முதல் நாள் தனுஷ், இரண்டாம் நாள் கனிமொழி, மூன்றாம் நாள் சௌந்தர்யா...
இந்த தற்கொலையைப் பற்றிப் பொதுவான கருத்துக்களை நான் பேச விரும்பவில்லை. மாறாக, இந்த ப்ரச்சனையின் ஆணி வேர் நோக்கிப் போவோமா?
தொந்தரவு தரும் ஒரு மரத்தில் கிளைகளை மட்டும்
கழித்துக் கொண்டு வந்தால், நிரந்தரத் தீர்வு வந்துவிடுமா? அடி மரத்தோடு வெட்டி, ஆணி வேரோடு பிடுங்கி அல்லது எரித்து அதனை அழிக்க வேண்டாமா?
இது மரத்துக்கு மட்டுமல்ல, நம் வாழ்க்கையில் ப்ரச்சனைகளையும் வேதனைகளையும் மட்டுமே தருவது எதுவாகினும் அதற்கும் இதுதானே தீர்வு?
முதலில் மாணவர்கள்...
தன்னம்பிக்கை என்பது ஏன் அற்றுப்போனது அவர்களுக்கு? தேர்தல் என்பதை ஒரு பயமாகவே மாற்றி விட்டதால். மாணவச் செல்வங்களே... எத்தனை நபர்களை தினமும் சந்திக்கிறீர்கள் வாழ்வில்? கணவனை இழந்தவர், பெற்றோரை இழந்த குழந்தைகள் முதல் கைகால்களை இழந்தவர் வரை உங்களைச் சுற்றி
எத்தனை பேர் தினமும் நடமாடுகிறார்கள்? அதை விடவா நீங்கள் முடங்கி விட்டீர்கள்? அவர்கள் வாழ்வதைப் பார்க்கையில், வாழ்க்கையில் முயன்றால் எப்படியும் வாழலாம், தோல்விப்படிகளில் ஏறி ஏறி முயல்வோம்.. வெற்றிக் கனி கிட்டும் எனபது உங்கள் மனதில் படவில்லையா?
இத்துடன் தேர்வு முடிந்துவிட்டதா?
இதே நீட் இன்னும் பல வாய்ப்புகளைத் தரவில்லையா? ஒருவன் நன்கு படிக்கிறான், அவனை விட நீங்கள் மதிப்பெண் குறைத்து எடுக்கிறீர்களென நினைத்தால், அவர் மீது கொள்ளும் பொறாமையை விட்டு, நீங்கள் எங்கே பின் தங்குகிறீர்கள், இன்னும் எதில் முயற்சி தேவை என்பதை கவனித்துவிட்டால், அடுத்தமுறை நீங்கள்
அவர்களோடு போட்டியிட முடியுமே... அதை விடுத்து, தற்கொலை எனும் முடிவால், நீட்டில் பாஸாகி, மறுபடி டாக்டராகப் போகிறீர்களா? இல்லையே. உங்களைப் பாராட்டித் தாலாட்டி வளர்த்த பெற்றோரை மீளாத் துயர்க் கடலில் தள்ளி விடுகிறீர்கள். இதுதான் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் தரும் சந்தோஷமா?
எந்த ஒரு பெற்றோரும், தன் மகனோ மகளோ வாழ்வில் எங்கிருந்தாலும், நன்கு வாழ வேண்டும், ஏழையானாலும் நோயின்றி ஆரோக்யமாக இருக்க வேண்டும், வாழ்க்கையில் போராடி வெற்றிப் பெற வேண்டும் என மட்டும்தானே நினைப்பார்கள்?
இதில் தவறென்ன இருக்கிறது? படிப்பில் தங்களுக்கு சிக்கல் உள்ளதென்றால்,
அவர்களிடம் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள், தங்கள் ஆசிரியர்களிடம் உதவி கேளுங்கள், தங்களுக்குத் தெரிந்த நண்பர்களின் வீட்டில் படித்தவர்கள் இருப்பார்களே... இல்லையா ஒரு டாக்டரிடம் நேரடியாகச் சென்று, “எனக்கு சில அடிப்படை விஷயங்கள் சொல்லித் தாருங்கள், நான் வெற்றி பெற வேண்டும்,
உதவ முடியுமா?” எனக் கேட்டுப் பாருங்கள்.. அவர்கள் அதற்கான நபரைக் காண்பித்துக் கண்டிப்பாக உதவுவார்கள். நம் மக்கள் தரம் தாழ்ந்தவரல்லர் குழந்தைகளே... ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின் வாழ்க்கை வரலாற்றையும் படியுங்கள். மோடி ஜியின் வாழ்க்கையிலே கூட டீ விற்று, பள்ளிக்கு ஓடிப்போய் படித்து
மிகவும் சாதாரண நிலையிலிருந்து இன்று இப்படி உலகமே வியக்க உயரவில்லையா? ஏன் உங்களால் முடியாது? முதலில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். நான் செய்ய வேண்டும், செய்வேன் எனும் பிடிவாதத்தைப் படிப்பில் கொண்டு வாருங்கள்... இளைய பாரதமே... வாழ்க்கை மிகப்பெரிய பூந்தோட்டத்தைத் தாங்கி
அதன் கதவைத் திறந்து நீ வரக் காத்திருக்கிறது. அதை மனதில் வைத்து, உன் பிடிவாதத்தை படிப்பில் மட்டுமே காட்டு.
அடுத்து பெற்றோர்கள்..
உங்கள் மகன் டாக்டரோ அல்லது இஞ்ஜினியராகவோதான் ஆக வேண்டுமென ஏன் எண்ணுகிறீர்கள்? உங்கள் குழந்தை எந்தத் துறையில் புத்திசாலியாக, திறமைசாலியாக இருக்கிறான்
என்பதை கவனித்து, அவனுக்கு ஊக்கமளித்து, அவன் விரும்பும் துறையில் என்வெல்லாம் வேலைக்கான வழிகளும் படிப்புகளும் இருக்கின்றன என்பதை ஏன் விசாரிக்கத் தவறுகிறீர்கள்? உலகில் இந்த இரண்டு மட்டுமே இருந்தால், பின் நீங்களெல்லாரும் எப்படி வாழ்கிறீர்கள்? அப்படியே இதை மட்டும் படித்த அனைத்து
மாணவர்களும், லக்ஷம் கோடியில் சம்பாதித்து வாழ்கின்றனரா? ஏனிந்த மூட மாயை நம் மனதில் என தயவு செய்து யோசியுங்கள். கௌரவம் எனும் போர்வைக்குள் இருந்து பார்க்காதீர்கள், மாறாக யதார்த்தம் எனும் கண்கொண்டு பாருங்கள். உங்கள் மனதை மூடியிருக்கும் மாயத்திரை தானாக விலகும்.
அடுத்து ஆசிரியர்கள்..
உங்களை யாரும் குறை சொல்லவில்லை. ஆனால், பள்ளிகள் தரும் அழுத்தத்தால், பாடம் எடுத்தேன், ”நீ படித்து மதிப்பெண் எடு... இல்லையா என் வேலை முடிந்தது” எனச்செல்லும் நிலைக்கு வந்திருக்கிறீர்கள். மனம் தொட்டுச் சொல்லுங்கள், உங்கள் ஆசிரியர்கள் படிப்பில் உங்கள் திறமையை
கவனித்து, தங்களை அந்தப் படிப்பிற்கு தயாராகச் சொல்லி, ஊக்கப்படுத்த வில்லையா? மேடைப்பேச்சு, பாடல், எழுதுதல், விளையாட்டு, படிப்பில் எதில் நன்மதிப்பு எடுக்கிறீர்கள் என எதில் திறமையாளி என கவனித்து, அதில் உங்களைத் தயாராகச் சொல்லி உற்சாகப்படுத்தவில்லை?
அதே உற்சாகத்தையும், ஊக்கத்தையும்
நீங்கள் உங்கள் மாணவர்களுக்குக் கொடுக்கிறீர்களா? (இதைச் செய்யும் ஆசிரியர்களுக்கு இக்கேள்வி இல்லை. ஆனால் எல்லோரும் செய்வதில்லை என்பது நிதர்சணம்.)
பொதுவாக, ஒரு பள்ளி ஆசிரியருக்கே தனது குழந்தை +2 முடித்தால் அடுத்து என்ன படிக்க வைக்க வேண்டும் என்பதில் தெளிவு இல்லை.
தன் குழந்தைக்கே இந்நிலை என்றால், இவர்கள் தன் மாணவர்களுக்கு என்ன வழிகாட்டுதல் தர முடியும்?
சரி. படித்து, பட்டம் பெற்று, ஆசிரியர்களுக்கான பயிற்சி பெற்ற உங்களுக்கே ஏனிது தெரியவில்லை? மனம் தொட்டுக் கூறுங்கள் உங்களில் எத்தனை பேருக்கு, +2 முடித்த பின்னர் என்னவெல்லாம் படிக்கலாம்,
அதன்மூலம் என்னவெல்லாம் வேலை, அல்லது தொழில் வாய்ப்பு உள்ளது என்று தெரியும்? அறிவியல் பாடம் எடுக்கும் மாணவர்கள் புத்திசாலிகள், வரலாறு போன்றவை எடுப்பவர்கள் மக்கு எனும் வார்த்தைகளை பலரும் ஆசிரியர்கள் சொல்லியே கேட்டிருக்கிறோம். ஏனிந்த எண்ணம் ஒரு குருவாக இருக்கும் உங்களுக்குள்ளேயே?
இப்போது நீங்களும் எங்கே இதை அறிய விட்டுவிட்டீர்கள் என்பதை ஏன் சிந்திக்கவில்லை?
ஒரு மாணவர், தன் பெற்றோருடன் செலவிடும் நேரத்தை விட, உங்களோடு செலவிடும் நேரம்தானே அதிகம்? Parents - Teachers Meet என வைத்து, அவர்களைப் பற்றிப் புகார், எதில் மதிப்பெண் அதிகமில்லை எனும் குற்றப்பட்டியல்,
அவர்களின் குறும்புத்தனத்துக்கு கம்ப்ளெய்ண்ட்... பிறகு இன்னும் என்னென்ன ஃபீஸ் அதிகமாக்கப் போகிறீர்கள் என்பதன் மூலம், அவர்களுக்குச் செலவுப் பட்டியல்...
இதை நான் ஆசிரியர்கள் நோக்கி மட்டும் சொல்லவில்லை... கல்விச்சாலைகளை நடத்தும் மனிதர்களுக்கும் குறிப்பிட்டுத்தான் சொல்லுகிறேன்.
இவற்றைத் தாண்டி, இன்றுவரை ஒரேயொரு பெற்றோராவது,
“இந்த பள்ளியில் சேர்த்தால், வரும் மாணவர்களின் திறமைக்கு ஏற்ப அவர்களைத் தயார் செய்கிறார்கள். அவன் அடுத்தடுத்து, எதில் கண்டிப்பாக முன்னேற வழியுள்ளது என்பது குறித்து, எங்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஒவ்வொரு வருடமும் சரியான வழிமுறைகளைக்
காட்டுகிறார்கள். எந்த படிப்புக்கு நாம் சேர்த்தாலும், எங்கள் குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்த்து, அத்துறைக்குத் தகுதியான வேலைகள், தொழில்கள் பற்றிச் சொல்லித் தந்து கற்பிக்கிறார்கள்.”
எனச் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோமா... ஆசிரியர்களே... உங்களை இங்கே பெற்றோராகவும் பார்த்து, பதிலை
சொல்லுங்கள் பார்க்கலாம்? முடியாது. ஏனெனில், பாவம் அநேகமாக உங்களுக்கே அது தெரிவதில்லை. பள்ளி ஆசிரியருக்கும், நிர்வாகத்துக்குமே இந்த நிலை ஏன்? சற்று மனதை பாரபட்சம் பார்க்காது வைத்து, இதைப் படியுங்கள், வரும் கருத்துகள் சரி என்பதை வாய் மறுத்தாலும், கண்டிப்பாக உங்கள் மனம் ஏற்கும்.
ஆசிரியர்கள் உங்களுக்கு வரும் அழுத்தம் -
“பள்ளி இந்த மாநிலத்தில் முதலிடம் வரவேண்டும். 100% பாஸ் வேண்டும். நீங்கள் என்ன செய்வீர்களோ... எதை எடுத்துக் கொடுத்து அவர்களைப் படிக்க வைப்பீர்களோ தெரியாது. எங்களுக்கு ஒருவர் கூட ஃபெயிலாகக் கூடாது.
வழி தெரியவில்லையா? இந்தா, நான் தரும் இந்த
விஷயங்களைப் ப்ராஜக்ட்டாக பண்ணச்சொல், தினமும் எடுக்கும் பாடத்தில் தினமும் தேர்வு, அடுத்தநாளே மதிப்பெண் கொடு, மந்தமான மாணவனுக்கு அதிகம் வீட்டுப் பாடம் கொடு, இல்லையா பெற்றோரை அழைத்துச் சொல்லு, அவனை வீட்டுக்கு அனுப்பிவிடலாம்.
நம் பள்ளி முதலிடம் பெற வேண்டும்.”
இப்படிப் பிழிந்தால், எந்த ஆசிரியரால் மாணவரை நல்விதம் கவனிக்க முடியும்? அவருக்கும் குடும்பம், தனி வாழ்க்கை உண்டல்லவா? முக்கால்வாசி ஆசிரியர்கள் வீட்டிலும் ஆசிரியர்களாகத்தான் இருக்கின்றனர், சொந்தங்களாக இல்லை. பாவம்.
பள்ளி நிர்வாகத்தின் இந்நிலைக்குக் காரணமென்ன? -
பண முதலைகள் பள்ளி கட்டி, ஆங்கில வழிக் கல்விகளைக் கொண்டுவந்து, அதில் படிக்கவைக்கையில் மாணவன் அதிக மதிப்பெண் எடுக்க முடியுமெனும் மாயத் தோற்றத்தை, பெருமைக்காகச் செய்து விட்டார்கள். அதே முதலைகள், சாமானிய கட்டணத்தில் பாடம் எடுக்குமா? கிடையாது.
காரணம் ஆயிரம் நீங்கள் சொல்லலாம். ஆனால்
உண்மை என்னவோ “பணம், புகழ்” மட்டும்தானே ஒழிய, இளைய தலைமுறையை வளர்க்கும் எண்ணம் காரணம் இல்லை.
பண முதலைகளோடு, அரசியல்வாதி...
அதிகம் பணம் சம்பாதிக்க, பெரிய பெரிய பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் கட்டினான். மக்களிடம் இவைதான் சிறந்த படிப்புகள் எனும் மாயையைத் தோற்றுவித்தான்
நாம்தான், ஆங்கிலேயன் வந்தது முதல் சிந்திக்கும் திறனை அவனிடம் விற்றுவிட்டு, எண்ணங்களால் அடிமைப்பட்டுக் கிடக்கிறோமே... உடனே அதை ஏற்றுக் கொண்டோம்.
25 வருடங்களுக்கு முன்னர் அடிக்க ஆரம்பித்த பொறியியல் படிப்பு அலை. இன்று அது எத்தனை பெற்றோரை ஏழைகளாக்கியது? பாவம், அதைப் படித்துவிட்டு,
ஆட்டோமொபைல் கம்பெனியில் சேல்ஸ்மேனாக இருக்கின்றனர் பலர், மிகக் குறைந்த சம்பளத்தில். ஆனால் முதலைகள் கொழுத்துக் கொண்டே போகின்றன.
நாம் பார்த்தே, வைத்தியருக்குப் படித்த பலர், அரசியலிலும், மென்கணிணித் துறையிலும் வேலை செய்கிறார்கள். ஏன்? ஒரே பதில்தான். அவர்கள் விரும்பிப் படிக்கவில்லை.
உலகில் எல்லோரும் இஞ்ஜினியர், டாக்டர் என்றால், பிற வேலைகளைச் செய்வது யார்?
நர்ஸ், ஃபார்மஸிஸ்ட், மெக்கானிக், விவசாயம், டிரைவர், மீட்டராலஜி, தொல்லியல், எழுத்து, திரைத்துறையினர், ஆராய்ச்சியாளர், பத்திரிகையாளர், அழகியல் நிபுணர், கணினி மென்பொருள், வன்பொருள் தயாரிப்போர், நெசவாளிகள்,
சமையல்காரர்கள்... என அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றை எல்லாம் பின்னர் யார் செய்வார்கள்?
அரசாங்கம் -
அரசாங்கத்தைப் பொறுத்தவரை, நம் தமிழ் நாடு இன்னும் அடிமையாகத்தான் இருக்கிறது. இது ஒப்புக்கொள்ள வேண்டிய கேவலம். என்ன ஒரு மாறுதல்? அந்நியனிடம் விடுதலை பெற்று,
ஆம், உங்கள் தமிழனென்னும் உணர்ச்சியை மட்டும் கிளறிவிட்டு, உங்களை உசுப்பேற்றி, தங்கள் பேச்சு வலையில் வீழ்த்தி, உங்களை மூளைச்சலவை செய்து, கொத்தடிமைகளாக்கி வைத்திருக்கின்றனர் நம் அரசியல்வாதிகள்.
இதற்கு மறுப்பு சொல்லிக் கத்துகிறீர்களா?
எங்கே ஒரு நிமிடம் அமைதியாக நான் சொல்வதை யோசியுங்கள்... முதலில் இந்தக் கேவலம் எங்கு வெளிப்படையாக ஆரம்பித்தது?
ஹிந்தி எதிர்ப்பு...
உங்கள் வீட்டில் குழந்தைகளும் நீங்களும் என்ன படிக்க வேண்டும், வேண்டம் என்பதை முடிவு செய்ய அவர்கள் யார்?
நீங்கள் யாரை வணங்க வேண்டும், கூடாது என்பதை வரையறுக்க அவர்கள் யார்?
தமிழ்நாட்டு எல்லை தாண்டிவிட்டால், ஹிந்தி தெரிந்தால் போதும், எந்த மாநிலத்திலும் நீ பிழைக்கலாம். இது உண்மை. அவன் அரசியல் செய்ய ஹிந்தி எதிர்ப்பைக் கையிலெடுத்தான். நீ ஓட்டுப்போட, உன் உணர்வைத் தூண்டி, ஒரே தேசத்தில்
நீ வேறு, பிறர் வேறு என்பது போன்ற மாயையைச் சித்தரித்தான். அதன்மூலம் ஓட்டு பெற்று, அவன் ஆட்சிக்கு வந்தான்.
தமிழ் பழைய மொழி எனும் காரணத்தை மட்டும் முன்னிறுத்தி, உனை ஆங்கிலம் தவிர ஏதும் படிக்கவிடாது செய்தானே? யோசித்துப் பார்த்தாயா இது சரியா என? அந்நிய மொழி ஏற்பு, நம் தேசத்திலேயே
இருக்கும் மொழிக்கு எதிர்ப்பா? உனக்கே கேவலமாக இல்லை? இதுதான் தேசப் பற்றா?
அவன் பிள்ளைகள் மட்டும் எல்லா மொழிகளும் ஏன் படிக்கின்றன? அதை யோசித்துப் பார்த்தாயா?
வெற்று உணர்ச்சியைக் கொண்டு நாம் என்ன சாதித்துக் கிழித்துவிட முடியும் இவ்வுலகிலே? அவன் நாஸ்திகனா? “நீ உன் முடிவில் இரு,
என் வாழ்க்கையில் அதைத் திணிக்க உனக்கு உரிமையில்லை” எனச் சொல்ல ஏன் உங்களுக்கு வாய் வரவில்லை?
ஒரு சிறுமி, ஒரு கூட்டத்தில் அரசியல்வாதியைப் பார்த்துக் கேட்கிறாள்,
“உங்கள் குழந்தைகள் ஏன் அரசுப் பள்ளியில் படிப்பதில்லை?” என. அந்த பெரிய அரசர் சொல்கிறார்,
“அதுக்காகத்தான் உங்களையும் படிக்கச் சொல்லுகிறேன். நீங்களும் ஆங்கிலம் கற்று முன்னேறுங்கள்” என்று.
அவள் கேட்டதற்கும் இந்த பதிலுக்கும் என்ன சம்மந்தம்? இல்லை. ஏனென்றால், அவனால், தன் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளோடு படிக்க அனுப்ப முடியாது. காரணம், பணம்...
அரசியல்வாதி பணம் சம்பாதிக்க உங்களிடம் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கினான். பிற படிப்புகளின் மதிப்புகளும், அதனால் கிடைக்கும் வேலைகளும், செய்யக்கூடிய தொழில்களும் தெரிந்து மக்கள் படித்துவிட்டால், பின்னர் அவர்களும் தொழிலதிபர் ஆவார்களே... நமக்கு இங்கே தேடி வரும் எண்ணிக்கை குறையுமே...
பணம் உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரியிலும் கொட்டாதே... என எண்ணினான். அவற்றை மெதுவாக மறைத்தான்.
தேடிப் படித்த மாணவர்கள் மட்டுமே அவற்றில் இன்று ஆசிரியர்களாக, பேராசிரியர்களாக, ஆராய்ச்சியாளர்களாக, இன்னும் பல வேலைகளில் மிளிர்கிறார்கள்.
எங்கே? பெற்றோர்கள் குரல் கொடுத்துப் பாருங்கள்...
”மாணவர்கள் 8-வது முடிக்கையிலேயே எங்களுக்கு, என்னென்ன படிப்புகள் அனைத்தும் உள்ளன, அவற்றின் துறைகள், வேலைகள் என்னென்ன என்பவை குறித்த கையேடுகளைக் கண்டிப்பாக அரசு கொடுக்க வேண்டும்”
எனப் போராடிப் பாருங்கள்...
இன்று படிப்புகளை மறைத்தான், உங்கள் தெய்வ வழிபாட்டை தூற்றி, அசிங்கப்படுத்தி, குறிப்பிட்ட சமூகத்தைக் கேவலப்படுத்தி, பிறரிடம் அச்சமூகத்தினர் பெயர்சொல்லி தாழ்வு மனப்பாண்மையை வளர்த்து, உங்களைக் கைப்பாவையாக ஆட்டிக் கொண்டிருக்கிறான். வெட்கமாக இல்லையா உங்களுக்கெல்லாம்?
இதனை எழுதும் என்மேல் கோபம் வருகிறதா?
ஒரு நிமிஷம் அதை நிறுத்தி, இவை உண்மையா இல்லையா என்பதை மனசாட்சியின்படி ஆய்ந்து பாருங்கள்...
இன்று அவனது குறியே கோயில்களைக் கொள்ளையடித்து, முழுதும் தங்கள் 18-20 குடும்பங்களின் சொத்துக்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும்... ஏற்கனவே பல இடங்களை பினாமி
பேரில் வளைத்தாகி விட்டது. தனித்தமிழ் நாடுக்கான கோரிக்கைக்கு அடித்தளம் போடுகிறான்...
இந்தியா பாகிஸ்தானைக் கழற்றிவிட்டது போல, நம்மைக் கழற்றி விட்டால், இருக்கும் வரை இங்கிருக்கும் நிலங்களையும், சொத்துக்களையும் உங்களிடமிருந்து பறித்துக் கொள்வான், வெளிநாடுகளில் வெவ்வேறு விதங்களில்
குடும்பத்தாரின் ஒவ்வொருவரி பெயரிலும், அவற்றை முதலீடு செய்வான். நாளை சீனா வந்து அடிக்கும்... என்ன இருக்கிறது இவனிடம் நாட்டைப் பாதுகாக்க?
இவன் குடும்பத்தோடு ஓடிவிடுவான் ஆஃப்கான் தலைவர் நாட்டை விட்டு ஓடியதுபோல... அடிபட்டுச் சாக வேண்டியது, சீனனிடம் சிக்கித் தவிக்க வேண்டியது என்னவோ
தமிழக மக்கள் நாம்தானே? இதை எல்லாம் ஏன் யோசிப்பதில்லை? மறக்கிறீர்களா அல்லது மறுக்கிறீர்களா?
இதோ... கஞ்சா, பான், சாராயம் விற்பனை அமோகமாக ஏற்கனவே அவர்களுக்குக் கொள்ளை லாபம் தருகிறது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள்... இவர்களை நீங்கள் ஆதரிப்பதால் நாளை உங்கள் தலைமுறை எப்படி இருக்கும்
தெரியுமா? Philadelphiaவின் நிலையைப் பாருங்கள் இங்கே. இப்படி உங்கள் பிள்ளைகள், பேரன் பேத்திகள், போதைக்கு அடிமையாகி, தெருவில் நிற்பார்கள். இதுதான் உங்கள் ஆசை என்றால் தாராளமாக இப்படியே இருங்கள்...
தவறெனப் பட்டால், மோடியின் வார்த்தையைக் கேட்டு, புதிய கல்விக் கொள்கை தேவை என்று
போராடுங்கள், நவோதயா பள்ளிகள் கேட்டு, எல்லா படிப்புகளின் துறை விளக்கங்கள் கேட்டுப் போராடுங்கள், இப்போது பீச்சில் உட்கார்ந்து தர்ணா செய்யுங்கள், அரசாங்கத்துக்குக் கருப்புக் கொடி காட்டி, தலைமையகத்தின் முன் உட்காருங்கள்.
அடித்தாரா, அடிக்கட்டும், கைதா? நடக்கட்டும்,
கொத்துக் கொத்தாக நாம் உள்ளே போகத் தயாரானால், சிறைச்சாலை போதுமா அரசுக்கு? என்ன செய்ய முடியும் மக்கள் எழுச்சியின் முன் இவர்களால்?
இதைச் செய்ய நாம் மக்கள் முன்வராத வரை, இனி இங்கே நடக்கும் எதற்கும் கவலைப்பட அருகதையில்லை நமக்கு.
கடைசியாக ஒன்று, நம் குழந்தைகள் சாகிறார்கள்.
இதை ஏன் ஊடகத்தில் பெரிதுபடுத்தி நீங்கள் பேசவில்லை என ஊடகத்தை கேள்வி கேளுங்கள்...
இப்போது இறகுப் பந்தும், பேரனின் வெளிநாட்டுப் பயணச் செய்தியுமா எங்களுக்கு முக்கியம் எனக் காறித்துப்புங்கள் ஊடகங்களின் முகத்தில்... உண்மையில் நம் மண்ணை நேசித்தால்.
இதில் ஒரு பெண் என்னை அழகாகத் திட்டியிருக்கிறார். கோவிலில் அசைவம் சமைப்பவர் பரிஜாரகராவது தவறு என அரசு செய்யும் தவறைச் சுட்டிக் காட்டியதற்கு, முருகனுக்கு அசைவம்தான் பிடிக்குமென்றும், நான் மாற்றிப் பேசுகிறேன் என்றும் திட்டியிருக்கிறார்...
செய்யுள்கள் எத்தனைத் தவறாகப் பொருள் கூறப்பட்டு, உண்மையைத் திரிக்கின்றன என்பதற்கான Example அல்ல... Sample இது. சரி அதன் பொருள் என்ன பார்ப்போமா?
அதாவது வேலன் என்பது இங்கு முருகனில்லை. சாமி ஆடுவது என்று நாம் கூறுவோமல்லவா... அதேதான்,
அப்படி வேலெடுத்து ஆடுவோரை வேலன் என அழைப்போம்.
கண்ணப்பநாயனார் கறி வைத்தார், வாயில் நீர் எடுத்து வந்து உமிழ்ந்து துடைத்தார் லிங்கத்தை என்பதால், வாயால் தண்ணீரைத் துப்பி பகவானைத் துடைப்பதுதான் தமிழர் மரபு என்று கூறுவரா இந்த புத்திசாலிகள்??
எவரளித்தார் இந்த ஸ்வதந்த்ரத்தை HR & CE க்கு? ஏற்கனவே பல சட்ட வல்லுநர்கள் மூலம், இத்துறை ப்ரச்சனையுள்ள ஆலயங்களில் -
அதுவும் அவற்றைத் தீர்க்கும் வரையில்தான் (கணக்கு வழக்குகளில் மட்டும்) இவை இருக்கலாம். பின் அத்திருக்கோயில்கள் மீண்டும் தர்மகர்த்தாக்களின் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
இக்குறிப்பிட்ட காலத்திலும் நிர்வாகம், நிதி ஒழுங்கீடு தவிர வேறு எவற்றிலும் தலையிட அறநிலையத் துறைக்கு அதிகாரமில்லை.
"The jewels, gold, silver, precious stones, vessels and utensils and other movables belonging to the temple institution, with their weights and estimated value" என சட்டம் சொல்லுகிறது. அப்படியெனில், இதைக் கையாளுவதற்கு, அந்தந்த கோயிலின் தர்மகர்த்தாவுக்கும்
எப்பவுமே எனக்கு #பிராமண_சமூகத்து மேல ஒரு பிரம்மிப்பும், ஆச்சர்யமும் இருந்துகிட்டே இருக்கும்.
கடந்த 4 தலைமுறையா, திராவிடம் ன்ற
பேர்ல பிராமணர்களை
ஒதுக்கி, ஒடுக்கி, நசுக்கி,
கேவலப்படுத்தி, அரசாங்கத்தோட எந்த உதவியும் இல்லாம பண்ணி,
ஓட ஓட விரட்டியும் கூட...
தோற்கடிக்கவே முடியாத, 'படிப்பு' ன்ற பிரம்மாஸ்திரத்தை கையிலெடுத்து இன்னைக்கு பெரும்பாலான பிராமணர்கள், வெற்றிக்கோட்டை எட்டினது மிகப்பெரிய ஆச்சர்யம்னாலும் கூட,
அவங்களோட #குழந்தைவளர்ப்பு முறை
அவங்க குழந்தைகள வளர்க்குற அந்த நேர்த்தி, குழந்தைகள 'மோல்ட்' பண்ணுற அந்த கைப்பக்குவம்...
வேற எந்த சமூகத்துக்கும் வராது.
பிராமணர்கள் மட்டுமே லாவகமா கையாளுற மிக அழகான கலை.
இப்ப மத்த குழந்தைகள் படிக்குற அதே பள்ளி கூடங்கள்ல தான பிராமண குழந்தைகளும் படிக்கிறாங்க? அப்படி இருக்கும் போது, ஒரே வயசுல இருக்குற மத்த பசங்கள கவனிச்சு பாருங்க...