பெரியவாளை வந்து நமஸ்கரித்தாள் ஒரு வயதான பாட்டி. அவள் கண்கள் மடையாக பெருக்கெடுத்தது. பெரியவா அவளுடைய மனதின் வலியை உணர்ந்ததால், அவளாக அழுது ஓயட்டும் என்று பொறுமையாக இருந்தார்.
"இத்தனை வயசுக்கப்புறம், எனக்கு இப்பிடி ஒரு புத்ரசோகத்தை தாங்கிக்கணுமா? எனக்கு கொள்ளி போட வேண்டிய கொழந்தை அவசர அவசரமா போய்ச் சேந்துட்டானே! எனக்கிருந்த ஒரே ஆதரவு அவன்தானே பெரியவா!...கொழந்தை மனசுல என்னென்ன ஆசைகளோட போனானோ தெரியலியே!....." கதறினாள்.
கலக்கம் என்பதே இல்லாத அந்த மஹா மனஸ் இப்போது கண்களில் துளிர்த்த கண்ணீரை அடக்க முடியாமல் வெளிவிட்டது.
சன்யாசிகளின் கண்ணீர் பூமியில் விழக்கூடாது என்று சாஸ்த்ரம் சொல்லுவதால், சட்டென்று குனிந்து கண்ணீரை தன் மடியில் விழுமாறு செய்தார்.
"எனக்கு இப்போ ஒண்ணே ஒண்ணுதான் பண்ணணும். அவனோட ஆத்ம சாந்திக்காக நா...ஏதாவது ஹோமம் பண்ணி அவனை த்ருப்திப் படுத்தணும். பெரியவாதான் எனக்கு கதி. நா என்ன பண்ணட்டும்? எனக்கு ஒரு வழி காட்டுங்கோ பெரியவா....."
அமைதியாக, ஆதரவாக அவளிடம் கூறினார்.....
"நீ எந்தக் கோவிலுக்கும் போவேணாம், எந்த ஹோமமும் பண்ணவேணாம். நீ கிராமத்துலேர்ந்துதானே வரே? அங்க வயல்வெளிகள்ள ஏர் உழுது, நாத்து நடற ஜனங்களை பாத்திருப்பியோன்னோ? பாவம். வேகாத வெய்யில்ல அவா படற ஸ்ரமத்தை நீ தீத்து வை!
என்ன பண்ணறேன்னா....பானை நெறைய மோரை எடுத்துண்டு போய், அவாளுக்கெல்லாம் வேணுங்கறமட்டும் குடுத்து, அவாளோட தாகத்தை தணி! இது ஒண்ணுதான்...ஒம்பிள்ளையோட ஆத்மா சாந்தி அடையறதுக்கு ரொம்ப உத்தமமான வழி!.." என்று வெகு சுலபமான ஆனால் உன்னதமான பரிஹாரத்தை சொல்லி விட்டார்.
ஒரு சாதாரண நீர்மோர் எப்பேர்ப்பட்ட சாந்தியை குடிப்பவருக்கும், கொடுப்பவருக்கும் அளித்து விடுகிறது! இந்த சின்ன தர்மம் பெரியவா வாக்கில் வந்து பெரிய தர்மமாகிவிடுகிறது.
ஹர ஹர சங்கர 🇮🇳🙏
ஜெய ஜெய சங்கர 🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அமெரிக்காவில் உச்சம் தொடும் டெல்டா அலை; அலட்சியம் வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கை
வாஷிங்டன்: 'அமெரிக்காவில் டெல்டா வைரசால் ஏற்பட்டிருக்கும் புதிய கோவிட் அலை விரைவாக உச்சம் தொடும்; கவனக்குறைவாக இருக்க வேண்டாம்' என, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அவசர மருத்துவத் துறையின் துணை பேராசிரியர் பக்தி ஹன்சோதி தெரிவித்து உள்ளதாவது: அமெரிக்காவில் கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஏற்பட்ட கோவிட் அலை முடிவடைந்திருப்பது சற்று நிம்மதியை அளிக்கிறது.
ஆனால் தற்போது இந்தியாவை போன்றே அமெரிக்காவிலும் ஒரே மாதிரியான கோவிட் தொற்று நிலை தொடர்வதை காண முடிகிறது.
அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கடந்த 13ம் தேதி வரையிலான ஏழு நாட்களில், பாதிப்பு 1.72 லட்சமாக பதிவாகியுள்ளது; தினமும் 1,800 பேர் உயிரிழந்து வருகின்றனர்.
பீஜிங்: சீனாவில் டெல்டா வகை வைரஸ் பரவுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தென் சீனப் பகுதியில் புஜியான் மாகாணத்தில் புட்டியான் நகருக்கு அண்மையில் சிங்கப்பூரில் இருந்து திரும்பிய நபர் ஒருவருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மூலம் 100க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
அவரது பள்ளி செல்லும் மகனுக்கும் தொற்று ஏற்பட அந்தச் சிறுவன் மூலமாக 36 குழந்தைகளுக்குப் பரவியது. சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து பள்ளிகளில் இந்த அளவுக்கு தொற்று பரவியது இதுவே முதன்முறை.
குவாட் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா செல்கிறார் மோடி
புதுடில்லி :இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கிய 'குவாட்' அமைப்பின் தலைவர்கள் முதல் முறையாக நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
வாஷிங்டனில், வரும் 24ம் தேதி நடக்கும் குவாட் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இரு தரப்பு உறவுகள்
குவாட் அமைப்பின் தலைவர்கள் மாநாடு, கடந்த மார்ச் மாதம், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்தது. இந்த நான்கு நாடுகளின் தலைவர்கள் நேரில் சந்திக்கும் முதல் மாநாடு 24ம் தேதி வாஷிங்டனில் நடக்கிறது.
அரசுப் பணிகளில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு: வரவேற்பும் எதிர்ப்பும்!
சென்னை: சட்டமன்றத்தில் மனித வள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையில், “நேரடி நியமனம் மூலம் மேற்கொள்ளப்படும் அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும்”
என அத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பெண்களிடம் வரவேற்பும், ஆண்களிடம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இந்த அறிவிப்புக்கு அரசுப் பணிகளுக்கு தயாராகும் பெண்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மரகதம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தின் புது கவர்னராக பொறுப்பேற்று உள்ள ஆர்.என்.ரவி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி என்பதால், காங்., தலைவர் உட்பட சிலர் கலக்கமுற்றுள்ளதாக தெரிகிறது.
இதில் கலக்கமடைய என்ன இருக்கிறது? மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் உண்டாகும்.
அண்டை மாநிலமான புதுச்சேரியில் கிரண்பேடி கவர்னராக இருந்து கலாட்டா நடந்ததால் பயந்து உள்ளனரோ... எல்லாரும் ஒரே மாதிரி தான் இருப்பர் என்று நினைக்க முடியுமா?
யார் புதிதாக பதவிக்கு வந்தாலும் திறந்த மனதுடன் வரவேற்க வேண்டும்.
ஆர்.என்.ரவி, கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகள் எஸ்.பி., உட்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றி உள்ளார். பின், மத்திய அரசு பணிகளுக்கு மாற்றப்பட்டார்.
புதுடில்லி :ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள், பெட்ரோல் மற்றும் டீசலை கொண்டு வருவது பற்றி, ஜி.எஸ்.டி., கவுன்சில் நாளை மறுதினம் பரிசீலனை செய்கிறது.பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது.
அதனால், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.,யின் கீழ் கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின் கூட்டம், உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நாளை மறுதினம் நடக்க உள்ளது.