#MysteriesUnsolved#PCMreview தொடர்ந்து படங்களை பற்றி எழுதி வருவதால் ஒரு மாறுதலுக்கு வரலாற்றில் இன்னும் தீர்க்கப்படாத மற்றும் பல மார்மான விஷயங்களை பற்றியும் இனிமேல் பார்க்க போகிறோம்.இன்று நாம் பார்க்க போவது அமெரிக்க அரசாங்கத்தை அலற வைத்த ஒரு மாபெரும் திருடனை பற்றி தான் பார்க்க
போகிறோம்.அவர் பெயர் "D.B.Cooper".இவரை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும்.பல செய்திகளை படித்திருப்பீர்கள்.இப்பொழுது ஆரம்பம் முதல் இறுதி வரை என்ன நடந்தது என்பதை பற்றி ஒரு விரிவான அலசல் தான் இந்த தொகுப்பு.நவம்பர் 24,1971 அன்று கருப்பு உடை அணிந்த நபர் ஒருவர் அமெரிக்காவின் போர்ட்லேண்ட்
சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீயட்டில் விமான நிலையத்திற்கு ஒரு வழி பயணமாக செல்கிறார்.36 பயணிகள்,6 விமான ஊழியர்கள் என மொத்தம் 42 பேருடன் போயிங் 305 விமானத்தில் ஏறுகிறார்.கடைசி வரிசையில் இருக்கும் மூன்று இருக்கைகளில் நடு இருக்கையில் அமர்கிறார்.சிறிது நேரம் கழித்து விமான
பணிப்பெண் புளோரன்ஸிடம் மது மற்றும் சிகரெட் கேட்கிறார்.1970 காலகட்டத்தில் அனைத்து விமானத்திலும் பயணிகள் புகைக்க அனுமதிக்கப்பட்டார்கள்.பின் பல்வேறு பாதுகாப்பு காரணங்களை காட்டி 2000 ஆம் ஆண்டு புகை பிடிக்க சர்வதேச விமான ஆணையம் தடை விதித்தது.புகை பிடித்த பின்பு மறுபடியும் அப்பெண்ணை
அழைத்து ஒரு கடிதம் கொடுக்கிறார்.அதில் "என்னிடம் ஒரு பாம் உள்ளது.எனவே அமைதியாக என் பக்கத்தில் வந்து அமரவும்"என்று இருக்கிறது.உடனே பணிப்பெண் புளோரன்ஸ் சென்று அமர்கிறார்.தன்னுடன் கொண்டு வந்த ப்ரீப் கேசில் இருக்கும் பாமை காட்டுகிறார்.பின்பு தனக்கு "2 லட்சம் டாலர்கள் வேண்டும்.கூடவே 4
பாராசூட்கள்(2 முன்பக்கம் 2 பின்பக்கம்)வேண்டும்.தரையிறங்கிய பின்பு அங்கு முழுதாக எரிபொருள் நிரப்பிய லாரி நிற்க வேண்டும்.இதில் ஏதாவது செய்து என்னை பிடிக்க நினைத்தால்,பெரிய விபரீதம் நடக்க நேரிடும்.2 லட்சம் டாலர் பணம் மாலை 5 மணிக்குள் வேண்டும்" என்றும் கூறுகிறார்.புளோரன்ஸ் இதை பற்றி
பைலட் மற்றும் சீயாட்டில் காவல்துறையிடம் விமானத்தில் இருக்கும் தொலைபேசி மூலம் கூறுகிறார்.உடனே டீனா என்ற மற்றொரு பணிப்பெண் கூப்பர் பக்கத்தில் வந்து அமர்கிறார்.விமானம் சியாட்டில் சென்று தரையிறங்காமல் மேலேயே சுற்றுகிறது.இதற்கிடையில் காவல்துறையில் ஒரு தரப்பு பத்தாயிரம் 20 டாலர்
நோட்டுகளை அருகில் இருக்கும் வங்கியில் வாங்கி வருகிறது.இன்னொரு தரப்பு சியாட்டில் ஸ்கை டைவிங் ஸ்கூலில் இருந்து 4 பாராசூட்டுகள் வாங்குகிறது.இரு குழுவும் விரைந்து சியாட்டில் விமான நிலையம் செல்கிறார்கள்.விமானம் தரையிறங்க வேண்டிய நேரம் மாலை 3.45 மணி.ஆனால் தரையிறங்கியது 5.45 மணி.காரணம்
காவல்துறையினர் அனைத்தும் தயார் செய்த பின்பு தான் விமானம் தரையிறங்குகிறது.கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் சியாட்டில் விமான நிலையத்திற்கு மேலேயே விமானம் சுற்றுகிறது.பணம் மற்றும் பாராசூட் இரண்டையும் பணிப்பெண் டினாவிடம் கொடுக்கிறது காவல்துறை.பயணிகள் அனைவரும் இறங்கி செல்கிறார்கள்.4
ஊழியர்கள் மட்டும் விமானத்தில் இருக்கிறார்கள்.உடனே பைலட்டிடம் மெக்சிகோ செல்ல கட்டளையிடுகிறார்.ஆனால் அவ்வளவு தூரம் விமானம் செல்ல வேறொரு இடத்தில் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்பதால் ஃபீனிக்ஸ்,யுமா,சக்ரிமெண்டோ ஆகிய மூன்று விமான நிலையத்தை தேர்வு செய்து அதில் சக்ரிமேண்டோவுக்கு அருகில்
இருக்கும் நெவாடா விமான நிலையத்திற்கு செல்ல சொல்கிறார் கூப்பர்.அதுமட்டுமில்லாமல் விமானத்தின் பின்புறம் இருக்கும் படிகட்டை திறக்க சொல்லி அதை எவ்வாறு இயக்க வேண்டும் என்று பணிப்பெண்ணிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார்.பின்பு பணிப்பெண் டீனாவை இருக்கையிலிருந்து செல்ல சொல்கிறார்.சிறிது
நேரம் கழித்து விமானம் நெவாடா விமான நிலையத்தில் தரையிறங்குகிறது.ஆனால் அதில் பயணம் செய்த கூப்பரும் இல்லை.பாமும் இல்லை.பின்பக்க படிக்கட்டு சிறிது சேதாரம் ஆகியிருந்தது.சியாட்டில் டூ நெவாடா செல்லும் வழியில் ஏதோவொரு இடத்தில் அவர் குதித்து தப்பியிருக்கலாம் என்று எண்ணுகிறது காவல்துறை.
ஏதாவது ஆதாரம் கிடைக்குமா என்று தேடும் பொது ஒரு டை,8 சிகரெட் துண்டுகள்,இரண்டு பாராசூட்கள் மட்டுமே கிடைக்கிறது.பின்பு பணிபெண்களிடம் அவரது உருவம் பற்றி விசாரிக்கிறார்கள்.அவர்கள் சொன்னதை வைத்து ஒரு உருவத்தை வரைகிறார்கள்.அவரது வயது 35 - 50 இருக்கலாம்.உயரம் 175 இருக்கலாம்.எடை 68 - 85
இருக்கலாம்.முடி கருப்பு.இதை எல்லாம் வைத்து தான் மேலே உள்ளது போல் ஒரு உருவத்தை வரைகிறார்கள்.ஆனால் இப்படி தான் இருப்பாரா என்றால் யாருக்கும் தெரியாது.எனவே அவர் இங்கு குதித்தார் என்று யோசிக்கிறார்கள்.இரவு 8.05 மணிக்கு பைலட்டை கூப்பர் கடைசியாக தொடர்பு கொண்ட நேரம்.8.15 மணிக்கு
விமானத்தில் சிறிய அதிர்வு தெரிந்தாக சொல்கிறார் பைலட்.எனவே அப்பொழுது தான் குதித்திருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.ஆனால் எங்கு குதித்தார் என்று பார்க்கும் போது விமானம் பயணம் செய்த விக்டர் 23 ஏர்வே பாதையில் போர்ட்லேண்ட் நகரத்திற்கு 40 கிலோமீட்டர் முன்பு தான் குதித்திருக்க
வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.ஒரு பெரிய படை அடர்ந்த காட்டில் சல்லடை போட்டு தேடுகிறார்கள்.ஆனால் எதுவும் கிடைப்பதில்லை.எனவே பத்தாயிரம் 20 டாலர் நோட்டின் சீரியல் நம்பர்களை மக்களிடம் செய்தித்தாள் மூலம் அரசு தெரிவிக்கிறது.ஏதாவது ஒரு நோட்டு புழக்கத்தில் வந்தால் கூட கூப்பரை
பிடித்துவிடலாம் என்ற நப்பாசை தான்.ஏதாவது ஒரு சீரியல் நம்பரை மக்கள் கண்டுபிடித்தால் 25000 டாலர் பரிசு தருகிறோம் என்று அரசு அறிவிக்கிறது.ஆனால் அடுத்த 10 வருடத்திற்கு யாராலும் பணத்தை கண்டுபிடிக்க முடிவதில்லை.பிப்ரவரி 10,1980 அன்று பிரையன் இங்கிரம் என்று சிறுவன் பீச்சில் மணலை
தோண்டும் போதும் 5880 டாலர் கிடைக்கிறது.அதை அவரது பெற்றோர் காவல்துறையிடம் ஒப்படைக்கிறார்கள்.சோதனை செய்து பார்த்ததில் அது கூப்பருக்கு கொடுத்த நோட்டுகள் என்று தெரிய வருகிறது.குதித்த இடத்தில் இருந்து 27 கிலோமீட்டர் தள்ளி எப்படி பணம் வந்தது?லீவிஸ் ஆற்றில் குதித்த இவர் சில நோட்டுகளை
தவறுதலாக வீசியிருந்தால் அது டினா பார் என்ற இடத்திற்கு தண்ணீரின் வழியே வந்திருக்கும் என்று நினைக்கிறார்கள்.ஆனால் தண்ணீர் பாதை டினா பாரில் இருந்து லீவிஸ் ஆறு நோக்கி செல்கிறது.எனவே டினா பாரை தாண்டி குதித்திருந்தால் அப்பணம் அங்கு வந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று எண்ணுகிறார்கள்.
ஆனால் 1974ஆம் ஆண்டு டினா பார் பகுதியில் பால வேலை நடைப்பெற்றதால் ஆற்றின் வழியே பணம் வந்திருக்க வாய்ப்பில்லை.பாராசூட் கொடுக்கும் போது எப்படி இயக்க வேண்டும் என்று பணிப்பெண் சொல்ல நினைக்க,எல்லாம் தனக்கு தெரியும் என்று கூறுகிறார்.இதை வைத்து அவருக்கு விமானம் பற்றியும்,பறந்து
கொண்டிருக்கும் உயரம் ஆகியவற்றை பற்றி தெரியும் என்பதை பணிப்பெண் கூறுகிறார்.1954ஆம் ஆண்டு ஃப்ரெஞ்ச் நாட்டில் வெளிவந்த டேன் கூப்பர் காமிக் புத்தகம் 1970 வரை ஆங்கில மொழியில் மொழியாக்கம் செய்யவில்லை என்பதால் இவர் ஃப்ரெஞ்ச் நாட்டை சேர்ந்தவராக இருக்க வாய்ப்பிருக்கும் என்று எண்ணுகிறது
அரசு.ராபர்ட்.W.ராக்ஸ்ட்ரா என்ற நபரை 1978ஆம் ஆண்டு சந்தேகபடுகிறார்கள்.1995ஆம் ஆண்டு டுவான் வெபர் என்ற நபர் தன் மனைவியிடம் தான் தான் டேன் கூப்பர் என்று கூறிவிட்டு இறந்து விடுகிறார்.ஆனால் இருவரின் DNA டேன் கூப்பர் DNAவுடன் ஒத்துவருவதில்லை.எனவே யார் தான் டேன் கூப்பர் என்று தெரியாமல்
US அரசாங்கம் இன்று வரை திணறி வருகிறது.இன்று வரை பலரும் தான் தான் டேன் கூப்பர் என்று பல கடிதங்களை அரசுக்கு எழுதுகிறார்கள்.அவை அனைத்தும் போலி என்று தெரியவருகிறது.விடை தெரியா பல மர்மங்களில் இது இன்னும் இன்று வரை பெரிதாக பேசப்படுகிறது.இந்த தொகுப்பிற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து
#vivonetflix#PCMreview "குழந்தைகளுடன் பார்க்கக்கூடிய அருமையான படம்".தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - Netflix. டெலிகிராம் - பயோ/DM.இசையில் வல்லுவரான ஒரு தாத்தா மற்றும் அவருடன் இருக்கும் ஒரு குட்டி குரங்கு இருவரும் தெருவில் பாடி பணம் சம்பாதிக்கிறார்கள்.சில நிமிடங்கள்
கழித்து தாத்தாவுக்கு ஒரு கடிதம் வருகிறது.அதில் அவரது பழைய கால தோழி இவரை அவர் நடத்தும் இசை நிகழ்ச்சிக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்.இவரும் செல்லலாம் என்று நினைக்கிறார்.ஆனால் அந்த குட்டி குரங்கிற்கு இது பிடிப்பதில்லை.திடீரென தாத்தா இறந்து போக,இசை நிகழ்ச்சிக்கு சென்று பாட வேண்டிய
பாடல் வரிகள் அடங்கிய காகிதம் மற்றும் பழைய புகைப்படங்கள் ஆகியவை அங்கு இருப்பதை குரங்கு பார்க்கிறது.தாத்தாவின் கனவை நிறைவேற்ற குரங்கு பயணம் மேற்கொள்கிறது.அங்கு சென்றதா?பாடலை பாடியதா?என்பதே மீதிக்கதை.கிகான்ஜோ என்ற குட்டி குரங்குடன் ஒரு சிறுமியும் பயணம் செய்வாள்.இருவரின் உரையாடல்
#unsolvedmysteries#PCMreview "விடை தெரியா மர்மங்கள் : பாகம் 3".இன்று நாம் பார்க்க போவது 62 ஆண்டுகளாகியும் இன்னும் மர்மமாக நீடிக்கும் 9 பேர் மரணம் அடைந்த "டயட்லோவ் பாஸ்"நிகழ்வு பற்றி தான்.ஜனவரி 23,1959 அன்று Ural Polytechnic Institute கல்லூரியை சேர்ந்த 10 பேர் ரஷ்ய நாட்டில்
இருக்கும் Sverdlovsk Oblast பகுதியில் வடக்கு Ural மலை தொடர்ச்சியில் இருக்கும் kholat Syakhl என்ற மலைக்கு செல்ல முடிவெடுக்கிறார்கள்.இவர்கள் அனைவரும் மலையேறுதலில் கிரேடு 2 சான்றிதழ் பெற்றவர்கள்.கிரேடு 3 சான்றிதல் பெற 300 கிலோமீட்டர் பயணம் செய்திருக்க வேண்டும்.எனவே அச்சான்றிதலை
பெற Sverdlovsk பகுதி அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி மிகவும் கடினமான 10 கிலோமீட்டர் நீளமுள்ள பாதையாக இருக்கும் Oterten என்ற இடத்திற்கு செல்ல முடிவு செய்கிறார்கள். இக்குழுவிற்கு இகோர் டயட்லோவ் (23) என்ற மாணவர் தலைமை தாங்குகிறார்.ஜனவரி 25 ஆம் தேதி ரயில் மூலம் இவ்டேல் என்ற இடத்தை
#unsolvedmysteries#PCMreview "விடை தெரியாத மர்மங்கள் பகுதியில் இரண்டாவதாக நாம் இன்று பார்க்கப்போவது 7 வருடங்களுக்கு முன் காணாமல் போன மலேசிய விமானம் பற்றிய மர்மம் தான்".மார்ச் 8,2014 ஆம் ஆண்டு இரவு 12.42 மணிக்கு போயிங் 777 ER 200 ரக விமானமான MH370 விமானம் மலேசியாவின் கோலாலம்பூர்
விமான நிலையத்தில் இருந்து சீனாவின் பீஜிங் விமான நிலையத்திற்கு புறப்படுகிறது. விமானத்தில் 227 பயணிகள்,10 கேபின் குழுவினர்,2 பைலட்டுகள் என மொத்தம் 239 நபர்கள் பயணிக்கிறார்கள்.பயணம் தூரம் 5.30 மணி நேரம்.விமானத்தை 53 வயதான ஜஹாரி அகமத் என்ற முதல் பைலட்டும் 27 வயதான ஃபரிக் ஹமீத் என்ற
இரண்டாம் பைலட்டும் ஓட்டுகிறார்கள்.சரியாக இரவு 1:08 மணிக்கு விமானம் தெற்கு சீன கடல் பகுதியில் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கிறது என்று விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கிறார்.மலேசிய கட்டுப்பாட்டு அறை விமானியை தொடர்பு கொண்டு "நீங்கள் இன்னும் ஒரு நிமிடத்தில்
#ThuglaqDarbar#PCMreview "அரசியல் டிராமா" ஆபாச காட்சிகள் இல்லை.OTT - நெட்பிளிக்ஸ். டெலிகிராம் - பயோ/DM. ஹீரோ விஜய் சேதுபதி தனி ஒருவன் படத்தில் வருவது ஒரு அரசியல் கூட்டத்தில் பிறக்கிறார்.அந்த படத்தில் வருவது போல் இதிலும் அரசியல் கட்சி தலைவரான பார்த்திபன் ஹீரோவுக்கு சிங்காரவேலன்
என்று பெயர் சூட்டுகிறார்.இதனால் சிறுவயதில் இருந்தே அரசியலில் பெரிய ஆளாக வேண்டும் என்று முடிவு செய்கிறார்.இவரின் தங்கச்சியான மஞ்சிமா மோகன் பிறந்த உடனே தன்னுடைய அம்மா இறந்து விடுவதால் ஹீரோ விஜய் சேதுபதி மஞ்சிமா மோகனுடன் பேசுவதில்லை.பெரிய அரசியல் கட்சி தலைவரான பார்த்திபனிடம்
சேர்ந்து அப்படியே படிப்படியாக முன்னேற முடிவு செய்கிறார்.இதற்கு இவர் என்னவெல்லாம் செய்தார்,யாருடைய பகையை சம்பாதித்தார்? இவருக்குள் ஏற்படும் பிரச்சனை என்ன?இவரின் எண்ணம் நிறைவேறியதா?என்பதே மீதிக்கதை.விஜய் சேதுபதி வழக்கம் போல் நடிப்பில் அசத்திவிட்டார்.படத்தின் கதைக்களம் சத்யராஜ்
#MalignantMovie#PCMreview "வித்தியாசமான மற்றும் தரமான ஹாரர் திரில்லர்".தமிழ் டப்பிங் இல்லை (திரையரங்கில் தமிழ் டப்பிங்குடன் ஓடுகிறது).கண்டிப்பாக (18+).OTT - HBO Max. டெலிகிராம் - பயோ/DM.ஹீரோயினுக்கு கனவில் பலர் கொல்லப்படுவதை போல் கனவு வருகிறது.அடுத்த நாள் காலை தான் தெரிகிறது
இவர் கண்டது கனவு அல்ல,நிஜம் என்று.ஒரு மர்மமான உருவம் ஹீரோயினை கனவில் இருப்பதை போல் நிகழ்த்தி கொலை நடக்கும் இடத்திற்கு கனவின் வழியே அழைத்து சென்று தான் செய்யும் கொலையை ஹீரோயினை நேரில் பார்க்க வைக்கிறது.அதன் அடிப்படையில் முதல் கொலையாக ஹீரோயினின் கணவர் கொல்லப்படுகிறார்.காவல்துறை
ஹீரோயின் வீட்டிற்க்கு வந்து விசாரிக்க,ஹீரோயின் மேல் சந்தேகப்படுகிறது போலீஸ்.இப்படி தொடர்ச்சியாக கொலை நிகழ,ஹீரோயின் மீது சந்தேகம் வழுவாகிறது.இதில் இருந்து ஹீரோயின் தப்பித்தாரா?கொலை செய்யும் அந்த மர்மமான உருவம் எது?ஏன் கொலை செய்கிறது?ஏன் ஹீரோயினுக்கு இவ்வாறு நிகழ்கிறது?என்ற பல
#BhootPolice#PCMreview "ஹாரர் திரில்லர்".தமிழ் சப்டைட்டில் இருக்கிறது.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - ஹாட்ஸ்டார். டெலிகிராம் - பயோ/DM.ஹீரோக்கள் சைப் அலி கான் மற்றும் அர்ஜுன் கபூர் இருவரும் அண்ணன் தம்பிகள்.சிறுவயதில் இவர்களது அப்பா இறந்து விடுகிறார்.இவர் அப்பா பேய் ஒட்டும் தொழில்
செய்கிறார்.அப்பா இறந்த பின்பு மகன்கள் இருவரும் அத்தொழிலை செய்கிறார்கள்.அப்பா உண்மையாக மந்திர தந்திரங்கள் கற்று பேய் ஓட்ட,மகன்கள் இருவரும் பேய் ஒட்டுகிறோம் என்று கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள்.ஒரு நாள் ஹீரோயின் யாமி கவுதம் இவர்களிடம் வந்து "தன்னுடைய தேயிலை
தோட்டத்தில் ஏதோ ஒன்று இருப்பதாகவும்,27 வருடங்களுக்கு முன்பு உங்கள் அப்பா வந்து ஓட்டினார்.ஆனால் மறுபடியும் அது வந்துவிட்டது.எனவே நீங்கள் தான் அந்த பேயை ஓட்ட வேண்டும்" என்று கூறி இருவரையும் ஹீரோயினின் வீட்டிற்க்கு அழைத்து வருகிறார்.இதற்கு பின் பேயை ஒட்டினார்களா?எதற்காக பேய் அங்கு