அண்ணன் சீமான் @SeemanOfficial அவர்களுக்கு, நேற்று நடந்த கருத்தரங்கில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை பற்றிய உங்கள் உரையை கேட்டேன்.
நீங்கள் சொல்வதே @idumbaikarthi@packiarajan போன்ற தம்பிகளுக்கு வரலாறு என்பதால் பிழையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
நீங்களும் உங்கள் ஐயா அவர்களும் போராடிய பின்னர் தான், 2021ல் திமுக செய்ததாக பேசி உள்ளீர்கள்.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20% முன்னுரிமை என்று 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி, உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு நிறைவு உரையில் கலைஞர் அறிவித்தார்.
அறிவிப்போடு நின்றுவிடாமல் 2010 செப் மாதம் 8ஆம் தேதி அவசர சட்டம் இயற்றி, அதன் அடிப்படையில் 2 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது.
அதன் பின் சட்ட மன்றத்தில், சட்ட மசோதா தாக்கல் செய்து, Tamil Nadu Act 40 of 2010 டிசம்பர் மாதம் Gazette இல் வெளிவந்தது. cms.tn.gov.in/sites/default/…
இப்போது திமுக அரசு செய்திருப்பது, 10ஆண்டு அதிமுக ஆட்சியில் அதை அமல்படுத்துவதில் இருந்த அக்கறையின்மை, குளறுபடிகளை களைந்து, சட்ட திருத்தம் மூலம் மாற்றியுள்ளனர்
20% முன்னுரிமை பெற 6ஆம் வகுப்பு முதல் தமிழில் படித்திருக்க வேண்டும் என்பது போன்ற வழிகாட்டு நெறிமுறை தான் சேர்க்கப்பட்டது
இந்த விளக்கத்தை சொல்ல காரணம், 10 ஆண்டுகளுக்கு பின் முதிர்ச்சிக்கு வரும் உங்கள் தம்பிகளுக்கு, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமையை 2010இல் கட்சி ஆரம்பித்து போராடி பெற்று தந்தது அண்ணன் சீமான் அல்ல. திமுக தலைவர் கலைஞர் என்று தெளிந்து புரிந்து கொள்ள தான். நன்றி.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அண்ணன் சீமான் @SeemanOfficial அவர்களுக்கு, நீங்கள் சொல்வது உண்மை தான். தமிழ்நாட்டுக்கு தான் தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார் அறிஞர் அண்ணா
ஆனால் அது ஒன்றும் வெறும் பெயர் சூட்டு விழா, கிடா விருந்து என்று ஒரே நாளில் நடந்துவிடவில்லை என்பதை உங்கள் தம்பிகள் தெரிந்து கொள்ளவே இந்த பதிவு
தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது உட்பட 12 கோரிக்கையை வலியுறுத்தி, ஐயா சங்கரலிங்கனார் 1956 ஜூலை 27ம் தேதி முதல் 75நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து 1956 அக்டோபர் 13ம் நாள் உயிர் துறந்தார்.
அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத அன்றைய முதல்வர் ஐயா காமராஜர் தான்.
அதே காலக்கட்டத்தில், தந்தை பெரியார் 1955 அக்டோபர் 10 "தமிழ்நாட்டை விட்டு மலையாளிகள், ஆந்திரர்கள், கன்னடர்கள் பிரிந்து போன பின்பும் கூட தமிழகத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் இருக்கக்கூடாது எனச் சிலர் சூழ்ச்சி செய்கிறார்கள்" என அறிக்கை மூலம் எச்சரிக்கை செய்தார்.
தோழர் திருமுருகன் காந்தி என்பவர் கதை சொல்லி சீமான் அல்ல. எனவே ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி, அரசின் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் முன், குறைந்தபட்சம் தரவுகளை சரிபார்த்து இருக்க வேண்டும்.
ஒருவேளை குடந்தையரசன் மேல் உள்ள நம்பிக்கையில் தெரிவித்து விட்டார் போல.!
தோழர் தொல். திருமாவளவன் MP அவர்களே 21 வாடகை வீட்டில் குடியிருந்த நபர்களுக்கு தான் வீடுகள் ஒதுக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார்.
ஆனால் இதை இங்குள்ள போராளிகள் திமுக மொத்தமாக தலித் விரோதிகள் போல் சித்தரித்தது எல்லாம் பொய் என்ற வேசம் கலைந்த பின்னர் யாரையும் காணவில்லை
கோயம்புத்தூரில் தீண்டாமை சுவர் இடிக்கப்படும் நிகழ்வு பற்றியும் எந்த ஒரு போராளியும் பதிவு செய்யவில்லை.
ஒருவேளை அவர்கள் போராட காரணம் கொடுக்காமல் திமுக அரசு இடிக்க நடவடிக்கை எடுத்துவிட்டார்கள் என்ற வருத்தமோ என்னவோ தெரியவில்லை 😔
கடந்த தேர்தலுக்கு முன் ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்கு செயல்பட அனுமதி கொடுக்க ஒருமனதாக அனைத்து கட்சிகளில் ஒன்றாக திமுக ஆதரவு கொடுத்த நிகழ்வுக்கு பொங்கிய போராளிகள், இன்றைய ஆலை மூடும் உத்தரவிற்கு எந்த சலனமும் இன்றி சைலன்ட்டாக இருப்பது ஏனோ தெரியவில்லை.
இப்போது வழங்கப்பட்டுள்ள மத்திய தொகுப்பில் உள்ள இடங்களுக்கான OBC இட ஒதுக்கீடு 27% என்பது நீண்ட காலமாக நடைபெற்று வந்த சட்ட போராட்டத்திற்கு பின் கிடைத்த வெற்றி ஆகும்.
மத்திய தொகுப்பு என்பது1986 ஆம் ஆண்டு உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி உருவாக்கப்பட்டது.
இதன் படி அனைத்து மாநிலங்களும் தங்கள் வசம் உள்ள கல்லூரிகளில் உள்ள இடங்களில் 15% வரை மத்திய தொகுப்பில் கொடுக்க வேண்டும்.
இதற்கு காரணம் அந்த காலத்தில் வட கிழக்கு மாநில வளர்ச்சி மிக குறைவு. அங்கு மருத்துவ கல்லூரி போன்றவை அந்த மாநிலத்துக்கு தேவையான அளவில் இல்லை
எனவே அனைத்து மாநில கல்லூரிகளில் இருந்து வாங்கி, மத்திய தொகுப்பில் வைத்து, அகில இந்திய அளவில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
2007 ஆண்டு முதல் இந்த மத்திய தொகுப்பில் SC/ST இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது.
நேற்று முதல் கூவம் நதி ஓரம் தங்கி இருந்த மக்களை அரசு திட்டமிட்டு காலி செய்து வருவது போல் சித்தரித்து வருகின்றனர்.
இது 2020 ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை ஆகும்.
அங்கு இருப்பவர்களுக்கு முறையான அறிவிப்பு கொடுத்து, மாற்று இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது
முதலில் அவர்களை பெரும்பாகத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புக்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால் மக்களின் கோரிக்கை ஏற்றுக்கொண்டு, தமிழ்நாடு அரசு KP பார்க் அருகில் புளியந்தோப்பு அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கி உள்ளது.
இருப்பினும் அங்கு வாடகை வீடுகளில் வசித்து வந்த மக்கள், தங்களுக்கும் வீடு ஒதுக்கி தர வேண்டும் என்று தான் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.