1.கொரோனா நிவாரண நிதி ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4 ஆயிரம் ரூபாய். #100DaysOfDMKGovt
2.ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு. #100DaysOfDMKGovt
3.அரசு நகரப் பேருந்துகளில் மகளிர், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணமில்லா பயணம். #100DaysOfDMKGovt
#Thread
4.பொது மக்களின் புகார் மனுக்களுக்குத் தீர்வு காண புதிய துறை. #100DaysOfDMKGovt
5.செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணை. #100DaysOfDMKGovt
6 உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின்படி, 100 நாட்களில் பொதுமக்களின் மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்க ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ் நியமனம்
இதுவரை 2,29,216 மனுக்களுக்குத் தீர்வு! #100DaysOfDMKGovt
7.கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியான மருத்துவத் துறையினர் குடும்பங்களுக்கு 25 லட்சம் உதவித் தொகை! #100DaysOfDMKGovt
8.சென்னையில் மட்டுமே கிடைத்த ரெமிடெசிவர் மருந்துகள் அனைத்து பெரிய நகரங்களிலும் கிடைக்க ஏற்பாடு.
#100DaysOfDMKGovt
9.பொதுமுடக்க காலத்தில் கொரோனா நோயாளிகள், உறவினர்களுக்கு அறநிலையத்துறை மூலம் அரசு மருத்துவமனைகளில் இலவச உணவு. #100DaysOfDMKGovt
10.கூடுதல் கட்டணம் வசூலித்த 304 ஆம்னி பஸ்களிடமிருந்து 38 லட்சம் ரூபாய் அபராதம் வசூல். #100DaysOfDMKGovt
11.கொரோனாவால் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு. #100DaysOfDMKGovt
12.கொரோனா காலத்தில் பணியாற்றும் செவிலியர்கள் தூய்மைப்பணியாளர்கள் அனைவருக்கும் 3 மாத ஊக்கத் தொகை. #100DaysOfDMKGovt
13.ஆக்ஸிஜன் தடையின்றி வினியோகிக்கச் சிங்கப்பூரிலிருந்து 248 காலி ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வாங்கப்பட்டு தட்டுப்பாடு களையப்பட்டது. #100DaysOfDMKGovt
14.ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமையலுக்குப் பயன்படும்
14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு. #100DaysOfDMKGovt
15.மறைந்த எழுத்தாளர் கி.ரா. உடலுக்குத் தமிழ்நாடு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு. இடைசெவல் கிராமத்தில் கி.ரா.வுக்கு சிலை, நினைவரங்கம் அமைக்க உத்தரவு #100DaysofDMKGovt
16 சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்ஸிஜன் வசதியுடன் 500 படுக்கைகள் கொண்ட கொரானா சிறப்புச் சிகிச்சை மையம் திறப்பு
17.ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் 7 பேரை விடுதலைசெய்ய குடியரசுத்தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். #100DaysOfDMKGovt
18.தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் வாரிசுகள் 17 பேருக்கு அவர்களது கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசுப்பணி நியமன ஆணை.
#100DaysofDMKGovt
19.மதுரை தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை மையம் திறப்பு. #100DaysOfDMKGovt
20.ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராகப் போராடியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. #100DaysOfDMKGovt
21.1,254 ரேஷன் கடைகள் மூலம் அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் 5 லட்சத்து 93 ஆயிரத்து 363 பேருக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது! . #100DaysOfDMKGovt
22.முழு ஊரடங்கின்போது, தமிழ்நாடு முழுவதும் தினசரி வீடுகளுக்கே காய்கறி, பழங்கள் மளிகைப்பொருட்கள் கிடைக்கும்வகையில் நடமாடும் கடைகள் ஏற்பாடு. #100DaysOfDMKGovt
23.ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்கள் முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் போக்ஸோ சட்டம் பாயும் என அரசு எச்சரிக்கை.
24.புயலில் காணாமல்போன 21 மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி. #100DaysOfDMKGovt
25.ஓய்வுபெற்ற 2457 போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.497 கோடி ஓய்வூதிய நிலுவைத் தொகை விடுவிப்பு. #100DaysOfDMKGovt
26.குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறப்பு.
#100DaysofDMKGovt
27.கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்கால வாழ்வுக்காகச் சிறப்புத் திட்டம். ரூ.3 லட்சம் முதல் 5லட்சம் வரை வங்கி வைப்புநிதி. #100DaysOfDMKGovt
28.சென்னையில் கொரோனா டெஸ்ட் பாசிட்டிவ் சதவிகிதம் ஒரு சதவிகிதத்துக்கு கீழ் சென்று, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் மெட்ரோ நகரங்களில் சென்னை மிகச் சிறப்பான சாதனை படைத்தது. #100DaysOfDMKGovt
29.நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைப்பு. #100DaysOfDMKGovt
30.ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட தமிழ்நாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகையாக தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. #100DaysOfDMKGovt
31.பள்ளி பாடப் புத்தகங்களில் தமிழ் சான்றோர்களின் பெயர்களில் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கம்! #100DaysOfDMKGovt
32.சென்னையில் பாலங்கள், அரசு கட்டடங்கள், பஸ் நிறுத்தங்கள், தெரு பெயர்ப் பலகைகளில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றம். புகார் தெரிவிக்கக் கட்டணமில்லா தொலைப்பேசி எண் அறிவிப்பு. #100DaysOfDMKGovt
33.பள்ளி ஆசிரியர்கள் திருமணம் செய்யவும், வாகனங்கள் வாங்கவும் 6 முதல் 14 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி. #100DaysOfDMKGovt
34.1950 ம் ஆண்டு முதல் வில்லங்க விவரங்களைப் பத்திரப்பதிவு இணையத்தளத்தில் பார்க்கும் வசதிக்கான பணிகள் துவக்கம். #100DaysOfDMKGovt
35.சென்னையின் பழைய பொலிவை மீட்டுக் கொண்டு வரும் வகையில் சிங்கார சென்னை 2.0 திட்டப் பணிகள் துவக்கம். #100DaysOfDMKGovt
36.கைத்தறியை உயர் வருவாய் பிரிவினரிடம் கொண்டு சென்று, நெசவாளர்களின் வருமானத்தை உயர்த்த நடவடிக்கை. அரசு ஊழியர்கள் வாரம் 2 நாட்கள் கைத்தறி ஆடைகளை உடுத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல். #100DaysOfDMKGovt
37.ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கப் பல அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு, செயல்பாட்டிற்கு வந்தன. #100DaysOfDMKGovt
38.68 சதவிகித மக்களின் நன்மதிப்பைப் பெற்று, பொறுப்பேற்ற 2 மாதத்திலேயே சிறப்பாகச் செயல்பட்டு, இந்தியாவின் சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலினைத் தேர்வு செய்தது 'ஓர்மாக்ஸ்' என்ற தனியார் நிறுவனம். #100DaysOfDMKGovt
39.புதிய தொழில்கள், முதலீடுகளை மேற்கொள்வதற்காக முதலீட்டாளர்களுடன் 35 தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 17,141 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் திட்டங்கL மூலம் 55,054 பேருக்கு வேலைவாய்ப்பு. #100DaysOfDMKGovt
40.4,250 கோடி ரூபாய் முதலீட்டில் 9 தொழில் திட்டங்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். #100DaysOfDMKGovt
41.தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாம் அலை பரவலின் போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, ‘ஆக்சிஜன் ஆணையர்’ என்ற புதிய பொறுப்பு உருவாக்கப்பட்டது.
42.பயிற்சி மருத்துவர், முதுகலை மேற்படிப்பு மருத்துவர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி அரசாணை. #100DaysOfDMKGovt
43.ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியா, மூளைக்காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் இலவச நியூமோகோக்கல் தடுப்பூசி போடும் திட்டம் தொடக்கம். #100DaysOfDMKGovt
44.தனியார் மருத்துவமனைகள் மூலமாகவும் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. #100DaysOfDMKGovt
45.டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற சுபா வெங்கடேசன், தனலட்சுமிக்கு அரசு வேலை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். #100DaysOfDMKGovt
46.அரசுப் பணி, கல்வி வாய்ப்புகளில் வன்னியருக்கு 10.5 சதவிகிதமும் சீர்மரபினருக்கு 7 சதவிகிதமும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 2.5 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கி, அரசாணை வெளியிடப்பட்டது. #100DaysOfDMKGovt
47.தமிழின வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைக் கவுரவிக்கும் வகையில் 'தகைசால் தமிழர்' என்ற புதிய விருது உருவாக்கப்பட்டு முதுபெரும் இடதுசாரித் தலைவர் என். சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. #100DaysOfDMKGovt
48.சென்னை மாநகராட்சியில் வசிக்கும் வீடற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு, சிகிச்சை அளிக்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டது. #100DaysOfDMKGovt
49.மருத்துவப் படிப்பு அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டைச் சட்ட போராட்டத்தால் பெற்றுத் தந்தது திமுக. "தேங்க்யூ ஸ்டாலின்" என வட இந்தியர்கள் வாழ்த்துகளைக் குவித்தனர். #100DaysOfDMKGovt
50.2012 முதல் 2021-ம் ஆண்டு பிப்ரவரி வரை அ.தி.மு.க ஆட்சியில் அரசியல் தலைவர்கள் மீது போடப்பட்ட 130 அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். #100DaysOfDMKGovt
51.கொரோனாவில் பாதிக்கப்படும் ஊடகவியலாளர்களுக்கு 5,000 ரூபாய் உதவித்தொகையும் பத்திரிகையாளர்கள் இறந்துவிட்டால் அவர்களது குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம். #100DaysOfDMKGovt
52.கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டது. #100DaysOfDMKGovt
53.பொதுமுடக்கத்தைப் பயன்படுத்தி ‘மாஸ் கிளீனிங்’ என்ற பெயரில் சென்னையில் 8,800 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. #100DaysOfDMKGovt
54.சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையின் மேற்தளத்தில் மீண்டும் ‘தமிழ் வாழ்க', ‘தமிழ் வளர்க' பெயர்ப் பலகை வைக்கப்பட்டது. #100DaysOfDMKGovt
55.சென்னை கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில், 250 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கை வசதிகளுடன் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக அமைக்கப்படுகிறது. #100DaysOfDMKGovt
56.திருவாரூர் மாவட்டத்தில் 24.30 கோடி மதிப்பீட்டில் 16,000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படுகிறது. #100DaysOfDMKGovt
57.6.20 கோடி மதிப்பீட்டில் 54 உலர் களம் மற்றும் உலர்விப்பான்கள் திருவாரூர் மாவட்டத்தில் ஏற்படுத்தப்படுகிறது. #100DaysOfDMKGovt
58.இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் 70 கோடி ரூபாய் செலவில் மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் உருவாகிறது. #100DaysOfDMKGovt
59.‘இலக்கிய மாமணி’ என்ற புதிய விருது உருவாக்கப்பட்டு, தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. #100DaysOfDMKGovt
60.ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில மற்றும் உலகளாவிய அமைப்புகளின் இலக்கிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு விரும்பும் இடத்தில் வீடு வழங்கும் திட்டம் அறிவிப்பு. #100DaysOfDMKGovt
61.சென்னை கஸ்தூரிபாய் மருத்துவமனை தீ விபத்தில் 36 பச்சிளங் குழந்தைகளையும் தாய்மார்களையும் காத்த செவிலியர் ஜெயக்குமாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினார். #100DaysOfDMKGovt
62.கொரோனா பாதிப்பு நிலவரங்களைக் கண்காணிக்க 13 பேர் கொண்ட குழுவை அமைக்கப்பட்டது.
#100DaysofDMKGovt
63.மாணவர்களின் நலன் கருதி ப்ளஸ்டூ பொதுத்தேர்வு ரத்துசெய்யப்பட்டது. #100DaysOfDMKGovt
64.முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் மாற்றியமைக்கப்பட்டு, புதுப்பொலிவினை பெற்றது. #100DaysOfDMKGovt
65.தமிழக அரசின் மாநில கொள்கை வளர்ச்சி குழுவின் துணைத் தலைவராகப் பொருளாதார அறிஞர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் நியமனம். #100DaysOfDMKGovt
66.கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கங்கள் தொடர்பாகச் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். #100DaysOfDMKGovt
67.மாஸ்க் முதல் சானிடைசர் வரை கொரோனா சார்ந்த பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்தது தமிழ்நாடு அரசு. #100DaysOfDMKGovt
68.சென்னை வடபழனி கோவிலுக்குச் சொந்தமான ரூ.250 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. #100DaysOfDMKGovt
69.கொரோனா நோயாளிகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து, கூடுதல் கட்டண வசூல் தொடர்பாகப் புகார் அளிக்கத் தனிப் பிரிவு அமைக்கப்பட்டது. #100DaysOfDMKGovt
70.அரசு அலுவலக வளாகங்களில் கிடக்கும் துருப்பிடித்த வாகனங்களை உடனடியாக ஏலத்தில் விற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது #100DaysOfDMKGovt
71.சாலை ஓரத்தில் மனு கொடுப்பதற்காகக் காத்திருந்த பெண்மணிக்காகக் காரை நிறுத்தி, அவரின் குறைகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். #100DaysofDMKGovt
72.சாலை பாதுகாப்புப் பணிகளில் பெண் காவலர்கள் ஈடுபட வேண்டாம் என போலீஸ் டிஜிபி அறிவிப்பு. #100DaysOfDMKGovt
73.மேட்டூர் ஆனையைத் திறந்து வைத்து, ’ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடியை அதிகரிப்பதே எங்கள் இலக்கு’ என்று சொன்னார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். #100DaysOfDMKGovt
74.பழனிசாமி ஆட்சியில் மருத்துவர்களின் உணவு மற்றும் தங்கும் வசதிக்காக இடைத்தரகர்கள் மூலம் நடந்த பல முறைகேடுகள் கண்டறியப்பட்டுச் சரி செய்யப்பட்டன. #100DaysOfDMKGovt
75.கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளுக்கு உணவு கொடுக்க ஒவ்வொரு மருத்துவமனையிலும் 10 பேர் நியமிக்கப்பட்டனர். #100DaysOfDMKGovt
76.விலங்குகளுக்கு ஏற்படும் கொரோனா பாதிப்புக்காக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தலைமையில் மாநில அளவிலான சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.
77.முகாமிற்கு வெளியே வாழும் 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கெரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்கப்பட்டது. #100DaysOfDMKGovt
78.கோவை வேளாண் பல்கலைக் கழக நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் அகற்றப்பட்டு, வெள்ளை உடை அணிந்த வள்ளுவர் படம் வைக்கப்பட்டது. #100DaysOfDMKGovt
79.சென்னை, ராயப்பேட்டை ரேஷன் கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். #100DaysOfDMKGovt
80.அரசு பேருந்துகளில் மீண்டும் திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டது. #100DaysOfDMKGovt
81.முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கிய சௌமியாவிற்கு தனியார் வேலைக்கான ஆணை வழங்கப்பட்டது. #100DaysOfDMKGovt
82.தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி த. முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. #100DaysOfDMKGovt
83.மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மனிதக்கழிவுகளை அகற்ற இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. #100DaysOfDMKGovt
84.முதன்முறையாக விவசாயத்துக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. #100DaysOfDMKGovt
84.முதன்முறையாக விவசாயத்துக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. #100DaysOfDMKGovt
85.ஆன்லைன் வகுப்புகளில் அத்துமீறலைத் தடுக்க ஆன்லைன் வகுப்பிற்கான நெறிமுறைகளை வெளியிட்டது அரசு. #100DaysOfDMKGovt
86.மக்கும் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிப்பதைத் தொடர்ந்து இனி அவற்றிலிருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் ஆலைகள் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தது சென்னை மாநகராட்சி. #100DaysOfDMKGovt
87.மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு சரகத்திற்கும் தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. #100DaysOfDMKGovt
88.எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் திரும்பப்பெறப்பட்டன. #100DaysofDMKGovt
89.வடமாவட்டங்களில் தொழில் வளர்ச்சியைப் பெருக்க திண்டிவனம் மற்றும் செய்யாறு பகுதியில் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் இரண்டு பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. #100DaysOfDMKGovt
90.பழனிசாமி அரசு வெளியிடாமல் பதுக்கி வைத்திருந்த 5 வருட சிஏஜி அறிக்கைகளை மொத்தமாகத் தோண்டி எடுத்து வெளியிடப்பட்டது. #100DaysOfDMKGovt
91.பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் நிதி நிலையைச் சீர் செய்யவும் முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. #100DaysOfDMKGovt
92.விரும்பிய தேதியில் சிசேரியன் முறையில் பிரசவம் என்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். #100DaysOfDMKGovt
93.இந்தியாவிலேயே முதல்முறையாகத் தமிழ்நாட்டில் ஜீனோம் டெஸ்டிங் சென்டர்ர் அமைக்க அரசு முடிவு #100DaysOfDMKGovt
94.கொரோனா 3-ம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்காக ரூ 100 கோடியை ஒதுக்கியது அரசு. #100DaysOfDMKGovt
95.தமிழக சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப்பட்டார். #100DaysOfDMKGovt
96.நடிகர் தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குறைந்த வாடகையில் வீடு ஒதுக்கப்பட்டது. #100DaysOfDMKGovt
97.கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்குப் புத்துயிர் அளிக்கும் முயற்சி தொடங்கியது. #100DaysOfDMKGovt
98.தமிழக அரசு வழங்கிய 14 மளிகை பொருட்கள் தொகுப்பு பையில் முதலமைச்சர் படமும் இல்லை, பெயரும் இல்லை. #100DaysOfDMKGovt
99.கொளத்தூர் தொகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். #100DaysOfDMKGovt
100.அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோயில்களின் சொத்து ஆவணங்கள் வெளிப்படையாக இணையத்தில் பதிவேற்றப்பட்டன. #100DaysOfDMKGovt
101.20,000 டன் துவரம் பருப்பு ஒப்பந்தப்புள்ளியில் கிறிஸ்டி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்திருந்த நிலையில், அந்த டெண்டர் ரத்துசெய்யப்பட்டது. #100DaysOfDMKGovt
102.இ-பதிவு குறித்த சந்தேகங்களைப் பொதுமக்கள் அறிந்து கொள்ள 1100 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டது. #100DaysOfDMKGovt
103.சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகள் கொண்ட கொரானா சிறப்புச் சிகிச்சை மையம் திறக்கப்பட்டது. #100DaysOfDMKGovt
104.ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராடியவர்கள் மீதான வழக்குகள் திரும்பப்பெறப்பட்டன. போலீஸால் கைது செய்யப்பட்ட 93 பேருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமும் கல்வி, வேலைவாய்ப்பிற்காகத் தடையில்லாச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. #100DaysOfDMKGovt
105.தொற்று இல்லாதவர்களுக்கு கொரோனா எனத் தவறாகக் கணக்கிட்ட பிரபல தனியார் நிறுவனத்தின் ஆய்வக அனுமதி ரத்துசெய்யப்பட்டது. #100DaysOfDMKGovt
106.கோயில்கள் தொடர்பாக மக்கள் கோரிக்கைகளைப் பதிவு செய்திட ’கோரிக்கைகளைப் பதிவிடுக’ எனும் புதிய இணையவழி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
107.கொரோனா அதிகம் பாதித்த கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு தனித்தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். #100DaysOfDMKGovt
108.கொரோனா நிதி வழங்கும் சிறுவர், சிறுமிகளுக்குத் திருக்குறள் நூல் பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
109.தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் முறை அமலுக்கு வந்தது. #100DaysOfDMKGovt
110.தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவும் சட்டசபையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவப்படத் திறப்பும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெற்றது.
111.கோவில்களுக்குச் சொந்தமான இடங்களில் கல்வி நிலையங்கள் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது. #100DaysOfDMKGovt
112.அதிமுக அரசின் செயல்பாடுகள், நிதி ஆதாரங்கள், கடன்கள், கஜானா நிலவரம் அடங்கிய நிதி நிலை தொடர்பான ’வெள்ளை அறிக்கை’ தாக்கல் செய்யப்பட்டது. #100DaysOfDMK
113.தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொழில் கல்வி படிப்புகளில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு. #100DaysOfDMKGovt
114.வீடுகளைத் தேடி மருத்துவ உதவிகளை வழங்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
#100DaysofDMKGovt
115.பள்ளிப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற தமிழறிஞர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் உள்ளிட்ட தலைவர்களின் பெயருக்குப் பின்னால் இருக்கும் சாதிப் பெயர்கள் நீக்கம். #100DaysOfDMKGovt
116.கொரோனா 3-ம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் பாதுகாப்பு வழிமுறைகளை வழங்கவும் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. #100DaysOfDMKGovt
117.தகைசால் தமிழர் அரசு விருது அறிவிக்கப்பட்டு முதலாவதாக என்.சங்கரைய்யாவுக்கு வழங்கப்பட்டது! #100DaysOfDMKGovt
118.எல்லையில் வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது! #100DaysOfDMKGovt
119.கோயில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் போன்றோருக்கு நிவாரண உதவித்தொகை ரூ.4000 வழங்கப்பட்டது! #100DaysOfDMKGovt
120.தமிழ்நாட்டு வேலையில் தமிழ் இளைஞர்களுக்கு 75% முன்னுரிமை! #100DaysOfDMKGovt
121.விஷன் தமிழ்நாடு தொலைநோக்கு திட்டத்தின் படி 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் செயல் திட்டம்! #100DaysOfDMKGovt
122. ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி-தமிழ்நாடு’ என்ற செயல் திட்டத்தில் 47 தொழில் திட்டங்கள் ரூ.28,664 கோடி முதலீடுகள். #100DaysOfDMKGovt
123.திண்டிவனம்-செய்யார் போன்ற ஊர்களில் தொழிற்சாலை அமைக்கும் செயல் திட்டம்! #100DaysOfDMKGovt
124.எண்ணெய் கிணறுகள் அமைக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் தமிழகத்தில் இடமில்லை என்று அறிவிப்பு! #100DaysOfDMKGovt
125.58000 அரசு பள்ளிகள் நவீன மயமாக்கப்படும்! #100DaysOfDMKGovt
126.நீலகிரி பழங்குடியின மக்களுக்கு வீடுகட்டித்தரப் பணிகள் துவக்கம். #100DaysOfDMKGovt
127.ITI மாணவர்களுக்கு சென்னை மாநகர பேருந்துகளில் இலவசப் பயணம்! #100DaysOfDMKGovt
128.தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு இந்தாண்டு விவசாயம், பொது என 2 நிதிநிலை அறிக்கைகள் வெளியிடப்பட்டன #100DaysOfDMKGovt
129.நிலுவையில் இருந்த அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து! #100DaysOfDMKGovt
130.முதியோர் இல்லங்கள் சிறப்பாக இயங்குவதற்கு தனி குழு அமைக்கப்பட்டது! #100DaysOfDMKGovt
131.பணிபுரியும் மகளிர்க்கு விடுதி வசதி அமைக்க நடவடிக்கை! #100DaysOfDMKGovt
132.குழந்தைகள் திருமணம் தடுப்பு-கண்காணிக்க குழு! #100DaysOfDMKGovt
133.கொரோனா நோயாளிகள், அரசு காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை. #100DaysOfDMKGovt
134.ஊடகங்கவியலாளர்கள் முன் களப்பணியாளராக அறிவிப்பு. #100DaysOfDMKGovt
135.கொரோனா பரவலைத் தடுக்க மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமனம். மாவட்டம் தோறும் வார் ரூம் நிறுவி ஒருங்கிணைந்த செயல்பாடு! #100DaysOfDMKGovt
136.புதிய சாலைகள் போடும்போதும் பழைய சாலையின் மேல் மட்டத்தை சுரண்டிவிட்டே சாலைகள் அமைக்கவேண்டும் என உத்தரவு. #100DaysOfDMKGovt
137.கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகச் சட்டமன்ற அனைத்து கட்சிக் கூட்டங்கள். #100DaysOfDMKGovt
138.கொரோனா நோயாளிகளை ஏற்றி செல்லும் தனியார் ஆம்புலன்ஸ்கள் கட்டணக்கொள்ளையில் ஈடுபடுவதைத் தடுக்க கட்டணம் நிர்ணயம். #100DaysOfDMKGovt
139.உலக அளவில் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டது. #100DaysOfDMKGovt
140.ரெம்டெசிவர் மருந்து, ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பதுக்கினால் குண்டர் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு. #100DaysOfDMKGovt
141.தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டிசிவிர் மருந்து விற்பனை. #100DaysOfDMKGovt
142.கொரோனா விழிப்பு உணர்வை ஏற்படுத்த அனைத்து ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை. #100DaysOfDMKGovt
143.கொரோனா காலகட்டத்தில் பணியாற்றும் காவல் துறையினருக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகை. #100DaysOfDMKGovt
144.ஒன்றிய அரசின் ஆக்சிஜன் ஒதுக்கீடு 210 மெட்ரிக் டன்னிலிருந்து 47 மெட்ரிக் டன்னாக உயர்வு. #100DaysOfDMKGovt
145.கொரோனா நோயாளிகளைப் பாதுகாக்கப் பிற மாநிலத் தொழிற்சாலைகளிலிருந்து ரயில் மூலம் ஆக்ஸிஜன் வரவழைப்பு. #100DaysOfDMKGovt
146.சென்னை, சேலம், மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய ஆயிரக்கணக்கான படுக்கைகள் கொண்ட கொரானா சிறப்புச் சிகிச்சை மையங்கள் திறப்பு. #100DaysOfDMKGovt
147.மருந்துகள்-ஆக்சிஜன், RTPCR கிட்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், மருத்துவ கருவிகள் வாங்க 141.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு. #100DaysOfDMKGovt
148.பேரறிவாளனுக்கு இரண்டு மாதம் பரோல் விடுப்பு. #100DaysOfDMKGovt
149.கிண்டி கிங் மருத்துவமனை வளாகத்தில் கொரோனாவுக்குப் பிந்தைய நலவாழ்வு சேவை மையத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். #100DaysOfDMKGovt
150.அதிமுக ஆட்சியில் பாளையங்கோட்டை சிறையில் உயிரிழந்த கைதி முத்து மனோ குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி. #100DaysOfDMKGovt
151.பரிசாகப் பெற்ற 1,000 புத்தகங்களை.. கன்னிமாரா நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். #100DaysOfDMKGovt

156.தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராகத் திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம். #100DaysOfDMKGovt
152.சென்னையில் கால்வாய்களில் தேங்கியுள்ள குப்பைகளைச் சுத்தம் செய்து, தேங்கியிருக்கும் தண்ணீரில் உள்ள கொசுக்களை ட்ரோன் மூலம் அழிக்கும் பணி மேற்கொண்டது சென்னை மாநகராட்சி. #100DaysOfDMKGovt
153.கொரோனா தடுப்பூசி கூடுதலாக வழங்கக் கோரி ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து முறையிட்டார் மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன். #100DaysOfDMKGovt
154.படித்த இளைஞர்களைத் தொழில்முனைவோர்களாக உருவாக்கிடும் வகையில் சுய வேலைவாய்ப்பு திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். #100DaysOfDMKGovt
155.மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை உடனடியாக வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். #100DaysofDMKGovt
157.தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் புத்தகங்களில் மத்திய அரசு என்ற வார்த்தை நீக்கப்பட்டு, ஒன்றிய அரசு என வார்த்தை அச்சிடப்படும் என அறிவிப்பு. #100DaysOfDMKGovt
158.காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுகிற கர்நாடகாவின் முயற்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம். #100DaysOfDMKGovt
159.முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர் காக்கும் மருந்துகளுக்கான வரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என ஒன்றிய நிதி அமைச்சருக்கு முதலமைச்சர் @mkstalin கடிதம் எழுதியதால் நாமக்கல் சிறுமி மித்ராவுக்கு வரிச்சலுகை கிடைத்தது. #100DaysOfDMKGovt
160.கொரோனா தடுப்பூசி ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைச் சரி செய்து சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம். #100DaysOfDMKGovt
161.சென்னை போரூர் ஏரியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக எழுந்த புகாரில், ஏரியை நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டார் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். #100DaysOfDMKGovt
162.பழனிசாமி ஆட்சியின் போது ஆவின் நிறுவனத்தில் பணி நியமன முறைகேடு, ஊழல் புகார்களில் சிக்கிய 34 உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர #100DaysOfDMKGovt
163.சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு அலுவலர்கள் இனி உயர்ந்த மேடைகளில் அமரக் கூடாது என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
#100DaysofDMKGovt
164.சென்னை தங்கசாலை பாலத்தின் கீழ் கொரோனா நினைவிடத்துடன் கூடிய பூங்கா அமைக்க மாநகராட்சி முடிவு. #100DaysOfDMKGovt
165.கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் தீவிரப்படுத்தி, 44 ஆயிரம் கர்ப்பிணிப் பெண்கள், 66 ஆயிரம் பாலூட்டும் பெண்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. #100DaysOfDMKGovt
166.தனிப்பட்ட காரணங்களுக்காகப் பயணம் செய்யும் போலீஸார் பேருந்துகளில் கண்டிப்பாக டிக்கெட் எடுக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு. #100DaysOfDMKGovt
167.அதிமுக அரசு சீரழித்த நிதி நிலைமையைச் சரி செய்ய லாட்டரி பற்றிச் சிந்திக்கவே இல்லை என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். #100DaysOfDMKGovt
168.உயர் கல்வி பாடப்புத்தகங்களில், 'மத்திய அரசு' என்பது மாற்றப்பட்டு, 'ஒன்றிய அரசு' என்ற வார்த்தை இடம்பெறும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். #100DaysOfDMKGovt
169.’பூங்காக்களைச் சரிவரப் பராமரிக்கவில்லை என்றால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்’ என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது. #100DaysOfDMKGovt
170.காவலர்களுக்குக் கட்டாயம் வாரம் ஒருநாள் விடுமுறை அளித்த அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு. #100DaysOfDMKGovt

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with T R 😎

T R 😎 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @thaufikrahman19

13 Aug
1.நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக காகதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #TNBudget
2.சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை வாசிக்கும் முன்பாக அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு. #TNBudget
3.தேர்தல் பிரசாரத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். #TNBudget
4.2021-2022 திருத்திய நிதிநிலை அறிக்கை ஆறு மாதங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். #TNBudget
5.உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் மூலம் இதுவரை 2,29,216 மனுக்களுக்குத் தீர்வுகாணப்பட்டுள்ளது. #TNBudget
Read 12 tweets
10 May
முதலமைச்சர் காப்பீடு திட்டம் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பும் கொரோனா தொற்றாளர்கள்,*

கொரோனா சிகிச்சைக்காக அரசு வழங்கியுள்ள 16 வகையான பேக்கேஜுகளில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும்*.

மிதமான சிகிச்சை முதல் தீவிர சிகிச்சை வரை, முதல் நாள் முதல் 5 நாட்கள் வரை,
அதிகபட்சமாக 14 நாட்கள் வரை என ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வித பேக்கேஜ்கள் உள்ளன.*

பொது மருத்துவம், நுரையீரல் சிகிச்சை எனவும் இதில் பிரிவுகள் உள்ளன.*

இவற்றில் தனக்குத் தேவையான சிகிச்சையைத் தொற்றாளரோ அவரின் குடும்பத்தினரோ தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.*
தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் முதல் நாளிலேயே காப்பீட்டுத் திட்டத்தை பயன்படுத்தி சிகிச்சை பெறுகிறோம் என்பதைச் சொல்லிவிட்டு மருத்துவமனையில் சேர்ந்தால் எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.*

காப்பீட்டுத் திட்டம் மூலம் முழு சிகிச்சைக் கட்டணத்தையும் பெறலாம்..*
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(