#மாயை
இதற்கான பல விளக்கங்களில் ஒரு விளக்கம் யாதெனில்...
நாம், காண்பவை அனைத்தையும் மொத்தமாகப் பார்க்க விளையும் போது அது விரிந்து கொண்டே செல்கிறது. அதற்கு உதாரணம் வானம். அதைப் பார்க்கும் போது அதன் எல்லைகள் முடிவில்லாமல் விரிந்து கொண்டே இருப்பதுதான்...1
நாம் தனியாக ஒரு பொருளை
மாத்திரம் எடுத்து அதை நுணுக்கமாக அறிய விரும்பி பொடித்துக் கொண்டே போனால், அணுக்களாகி, குவார்க்குகளாகி இன்னும் என்னவெல்லாமோ ஆகி, ஆகி, ஆகிக்கொண்டே இருக்கும்.2
ஆக,நாம் இந்த இரு extremeகளையுமே தொடர்ந்து விரட்டிக் கொண்டே போகும்போது..
இதுதான் "அடியையும்-முடியையும்" காணச்சென்று தோற்பது என்பது!
அதனால்தான் மாயைக்குப் பின்னால் ஓடப்பிடாது என்பது!
இருப்பது இறைவனாகிய ஆத்மன் ஒருவனே!
நம்மால் ஏதாகிலும் அடைய முடியும் என்ற ஒன்றிருந்தால்,
அது இந்த இறைவனாகிய ஆன்மா மாத்திரம்தான்!
இறைவனை அடைந்தபின்தான், அங்கிருந்தபடி நோக்கும் போதுதான் இந்த மாயையானது மாயையாக இருக்கும் உண்மை நிலவரம் தெரிய வரும்! அதுவரை மாயை தன்னை மாயையாக காட்டாது.
எனவே,
மாயைக்குள்ளே மாயையாக இருந்து கொண்டு, மாயை புரிந்து கொள்ள முயன்று, அதன் காரணமாக...
இதோ ஆற்றல், அதோ விசை, இங்கே
மின்சாரம், அங்கே காந்தம் என இறைவனை கூறு போட்டு கொண்டிருப்பது அஞ்ஞானத்தை மேலும் மேலும் வலுவுள்ளதாக்கி, அடி-முடி தொடும் கதையில் கொண்டு போய் விட்டுவிடும்!
எனவே முதலில், முதல் வேலையாக இறைவனை அடைவோம்!
அப்புறம் இந்த மாயைகளை பொழுது போக்காக நாம் விரட்டிச் செல்லலாம்.
எல்லாம் இறைவன் செயல். மனிதன் என்பவன் இறைவன் கையில் ஒரு கருவி. மனிதன் வீடு இறைவன் அதற்குள் குடியிருப்பவன். மனிதன் எந்திரம் இறைவன் அதை இயக்குபவர். இறைவன் எப்படி பேச வைக்கிறானோ அதேபோல் மனிதன் பேசுகிறான் என்று உணர்பவன் ஞானி.
இந்த அறிவு வந்தால் அது தான் ஞானம். #சுவாமிவிவேகானந்தரின் #வீரமொழிகள்
இல்லறத்தான் இறைபக்தி கொண்டவனாக இருக்க வேண்டும் இறை ஞானமே அவனது லட்சியமாக இருக்க வேண்டும்.அதேவேளையில் அவன் இடையீடின்றிச் செயல்புரிய வேண்டும்.செயல்கள் அனைத்தின் பலனையும் அவன் இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்
வாயை நன்றாக கொப்புளித்து, நன்றாக துடைத்து, முக்குடி குடித்து, முகத்திலுள்ள உறுப்புகளை மந்திரம் சொல்லி வாய் துடைத்தல் பெரியோர் அறிந்துரைத்த ஒழுக்கங்களாகும்.
கிருஷ்ணன் உபதேசம்; திருநீறு
'விபூதி பூதிரைச்வர்யம்' என்று ‘அமர கோச’த்தில் உள்ளது. அதாவது, விபூதி என்பதும், ஐச்வர்யம் என்பதும் ஒரே பொருள் தரும். பஸ்பமாகிய விபூதி, இவ்விதம் கர்மங்களை எரிந்த பின் நிற்கும் ஞானத்துக்கே அடையாளமாகும்.
எந்தப் பொருளையும் தீயிலிட்டால் முதலில் அது கருப்பாக ஆகும். பிறகு இன்னும் அக்னியுடம் போட்டால் நீற்றுப் போகும். சுத்த வெளுப்பாக ஆகிவிடும். அப்புறம் தீயில் போட்டால் அது மாறாது. அதுவே முடிவான நிலை. இப்படி நீற்றுப்போனதே திருநீறு. நீறு பஸ்மம் எனப்படும். ஈசுவரன் மகா பஸ்மம்.
எல்லாம் அழிந்த பின்னும் இவற்றை அழித்துவிட்டு எஞ்சி நிற்கிற, அழியாத சத்யமான மகா பஸ்மம். அவன் பஸ்மமாக நீற்று வெளுத்துப் போனதற்கு முந்திய மாறுதல் கருப்பு. அதுதான் கரி. நிலக்கரிதான் இவ்வுலக ஐஸ்வரியத்தில் இக்காலத்தில் முதலிடம் பெற்றுள்ளது.
ரொம்பவும் விலைமதிப்பான வைரமும்
அந்த காட்டில் ஒரு வேடன் மிருகங்களை வேட்டையாடி தம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருந்தான்.அவன் போதாத நேரம் அதே காட்டில் தவத்திற்காக தங்க வந்த ஒரு துறவி அவனிடம் , "இப்படி மிருக்கங்களைக் கொன்று பாவம் சேர்க்கிறாயே..இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்ற
நினைப்பு உன்னிடம் இல்லவே இல்லையா..?"என்றார்.
"சாமி...என்னைப் போல ஆட்களுக்கு எல்லாம் உங்களைப் போல பெரியவங்கதான் சாமி...எனக்கு எல்லாம் எப்படி சாமி கண்ணுக்குத் தெரிவார்.."
துறவிக்கு தவம் கெடக்கூடாது ...இவன் வேட்டை யாடுவது அவருக்கு இடைஞ்சல்,, .. "இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன்...
உனக்கும் நேரில் வருவான்...நீ நாளை காலை சூரிய உதயத்தில் குளித்து ஈர ஆடையுடன் ஆற்றின் கரையில் வட திசை பார்த்து நில்..உன் கண்ணில் எது முதலில் படுகிறதோ அதையே நினைத்து 48 நாட்கள் தியானம் செய்..கடவுள் தோன்றுவார்..." என்று துறவி சொன்னார்.அவன் அப்படியே விடிந்ததும் குளித்து முடித்து
23 மகான்களின் சமாதிகள் திருவண்ணமலையில் ஒரே இடத்தில் அமைந்துள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா ?
ஆமாம் உண்மை தான் .
நீங்கள் கிரிவலம் போகும் பாதையில் அமைந்துள்ளது சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம்
அந்த ஆஸ்ரமத்தில் தான் 23 மகான்களின் சமாதிகள் அமைந்துள்ளது .
1 ஸ்ரீ அப்புசாமி சுவாமிகள்
2 அய்யன் சுவாமிகள்
3 அவிநாசி லிங்கம் சுவாமிகள்
4 அருணாசல சுவாமிகள்
5 இராமலிங்க சுவாமிகள்
6 இராமகிருஷ்ண சுவாமிகள்
7 கண்ணப்ப சுவாமிகள்
8 சங்கலி சுவாமிகள்
9 பட்டாம்பி சுவாமிகள்
10 மணி சுவாமிகள்
11 சங்கர நம்பி சுவாமிகள்
12 சடைச் சுவாமிகள்
13 காளத்தி சுவாமிகள்
14 பிச்சாண்டி சுவாமிகள்
15 சுந்தர சுவாமிகள்
16 சிவனேசன் சுவாமிகள்
17 பத்தராசலம் சுவாமிகள்
18 லோகநாத சுவாமிகள்
19 சிவசாமி சுவாமிகள்
20 கண்ணாடி சுவாமிகள்
21 குட்டி சுவாமிகள்
திருஞானசம்பந்தர் சுவாமிகள்
தேவாரத்திரட்டு
திருச்சிற்றம்பலம்
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்கா உளான்
சடையும் பிறையும் சாம்பற் பூச்சும்கீள்
உடையும் கொண்ட உருவம் என்கொலோ
🌹வயலுக்கு நீர் பாய்ச்சும் வாய்க்கால்களில் வாளை மீன்கள்
துள்ளிச்செல்கின்றன; பெண்கள் குளத்தில் குளிக்கின்றனர். இப்படி இருப்பது கோலக்கா என்னும் தலம். இங்கே இருக்கிறான் சிவன்.
இச்சிவன் சடையில் பிறை சூடி இருக்கிறான்; உடம்பில் விபூதி பூசி இருக்கிறான்; கீள்உடை கட்டி இருக்கிறான். இப்படிப்பட்ட உருவத்தை ஏன் கொண்டான்?
நலங்கொள் காழி
🌹🌹**
பல நன்மைகளை உடையது சீர்காழியில்
உள்ளவர் ஞான சம்பந்தர். அவர் திருக்கோலக்கா இறைவனைப் பாடி இருக்கிறார். அத்தலம் பெருமை உடையது. அவர் பாடிய பாடல்கள் வலிமை உடையவை.