‘உயர் திருவாளர் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரை ஆட்சியாளர் கைது செய்தது பற்றி ஒரு சில கும்பல்கள் முதலைக் கண்ணீர் வடிக்கத் தொடங்கியிருக்கின்றன. பார்ப்பன ஏடுகளான ‘தினமணி’, ‘கல்கி’ போன்றவைகள் அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று
கசிந்துருகிக் கண்ணீர் மல்கி எழுதுகின்றன. கலவரப் பிரச்சினையோடு சம்மந்தமில்லாத பல்வேறு சங்கதிகளைக் கலந்து, முதலமைச்சர் மீது தவறான எண்ணங்களைக் கற்பித்து விஷமத்தனமாக எழுதியிருக்கின்றன.
‘சமாதானக் குழு என்ற பெயரினால் புறப்பட்டிருக்கிற எதிர்க்கட்சிக்காரர்களின் கலவரக் கும்பலும் கோவிந்தா! கோவிந்தா!’ என்று இம்மாதத்தில் சனிக்கிழமைக் காலையில் சிறுவர்கள் வீடு தோறும் சென்று கத்துவதுபோலக் கத்திக் கொண்டிருக்கிறது.
‘சமாதானக் குழு என்ற பெயரினால் புறப்பட்டிருக்கிற எதிர்க்கட்சிக்காரர்களின் கலவரக் கும்பலும் கோவிந்தா! கோவிந்தா!’ என்று இம்மாதத்தில் சனிக்கிழமைக் காலையில் சிறுவர்கள் வீடு தோறும் சென்று கத்துவதுபோலக் கத்திக் கொண்டிருக்கிறது.
திரு. தேவர் அவர்களுக்குக் கட்சியு மில்லை; கொள்கையுமில்லை. ‘சுபாஷ் போஸ் உயிரோடிருக்கிறார்’ என்பது மட்டும் ஒரு கட்சிக்குக் கொள்கையாகிவிடுமா? தேவர் தம் சிறந்த பேச்சுச் சக்தியைப் பயன்படுத்தி, தம் ஜாதிக்காரர்களின் தனிப் பெருந் தலைவரா யிருந்துகொண்டு, அதன் மூலம் சட்டசபை அல்லது
பார்லிமெண்டில் பதவி பெறுவது என்பதே அவரது பொதுத் தொண்டாயிருந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றிப் பெற்று மந்திரிசபை அமைக்க முடிந்தால் அதில் தமக்கொரு மந்திரி கிடைக்குமா என்பதற்காக 2, 3 பேர்களைச் சேர்த்துக் கொண்டு தனிக்
கட்சியமைப்பவராதலால் அந்த வாய்ப்பு இல்லையென்றவுடனேயே பார்லிமெண்ட் உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு (அதிக ஊதியம் அதில் இருப்பதால்) எம்.எல்.ஏ. பதவியை உதறிவிட்டார். தன்னந் தனியாய்ப் பார்லிமெண்டில் போய் இவர் என்ன சாதிக்கப் போகிறார் என்பதைப் பற்றி அவரைத்தான் கேட்க வேண்டும்.
‘ஜாதி வெறியை வளர்த்து மற்ற ஜாதிகளை ஒடுக்கி வைத்துத் தான் ஒரு தனிக்காட்டு ராஜா மாதிரி இருந்து வந்தால் ஜாதி ஒழிப்புக் காரராகிய நாம் வருந்தாமலிருக்க முடிய வில்லை. ஜாதி வெறி வேரூன்றிவிட்டால் ஜன நாயகத் துக்கோ, பகுத்தறிவுக்கோ, பொதுநலத் தொண்டுக்கோ, ஒழுக்கத்துக்கோ, நீதிக்கோ இடமில்லை.
தேவர் சிறைவாசத்தை நாமும் விரும்ப வில்லை என்றாலும், இந்தச் சூழ்நிலையில் அவரைச் சிறைப் பிடிக்காதிருந்தால் சாதிச் சண்டை நின்றிருக்காதென்பது உறுதி. அவர் வெளியிலிருந்த வரை கலவரம் நடந்து கொண் டிருந்ததும், கைது செய்யப்பட்ட பின் கலவரம் அடியோடு ஓய்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே சி.ஆர். அவர்கள் முதலமைச்சராயிருந்தபோதுதான் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திரு.முத்துராமலிங்கனார் கைது செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
2-வது உலகப் போரின்போது இவர் ஜாதிச் சண்டைக்குக் காரணமாயிருப்பார்,
போர் எதிர்ப்புப் பிரச்சாரஞ் செய்வார் என்ற காரணத்திற்காகச் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.
‘இன்றைய நிலையிலுங்கூட முன்கூட்டியே தேவரைத் தனிப்படுத்தியிருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகியிருக்குமா? இவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டிருக்குமா?
இத்தகைய ஆதி திராவிடக் குடும்பங்கள் ஊரைவிட்டு வெளியேறி தவிக்குமாறு நேர்ந்திருக்குமா?
‘போலீஸ் நடவடிக்கை சிறிது தாமத மானதால்தான் இவ்வளவு சேதம் ஏற்பட்டது. இன்னும் பல மாதங்களுக்குப் போலீஸ் படை கலவரப் பகுதிகளில் காவல் புரிந்துதான் தீர வேண்டும்.
போலீஸ் துப்பாக்கிப் பிரயோகத் தினால் மாண்டவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கின்றவர்கள், மாதா கோயிலுக் குள் புகுந்து ஏழை மக்களைச் சாதிவெறியர்கள் பதைக்கப் பதைக்கச் சுட்டுக் கொன்றும், அடித்தும்,
பெண்களை அவமானப்படுத்தியும் மிருகத்தனமாக நடந்துக் கொண்டதைக் கண்டிக்காமலும் வருந்தாமலும் இருப்பது ஏன்?
‘சமாதானக் குழு என்ற புதுக் கும்பல் இனிப் புதுக் கலகத்துக்கு விதை ஊன்றுவார்களோ என்று அஞ்ச வேண்டியதிருக்கிறது.
இவர்கள் பேச்சும் நடத்தையும் அத்தகையதாயிருக்கிறது. ஆதலால் அவர்களைக் கலவரப் பகுதியில் நுழையவிடக் கூடாதென்று ஆட்சியாளருக்கு எச்சரிக்கின்றோம்.
குழம்பியுள்ள குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள் இக் குழுவினர். இவர்களுக்கு பஸ்ஸூல்லா ரோடுப் பார்ப்பனர் தலைவர் தூபம் போடுகிறார்.”
- பெரியார் - ‘விடுதலை’
முதுகுளத்தூர் கலவரம் குறித்து பெரியார் நடத்திய ‘விடுதலை’ வெளியிட்ட செய்திகள்
இன்று மட்டுமல்ல, முதுகுளத்தூர் கலவர காலம் முதல் ஒடுக்கப்பட்ட மக்களினது போராட்டங்களுக்கு வெளிப்படையான, உறுதியான ஆதரவை எந்தவொரு அரசியல் கட்சியும் தந்ததில்லை. தங்களது வாக்கு வங்கியாக,
ஒடுக்கப்பட்ட மக்களைப் பயன்படுத்தும் நோக்கில் மட்டுமே அரசியல் கட்சிகளும், வலதுசாரி - இடதுசாரி தலைவர்களும் பாசாங்கு செய்து வருகின்றனர். விதிவிலக்காக திராவிடர் கழகமும், விடுதலை நாளேடும் மட்டுமே அன்றைய சூழலில் ஆதரவு தளத்தில் செயல்பட்டன.
விசாரணையின் தீர்ப்பு’ என்ற தலைப்பில் 12.10.57 அன்றைய ‘விடுதலை’ நாளேடு, ‘திரு. முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் கைது செய்யப்பட்டதை முன்னிட்டு சென்ற வாரத்தில் மதுரையில் கடையடைப்பு நடந்ததாம் (மதுரையில் கடையடைப்புச் செய்ய வேண்டுமென்று யாராவது ஒருவர் 4
முக்கிய இடங்களில் தட்டியில் எழுதி வைத்துவிட்டால் போதும்! காலித்தனத்துக்கு அஞ்சி எல்லாக் கடைகளையும் மூடிவிடுவார்கள்!) இந்தக் கடையடைப்பை மேற்பார்வையிடுவதற்காக
கம்யூனிஸ்ட் எம்.பி.யும், கண்ணீர்த் துளித் (தி.மு.க.) தலைவர் ஒருவரும், காங்கிரஸ் கண்ணீர்த் துளி தலைவரும் ஒரே மோட்டார் காரில் ஊர்வலமாகச் சென்றார்கள் என்று படித்தோம். எவ்வளவு ஒற்றுமைப் பார்த்தீர்களா? எலியும், பூனையும், நாயும் ஒரே தட்டில் உணவு சாப்பிடுவதைப் போன்ற சர்க்கஸ்!
சாதி வெறியர்களுக்கு ஆதரவாக சமாதானக் குழுவாம்! ஊர்வலமாம்! கடையடைப்பாம்! நிதி திரட்டலாம்! நீதிமன்ற வழக்காம்! கீழத் தூவல் கலவரத்தின்போது போலீசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்காவிட்டால் இருபுறமும் நூற்றுக்கணக்கான உயிர்கள் சேதப்பட்டிருக்கும்;
இன்னும் ஏராளமான ஆதிதிராவிடக் குடிசைகள் தீக்கிரையாகியிருக்கும். சாதிவெறி எங்கிருந்தாலும் அதை அடக்கி, ஒடுக்கியே தீர வேண்டும்’ என தலையங்கம் எழுதியது. தினகரனும் பெரியார் ஒருவரை மட்டுமே ஆதரவு சக்தியாகக் குறிப்பிடுகிறார்.
இராமநாதபுரம் கலவரப் பகுதிகளை மூன்று நாட்கள் பார்வையிட்டு, மதுரையில் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த அன்றைய மத்திய அரசின் உள்துறை அமைச்சர் திரு.பி.என். தத்தார், ‘கடந்த பத்து ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களிடையே விழிப்பும் எழுச்சியும் ஏற்பட்டு வளர்ந்து வந்திருக்கிறது.
சமத்துவ எண்ணமும் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. தங்களை தாழ்த்தப்பட்ட மக்களைவிட உயர்ந்தவர்கள் என்று கருதி வந்த மறவர்களுக்கு இது பிடிக்கவில்லை. இவர்கள் நிலப்பிரபுத்துவ கொள்கையைக் கொண்டிருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.
உதாரணமாக, மறவர்கள் முன்னிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மேல்துண்டு போடக் கூடாது; காலில் செருப்புப் போட்டுக் கொள்ளக் கூடாது. இப்போக்கை வளரும் தாழ்த்தப்பட்ட இளைஞர் சமுதாயம் எதிர்த்து வந்தது. இம் மனப்பான்மைகளுக்குள் மோதல் ஏற்பட்டதே இக்கலவரத்திற்கு மூலகாரணம்.
மேற்படி கலவரத்திற்கு உடனடிக் காரணம், இதர சமூகத்தினருடன் சம அந்தஸ்து கோரிய தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரான திரு. இம்மானுவேல் சேகரன் என்பவர் கொலை செய்யப்பட்டதுதான்’ என்றார். (விடுதலை) 8.10.57)
‘தினகரன் எழுதிய முதுகுளத்தூர் கலவரம் நூலிலிருந்து
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
புனைவு இரண்டு : உ.மு.தேவர் தனது நிலங்களை தலித் மக்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தார்.
Source : அறிவுக்குயில் -கீற்று
'உ.முத்துராமலிங்கத்தை பரம்பரைப் பணக்காரர் எனச் சொல்லும் அவரது பற்றாளர்கள் உ.முத்துராமலிங்கம் தனது நிலங்களை தலித்துகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார் என்பதைச் சற்று உரக்கவே கூவுகின்றார்கள். உ.முத்துராமலிங்கம் தனது இறப்புக்கு
முன்னர் 1960ல் தனது பங்களா இருக்கும் புளிச்சிகுளம் கிராமத்தில் 32 1/2 கிராம நிலங்களை 17 பாகங்களாகப் பிரித்திருக்கிறார். ஒரு பாகத்தை தனக்கு வைத்துவிட்டு, 16 பாகங்களை தனக்கு நெருக்கமாகவும்,
புனைவு ஒன்று: உ.மு.தேவர் பாண்டிய மன்னர் வழிமுறையில் வந்தவர்.
Source : அறிவுக்குயில் -கீற்று
திரு.முத்துராமலிங்கம் 30.10.1908ஆம் ஆண்டில் உக்கிரபாண்டி-இந்திராணி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக 'பசும்பொன்' கிராமத்தில் பிறந்து, 1938ல்
சப்-மாஜிஸ்திரேட்டாக இருந்த பிரதம நாயகம் என்பவரை இவரது ஆட்கள் கொலை செய்து விட, அச்சூழலில் மதுரைக்குப் புலம் பெயர்ந்து வாழ்ந்தவர். பின்னர் 29.10.1962ல் மதுரை திருமங்கலம் பகுதியில் இறந்து விடுகிறார். 'பசும்பொன்' கிராமத்தின் பழம் பெயர் 'தவசிகுறிச்சி'
எனவும் பிற்காலத்தில் உடையான் பசுபதியின் நினைவாக 'பசும்பொன்' என்று அழைக்கப் பட்டதாகவும் கூறுகின்றனர்.
இவ்வாறு புனையப்பட்ட 'மன்னர் பரம்பரை' கதையை பசும்பொன்னிற்கு பக்கத்தில் இருக்கும் 'முஷ்டக்குறிச்சி'யைச் சேர்ந்தவரும்,
தன்னை தமிழகத்தின் அதிபராக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் சீமான் அவர்கள் இன்னும் ஒருபடி முன்னேறி, தன்னை ஒரு ஆண்டவனாக நினைக்கத் தொடங்கியுள்ளார்.
இன்று முப்பாட்டன் முருகன் எப்படி தமிழ்க் கடவுளாகக் கொண்டாடப்படுகின்றானோ அதே போல நாளைய தலைமுறை சீமானைத் தமிழினத்தின் தனிப்பெரும் கடவுளாக வணங்கப் போகின்றது. அன்று சீமான் “நம் முப்பாட்டனான முருகன் முறுக்கேறிய தசைகளை உடையவன். அதனால் அவனை முறுக்கன் என்று அழைத்தனர்.
நாளடைவில் அதுவே முருகனாக மாறியது” என்று உருட்டியது போலவே, நாளை ஒரு தம்பி, "கட்சியிலும் வாழ்க்கையிலும் ஒரு சீமானைப் போல வாழ்ந்ததால் எனது முப்பாட்டன் சீமான் என அழைக்கப்பட்டான்" என ஹை டெசிபலில் கேட்பவர்களது காதுகள் கிழியும் வண்ணம் உருட்டிக் கொண்டிப்பான்.
கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படிப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.
`சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன்.
`கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று `கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த,
`கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப் பாட்டு.
எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும். `பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு’ என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.
விருதுநகர் பெ. சீனிவாசன்
பின்னர் 1971 மார்ச் 24 முதல் 1974-ம் ஆண்டு மார்ச் 9-ந் தேதி வரை விருதுநகர் சீனிவாசன் துணை சபாநாயகராகப் பணியாற்றினார். இவர்தான் 1967 தேர்தலில் விருதுநகரில் காமராஜை தோற்கடித்தவர். இந்த விருதுநகர் சீனிவாசனே
பின்னாளில் அதிமுகவுக்கு தாவினார். 2009-ம் ஆண்டு மறையும் வரை சீனிவாசன், அதிமுகவில்தான் இருந்தார்.
இந்தி திணிப்பு காரணமாகக் காங்கிரஸ், வலுவான எதிர்ப்பை தமிழகத்தில் சம்பாதித்திருந்தது.
சீனிவாசன், மாணவர் சங்கத் தலைவராக அப்போராட்டத்தில் முக்கிய பங்குவகித்தவர்.
மேலும்,
வேறுபல காரணங்களும் காமராசரின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.
காமராசர் 1963க்குப் பிறகு, ஆட்சியை விடுத்து கட்சிப் பணியில் ஈடுபட்டுவந்தார். 1967 இல் அவர் தேர்தலில் வெற்றிபெற்றால் அவர்தான் மீண்டும் முதல்வராகும் சூழ்நிலை இருந்தது. இது,
தம்பி' படத்தை சீமான் இயக்கிய போது அதில் ஒரு காட்சி. கதாநாயகன் வீட்டின் சுவற்றில் தேவர் படம். புரட்சி பேசும் சீமான் தேவர் படத்தை வைத்திருக்கிறாரே என்றொரு விவாதம் அப்போது எழுந்தது. பார்ப்பவர்களுக்கு இதில் என்ன இருக்கிறது என்றொரு கேள்வி எழக்கூடும்.
ஆனால், பெரியாரின் பேரன் என சொல்லிக் கொள்ளும் சீமான் தேவரை படத்தில் காட்டியதுதான் முக்கியத்துவமாகிறது. இவை குறித்து கீற்று இணையதளத்தின் பேட்டியின் போது சீமானிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.
"முத்துராமலிங்கத் தேவரை கைது செய்தாத்தான் தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சனை ஒழியும்னு முதுகுளத்தூர் கலவர நேரத்தில் பெரியார் சொல்லியிருக்கார். ஆனால் உங்களோட படங்களில் முத்துராமலிங்கத் தேவரோட புகைப்படம் தொடர்ந்து இடம்பெறுகிறது..?"