1.நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக காகதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #TNBudget
2.சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை வாசிக்கும் முன்பாக அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு. #TNBudget
3.தேர்தல் பிரசாரத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். #TNBudget
4.2021-2022 திருத்திய நிதிநிலை அறிக்கை ஆறு மாதங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். #TNBudget
5.உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் மூலம் இதுவரை 2,29,216 மனுக்களுக்குத் தீர்வுகாணப்பட்டுள்ளது. #TNBudget
6.பொது விநியோக திட்டத்தில் மின்னணு கொள்முதல் முறை அமல்படுத்தப்படும். #TNBudget
7.தமிழ்நாடு அரசுக்கென தனி கொள்முதல் வலைதளம் உருவாக்கப்படும்.
8.2007-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் சொந்த தமிழ்நிலம் தரவு தளப் பதிவின்படி 2.05லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. #TNBudget
9.பொது நிலங்கள் குறித்த சிறப்பான மேலாண்மைக்காக மேம்படுத்தப்பட்ட அரசு நில மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டு, அரசின் நிலங்களை ஆக்கிரமிப்பது தடுக்கப்படும். #TNBudget
10.ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவளமேம்பாட்டு திட்டம் மூலம் அனைத்து அரசு நிதியும் கருவூல அமைப்பின் கட்டுப்பாட்டில் வைக்கப்படும். #TNBudget2021
11.தமிழ்நாட்டின் நிதிநிலையைச் சரிசெய்ய மூன்று ஆண்டுகள் தேவைப்படும். #TNBudget
12.கீழடி, சிவகளை, கொற்கை, ஆதிச்சநல்லூர் ஆகிய தொல்லியல் ஆய்வுகள் நடக்கும் இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, இந்தப் பணிகளுக்கு ரூபாய் ₹5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். #TNBudget
13.அரசின் நிதி சார்ந்த வழக்குகளைக் கையாள ‘வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு' உருவாக்கப்படும். #TNBudget 14. சங்ககால துறைமுகங்கள் அமைத்திருந்த இடங்களில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ளப்படும். #TNBudget
15.ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதி கலைஞர் செம்மொழி தமிழ் விருது ₹10 லட்சம் பரிசுடன் வழங்கப்படும். #TNBudget
16.முதலமைச்சரின் வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் வரவு செலவு திட்டத்தில் முத்திரை பதித்துள்ளன! #TNBudget
17.தகுதியான அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் கிடைக்க வழி செய்யப்படும். #TNBudget
18.சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கான நிதி 4,807 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. #TNBudget
19.கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும். #TNBudget
20.அனைத்து குடும்பங்களின் உண்மையான பொருளாதார நிலையை அறிய தரவுகள் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். #TNBudget2021
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1.கொரோனா நிவாரண நிதி ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4 ஆயிரம் ரூபாய். #100DaysOfDMKGovt
2.ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு. #100DaysOfDMKGovt
3.அரசு நகரப் பேருந்துகளில் மகளிர், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணமில்லா பயணம். #100DaysOfDMKGovt #Thread
4.பொது மக்களின் புகார் மனுக்களுக்குத் தீர்வு காண புதிய துறை. #100DaysOfDMKGovt
5.செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணை. #100DaysOfDMKGovt
6 உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின்படி, 100 நாட்களில் பொதுமக்களின் மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்க ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ் நியமனம்
இதுவரை 2,29,216 மனுக்களுக்குத் தீர்வு! #100DaysOfDMKGovt
7.கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியான மருத்துவத் துறையினர் குடும்பங்களுக்கு 25 லட்சம் உதவித் தொகை! #100DaysOfDMKGovt
8.சென்னையில் மட்டுமே கிடைத்த ரெமிடெசிவர் மருந்துகள் அனைத்து பெரிய நகரங்களிலும் கிடைக்க ஏற்பாடு.
முதலமைச்சர் காப்பீடு திட்டம் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பும் கொரோனா தொற்றாளர்கள்,*
கொரோனா சிகிச்சைக்காக அரசு வழங்கியுள்ள 16 வகையான பேக்கேஜுகளில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும்*.
மிதமான சிகிச்சை முதல் தீவிர சிகிச்சை வரை, முதல் நாள் முதல் 5 நாட்கள் வரை,
அதிகபட்சமாக 14 நாட்கள் வரை என ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வித பேக்கேஜ்கள் உள்ளன.*
பொது மருத்துவம், நுரையீரல் சிகிச்சை எனவும் இதில் பிரிவுகள் உள்ளன.*
இவற்றில் தனக்குத் தேவையான சிகிச்சையைத் தொற்றாளரோ அவரின் குடும்பத்தினரோ தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.*
தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் முதல் நாளிலேயே காப்பீட்டுத் திட்டத்தை பயன்படுத்தி சிகிச்சை பெறுகிறோம் என்பதைச் சொல்லிவிட்டு மருத்துவமனையில் சேர்ந்தால் எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.*
காப்பீட்டுத் திட்டம் மூலம் முழு சிகிச்சைக் கட்டணத்தையும் பெறலாம்..*