ஆப்கன்., - பாக்., - இலங்கை போதை பொருள் பாதை: தமிழகம், கேரளாவை அச்சுறுத்தும் புதிய பிரச்னை
''பாகிஸ்தானில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்கு போதை பொருள் கடத்தப்படுகிறது. அதனால், தமிழகம், கேரளாவில் தீவிரவாதம் தலையெடுக்க வாய்ப்பு உள்ளது,'' என, எச்சரிக்கை மணி அடிக்கிறார், மேஜர் மதன்குமார்.
அவர் கூறியதாவது:
2021 ஆக., 30 - செப்., 6

சர்வதேச கடல் பகுதியில் இருந்து இலங்கை நோக்கி வந்த மீன்பிடி கப்பல், கொழும்பு துறைமுகத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் இலங்கை கடற்படையிடம் பிடிபட்டது. அதில் 290 கிலோ ஹெராயின் இருந்தது.
மீன் பிடி கப்பலில் இருந்தவர்கள், 'பாகிஸ்தான் மக்ரான் துறைமுகத்தில் இருந்து ஒரு கப்பல், ஹெராயின் ஏற்றிக் கொண்டு வந்துள்ளது. 'இலங்கையில் இருந்து 1,370 கி.மீ., தொலைவில் சர்வதேச கடல் எல்லையில் அந்த கப்பல் நிற்கிறது.
அந்த கப்பலில் இருந்து தான், 290 கிலோ ஹெராயினை, கொழும்பு துறைமுகத்துக்கு எடுத்து செல்கிறோம்' என, கூறியுள்ளனர்.

உடனே இலங்கை கடற்படையினர் அந்த கப்பலை நோட்டமிட்டனர். செப்., 6ல், அதிரடி சோதனை நடத்தி 600 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர்.
இந்த இரண்டு சம்பவங்களிலும் கிடைத்த போதை பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு 2,000 கோடி ரூபாய். இதுபோல், கப்பல்களில் இருந்து போதை பொருளை பறிமுதல் செய்வது இது முதல் முறை அல்ல. கடந்த 2020 நவ., மாதத்தில் இருந்து தொடர்கிறது.
2020 நவ., மாதம்

தமிழகத்தின் துாத்துக்குடிக்கு அருகே, சர்வதேச கடல் பகுதியில், இலங்கை கப்பல் ஒன்றை இந்திய கடலோர காவல் படையினர் வழிமறித்து சோதனையிட்டனர். அதில், 300 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ ஹெராயின், 20 'மெட்டாமார்பின்' மற்றும் ஐந்து கை துப்பாக்கிகள் சிக்கின.
மும்பை துறைமுகத்தில் இருந்து, முகத்துக்கு பூசும் பவுடர் டப்பாக்கள் இருக்கும் கன்டெய்னர் மூலம் ஹெராயின் கடத்தப்படுவதாக இந்திய வருவாய் புலனாய்வு இயக்குனகரத்துக்கு தகவல் கிடைத்தது.
அந்த கன்டெய்னரை அதிகாரிகள் தனையிட்டனர். வெளி நாட்டுக்கு கடத்த இருந்த ஹெராயின் பிடிபட்டது; பலர் கைது செய்யப்பட்டனர்.
2021 மார்ச்

'கேரள மாநிலம், விழிஞ்சம் துறைமுகத்துக்கு, சர்வதேச கடல் பகுதியில் இருந்து இலங்கை மீன்பிடி கப்பல் வருகிறது. அதில் ஹெராயின் கடத்தப்படுகிறது' என்ற தகவல், இந்திய கடலோர காவல் படைக்கு கிடைத்தது. அந்த கப்பலை கடலோர காவல் படையினர் மடக்கி பிடித்தனர்.
அதில், 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 300 கிலோ ஹெராயின், ஐந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், ஆயிரம் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
2021 ஏப்ரல்

கேரள மாநிலம், கொச்சி அருகே சந்தேகத்துக்குரிய கப்பலில், இந்திய கடற்படையினர் சோதனையிட்டனர். அதில் 337 கிலோ ஹெராயின் பிடிபட்டது.
இந்த தொடர் சம்பவங்கள் மூலம், ஆப்கானிஸ்தானில் சாலை மார்க்கமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து, அங்கிருந்து கப்பல் மூலம் இலங்கை சென்று, சிறிய படகுகள் மூலம் இந்தியாவுக்கு போதை பொருள் கடத்தப்படுவது ஊர்ஜிதமாகி உள்ளது.
இந்த போதை பொருள் தமிழகத்தின் துாத்துக்குடி, வேதாரண்யம், கோடிக்கரை, மண்டபம்; கேரளாவின் விழிஞ்சம், கொச்சி துறைமுகங்கள் வழியாக இந்தியாவுக்குள் நுழைகிறது. பிறகு, சூடான், காங்கோ, கிழக்கு ஆப்ரிக்க நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில், ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கப்படும் 1 கிலோ ஹெராயின், சாலை மார்க்கமாக பாகிஸ்தானுக்கு வந்ததும், 2 கோடி ரூபாயாகிறது. பிறகு, இலங்கை வழியாக இந்தியாவுக்கு வரும்போது, அதன் மதிப்பு 3 அல்லது 3.5 கோடி ரூபாய் என உயர்கிறது.
போதை பொருள் கடத்தலை போலீஸ், ராணுவம் மற்றும் உளவுத்துறை கட்டமைப்புகளால் இந்தியா முன் கூட்டியே கண்டறிந்து விடுகிறது.
பல ஆயிரம் கோடி

இந்த தகவல் இலங்கைக்கு உடனடியாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசும்விரைந்து செயல்பட்டு போதை பொருளை பறிமுதல் செய்கிறது.
தமிழகம் மற்றும் கேரளா வழியாக பிற நாடுகளுக்கு போதை பொருள் கடத்தப்படும் போது, பல ஆயிரம் கோடி ரூபாய் தீவிரவாதிகளுக்கு கிடைக்கிறது என்பதையும் இந்திய உளவு அமைப்புகள் கண்டறிந்திருக்கின்றன. போதை பொருளுடன் துப்பாக்கி போன்ற ஆயுதங்களும் சேர்ந்து வருவது தான் இதற்கு ஆதாரமாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, தமிழகம், கர்நாடகா, கேரள எல்லையில் இருந்த தீவிரவாதிகள் அகற்றப்பட்டனர். தற்போது அவர்கள் மீண்டும் தலையெடுக்கின்றனர். சந்தன கடத்தல் வீரப்பன் நடமாடிய மேற்கு தொடர்ச்சி மலையை மையமாக வைத்து தான் தீவிரவாத எண்ணம் கொண்டவர்கள் தங்கள் செயல்பாடுகளை துவக்கி உள்ளனர்.
இதையடுத்து, அல் உம்மா, இந்தியன் முஜாஹிதீன், ஐ.எஸ்., ஐ.எஸ்., அமைப்புகளின் செயல்பாடுகளை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய பாதுகாப்பு முகமை தீவிரமாக கண்காணித்து வருகிறது. கேரளா மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் நடக்கக்கூடும் என என்.ஐ.ஏ., கருதுகிறது.
எனவே இரு மாநில எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவை நம்பி...

பல விஷயங்களில் சீனாவுடன் தொடர்பில் இருக்கும் இலங்கை, பாதுகாப்பு விஷயத்தில் இந்திய உளவு அமைப்புகளையே நம்பியே உள்ளது. அவர்கள் கூறுவதை இலங்கை அரசு முழுமையாக கவனத்தில் எடுத்து கொள்கிறது.
அதில் ஒரு பகுதியாக தான், பாகிஸ்தானில் இருந்து கப்பல் மூலம் கடத்தப்படும் போதை பொருளை கட்டுப்படுத்த, சோதனை மேல் சோதனை நடத்துகிறது.
இலங்கை அரசு உடனடி நடவடிக்கை எடுப்பது போல, தமிழக மற்றும் கேரள மாநில அரசுகள் கவனத்துடன் செயல்பட்டால், தீவிரவாத செயல்கள் கட்டுக்குள் இருக்கும். இவ்வாறு மதன் குமார் கூறினார்.
லட்சத்தீவிலும் கண்காணிப்பு

கேரளாவை ஒட்டி உள்ள லட்சத் தீவுகள் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
அங்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகி, கடுமையான விதிகளை அறிவித்து, மீன் பிடி கப்பல்களுக்கும், படகுகளின் சுதந்திரமான செயல்பாட்டுக்கும் கடிவாளம் போட்டார்.
இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், மீன் பிடி படகுகள் மூலம், போதை பொருட்கள், ஆயுதங்கள் உள்ளே வந்துவிட கூடாது என்பதில் அந்த நிர்வாகி உறுதியாக உள்ளார்.
மேஜர் மதன் குமார்

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் மதன்குமார். இந்திய ராணுவ காலாட்படையில் தன் பணியை 2003ல் துவக்கியவர். காஷ்மீர் எல்லை பகுதியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியவர். ராணுவத்தின் தீவிரவாத எதிர்ப்பு படையில் பணியாற்றிய நிலையில் 2009ல் ஓய்வு பெற்றார்.
ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம், உலகம் முழுவதும் உள்ள தீவிரவாதிகள் குறித்த தகவல்களை அறிந்தவர். இந்தியா மற்றும் அண்டை நாடுகளின் ராணுவம் தொடர்பான நிகழ்வுகளை, பல்வேறு நாடுகளிலும் இருக்கும் தன் நண்பர்கள் மூலம் தொடர்ந்து சேகரிப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பவர்.

தினமலர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

15 Sep
அமெரிக்காவில் உச்சம் தொடும் டெல்டா அலை; அலட்சியம் வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கை

வாஷிங்டன்: 'அமெரிக்காவில் டெல்டா வைரசால் ஏற்பட்டிருக்கும் புதிய கோவிட் அலை விரைவாக உச்சம் தொடும்; கவனக்குறைவாக இருக்க வேண்டாம்' என, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அவசர மருத்துவத் துறையின் துணை பேராசிரியர் பக்தி ஹன்சோதி தெரிவித்து உள்ளதாவது: அமெரிக்காவில் கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஏற்பட்ட கோவிட் அலை முடிவடைந்திருப்பது சற்று நிம்மதியை அளிக்கிறது.
ஆனால் தற்போது இந்தியாவை போன்றே அமெரிக்காவிலும் ஒரே மாதிரியான கோவிட் தொற்று நிலை தொடர்வதை காண முடிகிறது.

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கடந்த 13ம் தேதி வரையிலான ஏழு நாட்களில், பாதிப்பு 1.72 லட்சமாக பதிவாகியுள்ளது; தினமும் 1,800 பேர் உயிரிழந்து வருகின்றனர்.
Read 5 tweets
15 Sep
டெல்டா வைரஸ் பரவல்; சீனாவில் பள்ளிகள் மூடல்

பீஜிங்: சீனாவில் டெல்டா வகை வைரஸ் பரவுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தென் சீனப் பகுதியில் புஜியான் மாகாணத்தில் புட்டியான் நகருக்கு அண்மையில் சிங்கப்பூரில் இருந்து திரும்பிய நபர் ஒருவருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மூலம் 100க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
அவரது பள்ளி செல்லும் மகனுக்கும் தொற்று ஏற்பட அந்தச் சிறுவன் மூலமாக 36 குழந்தைகளுக்குப் பரவியது. சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து பள்ளிகளில் இந்த அளவுக்கு தொற்று பரவியது இதுவே முதன்முறை.
Read 6 tweets
15 Sep
குவாட் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார் மோடி

புதுடில்லி :இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கிய 'குவாட்' அமைப்பின் தலைவர்கள் முதல் முறையாக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
வாஷிங்டனில், வரும் 24ம் தேதி நடக்கும் குவாட் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இரு தரப்பு உறவுகள்

குவாட் அமைப்பின் தலைவர்கள் மாநாடு, கடந்த மார்ச் மாதம், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்தது. இந்த நான்கு நாடுகளின் தலைவர்கள் நேரில் சந்திக்கும் முதல் மாநாடு 24ம் தேதி வாஷிங்டனில் நடக்கிறது.
Read 9 tweets
15 Sep
அரசுப் பணிகளில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு: வரவேற்பும் எதிர்ப்பும்!
சென்னை: சட்டமன்றத்தில் மனித வள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையில், “நேரடி நியமனம் மூலம் மேற்கொள்ளப்படும் அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும்”
என அத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பெண்களிடம் வரவேற்பும், ஆண்களிடம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இந்த அறிவிப்புக்கு அரசுப் பணிகளுக்கு தயாராகும் பெண்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Read 19 tweets
15 Sep
இது உங்கள் இடம்: வாழ்த்து கூறி வரவேற்போம்!

மரகதம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தின் புது கவர்னராக பொறுப்பேற்று உள்ள ஆர்.என்.ரவி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி என்பதால், காங்., தலைவர் உட்பட சிலர் கலக்கமுற்றுள்ளதாக தெரிகிறது.
இதில் கலக்கமடைய என்ன இருக்கிறது? மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் உண்டாகும்.

அண்டை மாநிலமான புதுச்சேரியில் கிரண்பேடி கவர்னராக இருந்து கலாட்டா நடந்ததால் பயந்து உள்ளனரோ... எல்லாரும் ஒரே மாதிரி தான் இருப்பர் என்று நினைக்க முடியுமா?
யார் புதிதாக பதவிக்கு வந்தாலும் திறந்த மனதுடன் வரவேற்க வேண்டும்.

ஆர்.என்.ரவி, கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகள் எஸ்.பி., உட்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றி உள்ளார். பின், மத்திய அரசு பணிகளுக்கு மாற்றப்பட்டார்.
Read 8 tweets
15 Sep
ஜி.எஸ்.டி., கீழ் பெட்ரோல், டீசல்

புதுடில்லி :ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள், பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வருவது பற்றி, ஜி.எஸ்.டி., கவுன்சில் நாளை மறுதினம் பரிசீலனை செய்கிறது.பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது.
அதனால், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின் கூட்டம், உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நாளை மறுதினம் நடக்க உள்ளது.
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(