புதிய பார்லி., திட்டத்தை எதிர்ப்பதா: பிரதமர் மோடி பாய்ச்சல்!

புதுடில்லி:டில்லியில் ராணுவ அமைச்சகத்திற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு அதிநவீன அலுவலக கட்டடங்களை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
அப்போது, மத்திய அரசின், 'சென்ட்ரல் விஸ்டா' எனப்படும் புதிய பார்லிமென்ட் கட்டுமான திட்டத்தை எதிர்ப்பவர்களின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
குற்றச்சாட்டு

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட நம் பார்லிமென்ட் கட்டடம், மத்திய அரசு அலுவலகங்கள், பிரதமர் இல்லம் உள்ளிட்டவை மிகவும் பழமையானதாக உள்ளன. அங்கு பணியாற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு போதிய இடவசதி இல்லை.
எனவே, 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதில் புதிய பார்லி., கட்டடம், மத்திய அரசு அலுவலகங்கள், பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதி இல்லங்கள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
'கொரோனா பெருந்தொற்றினால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடங்கள் தேவையற்றது' என, எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், டில்லி கஸ்துாரிபா மார்க் மற்றும் ஆப்ரிக்கா அவென்யூ ஆகிய இடங்களில் ராணுவ அமைச்சகத்திற்காக புதிதாக இரண்டு அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
அடுத்த அடி

மொத்தம் 9.60 லட்சம் சதுர அடி பரப்பளவு உடைய இந்த அதிநவீன கட்டடங்களில் 7,000 ராணுவ அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். இரண்டு புதிய கட்டடங்களை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:நம் நாடு சுதந்திரம் பெற்று 75வது ஆண்டை கொண்டாடும் வேளையில், புதிய இந்தியாவின் தேவைகளுக்கும், கனவுகளுக்கும் ஏற்ப நம் தலைநகரை மாற்றும் பணியில் நாம் அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளோம்.
இந்த இரண்டு புதிய அலுவலகங்கள் வாயிலாக முப்படைகளை சேர்ந்த நம் வீரர்கள் இன்னும் வசதியாகவும், சிறப்பாகவும் பணியாற்றுவர்.தலைநகர் டில்லியில் நவீன ராணுவ வளாகம் உருவாக்கும் பணியில் மிக முக்கிய நகர்வாக இது பார்க்கப்படுகிறது.
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட பழைய கட்டடங்களில் இருந்து முப்படையின் புதிய கட்டடங்களுக்கு நம் வீரர்கள் இடம் மாற உள்ளனர்.
தவறான தகவல்

சுதந்திரத்திற்கு முன் கட்டப்பட்ட அலுவலகங்களில் முப்படை அதிகாரிகளும், ஊழியர்களும் எவ்வாறு பணியாற்றுவர் என்பது குறித்து, சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை விமர்சிப்போருக்கு கவலை இல்லை.
நம் அமைச்சர்களும், அதிகாரிகளும் பழைய அலுவலக கட்டடங்களில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து இவர்கள் வாய் திறக்க மாட்டார்கள். தங்கள் தனிப்பட்ட கருத்துகளை திணிப்பதற்காக சென்ட்ரல் விஸ்டா திட்டம் குறித்து தவறான தகவல்களை எதிர்க்கட்சியினர் பரப்பி வருகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய அமைச்சர் உறுதி

மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது:சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரை மறு சீரமைக்கப்படும் ராஜபாதை பணிகள் இரண்டரை மாதங்களில் முடிந்து விடும்.
அடுத்தாண்டு குடியரசு தின விழா அணி வகுப்பு இதில் நடக்கும். அடுத்தாண்டு பார்லி., குளிர் கால கூட்டத் தொடர் புதிய பார்லிமென்ட் வளாகத்தில் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

17 Sep
தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் மட்டும் ஏன் புண்ணியங்கள் பெருகும் மாதமாக இருக்கிறது தெரியுமா?
தமிழ் காலண்டரில் இருக்கும் ஒவ்வொரு மாதமும் அதற்கென தனிச்சிறப்புகளை கொண்டுள்ளது. முக்கியமான திருவிழாக்களைத் தவிர, மற்ற மாதங்களுடன் ஒப்பிடும்போது புராட்டசி மாதம் கூடுதல் சிறப்பையும், முக்கியத்துவத்தையும் கொண்ட மாதமாக இருக்கிறது.
திருமால் வழிபாடு, நவராத்திரி என நமக்கு தெரிந்த அம்சங்களைக் காட்டிலும் நமக்கு தெரியாத பல சிறப்புகள் இந்த மாதத்தில் இருக்கிறது. அவை என்னென்னெ என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Read 21 tweets
17 Sep
#HappyBdayModiji

மோடி என்ற தன்னிகரில்லா தலைவன்!

சமீபத்தில் டில்லியில் ஏழு ஆண்டுகள் நிறைவு செய்துள்ள பாரத பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் மோடியின் அரசியல் பயணம், உலகில் நாம் இதுவரை கண்ட எந்த அரசியல் தலைவரின் பயணம் போன்றதும் இல்லை.
குஜராத் முதல்வராக அக்டோபர் 2001ல் ஆமதாபாத்தில் தொடங்கிய இந்த பயணம், ஜனநாயக வரலாற்றில் இணை இல்லாத நீண்ட தொடர்ச்சியாக செல்கிறது. இருபது ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் மற்றும் நாட்டின் நிர்வாகத் தலைவராக இருந்து இன்னும் தனது பணியை அறத்தின் வழியில் தொடர்ந்து செவ்வனே செய்து வருகிறார்.
எல்லோரும் எதிர்கொள்ள அச்சப்படும் தங்கள் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்போ அல்லது மக்கள் ஆட்சியின் மேல் அடையும் சோர்வையோ ஒவ்வொரு தேர்தலிலும் திறமையினால் எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார்.
Read 24 tweets
16 Sep
உலகளவில் வேகமான வளர்ச்சியில் முதலிடத்தில் இந்தியா; அடுத்தது சீனா

புதுடில்லி : உலகிலேயே மிகவும் வேகமாக வளரக்கூடிய பொருளாதாரமாக இந்தியா இருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
உலகளவிலான பொருளாதார வளர்ச்சியில், இந்தியாவை அடுத்து சீனா இருக்கும் என்றும், அந்த ஆய்வு தன் கணிப்பை
வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாடு குறித்த கூட்டத்தில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இந்தியா, 2022ம் ஆண்டில் 6.7 சதவீதம் வளர்ச்சி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுவே, உலகின் மிக வேகமான வளர்ச்சியாக இருக்கும்.சீனா 5.7 சதவீத வளர்ச்சியை பெறும் என கணிக்கப்பட்டு, இரண்டாவது இடத்தில் உள்ளது.
Read 7 tweets
16 Sep
இது உங்கள் இடம்: தீர்மானம் இருக்க கவலை ஏன்?

க.சிவஞானம், பெருமாள்புரம், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல் கட்சிகள், 'தீர்மானம்' என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தி, மக்களுக்கு வேடிக்கை காட்டுகின்றன.
நாட்டு மக்களாகிய நாமும், அதன் சூட்சுமம் புரியாமல், பூரித்து மகிழ்கிறோம்.
'குடி'காரன் ஒருவன், தினமும் மது அருந்துவதால் வீட்டில் எப்போதும் சண்டையும், சச்சரவும் தான். இதற்கு முடிவு கட்ட, ஒரு நாள் தன் மனைவி-, குழந்தைகள் அனைவரையும் அழைத்து, 'நாளை முதல் குடிக்க மாட்டேன்; இது சத்தியம்' என தீர்மானம் போடுகிறான்.
Read 11 tweets
16 Sep
அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், திண்டுக்கல்

எந்த கோயிலிலும் இல்லாமல் இங்கு 2 மூலவர்கள் சன்னதி உள்ளன. திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை இங்கு காலையில் நடக்காமல் மாலை வேளைகளில் நடைபெறுகிறது. 🙏🇮🇳1
பத்மகிரி நாதர் பேரில் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாடிய தென்றல் விடு தூது இக்கோயிலின் இலக்கியப் பெருமையைப் பறை சாற்றுகிறது.

🙏🇮🇳2
பலபட்டடைச் சொக்கநாத புலவர் இயற்றிய பத்மகிரி நாதர் தென்றல் விடுதூது என்ற அரிய நூலைப் பதிப்பித்த டாக்டர் உ.வெ.சாமிநாத அய்யர் அந்நூலின் முன்னுரையில் பத்மகிரியென்பது திண்டுக்கல்லின் திருநாமம் இதற்கு திண்டீச்சுரம் என்ற திருநாமமும் உண்டு.இது தேவார வைப்புத் தலங்களில் ஒன்று என்கிறார்.🇮🇳3
Read 27 tweets
16 Sep
காஞ்சி மாமுனிவர் சொல்லிய பரிகாரம் 

ஜாதக கட்டத்தை பார்க்காமலேயே பரிகாரம் சொல்லும் மகான் காஞ்சி பெரியவர்.  பெரியவா சொல்லும் ஒவ்வொரு பரிகாரமும் ஜோதிடத்தோடு ஒத்துப்போகும். இதில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
ஜாதகப்படி சில யோகமில்லா கிரகங்களின் தசாபுத்தி காலங்களில் மட்டும் தான் பிரச்னை ஏற்படும். ஆனால் சில வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நலக் கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் அது முன் கடுமையான கர்மா மற்றும் பித்ரு தோஷமாக இருக்கும்.
இதற்கு அனைவராலும் எல்லா பரிகாரங்களும் செய்ய முடியாது. அதற்கு நம் பெரியவா எளிய பரிகாரமாக கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் (அரசாணிக்காய்) தானம் செய்தால் அந்த குடும்பம் கெட்ட தோஷத்திலிருந்து விடுபடும் என்று வழிகாட்டியிருக்கிறார்.
Read 24 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(