கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படிப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.
`சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன்.

`கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று `கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த,
`கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப் பாட்டு.

எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும். `பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு’ என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.
`மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.
வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதைவரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்!
`கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும், சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்’ என்பது கவிஞரின் வாக்குமூலம்.
’முத்தான முத்தல்லவோ’ பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார். அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது. `நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை!’’
கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், `திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா,’ தனக்குப்பிடித்த பாடல்களாக, `என்னடா பொல்லாத வாழ்க்கை,’’ `சம்சாரம் என்பது வீணை’’ ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.
கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம்,`நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான்’ ’என்பார்.

காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால் முற்றுப்பெறவில்லை!
ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தில்; `பராசக்தி’,’`ரத்தத்திலகம்’’,`கறுப்புப்பணம்’,’ `சூரியகாந்தி’.’ உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.
முதல் மனைவி பெயர் பொன்னம்மா ( சண்டாளன் கொன்று விட்டான்),அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50-வது வய்தில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்!
படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்!
`கண்ணதாசன் இறந்துவிட்டார்’’ என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடிப் பலரும் அழுது கூடிவிட, பிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.
`உங்கள் புத்தங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்... புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!’
தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர்,`வனவாசம்,மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள்’ என்றார்.

காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர் ( சண்டாளன்) கலைஞர் ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும், திட்டியவரும் இவரே!
ஈ.வெ.கி.சம்பத்.ஜெயகாந்தன்,சோ,பழ.நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள். `கவிஞரின் தோரணையை விட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்’ என்பார் ஜெயகாந்தன்.
திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை.`இது எனக்குச் சரிவராது’’ என்றார்.

`குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும்
ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை’ என்று தனது தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.
`பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது’ என்பது அவர் அளித்த வாக்குமூலம்.
தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி விருப்பம்!

`அச்சம் என்பது மடமையடா,’ `சரவணப் பொய்கையில் நீராடி,’ `மலர்ந்தும் மலராத...,’ `போனால் போகட்டும் போடா..,’ `
கொடி அசைந்ததும்,’ `உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,’ `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,’ `எங்கிருந்தாலும் வாழ்க,’ `அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்,’ `சட்டி சுட்டதடா கை விட்டதடா..., ஆகிய 10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுவதும் இருக்கும் காவியங்கள்
இறப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார். அதன் கடைசி வரி இப்படி முடியும்...

`ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும்

அவன் பாட்டை எழுந்து பாடு!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

19 Sep
புனைவு இரண்டு : உ.மு.தேவர் தனது நிலங்களை தலித் மக்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தார்.

Source : அறிவுக்குயில் -கீற்று
'உ.முத்துராமலிங்கத்தை பரம்பரைப் பணக்காரர் எனச் சொல்லும் அவரது பற்றாளர்கள் உ.முத்துராமலிங்கம் தனது நிலங்களை தலித்துகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார் என்பதைச் சற்று உரக்கவே கூவுகின்றார்கள். உ.முத்துராமலிங்கம் தனது இறப்புக்கு
முன்னர் 1960ல் தனது பங்களா இருக்கும் புளிச்சிகுளம் கிராமத்தில் 32 1/2 கிராம நிலங்களை 17 பாகங்களாகப் பிரித்திருக்கிறார். ஒரு பாகத்தை தனக்கு வைத்துவிட்டு, 16 பாகங்களை தனக்கு நெருக்கமாகவும்,
Read 9 tweets
19 Sep
புனைவு ஒன்று: உ.மு.தேவர் பாண்டிய மன்னர் வழிமுறையில் வந்தவர்.

Source : அறிவுக்குயில் -கீற்று

திரு.முத்துராமலிங்கம் 30.10.1908ஆம் ஆண்டில் உக்கிரபாண்டி-இந்திராணி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக 'பசும்பொன்' கிராமத்தில் பிறந்து, 1938ல்
சப்-மாஜிஸ்திரேட்டாக இருந்த பிரதம நாயகம் என்பவரை இவரது ஆட்கள் கொலை செய்து விட, அச்சூழலில் மதுரைக்குப் புலம் பெயர்ந்து வாழ்ந்தவர். பின்னர் 29.10.1962ல் மதுரை திருமங்கலம் பகுதியில் இறந்து விடுகிறார். 'பசும்பொன்' கிராமத்தின் பழம் பெயர் 'தவசிகுறிச்சி'
எனவும் பிற்காலத்தில் உடையான் பசுபதியின் நினைவாக 'பசும்பொன்' என்று அழைக்கப் பட்டதாகவும் கூறுகின்றனர்.

இவ்வாறு புனையப்பட்ட 'மன்னர் பரம்பரை' கதையை பசும்பொன்னிற்கு பக்கத்தில் இருக்கும் 'முஷ்டக்குறிச்சி'யைச் சேர்ந்தவரும்,
Read 7 tweets
19 Sep
அதிபர் சீமான் ஆண்டவன் சீமான் ஆனார்!!

தன்னை தமிழகத்தின் அதிபராக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் சீமான் அவர்கள் இன்னும் ஒருபடி முன்னேறி, தன்னை ஒரு ஆண்டவனாக நினைக்கத் தொடங்கியுள்ளார்.
இன்று முப்பாட்டன் முருகன் எப்படி தமிழ்க் கடவுளாகக் கொண்டாடப்படுகின்றானோ அதே போல நாளைய தலைமுறை சீமானைத் தமிழினத்தின் தனிப்பெரும் கடவுளாக வணங்கப் போகின்றது. அன்று சீமான் “நம் முப்பாட்டனான முருகன் முறுக்கேறிய தசைகளை உடையவன். அதனால் அவனை முறுக்கன் என்று அழைத்தனர்.
நாளடைவில் அதுவே முருகனாக மாறியது” என்று உருட்டியது போலவே, நாளை ஒரு தம்பி, "கட்சியிலும் வாழ்க்கையிலும் ஒரு சீமானைப் போல வாழ்ந்ததால் எனது முப்பாட்டன் சீமான் என அழைக்கப்பட்டான்" என ஹை டெசிபலில் கேட்பவர்களது காதுகள் கிழியும் வண்ணம் உருட்டிக் கொண்டிப்பான்.
Read 44 tweets
19 Sep
விருதுநகர் பெ. சீனிவாசன்
பின்னர் 1971 மார்ச் 24 முதல் 1974-ம் ஆண்டு மார்ச் 9-ந் தேதி வரை விருதுநகர் சீனிவாசன் துணை சபாநாயகராகப் பணியாற்றினார். இவர்தான் 1967 தேர்தலில் விருதுநகரில் காமராஜை தோற்கடித்தவர். இந்த விருதுநகர் சீனிவாசனே
பின்னாளில் அதிமுகவுக்கு தாவினார். 2009-ம் ஆண்டு மறையும் வரை சீனிவாசன், அதிமுகவில்தான் இருந்தார்.

இந்தி திணிப்பு காரணமாகக் காங்கிரஸ், வலுவான எதிர்ப்பை தமிழகத்தில் சம்பாதித்திருந்தது.
சீனிவாசன், மாணவர் சங்கத் தலைவராக அப்போராட்டத்தில் முக்கிய பங்குவகித்தவர்.
மேலும்,
வேறுபல காரணங்களும் காமராசரின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.
காமராசர் 1963க்குப் பிறகு, ஆட்சியை விடுத்து கட்சிப் பணியில் ஈடுபட்டுவந்தார். 1967 இல் அவர் தேர்தலில் வெற்றிபெற்றால் அவர்தான் மீண்டும் முதல்வராகும் சூழ்நிலை இருந்தது. இது,
Read 4 tweets
18 Sep
தம்பி' படத்தை சீமான் இயக்கிய போது அதில் ஒரு காட்சி. கதாநாயகன் வீட்டின் சுவற்றில் தேவர் படம். புரட்சி பேசும் சீமான் தேவர் படத்தை வைத்திருக்கிறாரே என்றொரு விவாதம் அப்போது எழுந்தது. பார்ப்பவர்களுக்கு இதில் என்ன இருக்கிறது என்றொரு கேள்வி எழக்கூடும்.
ஆனால், பெரியாரின் பேரன் என சொல்லிக் கொள்ளும் சீமான் தேவரை படத்தில் காட்டியதுதான் முக்கியத்துவமாகிறது. இவை குறித்து கீற்று இணையதளத்தின் பேட்டியின் போது சீமானிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.
"முத்துராமலிங்கத் தேவரை கைது செய்தாத்தான் தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சனை ஒழியும்னு முதுகுளத்தூர் கலவர நேரத்தில் பெரியார் சொல்லியிருக்கார். ஆனால் உங்களோட படங்களில் முத்துராமலிங்கத் தேவரோட புகைப்படம் தொடர்ந்து இடம்பெறுகிறது..?"

அதற்கு சீமான் சொல்கிறார்:
Read 60 tweets
18 Sep
"மடியில் அணு குண்டு(??) வைத்திருப்பதாகவும்", "மூன்றாம் உலக யுத்தத்தை முதுகுளத்தூரில் ஆரம்பிப்பேன்(!!!)" என்றும் மேடையில் முழங்கிய தேவரின் பல சவடால்கள் விநோதமாய் இருக்கும்.
"மாக்னெட் நோஸ் (காந்தக் கருவி) ஒன்றை வைத்து சமுத்திரத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் பனிக்கட்டி ஆக்கி விட முடியும், அதனால் கப்பல்கள் எல்லாம் அங்கங்கே ஸ்தம்பித்துப் போய்விடும் , இதன் மூலம் இங்கிலாந்து அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளை எல்லாம் நாம் பிடித்து விடலாம்"
என்றும் சொன்ன தேவர், இப்படியாப்பட்ட மாக்னெட் நோசை, தன் மடியில் கட்டி வைத்திருப்பதாகவும் சொன்னதுதான் விசேசம்.

இரண்டாம் உலகப் போரில் மர்மமான முறையில் மாண்டுபோன நேதாஜியை, 'அவர் சாகவில்லை, மறைவாய் வாழ்கிறார்' என்று கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வதந்தி ஒன்று மக்களிடையே பரவி இருந்தது.
Read 40 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(