறவே நடந்து இளைஞனே.... அரு மழலையே மிகுந்து.... குதலை மொழியே புகன்று...
அதி விதமாய் வளர்ந்து பதினாறஆய்.... சிவ கலைகள் ஆகமங்கள்.... மிகவு மறைஓதும் அன்பர்... திருவடிகளை நினைந்து துதி யாமல்... தெரிவையர்கள் ஆசை மிஞ்சி... வெகு கவலையாய் உழன்று திரியும் அடியேனை உன்றன் அடிசேராய்...
மவுன உபதேச சம்பு மதியறுகு வேணி தும்பை.... மணி முடியின் மீதணிந்த மகதேவர்.. மனம் மகிழவே அணைந்து... மலைமகள் குமார துங்க வடிவேலா...
ஒரு நாய் ஒரு சிவாலய வளாகத்துக்கு அருகே திரிந்து கொண்டிருக்குமாம்.அது அந்த ஊரில் போடப்படும் எச்சில் இலை உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வந்ததாம். இப்படியாக வாழ்ந்து வந்த காலத்தில் அந்த ஊர் சிவாலயத்தில் திருவிழா தொடங்கியதாம் அந்த ஊரில்
அனைவரும் பத்து நாளும் விரதம் இருந்தார்களாம்.விரத காலங்களில் சாப்பிட்ட இலைகளை நாய்க்கு போடக்கூடாது என்ற ஒரு நம்பிக்கையில் யார் வீட்டிலும் எச்சில் இலைகளை தூக்கி போடவே இல்லையாம். நாய்க்கு எச்சில் இலையே கிடைக்காததால் பசி தாங்க முடியாமல் கோயில் ஓரத்தில் வந்து படுத்து கிடந்ததாம்.
அப்போ அந்த சிவாலயத்தில் இராமாயணம் பற்றி பிரசங்கம் பன்னி இராமேஸ்வர தல மகிமையை விளக்கமாக பேசினார்களாம்.அதனை அந்த நாய் காது கொடுத்து கேட்டதாம்.ஆஹா!! இராமேஸ்வரத்துக்கு இத்தனை மகிமையா? எல்லாரும் போகனும்னு சொல்றாங்களே!! நாமும் இப்படியே எச்சில் இலை பொறுக்கி தின்றே காலத்தை
ஒரு காலத்தில் இந்தியாவினை முடக்கியே தீருவது என பாகிஸ்தானுடன் சேர்ந்து ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிய அமெரிக்கா இப்பொழுது இந்தியாவினை பலமாக்கியே தீருவது என முடிவு செய்து இந்தியாவுக்கு ஏகபட்ட நுட்பங்களை கொடுக்க தொடங்கியிருக்கின்றது
உண்மையில் இந்தியாவே அமெரிக்காவுக்கு 1950களில் பிடித்தமான நாடாக இருந்தது, ஆனால் நேரு என்பவர் அமெரிக்க உதவி வேண்டும் ஆனால் அமெரிக்க உறவு வேண்டாம் என குழப்பமான கொள்கை கொண்டிருந்தார், சீனா ரஷ்யாவினை பகைக்கவும் அவர் விரும்பவில்லை
ஆனால் சீனா அடிகொடுக்க தொடங்கும் பொழுது அமெரிக்காவிடமேதான் ஓடினார், ஆனால் அதையும் நிலைக்க செய்யவில்லை
ஒரு கட்டத்தில் ரஷ்ய சார்பு நாடாக இந்தியா மாறியதை அடுத்து இந்தியாவினை தன் எதிரிபட்டியலில் வைத்து பாகிஸ்தானை வளர்த்தது அமெரிக்கா
1955 குடியுரிமை சட்டப்படி ஒருவர் இந்தியர் என்பதைச் சட்ட ரீதியாக உறுதிபடுத்துவது எப்படி?
கீழ்கண்டவாறு ஒவ்வொருவரும் செய்யுங்கள்:
1. வீட்டிலுள்ள அனைவரின் பிறந்த தேதி எழுதி கொள்ளுங்கள்.
2. அதனை மூன்று கேட்டகரியாக பிரியுங்கள்.
அ. 1987 ஜூலை 1 ஆம் தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள்
ஆ. 1987 ஜூலை 1 க்கும் 2004 டிசம்பர் 31 க்கும் இடையில் பிறந்தவர்கள்
இ. 2004 டிசம்பர் 31 க்குப் பின்னர் பிறந்தவர்கள்
3. இதில், 1987 ஜூலை 1 க்கு முன்னர் பிறந்தவர்களுக்குப் பிறப்பு சான்று அல்லது பாஸ்போர்ட் ஆகிய இரண்டில் ஒன்று இருப்பதை உறுதிபடுத்துங்கள். எனில், இவர்கள் பிறப்பின் அடிப்படையில் நேரடியாக இந்தியர்கள். வேறு எந்தச் சான்றும் தேவையில்லை.
*#திமுக ஆட்சியை பிடிப்பதற்காக அவிழ்த்துவிட்ட பொய்கள்*:
1). நீட் தேர்வு ரத்து.
2). பெட்ரோல் டீசல் விலைக்குறைப்பு.
3). மின்கட்டணம் கணக்கீடு மாதமொருமுறை.
4). ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது.
5). எட்டு வழிச்சாலை நிறைவேற்றப்படாது.
6). மது விலக்கு.
7). தமிழக வேலை தமிழருக்கே.(ஆனால் ஆலோசனை குழுவில் இடமில்லை என்பது சொல்லாமல் செய்வது).
8). மின்வெட்டு இருக்காது.
9). கொரோனா தொற்றை விஞ்ஞான ரீதியில் கட்டுப்படுத்துதல். (உலகில் வேறு யாருக்கும் விஞ்ஞான பகுத்தறிவு இல்லை எனும் கற்பனை).
10). கர்நாடகம் புதிய அணைகள் கட்டுவதை தடுத்தல்.
11). சமையல் எரிவாயு உருளை ரூ.100/- விலை குறைப்பு.
12). கச்சத்தீவை மீட்டெடுத்தல்.
13). இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை... மன்னிக்கவும்... ஒன்றிய குடியுரிமை வழங்குதல்.
14). விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதித்தலுக்கு அனுமதி கிடையாது.