புனைவு இரண்டு : உ.மு.தேவர் தனது நிலங்களை தலித் மக்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தார்.
Source : அறிவுக்குயில் -கீற்று
'உ.முத்துராமலிங்கத்தை பரம்பரைப் பணக்காரர் எனச் சொல்லும் அவரது பற்றாளர்கள் உ.முத்துராமலிங்கம் தனது நிலங்களை தலித்துகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார் என்பதைச் சற்று உரக்கவே கூவுகின்றார்கள். உ.முத்துராமலிங்கம் தனது இறப்புக்கு
முன்னர் 1960ல் தனது பங்களா இருக்கும் புளிச்சிகுளம் கிராமத்தில் 32 1/2 கிராம நிலங்களை 17 பாகங்களாகப் பிரித்திருக்கிறார். ஒரு பாகத்தை தனக்கு வைத்துவிட்டு, 16 பாகங்களை தனக்கு நெருக்கமாகவும்,
விசுவாசமாகவும் இருந்த 16 பேருக்கு எழுதி வைத்தார். அவர்களுள் பசும்பொன்னைச் சேர்ந்த இரண்டு தலித்துகளும் அடங்குவர்.
உ.முத்துராமலிங்கத்தின் இறப்புக்குப் பின்னர், ''திரு.உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவு தர்மபரி பால ஸ்தாபனம்'' என்னும் பெயரில் நிறுவப்பட்ட அறக்கட்டளைக்கு, வடிவேலம்மாள்,
ஜானகி அம்மாள், ராமச்சந்திரன், அட்டெண்டர் முத்துசெல்வம் ஆகியோர் தவிர்த்த 12 பேர் தமது பங்குகள் அனைத்தையும் அப்படியே தந்து விட்டதாக ஏ.ஆர்.பெருமாள் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார்.
நிலங்களைத் திரும்பத் தர மறுத்த நால்வரும் மறவர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பது ஒரு புறமிருக்க
வடிவேலம்மாள், ஜானகியம்மாள் இருவரும் உ.முத்துராமலிங்கத்தின் உறவுக்காரர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கச் செய்தியாகும்.
தலித்துகளுக்கு நிலங்கள் கொடுக்கப்பட்டது போன்று மீண்டும் அம்மக்கள் உ.முத்துராமலிங்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கே திருப்பி கொடுத்து விட,
அவரது சொத்துகளை இன்று வரை 'கோல்மால்' மூலமாக அபகரித்து, அனுபவித்து வரும் மறவர்களின் சதிச்செயல்கள் வெளித் தெரியாமல் இருப்பதற்காகவே தலித்துகளுக்கு நிலங்கள் கொடுக்கப்பட்டதான பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப் படுகிறது.
ஆக, அவரது சொத்துகள் 17 பாகங்களாகப் பிரிக்கப்பட்டதும், அதில் இரண்டு பாகங்கள் அவரிடம் நெடுங்காலம் உழைத்த காரணத்தினாலோ அல்லது அவருக்கு உண்மையாக இருந்த காரணத்தினாலோ இரண்டு தலித்துகளுக்குக் கொடுக்கப்பட்டதும் உண்மை. ஆனால்,
சிறிது காலத்திலேயே அந்த நிலங்கள் திரும்பப் பறிக்கப்பட்டு விட்டது. கொடுத்ததையே பெருமையாகச் சொல்பவர்கள், அவரது அறக்கட்டளைக்கு திரும்ப வாங்கிக் கொண்டதை சொல்வதில்லை.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
புனைவு ஒன்று: உ.மு.தேவர் பாண்டிய மன்னர் வழிமுறையில் வந்தவர்.
Source : அறிவுக்குயில் -கீற்று
திரு.முத்துராமலிங்கம் 30.10.1908ஆம் ஆண்டில் உக்கிரபாண்டி-இந்திராணி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக 'பசும்பொன்' கிராமத்தில் பிறந்து, 1938ல்
சப்-மாஜிஸ்திரேட்டாக இருந்த பிரதம நாயகம் என்பவரை இவரது ஆட்கள் கொலை செய்து விட, அச்சூழலில் மதுரைக்குப் புலம் பெயர்ந்து வாழ்ந்தவர். பின்னர் 29.10.1962ல் மதுரை திருமங்கலம் பகுதியில் இறந்து விடுகிறார். 'பசும்பொன்' கிராமத்தின் பழம் பெயர் 'தவசிகுறிச்சி'
எனவும் பிற்காலத்தில் உடையான் பசுபதியின் நினைவாக 'பசும்பொன்' என்று அழைக்கப் பட்டதாகவும் கூறுகின்றனர்.
இவ்வாறு புனையப்பட்ட 'மன்னர் பரம்பரை' கதையை பசும்பொன்னிற்கு பக்கத்தில் இருக்கும் 'முஷ்டக்குறிச்சி'யைச் சேர்ந்தவரும்,
தன்னை தமிழகத்தின் அதிபராக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் சீமான் அவர்கள் இன்னும் ஒருபடி முன்னேறி, தன்னை ஒரு ஆண்டவனாக நினைக்கத் தொடங்கியுள்ளார்.
இன்று முப்பாட்டன் முருகன் எப்படி தமிழ்க் கடவுளாகக் கொண்டாடப்படுகின்றானோ அதே போல நாளைய தலைமுறை சீமானைத் தமிழினத்தின் தனிப்பெரும் கடவுளாக வணங்கப் போகின்றது. அன்று சீமான் “நம் முப்பாட்டனான முருகன் முறுக்கேறிய தசைகளை உடையவன். அதனால் அவனை முறுக்கன் என்று அழைத்தனர்.
நாளடைவில் அதுவே முருகனாக மாறியது” என்று உருட்டியது போலவே, நாளை ஒரு தம்பி, "கட்சியிலும் வாழ்க்கையிலும் ஒரு சீமானைப் போல வாழ்ந்ததால் எனது முப்பாட்டன் சீமான் என அழைக்கப்பட்டான்" என ஹை டெசிபலில் கேட்பவர்களது காதுகள் கிழியும் வண்ணம் உருட்டிக் கொண்டிப்பான்.
கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படிப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.
`சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன்.
`கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று `கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த,
`கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப் பாட்டு.
எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும். `பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு’ என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.
விருதுநகர் பெ. சீனிவாசன்
பின்னர் 1971 மார்ச் 24 முதல் 1974-ம் ஆண்டு மார்ச் 9-ந் தேதி வரை விருதுநகர் சீனிவாசன் துணை சபாநாயகராகப் பணியாற்றினார். இவர்தான் 1967 தேர்தலில் விருதுநகரில் காமராஜை தோற்கடித்தவர். இந்த விருதுநகர் சீனிவாசனே
பின்னாளில் அதிமுகவுக்கு தாவினார். 2009-ம் ஆண்டு மறையும் வரை சீனிவாசன், அதிமுகவில்தான் இருந்தார்.
இந்தி திணிப்பு காரணமாகக் காங்கிரஸ், வலுவான எதிர்ப்பை தமிழகத்தில் சம்பாதித்திருந்தது.
சீனிவாசன், மாணவர் சங்கத் தலைவராக அப்போராட்டத்தில் முக்கிய பங்குவகித்தவர்.
மேலும்,
வேறுபல காரணங்களும் காமராசரின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.
காமராசர் 1963க்குப் பிறகு, ஆட்சியை விடுத்து கட்சிப் பணியில் ஈடுபட்டுவந்தார். 1967 இல் அவர் தேர்தலில் வெற்றிபெற்றால் அவர்தான் மீண்டும் முதல்வராகும் சூழ்நிலை இருந்தது. இது,
தம்பி' படத்தை சீமான் இயக்கிய போது அதில் ஒரு காட்சி. கதாநாயகன் வீட்டின் சுவற்றில் தேவர் படம். புரட்சி பேசும் சீமான் தேவர் படத்தை வைத்திருக்கிறாரே என்றொரு விவாதம் அப்போது எழுந்தது. பார்ப்பவர்களுக்கு இதில் என்ன இருக்கிறது என்றொரு கேள்வி எழக்கூடும்.
ஆனால், பெரியாரின் பேரன் என சொல்லிக் கொள்ளும் சீமான் தேவரை படத்தில் காட்டியதுதான் முக்கியத்துவமாகிறது. இவை குறித்து கீற்று இணையதளத்தின் பேட்டியின் போது சீமானிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.
"முத்துராமலிங்கத் தேவரை கைது செய்தாத்தான் தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சனை ஒழியும்னு முதுகுளத்தூர் கலவர நேரத்தில் பெரியார் சொல்லியிருக்கார். ஆனால் உங்களோட படங்களில் முத்துராமலிங்கத் தேவரோட புகைப்படம் தொடர்ந்து இடம்பெறுகிறது..?"
"மடியில் அணு குண்டு(??) வைத்திருப்பதாகவும்", "மூன்றாம் உலக யுத்தத்தை முதுகுளத்தூரில் ஆரம்பிப்பேன்(!!!)" என்றும் மேடையில் முழங்கிய தேவரின் பல சவடால்கள் விநோதமாய் இருக்கும்.
"மாக்னெட் நோஸ் (காந்தக் கருவி) ஒன்றை வைத்து சமுத்திரத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் பனிக்கட்டி ஆக்கி விட முடியும், அதனால் கப்பல்கள் எல்லாம் அங்கங்கே ஸ்தம்பித்துப் போய்விடும் , இதன் மூலம் இங்கிலாந்து அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளை எல்லாம் நாம் பிடித்து விடலாம்"
என்றும் சொன்ன தேவர், இப்படியாப்பட்ட மாக்னெட் நோசை, தன் மடியில் கட்டி வைத்திருப்பதாகவும் சொன்னதுதான் விசேசம்.
இரண்டாம் உலகப் போரில் மர்மமான முறையில் மாண்டுபோன நேதாஜியை, 'அவர் சாகவில்லை, மறைவாய் வாழ்கிறார்' என்று கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வதந்தி ஒன்று மக்களிடையே பரவி இருந்தது.