அறிக்கை : - சங்கத்தமிழ் இலக்கியங்கள் உட்பட எந்தவொரு தமிழ் நூல்களின் தொகுப்பிற்கும், #திராவிடக்_களஞ்சியம் எனப் பெயரிட முனைந்தால் கடும் போராட்டங்களை எதிர்கொள்ளும் சூழல் ஏற்படும்!
#சீமான்_கண்டனம்
#நாம்_தமிழர்_கட்சி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் - 1/34
வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில் தமிழ் நூல்களைத் தொகுத்து, அவற்றை ‘திராவிடக்களஞ்சியம்’என அடையாளப்படுத்தப்போவதாக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பெருமைமிக்கத் தொல்தமிழர் வரலாற்று அடையாளங்கள் யாவற்றையும் தன்வயப்படுத்தும் திராவிடத்திரிபுவாதிகள் தற்போது தமிழ் - 2/34
நூல்களின் மீதும் கைவைக்க முனைந்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழர்களை திராவிடர்கள் என்பது, தமிழ்நாட்டைத் திராவிட நாடு என்பது, தமிழ் இலக்கணத்தைத் திராவிட இலக்கணம் என்பது, தமிழர் திருநாளான பொங்கலை திராவிடர் திருநாள் என்பது, தமிழ் மாமன்னன் கரிகால் பெருவளவனைத் - 3/34
திராவிட மன்னன் என்பது, தமிழர் கட்டிடக்கலையைத் திராவிடக்கட்டிடக்கலை என்பது, தமிழர் நாகரீகமான சிந்துசமவெளி நாகரீகத்தை திராவிட நாகரீகம் என்பது, தமிழ் கல்வெட்டுக்களைத் திராவிடக்கல்வெட்டுக்கள் என்பது, தமிழர் பண்பாடான கீழடியைத் திராவிடப்பண்பாடெனத் திரிப்பது என தமிழர்களின் - 4/34
மொழி, இனம், நிலம், கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, நாகரீகம் தொடர்பான தொன்ம அடையாளங்கள் யாவற்றையும் அழித்து, அவற்றின் மீது திராவிட முத்திரை குத்தியது போதாதென்று, தற்போது, தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பதற்கான வரலாற்று பெருஞ்சான்றுகளாகவும், யாராலும் மறுக்கமுடியாத தரவுகள் - 5/34
நிறைந்த ஆவணங்களாகவுமுள்ள தமிழ் நூல்களைத் ‘திராவிடக்களஞ்சியம்’ எனும் பெயரில் அடையாள மாற்றம் செய்ய முயல்வது திராவிடத்திருட்டுத்தனத்தின் உச்சமாகும். இந்நாடு தமிழ்நாடு; இங்கு வாழும் மக்கள் தமிழ் மக்கள்; மொழி தமிழ்மொழி; அதில் எழுதப்பட்டவை யாவும் தமிழ் இலக்கியங்கள்; அந்த - 6/34
நூல்களைத் தொகுக்கின்றபோது மட்டும் எப்படித் திராவிடக்களஞ்சியமாக மாறும்? எனும் கேள்விக்கு எவரிடமும் விடையில்லை.

தமிழர் தலைவர், தமிழினத் தலைவர் என்று அடைமொழிகளைத் தங்களுக்கு வைத்துக்கொண்டு, தமிழ், தமிழர், தமிழ்நாடு எனப்பேசி வாக்குகளைப் பெற்று வென்று, ஆட்சியதிகாரத்தை - 7/34
அடைந்துபிறகு, திராவிட இனம் , திராவிடக் களஞ்சியம், திராவிடச் சிறுத்தை என்று பேசுவது திட்டமிட்ட தமிழர் அடையாள அழிப்பு வேலையாகும். இப்போது திராவிடம், திராவிடர் என்று பேசுவோர், தேர்தலுக்கு முன் வாக்கு கேட்டு செல்லும்போதோ, தங்கள் கட்சி மாநாடுகளுக்கு அழைக்கும்போதோ - 8/34
திராவிடர்கள் என்று ஒருபோதும் கூறுவதில்லையே ஏன்? திராவிட இனம் கூறிவிட்டு நாட்டின் பெயரை மட்டும் திராவிட நாடு என்று மாற்றாமல் ஏன் தமிழ்நாடு என்று மாற்றினீர்கள்?

அந்நியர்கள் தமிழர் நிலத்தில் ஆளுகை செய்யவும், அதிகாரம் செலுத்தி தமிழர்களை அடிமைப்படுத்தவும் தமிழர்கள் மீது - 9/34
திணிக்கப்பட்ட அரசியல் விலங்குதான் திராவிடமாகும். அடிப்படையில், திராவிடர்கள் எனக் கூறப்படுவோர்க்கு தனித்த அடையாளங்கள் ஏதுமில்லாததால், தமிழர்களது மொழி, இன, தேச, பண்பாட்டு, வரலாற்று அடையாளங்களைத் திருடித் தன்வயப்படுத்துகிற சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர். தற்போதைய - 10/34
செயல்பாடும் அதன் நீட்சியேயாகும். மொத்தத்தில், தமிழர்களை திராவிடர்கள் எனத் தவறாக அடையாளப்படுத்தியது ஒரு வரலாற்றுப்பேரவலமாகும்.

தமிழர்களை திராவிடர்கள் என்பதற்கு எடுத்தாள்கிற ஆதாரங்கள் யாவும் மனுஸ்மிருதி உள்ளிட்ட சமஸ்கிருத நூற்களின் குறிப்புகள் என்பதே, திராவிடம் என்பது - 11/34
ஆரியத்தின் கள்ளக்குழந்தை என்பதை உறுதிப்பட நிறுவுகிறது. ஆங்கிலேயர்கள் எப்படித் தங்கள் உச்சரிப்புக்கு ஏற்றவாறு தமிழக ஊர்களின் பெயர்களை மாற்றினார்களோ, அப்படித்தான் ஆரியர்கள் கையாண்ட திராவிட உச்சரிப்பும். அதுவும் விந்திய மலைக்குத் தெற்கே வாழ்ந்த ஆரியர்களைக் குறிக்கவே - 12/34
திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தினர். எனவே, சொல்லளவில் பார்த்தாலும், பொருளளவில் பார்த்தாலும் திராவிடம் என்பது தமிழருக்கு எதிரானதேயாகும். தமிழர் அல்லாத வடவர்கள் செய்த உச்சரிப்புப்பிழைக்காக அதை ஒரு தேசிய இனத்தின் மீது திணிப்பது வரலாற்றுப்பெருங்கொடுமை. நீதிக்கட்சியின் - 13/34
பெயரைத் திராவிடர் கழகம் என்று மாற்றியபோதே அதற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துக் கி.ஆ.பெ விசுவநாதம், அண்ணல் தங்கோ உள்ளிட்ட தமிழினத் தலைவர்கள், ‘தமிழர் கழகம்’ என்று பெயர் மாற்ற வலியுறுத்தி உரிமைக்குரல் எழுப்பினர். ஆனால், நீதிக்கட்சியில் பிறமொழியாளர்கள் ஆதிக்கம் - 14/34
அதிகமிருந்த அக்காலத்தில் தமிழர்களின் உரிமைக்குரல் எடுபடாமலே போனது. ஒரு குறிப்பிட்ட சிலரின் வாழ்வுக்கும், வளத்திற்கும் பல்லாயிரம் ஆண்டுகாலமாகத் தொடர்ந்துவரும் ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தையே மாற்றுவதென்பது தமிழ் மண்ணிற்கும், இனத்திற்கும் செய்கிற பச்சைத்துரோகமாகும் - 15/34
‘வடமொழியை நட்பாகக்கொள்ளும் திராவிடத்திற்கும், பகையாகக்கொள்ளும் தமிழுக்கும் எந்தத் தொடர்புமில்லை. பால் தயிராய் திரிந்தப்பின் மீண்டும் பாலாகாததுபோல, வடமொழி கலந்து ஆரியமயமாகிப்போன திராவிடம் மீண்டும் தமிழாகாது. வடமொழிக் கலப்பால் திராவிடம் உயரும்; தமிழ் தாழும். திராவிடம் அரை - 16/34
ஆரியமும், முக்கால் ஆரியமுமாதலால் அதனோடு தமிழை இணைப்பின், அழுகலோடு சேர்ந்த நற்கனியும் கெடுவதுபோல், தமிழும் கெடும். தமிழனும் கெடுவான். பின்பு, தமிழுமிராது; தமிழனுமிரான். இந்தியா முழுவதும் ஆரியமயமாகி விடும். தமிழ் வேறு; திராவிடம் வேறு என்பதுடன் ஆரியமும் திராவிடமும் ஒன்றேயென - 17/34
அறிக! தமிழ் என்னும் சொல்லிலுள்ள உணர்ச்சியும், ஆற்றலும் திராவிடம் என்னும் சொல்லில் இல்லை. தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றி, திராவிடம், திராவிடன், திராவிடநாடு என்ற சொற்கள் ஒலித்தல் கூடாது. திராவிடம் என்பதே தீது! தீது!’ என எச்சரிக்கிறார் மொழிஞாயிறு ஐயா - 18/34
தேவநேயப்பாவாணர்.

‘தமிழ்நாடு’ என்று கூறத்தவறி, ‘திராவிட நாடு’ என உச்சரித்ததால் தமிழர்களின் தேசிய இன உணர்ச்சி மழுங்கடிக்கப்பட்டது. வழக்கொழிந்த வடமொழிகூட சமஸ்கிருத மொழிக்குடும்பம் என உலகரங்கில் பெருமையாக அழைக்கப்படும்போது, அதைவிடப் பழம்பெருமை வாய்ந்த, தொன்றுதொட்டு - 19/34
இன்றுவரை வழக்கத்திலுள்ள உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாக விளங்கக்கூடிய தமிழ்மொழிக்குத் தமிழ்மொழிக்குடும்பம் என்று வழங்கப்பெறாமல், ‘திராவிட மொழிக்குடும்பம்’ எனத்திரித்து வழங்கப்பெற்றதால் தமிழ்மொழி தன் பெருமையையும், சிறப்பையும் இழந்து நிற்கிறது. ‘திராவிட இனம்’ என்ற சொல்லே - 20/34
தமிழர்களை உளவியலாகச் சிறைப்படுத்தி முடக்கிப்போட்டது. மொழிச்சிதைவுக்கே வடவர்களுக்கு எதிராகப் போர் தொடுத்திட்ட தமிழினம், ஈழ நிலத்தில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டப்போதும் நெட்டை மரங்களென அசைவற்று நின்றது . தமிழர்கள் இன உணர்ச்சியை அடையவிடாது தடுத்துக்கெடுத்ததில் திராவிட - 21/34
மறைப்புகளுக்கு/ முதன்மைப்பங்குண்டு. தமிழ், தமிழர், தமிழர் நாடு என உச்சரிக்கத்தவறி, அடையாளத்தைத் தொலைத்து, இன உணர்வை இழந்ததால், இனப்படுகொலையையே சகித்துக்கொள்ளும் அளவுக்குப் பேரிழப்பில் தமிழர்களைக் கொண்டுபோய் நிறுத்தியது.

ஆரிய அதிகார வர்க்கம், தமிழ் மொழியிலுள்ள ஊர்களின் - 22/34
பெயர்களைச் சமஸ்கிருதமாக மாற்றியது. தமிழர் தெய்வங்களின் பெயர்களைச் சமஸ்கிருதமாக மாற்றியது. மக்களின் பெயர்களும் சமஸ்கிருதமாக மாறியது. மக்கள் பெயரும், ஊர்களின் பெயரும், தெய்வங்களின் பெயரும் வடமொழியாக்கப்படும்போது, அந்நிலமே தமிழர் அல்லாத ஆரியர்கள் வாழ்ந்த இடங்களாக - 23/34
அடையாளப்படுத்தக்கூடிய ஆபத்துண்டு. எனவே, பெயர் மாற்றம் என்பது வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல. அது நம் அடையாள அழிப்பு. வரலாற்றுத்திரிபாகும். மொழியிலுள்ள பெயர்களை மாற்றுவதே அடையாள அழிப்பென்றால், திராவிடம், திராவிடர், திராவிட நாடு எனக்கூறி, தமிழ் மொழியின், இனத்தின் - 24/34
“Un roll”@threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel Gunasekaran.

Sakthivel Gunasekaran. Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @sakthi_racer

14 Sep
கர்நாடக அரசு ரகசியமாக கட்டிய அணையை #நாம்_தமிழர்_கட்சியின் பொருப்பாளர்கள் பார்வையிட்ட புகைப்படம் மற்றும் காணொலி! - 1/3
கர்நாடக அரசு ரகசியமாக கட்டிய அணையை #நாம்_தமிழர்_கட்சியின் பொருப்பாளர்கள் பார்வையிட்ட புகைப்படம் மற்றும் காணொலி! - 2/3
கர்நாடக அரசு ரகசியமாக கட்டிய அணையை #நாம்_தமிழர்_கட்சியின் பொருப்பாளர்கள் பார்வையிட்ட புகைப்படம் மற்றும் காணொலி! - 3/3
Read 4 tweets
11 Sep
உன்னையும் என்னையும் போல் அந்த இளம் பிள்ளைகள் வானுயர்ந்த பகழ்மிக்க பல்கழைகழகங்களில் பட்டம் பெற்றவர்கள் அல்ல, ஆனால் வானத்தை விடவும் புகழ்மிக்க லட்சியங்களுடன் வாழ்ந்தனர்.
எந்த நடிகனையும் தலைவராக கொண்டாடியதில்லை, ஆனால் உன்னதமான ஒருவனை அவர்கள் தலைவராக கொண்டிருந்தனர். அவர்கள் - 1/4
திரையரங்குகளில் சத்தம் போட்டதில்லை, பதுங்கு குழிகளில் நிசப்தமாய் இருந்தவர்கள். விக்கெட்டுகள் விழுந்துவிட்டதற்க்காக பொறுமியவர்களல்ல, விழும் பிணங்களுக்கிடையே ரவைகளை பொறுக்கிக் கொண்டிருந்தவர்கள். அவர்கள் பொறியியல் படித்தவர்களல்ல, ஆனால் மின்சாரம் உற்பத்தி செய்யவும் வாகனங்களை - 2/4
தயாரிக்கவும் அவர்களுக்கு தெரியும்.
விடுதலை வேள்விக்கான மூலப் பொருட்களிலிருந்து முழுமையான தளவாடங்கள் வரை அவர்களே தயாரித்தனர்.
அவர்கள் மாலுமிகள அல்ல கப்பல் ஓட்டினர், அவர்கள் விமானிகளல்ல விமானம் இயக்கினர். அவர்கள் தத்துவம் படித்தவர்கள் அல்ல தத்துவமாகவே வாழ்ந்தவர்கள் - 3/4
Read 5 tweets
11 Sep
அறிவிப்பு : - செப். 11, பாட்டன் பாரதியார், சமூக நீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவைப்போற்றும் நிகழ்வு - தலைமையகம் (சென்னை)
#நாம்_தமிழர்_கட்சி

பெரும்பாவலன் நமது பாட்டன் பாரதியார் அவர்களின் 100ஆம் ஆண்டு நினைவுநாளும், சமூக நீதிப் போராளி நமது ஐயா இம்மானுவேல் சேகரனார் - 1/3
அவர்களின் 64ஆம் ஆண்டு நினைவுநாளுமான 11-09-2021 சனிக்கிழமையன்று, காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நினைவைப்போற்றும் நிகழ்வு நடைபெறவிருக்கின்றது.

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் - 2/3
பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

#தலைமை_அலுவலகச்_செய்திக்குறிப்பு
#நாம்_தமிழர்_கட்சி - 3/3
Read 4 tweets
9 Sep
சீமானை வேட்டையாடாமல் விடமாட்டோம் நாங்கள்! சீமான் தான் பிரச்சனை, தமிழ் பேசும் தெலுங்கர்கள் நாங்கள் வேட்டையர்கள்...

அண்ணன் சீமானை பகிரங்கமாக மிரட்டும் திராவிடம் என்ற போர்வைக்குள் 50 ஆண்டுகளாக நாங்கள் தமிழர்கள் என்று சொல்லி கொண்டிருந்த திருடர்கள் தற்போது - 1/5
தங்கள் உண்மையான கொடூர முகத்தை காட்டி மிரட்டுகிறார்கள் அவர் யார் என்று தெரியாமல்...

32 நாடுகள் ஒன்று சேர்ந்து படையெடுத்து வந்த போதும் எதிர்த்து நின்ற புறநானூற்று மாவீரன் மே.தகு.வே.பிரபாகரனின் தம்பிடா சீமான் - 2/5
சிங்கள அரசு போரில் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்த வேலையில் அஞ்சாமல் சென்று தாய்ப் புலியை சந்தித்து அவரிடம் ஆயுதப் பயிற்சியும் கற்று வந்த மானமறத் தமிழன்டா #செந்தமிழன்_சீமான் - 3/5
Read 6 tweets
9 Sep
உயர்திரு மாவட்ட ஆட்சித்தலைவரம்மா அவர்கள் உயர்திரு மாவட்ட காவல் கண்காணிப்பாளரம்மா அவர்கள் மாவட்ட வனத்துறை வனவிலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகள் அனைவருக்கும் எனதன்பான வேண்டுகோளுடன் கூடிய வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻

இலுப்பூர்தாலுகா அன்னவாசல்ஒன்றியம் வயலோகம் குடுமியான்மலை - 1/4
ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு அரசு அண்ணாபண்ணை மற்றும் தோட்டக்கலைதுறை க்கு சொந்தமான பகுதிகளிலும் தைலமரக்காடுகள் உள்ள புல்வயல் ஊராட்சி பகுதிகளிலும் "மான்கள்" நிறைய நடமாடி வருகிறது கூட்டமாக வாழ்ந்துவரும் மான்களை அப்பகுதி மக்கள் அனைவரும் கண்டு வருகின்றனர் - 2/4
இந்நிலையில் மான்களை வேட்டையாடும் நோக்கில் சில சமூகவிரோதிகள் இரவுபகலென்று பாராமல் குறிப்பாக இரவு நேரங்களில் முகக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் துப்பாக்கிகளுடன் இப்பகுதிகளில் சுற்றி பதுங்கி மான்களை சுட்டு வேட்டையாட வருகின்றனர்.

எனவே உயர்திரு மாவட்ட ஆட்சித்தலைவர் - 3/4
Read 5 tweets
8 Sep
முதல் முறையாக ஓர் அரசியல்வாதி மக்களுக்கு இலவசங்கள் கொடுத்து, மதுக் கடையை திறந்து விட்டு இளைஞர்களை குடி போதைக்கு அடிமைப்படுத்தி அவர்களை உழைப்பிலிருந்து வெளியற்றியது தான் இந்த இரு பெரும் திராவிட கட்சிகளின் சாதனை என்று உண்மை பேசியுள்ளார் 👇👇👇

#அண்ணன்_சீமான் - 1/4
இந்த இரு பெரும் கட்சிகள் தேர்தல் வரும் போது மதுவை தடை செய்வோம் என்று புழுகுவார்கள், ஆனால் மூடவே மாட்டார்கள், ஏன்?சாராய ஆலை வைத்திருப்பவர்கள் இந்த இரு திராவிட கட்சிகள் டாஸ்மாக் கொள்முதல் பூராவும் இவர்கள் ஆலையில் இருந்து தான் சப்ளை கொள்முதல் செய்யப்படுகிறது - 2/4
இவர்களுக்குள் திமுக & அதிமுக நல்ல புரிந்துணர்வு உள்ளது வெளில் கீரியும் பாம்பும் போல நடிப்பாங்க, ஆனா யார் ஆட்சிக்கு வந்தாலும் மதுவை அரசு இவர்களின் சாராய ஆலையில் இருந்து அரசு கொள்முதல் செய்யும் இதிலேயே கொள்ளை லாபம். அடிப்பார்கள், அது போக பார் வைக்க லஞ்சமோ லஞ்சம் - 3/4
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(