பீஜிங்: சீனாவில் டெல்டா வகை வைரஸ் பரவுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தென் சீனப் பகுதியில் புஜியான் மாகாணத்தில் புட்டியான் நகருக்கு அண்மையில் சிங்கப்பூரில் இருந்து திரும்பிய நபர் ஒருவருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மூலம் 100க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
அவரது பள்ளி செல்லும் மகனுக்கும் தொற்று ஏற்பட அந்தச் சிறுவன் மூலமாக 36 குழந்தைகளுக்குப் பரவியது. சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து பள்ளிகளில் இந்த அளவுக்கு தொற்று பரவியது இதுவே முதன்முறை.
நேற்று மட்டும் புதிதாக 59 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இப்போது டெல்டா வைரஸ் வேகமெடுக்கும் சூழலில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படக் கூடிய இலக்கு என்று சீனா அஞ்சுகிறது. எனவே புட்டியான் நகரில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அருகில் உள்ள சியாமென் நகரில் பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் பரிசோதனை செய்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள சீன தூதரகம், சீன மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மீண்டும் கொரோனா பரவுவதால் மக்கள் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்,'' என்று வலியுறுத்தியுள்ளது.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அமெரிக்காவில் உச்சம் தொடும் டெல்டா அலை; அலட்சியம் வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கை
வாஷிங்டன்: 'அமெரிக்காவில் டெல்டா வைரசால் ஏற்பட்டிருக்கும் புதிய கோவிட் அலை விரைவாக உச்சம் தொடும்; கவனக்குறைவாக இருக்க வேண்டாம்' என, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அவசர மருத்துவத் துறையின் துணை பேராசிரியர் பக்தி ஹன்சோதி தெரிவித்து உள்ளதாவது: அமெரிக்காவில் கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஏற்பட்ட கோவிட் அலை முடிவடைந்திருப்பது சற்று நிம்மதியை அளிக்கிறது.
ஆனால் தற்போது இந்தியாவை போன்றே அமெரிக்காவிலும் ஒரே மாதிரியான கோவிட் தொற்று நிலை தொடர்வதை காண முடிகிறது.
அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கடந்த 13ம் தேதி வரையிலான ஏழு நாட்களில், பாதிப்பு 1.72 லட்சமாக பதிவாகியுள்ளது; தினமும் 1,800 பேர் உயிரிழந்து வருகின்றனர்.
குவாட் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார் மோடி
புதுடில்லி :இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கிய 'குவாட்' அமைப்பின் தலைவர்கள் முதல் முறையாக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
வாஷிங்டனில், வரும் 24ம் தேதி நடக்கும் குவாட் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இரு தரப்பு உறவுகள்
குவாட் அமைப்பின் தலைவர்கள் மாநாடு, கடந்த மார்ச் மாதம், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்தது. இந்த நான்கு நாடுகளின் தலைவர்கள் நேரில் சந்திக்கும் முதல் மாநாடு 24ம் தேதி வாஷிங்டனில் நடக்கிறது.
அரசுப் பணிகளில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு: வரவேற்பும் எதிர்ப்பும்!
சென்னை: சட்டமன்றத்தில் மனித வள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையில், “நேரடி நியமனம் மூலம் மேற்கொள்ளப்படும் அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும்”
என அத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பெண்களிடம் வரவேற்பும், ஆண்களிடம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இந்த அறிவிப்புக்கு அரசுப் பணிகளுக்கு தயாராகும் பெண்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மரகதம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தின் புது கவர்னராக பொறுப்பேற்று உள்ள ஆர்.என்.ரவி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி என்பதால், காங்., தலைவர் உட்பட சிலர் கலக்கமுற்றுள்ளதாக தெரிகிறது.
இதில் கலக்கமடைய என்ன இருக்கிறது? மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் உண்டாகும்.
அண்டை மாநிலமான புதுச்சேரியில் கிரண்பேடி கவர்னராக இருந்து கலாட்டா நடந்ததால் பயந்து உள்ளனரோ... எல்லாரும் ஒரே மாதிரி தான் இருப்பர் என்று நினைக்க முடியுமா?
யார் புதிதாக பதவிக்கு வந்தாலும் திறந்த மனதுடன் வரவேற்க வேண்டும்.
ஆர்.என்.ரவி, கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகள் எஸ்.பி., உட்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றி உள்ளார். பின், மத்திய அரசு பணிகளுக்கு மாற்றப்பட்டார்.
புதுடில்லி :ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள், பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வருவது பற்றி, ஜி.எஸ்.டி., கவுன்சில் நாளை மறுதினம் பரிசீலனை செய்கிறது.பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது.
அதனால், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின் கூட்டம், உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நாளை மறுதினம் நடக்க உள்ளது.
மதுரை : ஹிந்து கடவுள்களை அவதுாறு செய்வதற்காவே ஒரு கும்பல் சுற்றி வருகிறது. அந்த கும்பலின் சமீபத்திய பேச்சு ராமர் பாலம் கட்டியதற்கான ஆதாரம் தமிழ் இலக்கியங்கள் எதிலும் இல்லை என்பது.
ஆனால் தேவாரத்தில் அதற்கான ஆதாரம் தெள்ளத்தெளிவாக உள்ளதை சுட்டிக்காட்டுகிறார் தமிழ் இலக்கிய ஆய்வாளர் பா.இந்துவன்.
அவர் கூறியது: ராமாயணம், மகாபாரதம் போன்றவை கட்டுக்கதைகள், ராமாயணத்தை மேலோட்டமாகத்தான் திருமுறைகள் எடுத்து கூறுகிறதே அன்றி ராமர் பாலம் கட்டியது பற்றியோ, ராவணனை பழித்து பேசியது பற்றியோ எந்த ஒரு திருப்பதிகங்களும் பாடவில்லை என ஒரு கருத்தை தொடர்ந்து பேசி வருகின்றனர்.