#IamaKiller2016#Polish#PCMreview "Memories of Murder பட பாணியில் அருமையான க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை.கண்டிப்பாக 18+.போலந்து நாட்டில் 1970 களில் நடந்த உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.கதை சுருக்கம்:ஆரம்ப காட்சியில் ஒரு பெண்
ரயில்வே டிராக்கில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.யார் என்று பார்க்கும் போது அவர் அந்த நகரத்தின் உயரிய அரசு பதவியில் இருப்பவர் என்று தெரிய வருகிறது.அதுவும் மண்டையில் இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிகிறது.இதே பாணியில் பல கொலைகள் முன்னரே நடக்கிறது
இதற்கு பின்னும் நடக்கிறது.3 வருடங்களாக தேடி வருகிறார்கள்.அதுவும் தான் கொலை செய்யப்போகிறேன் என்று கடிதம் அனுப்பிவிட்டு உடனே அதை போல் கொலை செய்கிறார்.கொலையாளியை பிடித்தார்களா இல்லையா?ஏன் கொலை செய்கிறான்?என்ற கேள்விகளுக்கு பதில் கூறுகிறது இப்படம்.திரைக்கதை பொறுத்தவரை மிகவும் மெதுவாக
தான் நகரும்.பரபரப்பாக வேகமாக நகர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இப்படம் இல்லை.ஒரு நல்ல பக்காவான க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர்.திரில்லர் ரசிகர்கள் தவறவிட கூடாத படம்.படத்தில் ஆபாச காட்சிகள்,இரத்தம் தெறிக்கும் காட்சிகள் இருப்பதால் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க வாய்ப்பே இல்லை.
#vivonetflix#PCMreview "குழந்தைகளுடன் பார்க்கக்கூடிய அருமையான படம்".தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - Netflix. டெலிகிராம் - பயோ/DM.இசையில் வல்லுவரான ஒரு தாத்தா மற்றும் அவருடன் இருக்கும் ஒரு குட்டி குரங்கு இருவரும் தெருவில் பாடி பணம் சம்பாதிக்கிறார்கள்.சில நிமிடங்கள்
கழித்து தாத்தாவுக்கு ஒரு கடிதம் வருகிறது.அதில் அவரது பழைய கால தோழி இவரை அவர் நடத்தும் இசை நிகழ்ச்சிக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்.இவரும் செல்லலாம் என்று நினைக்கிறார்.ஆனால் அந்த குட்டி குரங்கிற்கு இது பிடிப்பதில்லை.திடீரென தாத்தா இறந்து போக,இசை நிகழ்ச்சிக்கு சென்று பாட வேண்டிய
பாடல் வரிகள் அடங்கிய காகிதம் மற்றும் பழைய புகைப்படங்கள் ஆகியவை அங்கு இருப்பதை குரங்கு பார்க்கிறது.தாத்தாவின் கனவை நிறைவேற்ற குரங்கு பயணம் மேற்கொள்கிறது.அங்கு சென்றதா?பாடலை பாடியதா?என்பதே மீதிக்கதை.கிகான்ஜோ என்ற குட்டி குரங்குடன் ஒரு சிறுமியும் பயணம் செய்வாள்.இருவரின் உரையாடல்
#unsolvedmysteries#PCMreview "விடை தெரியா மர்மங்கள் : பாகம் 3".இன்று நாம் பார்க்க போவது 62 ஆண்டுகளாகியும் இன்னும் மர்மமாக நீடிக்கும் 9 பேர் மரணம் அடைந்த "டயட்லோவ் பாஸ்"நிகழ்வு பற்றி தான்.ஜனவரி 23,1959 அன்று Ural Polytechnic Institute கல்லூரியை சேர்ந்த 10 பேர் ரஷ்ய நாட்டில்
இருக்கும் Sverdlovsk Oblast பகுதியில் வடக்கு Ural மலை தொடர்ச்சியில் இருக்கும் kholat Syakhl என்ற மலைக்கு செல்ல முடிவெடுக்கிறார்கள்.இவர்கள் அனைவரும் மலையேறுதலில் கிரேடு 2 சான்றிதழ் பெற்றவர்கள்.கிரேடு 3 சான்றிதல் பெற 300 கிலோமீட்டர் பயணம் செய்திருக்க வேண்டும்.எனவே அச்சான்றிதலை
பெற Sverdlovsk பகுதி அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி மிகவும் கடினமான 10 கிலோமீட்டர் நீளமுள்ள பாதையாக இருக்கும் Oterten என்ற இடத்திற்கு செல்ல முடிவு செய்கிறார்கள். இக்குழுவிற்கு இகோர் டயட்லோவ் (23) என்ற மாணவர் தலைமை தாங்குகிறார்.ஜனவரி 25 ஆம் தேதி ரயில் மூலம் இவ்டேல் என்ற இடத்தை
#unsolvedmysteries#PCMreview "விடை தெரியாத மர்மங்கள் பகுதியில் இரண்டாவதாக நாம் இன்று பார்க்கப்போவது 7 வருடங்களுக்கு முன் காணாமல் போன மலேசிய விமானம் பற்றிய மர்மம் தான்".மார்ச் 8,2014 ஆம் ஆண்டு இரவு 12.42 மணிக்கு போயிங் 777 ER 200 ரக விமானமான MH370 விமானம் மலேசியாவின் கோலாலம்பூர்
விமான நிலையத்தில் இருந்து சீனாவின் பீஜிங் விமான நிலையத்திற்கு புறப்படுகிறது. விமானத்தில் 227 பயணிகள்,10 கேபின் குழுவினர்,2 பைலட்டுகள் என மொத்தம் 239 நபர்கள் பயணிக்கிறார்கள்.பயணம் தூரம் 5.30 மணி நேரம்.விமானத்தை 53 வயதான ஜஹாரி அகமத் என்ற முதல் பைலட்டும் 27 வயதான ஃபரிக் ஹமீத் என்ற
இரண்டாம் பைலட்டும் ஓட்டுகிறார்கள்.சரியாக இரவு 1:08 மணிக்கு விமானம் தெற்கு சீன கடல் பகுதியில் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கிறது என்று விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கிறார்.மலேசிய கட்டுப்பாட்டு அறை விமானியை தொடர்பு கொண்டு "நீங்கள் இன்னும் ஒரு நிமிடத்தில்
#ThuglaqDarbar#PCMreview "அரசியல் டிராமா" ஆபாச காட்சிகள் இல்லை.OTT - நெட்பிளிக்ஸ். டெலிகிராம் - பயோ/DM. ஹீரோ விஜய் சேதுபதி தனி ஒருவன் படத்தில் வருவது ஒரு அரசியல் கூட்டத்தில் பிறக்கிறார்.அந்த படத்தில் வருவது போல் இதிலும் அரசியல் கட்சி தலைவரான பார்த்திபன் ஹீரோவுக்கு சிங்காரவேலன்
என்று பெயர் சூட்டுகிறார்.இதனால் சிறுவயதில் இருந்தே அரசியலில் பெரிய ஆளாக வேண்டும் என்று முடிவு செய்கிறார்.இவரின் தங்கச்சியான மஞ்சிமா மோகன் பிறந்த உடனே தன்னுடைய அம்மா இறந்து விடுவதால் ஹீரோ விஜய் சேதுபதி மஞ்சிமா மோகனுடன் பேசுவதில்லை.பெரிய அரசியல் கட்சி தலைவரான பார்த்திபனிடம்
சேர்ந்து அப்படியே படிப்படியாக முன்னேற முடிவு செய்கிறார்.இதற்கு இவர் என்னவெல்லாம் செய்தார்,யாருடைய பகையை சம்பாதித்தார்? இவருக்குள் ஏற்படும் பிரச்சனை என்ன?இவரின் எண்ணம் நிறைவேறியதா?என்பதே மீதிக்கதை.விஜய் சேதுபதி வழக்கம் போல் நடிப்பில் அசத்திவிட்டார்.படத்தின் கதைக்களம் சத்யராஜ்
#MalignantMovie#PCMreview "வித்தியாசமான மற்றும் தரமான ஹாரர் திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை (திரையரங்கில் தமிழ் டப்பிங்குடன் ஓடுகிறது).கண்டிப்பாக (18+).OTT - HBO Max. டெலிகிராம் - பயோ/DM.ஹீரோயினுக்கு கனவில் பலர் கொல்லப்படுவதை போல் கனவு வருகிறது.அடுத்த நாள் காலை தான் தெரிகிறது
இவர் கண்டது கனவு அல்ல,நிஜம் என்று.ஒரு மர்மமான உருவம் ஹீரோயினை கனவில் இருப்பதை போல் நிகழ்த்தி கொலை நடக்கும் இடத்திற்கு கனவின் வழியே அழைத்து சென்று தான் செய்யும் கொலையை ஹீரோயினை நேரில் பார்க்க வைக்கிறது.அதன் அடிப்படையில் முதல் கொலையாக ஹீரோயினின் கணவர் கொல்லப்படுகிறார்.காவல்துறை
ஹீரோயின் வீட்டிற்க்கு வந்து விசாரிக்க,ஹீரோயின் மேல் சந்தேகப்படுகிறது போலீஸ்.இப்படி தொடர்ச்சியாக கொலை நிகழ,ஹீரோயின் மீது சந்தேகம் வழுவாகிறது.இதில் இருந்து ஹீரோயின் தப்பித்தாரா?கொலை செய்யும் அந்த மர்மமான உருவம் எது?ஏன் கொலை செய்கிறது?ஏன் ஹீரோயினுக்கு இவ்வாறு நிகழ்கிறது?என்ற பல
#BhootPolice#PCMreview "ஹாரர் திரில்லர்".தமிழ் சப்டைட்டில் இருக்கிறது.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - ஹாட்ஸ்டார். டெலிகிராம் - பயோ/DM.ஹீரோக்கள் சைப் அலி கான் மற்றும் அர்ஜுன் கபூர் இருவரும் அண்ணன் தம்பிகள்.சிறுவயதில் இவர்களது அப்பா இறந்து விடுகிறார்.இவர் அப்பா பேய் ஒட்டும் தொழில்
செய்கிறார்.அப்பா இறந்த பின்பு மகன்கள் இருவரும் அத்தொழிலை செய்கிறார்கள்.அப்பா உண்மையாக மந்திர தந்திரங்கள் கற்று பேய் ஓட்ட,மகன்கள் இருவரும் பேய் ஒட்டுகிறோம் என்று கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள்.ஒரு நாள் ஹீரோயின் யாமி கவுதம் இவர்களிடம் வந்து "தன்னுடைய தேயிலை
தோட்டத்தில் ஏதோ ஒன்று இருப்பதாகவும்,27 வருடங்களுக்கு முன்பு உங்கள் அப்பா வந்து ஓட்டினார்.ஆனால் மறுபடியும் அது வந்துவிட்டது.எனவே நீங்கள் தான் அந்த பேயை ஓட்ட வேண்டும்" என்று கூறி இருவரையும் ஹீரோயினின் வீட்டிற்க்கு அழைத்து வருகிறார்.இதற்கு பின் பேயை ஒட்டினார்களா?எதற்காக பேய் அங்கு