க.சிவஞானம், பெருமாள்புரம், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல் கட்சிகள், 'தீர்மானம்' என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தி, மக்களுக்கு வேடிக்கை காட்டுகின்றன.
நாட்டு மக்களாகிய நாமும், அதன் சூட்சுமம் புரியாமல், பூரித்து மகிழ்கிறோம்.
'குடி'காரன் ஒருவன், தினமும் மது அருந்துவதால் வீட்டில் எப்போதும் சண்டையும், சச்சரவும் தான். இதற்கு முடிவு கட்ட, ஒரு நாள் தன் மனைவி-, குழந்தைகள் அனைவரையும் அழைத்து, 'நாளை முதல் குடிக்க மாட்டேன்; இது சத்தியம்' என தீர்மானம் போடுகிறான்.
இதனால், அவனது குடும்பமே சந்தோஷத்தில் மிதக்கிறது; ஆனந்தக் கூத்தாடுகிறது.அவன் போட்ட தீர்மானத்தால், 'டாஸ்மாக்' கடைகள் அனைத்தும் மூடப்பட்டு விடுமா அல்லது 'குடி'மகன்கள் அனைவரும், 'டேய், ஐயா தீர்மானம் போட்டுட்டார்டா... இனிமே நாமும் தண்ணியடிக்க கூடாதுடா' என திருந்தி விடுவரா?
இது தான்ங்க, தீர்மானம் என்பது! உங்கள் ஊரில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அமைச்சரிடம், நீங்கள் ஆர்வமாக கொடுக்கும் கோரிக்கைக்கு என்ன மரியாதை கிடைக்குமோ, அதே மரியாதை தான், அரசியல் கட்சிகள் போடும் தீர்மானத்திற்கும் கிடைக்கும்.
சில நாட்களுக்கு முன் தமிழக சட்டசபையில் 2021 ஜன., 10ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஒரு தீர்மானம் போடப்பட்டது.
மத்திய அரசு அமல்படுத்தி, அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ள இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் கட்டுப்படுத்துமா... நிச்சயம் கட்டுப்படுத்தாது!
சமீபத்தில், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் சட்ட மசோதா, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. உச்ச நீதிமன்றத்தாலேயே தடை விதிக்க முடியாது, விலக்கு அளிக்க இயலாது என தீர்ப்பளிக்கப்பட்ட நீட் தேர்வு விவகாரத்தில், தி.மு.க., அரசு வேடிக்கை காட்டுகிறது.
எதிர்க்கட்சியாக இருந்தால், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்து விடலாம்; விஷயம் சுலபமாக முடிந்து விடும். ஆளும் கட்சியாக இருப்பதால், தி.மு.க.,வினரால் வெளிநடப்பு செய்ய இயலாது; அதனால், 'தீர்மானம்' என, 'படம்' காட்டுகின்றனர்.
தேர்தலுக்கு முன் அளித்த நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக தேர்வு செய்து, அடுத்தடுத்து வரும் சட்டசபை கூட்ட தொடர்களில் தீர்மானம் நிறைவேற்றி விட்டால், விஷயம் முடிந்தது.
அதன் பின், நாக்கு மீது பல்லு போட்டு யாரும் ஒரு கேள்வி கேட்க முடியாது. அது தான் பதில் தெளிவாக இருக்கிறதே... 'தீர்மானம் போட்டு இருக்கிறோம்' என்று!
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் மட்டும் ஏன் புண்ணியங்கள் பெருகும் மாதமாக இருக்கிறது தெரியுமா?
தமிழ் காலண்டரில் இருக்கும் ஒவ்வொரு மாதமும் அதற்கென தனிச்சிறப்புகளை கொண்டுள்ளது. முக்கியமான திருவிழாக்களைத் தவிர, மற்ற மாதங்களுடன் ஒப்பிடும்போது புராட்டசி மாதம் கூடுதல் சிறப்பையும், முக்கியத்துவத்தையும் கொண்ட மாதமாக இருக்கிறது.
திருமால் வழிபாடு, நவராத்திரி என நமக்கு தெரிந்த அம்சங்களைக் காட்டிலும் நமக்கு தெரியாத பல சிறப்புகள் இந்த மாதத்தில் இருக்கிறது. அவை என்னென்னெ என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சமீபத்தில் டில்லியில் ஏழு ஆண்டுகள் நிறைவு செய்துள்ள பாரத பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் மோடியின் அரசியல் பயணம், உலகில் நாம் இதுவரை கண்ட எந்த அரசியல் தலைவரின் பயணம் போன்றதும் இல்லை.
குஜராத் முதல்வராக அக்டோபர் 2001ல் ஆமதாபாத்தில் தொடங்கிய இந்த பயணம், ஜனநாயக வரலாற்றில் இணை இல்லாத நீண்ட தொடர்ச்சியாக செல்கிறது. இருபது ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் மற்றும் நாட்டின் நிர்வாகத் தலைவராக இருந்து இன்னும் தனது பணியை அறத்தின் வழியில் தொடர்ந்து செவ்வனே செய்து வருகிறார்.
எல்லோரும் எதிர்கொள்ள அச்சப்படும் தங்கள் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்போ அல்லது மக்கள் ஆட்சியின் மேல் அடையும் சோர்வையோ ஒவ்வொரு தேர்தலிலும் திறமையினால் எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார்.
புதிய பார்லி., திட்டத்தை எதிர்ப்பதா: பிரதமர் மோடி பாய்ச்சல்!
புதுடில்லி:டில்லியில் ராணுவ அமைச்சகத்திற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு அதிநவீன அலுவலக கட்டடங்களை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
அப்போது, மத்திய அரசின், 'சென்ட்ரல் விஸ்டா' எனப்படும் புதிய பார்லிமென்ட் கட்டுமான திட்டத்தை எதிர்ப்பவர்களின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
குற்றச்சாட்டு
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட நம் பார்லிமென்ட் கட்டடம், மத்திய அரசு அலுவலகங்கள், பிரதமர் இல்லம் உள்ளிட்டவை மிகவும் பழமையானதாக உள்ளன. அங்கு பணியாற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு போதிய இடவசதி இல்லை.
உலகளவில் வேகமான வளர்ச்சியில் முதலிடத்தில் இந்தியா; அடுத்தது சீனா
புதுடில்லி : உலகிலேயே மிகவும் வேகமாக வளரக்கூடிய பொருளாதாரமாக இந்தியா இருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
உலகளவிலான பொருளாதார வளர்ச்சியில், இந்தியாவை அடுத்து சீனா இருக்கும் என்றும், அந்த ஆய்வு தன் கணிப்பை
வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாடு குறித்த கூட்டத்தில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இந்தியா, 2022ம் ஆண்டில் 6.7 சதவீதம் வளர்ச்சி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுவே, உலகின் மிக வேகமான வளர்ச்சியாக இருக்கும்.சீனா 5.7 சதவீத வளர்ச்சியை பெறும் என கணிக்கப்பட்டு, இரண்டாவது இடத்தில் உள்ளது.
அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், திண்டுக்கல்
எந்த கோயிலிலும் இல்லாமல் இங்கு 2 மூலவர்கள் சன்னதி உள்ளன. திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை இங்கு காலையில் நடக்காமல் மாலை வேளைகளில் நடைபெறுகிறது. 🙏🇮🇳1
பத்மகிரி நாதர் பேரில் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாடிய தென்றல் விடு தூது இக்கோயிலின் இலக்கியப் பெருமையைப் பறை சாற்றுகிறது.
🙏🇮🇳2
பலபட்டடைச் சொக்கநாத புலவர் இயற்றிய பத்மகிரி நாதர் தென்றல் விடுதூது என்ற அரிய நூலைப் பதிப்பித்த டாக்டர் உ.வெ.சாமிநாத அய்யர் அந்நூலின் முன்னுரையில் பத்மகிரியென்பது திண்டுக்கல்லின் திருநாமம் இதற்கு திண்டீச்சுரம் என்ற திருநாமமும் உண்டு.இது தேவார வைப்புத் தலங்களில் ஒன்று என்கிறார்.🇮🇳3
ஜாதக கட்டத்தை பார்க்காமலேயே பரிகாரம் சொல்லும் மகான் காஞ்சி பெரியவர். பெரியவா சொல்லும் ஒவ்வொரு பரிகாரமும் ஜோதிடத்தோடு ஒத்துப்போகும். இதில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
ஜாதகப்படி சில யோகமில்லா கிரகங்களின் தசாபுத்தி காலங்களில் மட்டும் தான் பிரச்னை ஏற்படும். ஆனால் சில வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நலக் கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் அது முன் கடுமையான கர்மா மற்றும் பித்ரு தோஷமாக இருக்கும்.
இதற்கு அனைவராலும் எல்லா பரிகாரங்களும் செய்ய முடியாது. அதற்கு நம் பெரியவா எளிய பரிகாரமாக கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் (அரசாணிக்காய்) தானம் செய்தால் அந்த குடும்பம் கெட்ட தோஷத்திலிருந்து விடுபடும் என்று வழிகாட்டியிருக்கிறார்.