அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், திண்டுக்கல்
எந்த கோயிலிலும் இல்லாமல் இங்கு 2 மூலவர்கள் சன்னதி உள்ளன. திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை இங்கு காலையில் நடக்காமல் மாலை வேளைகளில் நடைபெறுகிறது. 🙏🇮🇳1
பத்மகிரி நாதர் பேரில் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாடிய தென்றல் விடு தூது இக்கோயிலின் இலக்கியப் பெருமையைப் பறை சாற்றுகிறது.
🙏🇮🇳2
பலபட்டடைச் சொக்கநாத புலவர் இயற்றிய பத்மகிரி நாதர் தென்றல் விடுதூது என்ற அரிய நூலைப் பதிப்பித்த டாக்டர் உ.வெ.சாமிநாத அய்யர் அந்நூலின் முன்னுரையில் பத்மகிரியென்பது திண்டுக்கல்லின் திருநாமம் இதற்கு திண்டீச்சுரம் என்ற திருநாமமும் உண்டு.இது தேவார வைப்புத் தலங்களில் ஒன்று என்கிறார்.🇮🇳3
இரண்டு தரிசனம்:
ஆரம்பத்தில் இங்குள்ள மலையில் பத்மகிரீஸ்வரர் கோயில் இருந்தது. விழாக்காலங்களில் அடிவாரத்திற்கு சுவாமி வருவார். இதற்காக தற்போதைய அபிராமியம்மன் கோயில் இருக்குமிடத்தில், ஒரு மண்டபம் அமைக்கப்பட்டது. 🙏🇮🇳4
இப்பகுதியை ஆண்ட அச்சுத தேவராயர், காளஹஸ்தியில் அருளும் காளஹஸ்தீஸ்வரர் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். அவரை தன் இருப்பிடத்தில் வழிபட எண்ணிய அவர், 1538ல் இம்மண்டபத்தில் காளஹஸ்தீஸ்வரரையும், ஞானாம்பிகையையும் பிரதிஷ்டை செய்தார். 🙏🇮🇳5
1788ல் அன்னியர்கள் இப்பகுதியில் இருந்தபோது, மலை மீதிருந்த சிவன், அம்பிகையை இம்மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தனர். பிற்காலத்தில் இந்த மண்டபமே கோயிலாகக் கட்டப்பட்டது. தற்போதும் இங்கு இரண்டு சிவன், இரண்டு அம்பிகையர் தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். 🙏🇮🇳6
ஆடி, தை வெள்ளிகளில் அம்பிகையர் இருவரும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தருவர். தை அமாவாசையன்று இவளுக்கு விசேஷ பூஜைகள் நடக்கும்.
🙏🇮🇳7
மந்திர அம்பிகை:
ஆரம்பத்தில் இங்கு அம்பிகைக்கு சன்னதி கிடையாது. அனலன் என்னும் அசுரனை அழிக்க காளி வடித்தில் வந்த அம்பிகை இங்கு தங்கினாள். உக்கிரமாக இருந்த அவளை சிவன் சாந்தப்படுத்தி, மணந்து கொண்டார்.
🙏🇮🇳8
அவ்வேளையில் அம்பிகை மிகுந்த பொலிவுடன் அழகாக இருந்ததால், அபிராமா அம்பிகை எனப் பெயர் பெற்றாள். அபிராமம் என்றால் அழகு என்று பொருள். சித்திரையில் அம்பிகை, அசுரனை அழித்த வைபவமும், திருக்கல்யாணமும் நடக்கும். சிவத்தலம் என்றாலும் இங்கு அம்பிகையே பிரதானம் பெற்றிருக்கிறாள். 🙏🇮🇳9
இப்பகுதியில் அபிராமி கோயில் என்றால்தான் தெரியும். இவளது உண்மையான பெயர், அபிராமா அம்பிகை என்பதாகும். இப்பெயரே காலப்போக்கில் அபிராமி என மருவியது. அபிராமா என்ற பெயர் மந்திர அட்சரத்துடன் அமைந்ததாகும்.
🙏🇮🇳10
இப்பெயரைச் சொல்லி அம்பிகையை வழிபடும்போது, அம்பாளுக்குரிய அத்தனை மந்திரங்களையும் சொல்லி வழிபட்ட பலன் கிடைக்கும். தை அமாவாசையன்று இவளுக்கு விசேஷ பூஜை நடக்கும்.
🙏🇮🇳11
புலியாக வந்த சிவன்:
முற்காலத்தில் இங்கு திருக்கார்த்திகை விழா மிக விசேஷமாக நடந்துள்ளது. பாஹு, சுபாஹு என்னும் இரு சிவபக்தர்கள் கார்த்திகையன்று தவறாது சிவனைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். 🙏🇮🇳12
ஒருசமயம் அவர்கள் இங்கு வந்தபோது, சிவன் புலியின் வடிவில் சென்று, அவர்களைக் கொல்லப்போவது போல் நடித்தார். சிவ தரிசனத்திற்கு பிறகு, தங்களை உண்ணும்படி புலியிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர். புலியும் சம்மதிக்கவே, சிவனை வணங்கிவிட்டு புலியிடம் சென்றனர். 🙏🇮🇳13
சிவன் சுயரூபம் காட்டி, வாக்குத்தவறாத அவர்களுக்கு முக்தி கொடுத்தருளினார். கார்த்திகையன்று, சிவன் புலியாக வந்த வைபவத்தை இங்கு பாவனையாகச் செய்வர்.
🙏🇮🇳14
வேலை பிரார்த்தனை:
இந்திரனின் சாபத்தால் பதவியிழந்த வருணன், இங்கு சிவனை வேண்டி பதவியை திரும்பப்பெற்றான். இதன் அடிப்படையில், இழந்த வேலை திரும்பக் கிடைக்க பக்தர்கள் சிவனுக்கு சம்பா சாதம் படைத்து, ருத்ராபிஷேகம் செய்து வேண்டுகிறார்கள். 🙏🇮🇳15
அவர்களுக்குரிய நட்சத்திர நாள் அல்லது பவுர்ணமியன்று இந்த வழிபாட்டைச் செய்வது சிறப்பு. சிலர் பதவி உயர்வுக்காக இதே வேண்டுதலைச்செய்கின்றனர்.
🙏🇮🇳16
பேராசைக்கு பெரும் தண்டனை:
விஸ்வாமித்திரர் தான் நடத்திய யாகத்தில் கலந்து கொண்ட சுமேதன் என்ற அந்தணருக்கு சம்பளமாக பெரும் பொருள் கொடுத்தார். பேராசை பிடித்த அந்தணர், எவ்வளவு கொடுத்தும் போதவில்லை என்றார்.
🙏🇮🇳17
அவரது ஆசையை அடக்க எண்ணிய விஸ்வாமித்திரர், அவரை மானாக மாறும்படி சபித்துவிட்டார். வருந்திய அந்தணர், சாப விமோசனம் கேட்க, திண்டீஸ்வரம் இறைவனை வழிபட்டால் விமோசனம் கிடைக்குமென்றார். அதன்படி, அந்த அந்தணர் பத்மகிரீஸ்வரரை வணங்கி சுயரூபம் பெற்றார். 🙏🇮🇳18
சித்திரை பிரம்மோற்ஸவத்தின்போது, கோயில் எதிரில் அந்தணரான மானுக்கு சிவன் அருளும் நிகழ்ச்சி நடக்கும். பவுர்ணமிதோறும் கிரிவலம் செல்கிறார்கள். மார்கழி தேய்பிறை அஷ்டமியில் சிவன், படியளக்கும் வைபவம் நடக்கும். 🙏🇮🇳19
அன்று பஞ்சமூர்த்திகளும் அஷ்டமி சப்பரத்தில் எழுந்தருளுவர். சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி, இரண்டு சீடர்களுடன் காட்சி தருகிறார். வழக்கமாக சீடர்கள் அமர்ந்து உபதேசம் கேட்கும் நிலையில்தான் இருப்பர். ஆனால், இவர்களிருவரும் நின்றபடி இருக்கின்றனர். 🙏🇮🇳20
குருவிற்கு மரியாதை தரும் விதமாக இவ்வாறு இருப்பதாகச் சொல்கிறார்கள். காளஹஸ்தீஸ்வரர் சன்னதிக்கு பின்புறம் லிங்கோத்பவர் இருக்க வேண்டிய இடத்தில், முருகப்பெருமான் தண்டபாணியாக காட்சி தருகிறார்.🙏🇮🇳21
அகத்திய விநாயகர்:
பொதிகைக்குச் செல்லும் வழியில் அகத்தியர் இங்கு சிவனை வழிபட்டுச் சென்றார். இவர் வழிபட்ட அகத்திய விநாயகர் கிரிவலப்பாதையில் இருக்கிறார். கந்தசஷ்டியின்போது முருகன், வள்ளி இருவரும் இங்கு எழுந்தருளுவர். 🙏🇮🇳22
அப்போது வள்ளியை, விநாயகர் யானை வடிவில் வந்து மிரட்டுவது போல பாவனை செய்வர். பின்பு முருகன், வள்ளி திருமணம் நடக்கும். இவ்வேளையில் தினை மாவு நைவேத்யம் படைக்கப்படும்.
🙏🇮🇳23
பெருமாளுடன் ஆஞ்சநேயர்:
வரதராஜப்பெருமாளுக்கு பிரகாரத்தில் சன்னதி இருக்கிறது. இவர் வட திசையை நோக்கியிருப்பதால், செல்வவளத்துக்காக இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். பொதுவாக ஆஞ்சநேயர், பெருமாள் சன்னதி எதிரில் அல்லது பிரகாரத்தில் தனிச்சன்னதியில்தான் காட்சி தருவார். 🙏🇮🇳24
ஆனால், இங்கு சுவாமியின் அருகிலேயே காட்சி தருகிறார். ஆஞ்சநேயரின் பக்திக்கு முக்கியத்துவம் தரும் விதமாக இவ்வாறு பிரதிஷ்டை செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
🙏🇮🇳25
வரதராஜர் வைகுண்ட ஏகாதசியன்று, கருட வாகனத்தில் சொர்க்கவாசல் கடப்பார். மற்ற தலங்களைப்போல, இவருக்கு தனியே சொர்க்கவாசல் கிடையாது. அபிராமிக்கான பிரதான வாசலையே, சொர்க்கவாசலாகக் கருதி பெருமாள் கடப்பார். 🙏🇮🇳26
தங்கை பார்வதிக்கான வாசல் வழியே அண்ணனான பெருமாள் உரிமையோடு கடப்பதாகச் சொல்கிறார்கள்.
சிறப்பம்சங்கள் :
எந்த கோயிலிலும் இல்லாமல் இங்கு 2 மூலவர் சன்னதி உள்ளது.
தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் மட்டும் ஏன் புண்ணியங்கள் பெருகும் மாதமாக இருக்கிறது தெரியுமா?
தமிழ் காலண்டரில் இருக்கும் ஒவ்வொரு மாதமும் அதற்கென தனிச்சிறப்புகளை கொண்டுள்ளது. முக்கியமான திருவிழாக்களைத் தவிர, மற்ற மாதங்களுடன் ஒப்பிடும்போது புராட்டசி மாதம் கூடுதல் சிறப்பையும், முக்கியத்துவத்தையும் கொண்ட மாதமாக இருக்கிறது.
திருமால் வழிபாடு, நவராத்திரி என நமக்கு தெரிந்த அம்சங்களைக் காட்டிலும் நமக்கு தெரியாத பல சிறப்புகள் இந்த மாதத்தில் இருக்கிறது. அவை என்னென்னெ என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சமீபத்தில் டில்லியில் ஏழு ஆண்டுகள் நிறைவு செய்துள்ள பாரத பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் மோடியின் அரசியல் பயணம், உலகில் நாம் இதுவரை கண்ட எந்த அரசியல் தலைவரின் பயணம் போன்றதும் இல்லை.
குஜராத் முதல்வராக அக்டோபர் 2001ல் ஆமதாபாத்தில் தொடங்கிய இந்த பயணம், ஜனநாயக வரலாற்றில் இணை இல்லாத நீண்ட தொடர்ச்சியாக செல்கிறது. இருபது ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் மற்றும் நாட்டின் நிர்வாகத் தலைவராக இருந்து இன்னும் தனது பணியை அறத்தின் வழியில் தொடர்ந்து செவ்வனே செய்து வருகிறார்.
எல்லோரும் எதிர்கொள்ள அச்சப்படும் தங்கள் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்போ அல்லது மக்கள் ஆட்சியின் மேல் அடையும் சோர்வையோ ஒவ்வொரு தேர்தலிலும் திறமையினால் எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார்.
புதிய பார்லி., திட்டத்தை எதிர்ப்பதா: பிரதமர் மோடி பாய்ச்சல்!
புதுடில்லி:டில்லியில் ராணுவ அமைச்சகத்திற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு அதிநவீன அலுவலக கட்டடங்களை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
அப்போது, மத்திய அரசின், 'சென்ட்ரல் விஸ்டா' எனப்படும் புதிய பார்லிமென்ட் கட்டுமான திட்டத்தை எதிர்ப்பவர்களின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
குற்றச்சாட்டு
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட நம் பார்லிமென்ட் கட்டடம், மத்திய அரசு அலுவலகங்கள், பிரதமர் இல்லம் உள்ளிட்டவை மிகவும் பழமையானதாக உள்ளன. அங்கு பணியாற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு போதிய இடவசதி இல்லை.
உலகளவில் வேகமான வளர்ச்சியில் முதலிடத்தில் இந்தியா; அடுத்தது சீனா
புதுடில்லி : உலகிலேயே மிகவும் வேகமாக வளரக்கூடிய பொருளாதாரமாக இந்தியா இருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
உலகளவிலான பொருளாதார வளர்ச்சியில், இந்தியாவை அடுத்து சீனா இருக்கும் என்றும், அந்த ஆய்வு தன் கணிப்பை
வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாடு குறித்த கூட்டத்தில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இந்தியா, 2022ம் ஆண்டில் 6.7 சதவீதம் வளர்ச்சி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுவே, உலகின் மிக வேகமான வளர்ச்சியாக இருக்கும்.சீனா 5.7 சதவீத வளர்ச்சியை பெறும் என கணிக்கப்பட்டு, இரண்டாவது இடத்தில் உள்ளது.
க.சிவஞானம், பெருமாள்புரம், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல் கட்சிகள், 'தீர்மானம்' என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தி, மக்களுக்கு வேடிக்கை காட்டுகின்றன.
நாட்டு மக்களாகிய நாமும், அதன் சூட்சுமம் புரியாமல், பூரித்து மகிழ்கிறோம்.
'குடி'காரன் ஒருவன், தினமும் மது அருந்துவதால் வீட்டில் எப்போதும் சண்டையும், சச்சரவும் தான். இதற்கு முடிவு கட்ட, ஒரு நாள் தன் மனைவி-, குழந்தைகள் அனைவரையும் அழைத்து, 'நாளை முதல் குடிக்க மாட்டேன்; இது சத்தியம்' என தீர்மானம் போடுகிறான்.
ஜாதக கட்டத்தை பார்க்காமலேயே பரிகாரம் சொல்லும் மகான் காஞ்சி பெரியவர். பெரியவா சொல்லும் ஒவ்வொரு பரிகாரமும் ஜோதிடத்தோடு ஒத்துப்போகும். இதில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
ஜாதகப்படி சில யோகமில்லா கிரகங்களின் தசாபுத்தி காலங்களில் மட்டும் தான் பிரச்னை ஏற்படும். ஆனால் சில வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நலக் கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் அது முன் கடுமையான கர்மா மற்றும் பித்ரு தோஷமாக இருக்கும்.
இதற்கு அனைவராலும் எல்லா பரிகாரங்களும் செய்ய முடியாது. அதற்கு நம் பெரியவா எளிய பரிகாரமாக கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் (அரசாணிக்காய்) தானம் செய்தால் அந்த குடும்பம் கெட்ட தோஷத்திலிருந்து விடுபடும் என்று வழிகாட்டியிருக்கிறார்.