பல வருடங்களாக ஏதாவதொரு வகையில் தமிழகத்தில் விவாதத்தைக் கிளப்பிக்கொண்டிருக்கும் கொடநாடு எஸ்டேட்டின் ஆரம்பகால கதை வில்லங்கம் நிறைந்தது....
`தொலைபேசி மிரட்டல்...
அமைச்சர்களின் அச்சுறுத்தல்கள்... குண்டர்களின் மிரட்டல்கள்' என
கொடநாடு எஸ்டேட் சசிகலா வசம் வந்ததன் பின்னணியில் சினிமாவை விஞ்சும் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. `எங்களை மிரட்டித்தான் கொடநாடு எஸ்டேட்டை வாங்கினார்கள். அதனை மீட்காமல் ஓயமாட்டேன்' என்று ஜெயலலிதா இறந்ததற்குப் பிறகு கிளம்பினார்
கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் முதலாளி பீட்டர் கிரேக் ஜோன். தேயிலை எஸ்டேட் ஒன்றில் கன்சல்டிங் மேனேஜராக பணியாற்றும் அவரிடம் ஜூனியர் விகடனுக்காக 2017-ல் எடுத்த நேர்காணல் இது...
``எப்போது கொடநாடு எஸ்டேட்டை யாரிடமிருந்து வாங்கினீர்கள்?”
``1975ல் வாங்கினோம். அவர்களை மத்வானிஸ் என்று அழைப்போம். உகாண்டாவிலிருந்து வந்திருந்தார்கள். அவர்கள் 1960களில் நான்கைந்து தோட்டங்களை வாங்கியிருந்தார்கள். அவர்களிடமிருந்து 1975ல் இந்த கொடநாடு தோட்டத்தை வாங்கினோம்.”
``மொத்தமாக வாங்கிய நிலம் என்ன?”
`1020 ஏக்கர்கள்.”
``இப்போது அந்த தோட்டத்தின் மொத்த நிலப்பரப்பு இதுதானா?”
``40 ஏக்கர்களை விற்றுவிட்டோம். இப்போது 960 ஏக்கர்கள் இருக்கின்றன.”
``உங்களிடமிருந்து தோட்டத்தை வாங்க எப்படி அணுகினார்கள்? சசிகலாவே அணுகினாரா அல்லது அவருக்காக வேறு யாராவது பேசினார்களா?”
``1991-92ல் அவர் ஒரு தோட்டம் வாங்க விரும்புகிறார் என்று ஒரு பேச்சு இருந்தது. அவர் பல தோட்டங்களை சென்று பார்த்திருக்கிறார் என்பதும் எங்களுக்குத் தெரியும். எங்கள்
தோட்டத்தையும் பார்த்தார். ஆனால் கொடநாடு தோட்டத்தைப் பார்க்க வரும்போது எங்கள் அனுமதியோடு வரவில்லை. வந்தார், இந்த தோட்டத்தை வாங்க விரும்பினார். அப்போதிலிருந்து எங்களுக்கு பிரச்னை தொடங்கியது.”
``எதாவது கடனுக்காக இந்த தோட்டத்தை விற்கும் எண்ணம் இருந்ததா?”
``நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம். விற்கும் எண்ணம் இருக்கவில்லை. கூர்கில் தோட்டம் இருந்தது. அதை விற்கும் எண்ணம் கூட இருந்தது. சில கடன்கள் இருந்தன, வங்கிக்கடன்கள், அவற்றை அடைக்க விரும்பினோம். ஆகவே எங்கள் வாய்ப்புகள் எப்படிப்பட்டவை என்று பார்த்துக்கொண்டிருந்தோம்.
இவர்கள் வந்துபேசியபோது முடியாது என்று சொல்லிவிட்டோம். அரசியல்வாதிகளுக்கு நாங்கள் விற்க விரும்பவில்லை. சசிகலா, ஜெயலலிதா, அவர்களது குடும்பத்தினருக்கு நாங்கள் விற்க விரும்பவில்லை. அவர்கள் அழுத்தம் கொடுத்தார்கள். வேறு யாரும் வாங்க விரும்பினால் தடுப்போம் என்றார்கள்,
வங்கிகளுக்கும் தெரிவிப்போம் என்றார்கள். அப்பா அப்போது பெங்களூரில் இருந்தார். அவரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார்கள். அம்மா, அப்பா, சகோதரிகள், சகோதரியின் கணவர் என எல்லாரிடமும் பேசினார்கள். அப்போது நான் கொடநாட்டில் இருந்தேன். கொடநாட்டை கவனித்துக்கொண்டிருந்தேன்.
எனக்கு விற்க விருப்பமில்லை. கடன்கள் இருந்தன, ஆனால் அவை பெரிய கடன்கள் இல்லை, சிறு கடன்கள் தான். எதையும் விற்காமல் கூட அதை அடைத்திருக்க முடியும். எனக்கு விற்கும் எண்ணமே இல்லை. துளிகூட இல்லை. ஆனால் இரண்டு ஆண்டுகள் என் குடும்பத்துக்குப் பிரச்னை கொடுத்தார்கள்.
கொடநாட்டுக்கு குண்டாக்களை அனுப்பினார்கள். அதில் அமைச்சர்களும் சம்பந்தப்பட்டிருந்தார்கள்.”
``1992ல் இது நடந்ததா?”
``1992-1993. அதாவது 1994 முடியும் காலம் வரை. அப்போது விற்றோம்.
நாங்கள் இதை வாங்கப்போகிறோம் என்று அவர்கள் முடிவெடுத்திருந்தார்கள்.
அதற்கு வரும் பிரச்னைகளை அவர்கள் பார்த்துக்கொள்வதாகவும் முடிவு எடுத்திருந்தார்கள். ஒருவழியாக ராமசாமி உடையார் என்பவரைக் கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு விற்பதில்லை என்று முடிவெடுத்ததால் அவரை பினாமியாக்கினார்கள்.
அவரும் என் குடும்பத்திற்கு நிறைய அழுத்தம் கொடுத்தார்கள். `தன் அரசியல் நண்பர்கள் மூலமாக இந்தப் பிரச்சனையைத் தீர்க்கப்போவதாக அறிவித்தார். சசிகலா போன்ற வேறு யாருக்காகவும் இல்லை என்றும், தன் பிள்ளைகளூக்காக இந்த சொத்தை வாங்குவதாகவும்’ தெரிவித்தார்.
ஆனால் சசிகலாவுக்காக அவர் பினாமியாக இருந்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது.
ஆனால் அதற்குள் எங்கள் குடும்ப சூழல் மாறிவிட்டது. எனக்கு நான்கு சகோதரிகள், அவர்களும் அப்பா அம்மாவும் இரண்டு ஆண்டுகள் பிரச்னைகளை சந்தித்திருந்தார்கள். இந்த விஷயம் முடிந்தால்போதும்
என்று எல்லாருக்கும் தோன்றிவிட்டது. 1994ல் உடையாருக்கு நாங்கள் விற்க முடிந்துவிட்டோம்.”
``அப்போதே அவர் பினாமிதான் என்று உங்களுக்குத் தெரியுமா?”
``எங்களுக்குத் தெரியும். ஆனால் அரசியல்வாதிகளுக்காக தான் பேசவில்லை என்று அவர் சொல்லிக்கொண்டேயிருந்தார். தமிழ்நாட்டில் அவருக்குப் பெரிய
செல்வாக்கு இருந்தது. நிறைய அரசியல் தொடர்புகள் இருந்தன. இந்த பிரச்னைகளை முடித்து வைப்பேன் என்று உறுதியளித்தார். அவர் ஒரு பிசினஸ்மேன்.”
``7.6 கோடிக்கு எஸ்டேட்டை விற்றோம். மற்றவர்கள் 12 கோடி தருவதற்குக் கூட தயாராக இருந்தார்கள். ஆனால் இந்த அரசியல்வாதிகள் அவர்களுக்குப்
பிரச்னை கொடுத்தார்கள். ஆகவே நாங்கள் மாட்டிக்கொண்டோம். உடையார் 7.6 கோடி தந்தார். கொஞ்ச நாளில் இன்னும் கொஞ்சம் தருவதாகவும் சொன்னார். ஆனால் இவை வாய் வார்த்தைகள்தான், எழுத்தில் எதுவும் இருக்கவில்லை. ஒரு மாதத்துக்குப் பிறகு வருமான வரி சோதனைகள் எங்களுக்கும் அவருக்கும் வந்தன.
அப்போது ஜெயலலிதா ஆட்சி இருந்தது. வருமானவரி சோதனை வந்தபோது பொதுவெளியில், "எனக்கும் என் குடும்பத்தினருக்கும் இந்த சொத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. முதல்வரின் ஆணைப்படி நான் செயல்பட்டேன். நான் தமிழ்நாட்டில் ஒரு பிசினஸ்மேன்.
முதல்வரின் ஆணையை மீறி எப்படி செயல்பட முடியும்? ஆகவே நான் பினாமியாக இருந்தேன்" என்று அவர் அறிவித்துவிட்டார். அப்போது நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். பினாமி செயல்பாடுகள் சட்டவிரோதமானவை.”
``நீங்கள் முதல்வரை சந்திக்க முயற்சி செய்தீர்களா?”
``பலமுறை முயற்சி செய்தேன். என் அப்பாவும் சகோதரியும் முதல்வரையும் சசிகலாவையும் சந்தித்திருக்கிறார்கள். நான் சந்தித்ததில்லை. முடிவு எடுத்தபின்பு, ஐந்து வருடங்கள் வரை பணம் தரப்படவில்லை. நாங்கள் ஜெயலலிதாவை சந்திக்க முயற்சி செய்தோம். அவர்கள் தரப்பிலிருந்து
நீங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள், இவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் என்று சொல்லப்பட்டது. இது நடந்தபிறகு ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்ரமணியம் சுவாமி ஒரு வழக்கு தொடர்ந்தார். அது ஒன்றிரண்டு வருடங்களில் முடியும் என்று எதிர்பார்த்தோம்.”
``அதாவது உங்கள் நாட்டில் நடக்கும் வழக்குகளைப் போல...”
``ஆமாம். வழக்கு முடிந்தபிறகு சொத்தை மீட்கலாம் என்று காத்திருந்தோம். வழக்கு பல வருடங்கள் சென்றது. தீர்ப்பு வருவதும் அப்பீல் செய்வதுமாகத் தொடர்ந்து ஏதோ நடந்துகொண்டிருந்தது.
தமிழ்நாட்டில் நீதிமன்றத்தை அணுக முடியாது என்று எங்களுக்குப் புரிந்துபோனது. எல்லா நீதிமன்றங்களும் முதல்வர் கட்டுப்பாட்டில் இருந்தன. சுப்பிரமணியம் சுவாமி போட்ட வழக்கு கூட அரசின் குறுக்கீடால் சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது.
காத்துக்கொண்டேயிருந்தோம், காத்துக்கொண்டேயிருந்தோம். அதற்குள் உடையார் இறந்துவிட்டார்.”
``அவர் சொன்ன பணத்தைத் தந்தாரா?”
``அவர் சொன்னபடி 7.6 கோடியைத் தந்துவிட்டார். ஆனால் இன்னும் கொஞ்சம் தருவதாக சொல்லியிருந்தார்.
வேறு சிலரும் கூடுதல் தொகைக்கு எஸ்டேட்டை வாங்கத் தயாராக இருந்தார்கள். 12 கோடி வரை தர தயாராக இருந்தார்கள்.”
``மற்ற குடும்ப உறுப்பினர்கள்? எந்த மாதிரியான அச்சுறுத்துல்களை 1992-93ல் சந்தித்தீர்கள்?”
``அமைச்சர்களிடமிருந்து தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வரும். வாரத்துக்கு ஒரு அழைப்பு வரும். அப்பாவின் தொழில்ரீதியான நண்பர்களிடம் பேசி பிரச்னை பண்ணுவார்கள். யாராவது எஸ்டேட்டுக்கு வர விரும்பினால் அவர்கள் தடுத்துவிடுவார்கள்.
எனக்கு அமைச்சர்களிடமிருந்து பல தொலைபேசி அழைப்புகள் வரும். அப்போது எனக்கு விற்க விருப்பமில்லை, நான் மறுத்துவிடுவேன். எஸ்டேட்டுக்கு குண்டர்களை அனுப்புவார்கள்.”
``தொலைபேசியில் என்ன சொல்வார்கள்?”
``முதலில், முதல்வரே இந்த சொத்தை வாங்க விரும்புகிறார், அவர் சொல்வதை எப்படி மறுக்க முடியும் என்றெல்லாம் பேசுவார்கள். அவருக்கு இந்த சொத்தை வாங்கித்தர வேண்டியது எங்கள் கடமை என்று சொல்வார்கள்.
இந்தியாவில் நீங்கள் அன்னியர்கள். இது தமிழ்நாடு, எங்கள் மாநிலம்.
உங்களுக்கு எப்படி தொல்லை தரவேண்டும் என்று எங்களுக்குத் தெரியும், இதை எப்படி செய்யவேண்டும் என்று எங்களுக்குத் தெரியும் என்று சொல்வார்கள்.
``அதனால் எஸ்டேட்டுக்கு குண்டர்களை அனுப்பத் தொடங்கினார்கள். ஒரு நாள் 15 மினி பஸ்கள் வந்தன, முழுக்க குண்டர்கள்.
குண்டர்கள் எஸ்டேட்டுக்கு வந்தார்கள். குண்டர்களிடம் சொன்னேன், "ஒரு அடி முன்னால் வந்தால் தொலைபேசியில் சென்னா ரெட்டி, அப்போதைய தமிழக ஆளுநர் அவர்களை அழைத்துப் பேசுவேன். அடுத்தது இந்திய குடியரசு தலைவரை அழைப்பேன்" என்றேன். சென்னாரெட்டியை எங்கள் குடும்பத்துக்குத் தெரியும்.”
என்றவரிடம்,
``இது நடந்தது 1994ல்..?”
``ஆமாம், அவர் அப்போதுதான் பணியில் இணைந்திருந்தார்.”
``குண்டர்கள் என்ன செய்தார்கள்?”
``அவர்கள் வருவதை நிறுத்தினார்கள். "ஜெயலலிதாவுக்காக வந்தோம். அவருக்கு இந்த சொத்து வேண்டும், அவர் பணம் கொடுத்துவிடுவார், ஏன் சிரமப்படுத்துகிறீர்கள்.
ஏன் இந்தத் தொழில் செய்ய வேண்டும்? எஸ்டேட்டை விட்டுவிட்டு வேறு எதாவது செய்யக்கூடாதா?" என்றெல்லாம் சொன்னார்கள். நான் அவர்களிடம் பேசினேன். அதே நேரம் எஸ்.பி அலுவலகத்தில் ஒரு புகாரும் கொடுக்க ஏற்பாடு செய்தேன். நான் அவர்களிடம்
பேசிக்கொண்டிருக்கும்போதே ஒருவர் காவல்துறைக்கு இதைப் பற்றி புகார் கொடுத்தார். நம்பர் ப்ளேட் இல்லாத 15 மினிபஸ்கள் வந்திருக்கின்றன எனவும் நீங்கள் எதாவது செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்”
``அப்போது உங்களைத் தொலைபேசியில் அடிக்கடி அழைத்த அமைச்சர்களின் பெயர்கள்
நினைவில் இருக்கிறதா?”
``செங்கோட்டையன்.
ராஜரத்தினமும் அழைப்பார். அவர் அமைச்சர் அல்ல. சசிகலாவுக்கு உதவி செய்தார். அவருக்கு உதவி செய்வதோடு அவரும் நிறைய பணம் ஈட்டினார்.
மற்ற அமைச்சர்கள் என் அப்பாவிடம் பேசினார்கள், என்னிடம் பேசவில்லை”
``உங்களுக்கு யார் அதிகம் ஃபோன் செய்தது?”
``ராஜரத்தினம். பலமுறை பேசினார். நான் செங்கோட்டையனுடன் நேரடியாகப் பேசவில்லை. அவர் என் அப்பாவிடம் பேசினார்.”
``இதற்கு முன்பு சசிகலா குடும்பத்தைத் தெரியுமா? ஏன் அவர்களுக்குத் தர முடியாது என்றீர்கள்? உடையாருக்கு விற்றால்
அது சசிகலாவுக்குப் போகும் என்று தெரியுமா?”
``அதற்கு முன்பு சசிகலாவைத் தெரியாது.
``திமுக அரசை நீங்கள் அணுகிப் பார்த்தீர்களா?”
``ஆமாம். நான் பேசிப்பார்த்தேன். எனக்குத் தெரியும். அவர்களால் உதவ முடிந்தால் மகிழ்ச்சியாக செய்வார்கள். இந்த உரையாடலைப் பத்து வருடங்களாக
நடத்தியிருக்கிறேன். இப்போதுகூட சசிகலா சிறை சென்றபோது கொடநாடு மீது வெளிச்சம் பாய்ந்தது. சில திமுக அமைச்சர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அவர்கள் தவறு இழைக்கப்பட்டால் உதவுவோம் என்று தெளிவாக சொன்னார்கள். இது எனக்குப் பல வருடங்களாகத் தெரியும்
இப்போது தமிழ்நாட்டின் சூழல் வேறு. கடந்த இருபது வருடங்களாக அதிமுக மட்டுமா ஆட்சியில் இருந்தது? திமுக அரசும் இருந்தது. திமுக அரசு இருந்தபோது இந்தப் பிரச்னையை சரி செய்ய எங்களுக்கு சில வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அப்போதும் மத்தியில் அதிமுகவுக்குப் பல இடங்கள் இருந்தன.
ஆகவே எதிர்க்கட்சியில் இருந்தபோதும் அவர்கள் வலுவாக இருந்தார்கள். எங்களுக்கு எதுவும் செய்ய கடினமாக இருந்தது.”
``ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் தண்டனை விதிக்கப்பட்டபோது உங்கள் உணர்வு என்ன?”
``ஆச்சரியப்பட்டேன். அந்த தீர்ப்பைத் தந்த நீதிபதியின்மேல் மிகுந்த மரியாதை வந்தது. அதற்கு முன்னால் வந்த நீதிபதிகளுக்கு மிக அதிகமான பணம் தரப்பட்டது. அவர்கள்மீது இரண்டு முறை குற்றம் சாட்டப்பட்டது. 100, 150 கோடி தரப்பட்டது என்று கேள்விப்பட்டோம்.
ஆகவே இறுதியாக வந்த ஒரு நீதிபதி பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தீர்ப்பளித்தார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் பணம் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். பெரும் ஆச்சரியம் அது. இந்தியாவின் நீதித்துறை சார்ந்த பணி மீது எனக்கு மரியாதை பெருமளவு அதிகரித்தது.
தீர்ப்பு சொன்ன நீதிபதி மேன்மையானவர். அவரது நேர்மைக்காக அவரை நாம் பாராட்டவேண்டும். 10 வருடங்களுக்கு முன்னால் வரவேண்டிய தீர்ப்பு இது. அதை அவர் நடத்தியிருக்கிறார்.”
``கொடநாடு எஸ்டேட்டைத் திரும்ப வாங்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?”
``அது என் கனவு. அதைத்தான் செய்ய விரும்புகிறேன். வாய்ப்பு இருந்தால் 100% அதை செய்வேன். கொடநாடு என் மனதுக்கு நெருக்கமானது. என் வீடு, அப்பாவின் வீடு போன்றது அது. எங்கள் குடும்பத்தின் மையப்புள்ளி. எதாவது ஒரு வழியில் பிரச்னையை சரி செய்ய முடிந்தால் அந்த சூழ்நிலையை நிச்சயம்
பயன்படுத்திக்கொள்வேன், திரும்ப எஸ்டேட்டை வாங்க விரும்புகிறேன்.”
``எந்த நம்பிக்கை உங்களை செலுத்துகிறது? நீங்கள் வழக்கு பதிவு செய்திருக்கிறீர்களா?”
``சில வழக்கறிஞர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். இன்னும் வழக்கு போடவில்லை”
``சசிகலாவைப் பற்றி ஒரு வார்த்தை, ஜெயலலிதாவைப் பற்றி ஒரு வார்த்தை?”
``ஜெயலலிதாவின் மீது பெரிய மரியாதை இருக்கிறது. அவரிடம் சில குறைகள் இருக்கலாம். இந்தியாவில் எல்லா அரசியல்வாதிகளிடமும் குறைகள் உண்டு. ஜெயலலிதா ஒரு நல்ல தலைவர்.
தமிழ்நாட்டுக்கு பெரிய மரியாதையைக் கொண்டு வந்தார். அவரது ஆளுமைத்திறனை மதிக்கிறேன்.
சசிகலா இதற்கு நேரெதிர். அரசியல் பங்களிப்பு இல்லை, தமிழ்நாட்டுக்குப் பங்களிப்பு இல்லை. மன்னார்குடி மாஃபியா உள்ளே வந்தபிறகு நல்ல அரசியல்வாதிகள் எல்லாரும் கட்சியை விட்டு வெளியேறிவிட்டார்கள்,
மன்னார்குடி குடும்ப உறுப்பினர்கள் உள்ளே வருகிறார்கள். இதையெல்லாம் சசிகலாதான் நடத்துகிறார். அவர்மீது சுத்தமாக மரியாதை இல்லை. ஜெயலலிதாவின் பெயர் கெட்டுப்போனதற்கு,
தமிழ்நாட்டின் பெயர் கெட்டுப்போனதற்கு அவர்தான் பொறுப்பு. என் தொழிலை, என்னைப் போன்ற பலரது தொழிலை நியாயமற்ற முறையில் கெடுத்திருக்கிறார்.”
``அவரைப் பற்றி ஒரு வார்த்தை?”
``பேரிடர்.
அவரோடு தொடர்புடைய எல்லாருக்கும்.”
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கொடநாடு விசாரணையில் சிக்கும் 5 மாஜிகள்!
கொடநாடு விவகாரத்தில் அந்த எஸ்டேட்டின் மேனேஜர் நடராஜன் மற்றும் கொடநாடு பகுதி அடங்கிய பத்திரப்பதிவுத்துறை உயரதிகாரி செல்வகுமார் இருவரும்,
தற்பொழுது நடைபெறும் மேலதிக விசாரணையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படலாம் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.
கொடநாட்டில் இருந்த ஓ.பி.எஸ்., நத்தம், எடப்பாடி, வைத்திலிங்கம் ஆகிய அமைச்சர்களின் சொத்துக்கள் பற்றிய ஆவணங்களை குறிவைத்துதான் கொள்ளை நடந்திருக்கிறது.
இந்த சொத்துக் களைப் பற்றி தெரிந்த உயிரோடிருக்கும் நபர் சசிகலாதான். ஜெ. ஆட்சிக் காலத்தில் கப்பம் கட்டாமல் ரகசியமாக சொத்து சேர்த்த அமைச்சர்களின் சொத்துக்களை அவர் களிடமிருந்து பிடுங்கியது ஜெ.வும் சசியும்தான்.
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’என்ற மாபெரும் தத்துவத்தை மனித குலத்திற்கு வழங்கிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17.
அந்தப் பெருமைமிகு தந்தையின் தகுதிகள் நிறைந்த தனயனாக - தாய்த்திருநாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தலைமகனாம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15.
தந்தை பெரியாரின் தத்துவங்களை, ஜனநாயக - அரசியல் களத்தில் வென்றெடுத்திட, திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் தோற்றுவித்த நாளும் செப்டம்பர் 17.
அறிஞர் அண்ணாவை ஒருதரம் “தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா?” என்று கேட்டார்களாம்.
கொஞ்சமும் அயராமல் அவர், “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்?” என்றாராம்.
"because" என்கிற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா?” என்று கேட்டதும் அறிஞர் அண்ணா அவர்கள் சுரீரென்று அடித்த பன்ச் :
‘No sentence ends with because, because, because is a conjunction’
ஓராண்டுக்கு முன், ஆட்சிக்கு வந்தேன்.
தாய்த் திருநாட்டுக்கு 'தமிழ்நாடு என்ற
பெயர் மாற்றம் உட்பட முக்கியமான
சில காரியங்களைச் செய்திருக்கிறேன்,
- இதையெல்லாம் பார்த்துவிட்டு
சிலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது.
'இவர்களை விட்டுவைக்கலாமா?
ஆட்சிவைக் கலைக்க வேண்டும்' என்று
நினைக்கிறார்கள். 'முடியுமா?' என்று நான்
சவால்விட மாட்டேன். உங்களால் முடியும்.
ஆனால், ஆட்சியைக் கலைத்துவிட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து, அன்ணாதுரை கொண்டுவந்தவற்றையெல்லாம்
மாற்ற வேண்டும் என்று எண்ணும்போதே,
அண்ணா ! - தமிழ்ப் பண்பாட்டுக்குப் புத்துயிரளித்தவர்.
நான் அவரை நேரில் பார்ப்பதற்குப் பல ஆண்டுகள் முன்னரே எழுத்து வழியாக என் வாழ்க்கைக்குள் வந்து விட்டார்.எங்களுடைய அரசியலுணர்வு மிகுந்திருந்த காலகட்டம்.
நான் 10 வயதிலேயே 'திராவிடநாடு', 'முரசொலி' வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.
பெரும்பாலான பையன்களுக்குப் பாடப்புத்தகங்களைத் தாண்டி இப்படியான வாசிப்பு இருக்கும். 1962 தேர்தலில் அண்ணா தோற்றபோது நானும் என்னுடை வகுப்பு நண்பர்களும் பள்ளி மைதானத்தில் நின்று அழுதது நியாபகம் வருகிறது. அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தோம். அப்படியென்றால் பாருங்கள்.