"மடியில் அணு குண்டு(??) வைத்திருப்பதாகவும்", "மூன்றாம் உலக யுத்தத்தை முதுகுளத்தூரில் ஆரம்பிப்பேன்(!!!)" என்றும் மேடையில் முழங்கிய தேவரின் பல சவடால்கள் விநோதமாய் இருக்கும்.
"மாக்னெட் நோஸ் (காந்தக் கருவி) ஒன்றை வைத்து சமுத்திரத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் பனிக்கட்டி ஆக்கி விட முடியும், அதனால் கப்பல்கள் எல்லாம் அங்கங்கே ஸ்தம்பித்துப் போய்விடும் , இதன் மூலம் இங்கிலாந்து அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளை எல்லாம் நாம் பிடித்து விடலாம்"
என்றும் சொன்ன தேவர், இப்படியாப்பட்ட மாக்னெட் நோசை, தன் மடியில் கட்டி வைத்திருப்பதாகவும் சொன்னதுதான் விசேசம்.
இரண்டாம் உலகப் போரில் மர்மமான முறையில் மாண்டுபோன நேதாஜியை, 'அவர் சாகவில்லை, மறைவாய் வாழ்கிறார்' என்று கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வதந்தி ஒன்று மக்களிடையே பரவி இருந்தது.
வட தென் கொரியப் போரில் நேதாஜி பங்கெடுத்ததாகவும், தேவரும் அப்போரில் ராணுவப் பயிற்சி எடுத்ததாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.
அவருடைய பேச்சுக்கள் பல இடங்களில், எதைச் சொன்னாலும் மக்கள் நம்பி விடுவார்கள் எனும் அதீத நம்பிக்கையால் வெளிப்பட்டிருக்கும்.
உதாரணமாக ஒரு கூட்டத்தில் தேவர் "வரும் அக்டோ பர் 28 அன்று யாம் செந்திலாண்டவருடன் சேவற்கொடியேற்றி, வேல் கைப்பிடித்து, மயிலாசனத்தில் வானத்தில் தரிசனம் கொடுப்போம். அப்பொழுது, சென்னை செண்ட் ஜார்ஜ் கோட்டையில் குண்டு வீசி,
காமராஜரைக் கைது செய்வோம். பின்னர், டில்லி செங்கோட்டையில் குண்டு வீசி, நேருவைக் கைது செய்வோம்" என்று பேசியதையும்,"இதோ 50 லட்சம் பேர் கொண்ட படையுடன் நேதாஜி வருகிறார்" என்றும், "திபெத்தில் நேதாஜி நுழைந்து விட்டார்" என்றும்,
"நேபாளில் சுதந்திர சேனை", "சிங்கியங்கில் நேதாஜி" என்றெல்லாம் அளந்து வந்ததையும் என்.ஆர்.தியாக ராஜன் எனும் எம் எல் ஏ சட்டசபையில் பேசி இருக்கிறார்.
சீமானுக்கு குருநாதர் தேவர்
“எனக்கு ஓட்டுப் போடலைன்னா தொலைஞ்சீங்கடா”, “என் மேல் கேசு போட்டவங்களை நான் அதிகாரத்துக்கு வந்து தீர்த்துப்புடுவேன்”, “தேர்தலில் வென்றால் எல்லோருக்கும் கார் இலவசமாக வழங்கப்படும்”, “ஆடு மாடு மேய்ப்பது அரசு வேலை”. போதும், இதற்கு மேல் தெம்பில்லை.
சுருக்கமாக “அனைத்து உயிர்களுக்குமான” அரசியலை தங்கள் அண்ணன் முன்வைக்கிறார் என்பது தம்பிமார்கள் மேற்படி தத்துவங்களுக்கு அளிக்கும் விளக்கம். வாட்சப் நிலைத் தகவல்களின் மூலமாகவும், முகநூல், ட்விட்டர் மற்றும் யுட்யூப் கமெண்டுகளின் மூலமாகவும் உக்கிரமாக சுவிசேஷ நற்செய்தியை பரப்பும்
தம்பிமார்கள், எல்லா உயிர்களுக்குமான தமது அக்மார்க் அரசியலை ஏற்காதவர்களை “அடேய் கொல்டி வந்தேறிகளா” என அன்போடு வாழ்த்துவது வழக்கம்.
தம்பிமார்கள் எதிர்கொள்ளும் மாபெரும் அரசியல் நெருக்கடியே அண்ணன்
அவ்வப் போது “வெட்டிருவேன் – குத்தீருவேன்” பாணி அனைத்து உயிர்களுக்குமான அரசியலில் இருந்து ஈழத்தில் கரையேறும் சந்தர்ப்பங்கள் தாம்.
அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் தான் மேலே குறிப்பிட்ட நிகழ்வின் போது அண்ணன் நிகழ்த்திய உரை. நிகழ்வில் அண்ணன் பேசியதில் முக்கியமான பகுதியைக் கேட்டு விடுவோம் :
“ஒருமுறை அண்ணன் பொட்டு அம்மன் வீட்டில் சாப்பிடச் சென்றோம். நானும், பொட்டு அம்மன், அண்ணி ஆகியோர் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.
அப்போது எனக்கு இட்லி, தோசை, சாம்பார், சட்னி எடுத்து வைத்தனர். உணவைப் பார்த்துவிட்டு இட்லியா என்று கேட்டேன். உடனே பொட்டு அம்மனும், அண்ணியும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.
ஏன் சிரிக்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு பொட்டு அம்மன், ஒரு வாரம் பார்,
அவன் தோசை இட்லிக்கு வந்துவிடுவான் என தலைவர் பிரபாகரன் அவரிடம் சொன்னதாகச் சொன்னார். நானே ராமநாதபுரத்துக்காரன். காரம் அதிகம் சாப்பிடுபவன். நம்மை விட அவர்கள் அதிகமாக காரம் சாப்பிடுகின்றனர் என்று நினைத்தேன். ஒரு முறை தலைவருடன் அமர்ந்து சாப்பிட்ட சம்பவம் அருமையானது.
தலைவரும் நானும் காட்டிலுள்ள ஒரு அறையில் சாப்பிட்டோம். அப்போது, ஒவ்வொரு உணவாக காண்பித்து இது நன்றாக இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அதற்கான தயாரிப்புகளுக்கு டைரக்ஷன் செய்ததும் தான்தான் என்று சொன்னார்” எனப் பேசியுள்ளார் சீமான்.
“ஒரு மணி நேரம் எங்கண்ணன் காட்டுக் கத்து கத்தியும், சோத்து மேட்டரை மட்டும் பிடித்துத் தொங்கினால் எப்படி?” என்று நாதக தம்பிமார்கள் மனங்கோணி விடக் கூடாது. கடந்த பத்தாண்டுகளில் அண்ணன் நூற்றுக்கணக்கான மேடைகளில் பேசியிருந்தாலும் எல்லா மேடைகளிலும்
“புஹாஹாஹா” “வாய்ப்பில்ல ராஜா” “தொலைச்சிபுருவேய்ன்” “பிச்சிப்புருவேய்ன்” “கிழிச்சிப்புருவேய்ன்” “அடிச்சிப்புருவேய்ன்” “தீர்த்துப்புருவேய்ன்” “கொண்டேடேடே….புருவேய்ன்” போன்ற வழக்கமான தத்துவங்களையே வெளிப்படுத்தி வருகின்றார்.
இடைக்கிடையே அண்ணன் முன்வைக்கும் இது போன்ற சைடுடிஷ்கள் தான் நமக்கு சுவாரசியமூட்டுகின்றன.
மேற்படி பேச்சுக்கு தம்பிமார்கள் கைதட்டி விசில் அடித்து ஆரவாரம் செய்துள்ளனர். மண்டையில் மூளை என்கிற வஸ்து இருக்கிறவர்களால் எப்படி இதற்கெல்லாம் கைதட்ட முடியும்
என்கிற சந்தேகம் சமீப நாட்கள் வரை நமக்கும் இருந்தது; ஆனால் இந்த தம்பியின் பராக்கிரமத்தை படித்த பின் அந்த சந்தேகம் நீங்கியது.
மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் அண்ணனின் உரைவீச்சில் சில விசயங்கள் சூசகமாக சொல்லப்பட்டுள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.
எப்போது அண்ணன் சர்ஜிகல் தாக்குதல் செய்தாலும் அதை நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் பிற்காலத்தில் அண்ணன் அதை விவரிக்கும் போது உயிரோடு இருக்க மாட்டார்கள். உதாரணமாக, கலைஞரின் சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்து அண்ணன் எழுதிய அழகை அவரே விவரித்த போது கலைஞர் இறந்து போயிருந்தார்.
அதே மாதிரி அண்ணன் எழுதிய திரைக்கதையைக் கண்டு சிவாஜி அசந்து போன சம்பவத்தை அண்ணன் உலகுக்கு அறிவித்த போது சிவாஜி இறந்து பத்தாண்டுகள் கழிந்திருந்தன. ஆமைக் கறி, அரிசிக் கப்பல் மகாத்மியங்களை அண்ணன் எடுத்துரைத்த போது பிரபாகரனும் இல்லை.
இப்போது பொட்டு அம்மான் விசயத்துக்கு வருவோம் – இறுதிப் போரில் பொட்டு அம்மான் “எப்படியோ” தப்பி விட்டதாகவும் “எங்கோ” இருந்து அவர் இயக்கத்தை வழிநடத்தி வருவதாகவும் தம்பிமார்கள் சொல்வதுண்டு.
இப்போது அண்ணன் பொட்டு அம்மான் வீட்டில் இட்லியோடு நடத்திய சர்ஜிக்கல் தாக்குதலை ஊருக்கு சொல்லி விட்டதால் பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை அண்ணனின் இதர சாட்சியங்களின் படி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
அடுத்து, போர் உச்சத்தில் இருந்த போது இலங்கை சென்ற சீமானுக்கு முனியாண்டி விலாஸ் மெனுகார்டில் கூட இல்லாத அயிட்டங்களை புலிகள் சமைத்து பரிமாறி இருக்கின்றனர் – அதுவும், அண்ணன் சாப்பிடுவதை தலைவர் பிரபாகரனே மேற்பார்வை பார்த்துள்ளார்.
அதுமட்டுமின்றி தனது முக்கிய தளபதிகளையும் அண்ணன் வாழை இலையின் முன் செய்திட்ட ஊடறுப்புத் தாக்குதல்களுக்கு தோள் கொடுக்க உத்தரவிட்டுள்ளார். அங்கே கிளிநொச்சி சுற்றி வளைக்கப்பட்டு புலி போராளிகள்
வரிசையாக கொத்து குண்டுகளுக்கு வீழ்ந்து கொண்டிருந்த போது தலைவர் பிரபாகரன் குழம்புக் குண்டானின் முன் குத்த வைத்து அமர்ந்து ஆமைக்கறி சரியான பதத்தில் வெந்துள்ளதா என குத்திக் குத்திப் பார்த்துள்ளார்.
போர்க்களத்தில் எப்படி விருந்துப் பந்தி என்று ஆத்திரப்படுவோர் அண்ணன் சீமானிடம்தான் அந்த பந்தி புரூடாக்களை கேட்க வேண்டும்.
இறுதி போர்கட்டத்திலே புலிகள் சாம்பார், கூட்டு, பொறியல் செஞ்சாங்க, கறி வறுத்து தந்தாங்க, ஆமை கறி திண்ணாங்க. நான் திங்கிறதை ஒருத்தங்க நோட்ஸ் எடுத்து அண்ணனுக்கு சொன்னாங்க…
போராட்ட களத்தை கேலிகூத்தாக்கும் சீமான். புலிகளை கேவலபடுத்த இவன் ஒருத்தன் போதும்..
அண்ணன் சீமான் சொல்லும் சம்பவங்கள் உண்மை என்று “உளப்பூர்வமாகவே” நம்பித் தான் இதையெல்லாம் ஊகிக்கின்றோம். மேலும் தொடர்வோம்,
அதே கூட்டத்தில் சீமான் சொல்கிறார்:
“சுற்றிலும் ஷெல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒருத்தன் சாப்பிடுறேன்.
பின்னாடி ஒருவர் நின்று எழுதிக் கொண்டிருக்கிறார். என்னடா எழுதறான் என்று முதல் நாள் விட்டுட்டேன். இரண்டாவது நாள் அதை வாங்கிப் பார்த்தேன். ‘இந்த சம்பலைத் இரண்டு முறை தொட்டார். இந்த கூட்டை முழுக்க சாப்பிட்டார், இந்த கறியை தொடவில்லை. சாம்பார் ஊற்றிக் கொண்டார்’.
என்று எழுதிக் கொண்டிருந்தார். ஏனப்பா இதை எழுதுகிறாய் என்று கேட்டேன். இல்லைங்க தலைவருக்கு அனுப்பனும்னு சொன்னார்”
இதில் பல குறியீடுகள் உள்ளதை நீங்களே கவனித்திருப்பீர்கள். போர் உச்சத்தில் இருந்த போது, புலிகள் களத்தில் பின்டைவைச் சந்தித்துக் கொண்டிருந்த போது,
அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக செத்து வீழ்ந்து கொண்டிருந்த போது – சீமான் எந்த சம்பலை தொட்டார், எந்த ஊறுகாயை ருசித்தார், எந்த சாம்பாரை மோந்து பார்த்தார் என்பதை கணக்கெடுக்க ஒரு புலிப் போராளியை டெபுடேசனில் டியூட்டி போட்டுள்ளனரோ என்றே தோன்றுகிறது.
இதை வக்கிரம் என்போர் அண்ணன் சீமானிடம் அன்பாக கேட்டுப் பாருங்கள். தாளித்து விடுவார்.
விருந்தோம்பல் என்னவோ பிரமாதமாகத் தான் உள்ளது – ஆனால், இப்படி எத்தனை பருக்கை உள்ளே போனது எத்தனை பருக்கை சிதறிப் போனது என்பதை கணக்கெடுப்பதெல்லாம் போராளி வாழ்க்கையின்
ஒரு அங்கமாக இருக்கும் என்பதை நினைத்தால் தான் திடுக்கென்று இருக்கிறது. இதில் உச்சகட்டமாக மறு நாள் காலை அண்ணன் கொல்லைக்கு போவதற்கு புலிப் போராளிகள் பாடிகார்டாய் போய் வந்ததாக அண்ணன் அடித்து விட்டாலும் அதை நம்புவதற்கு நாதக தம்பிமார்கள் தயாராகவே இருக்கிறார்கள்.
இருப்பினும் அண்ணன் சீமான் ஆய் போன கதைகளை இன்னும் சொல்லவில்லை – சொல்லி இருந்தால் அதை ஜீரணிக்கும் நிலையில் நாமும் இல்லை.
மற்றொரு விசயமும் உள்ளது. சுற்றிலும் ஷெல் அடித்தார்கள், பத்து ஷெல்லுக்கு ஒன்று எனக் கணக்கு வைத்தாலும் நாள்தோறும் சில பத்து பேராவது மாண்டு போயிருக்க வேண்டும்.
பலருக்கு கை வேறாய் கால் வேறாய் உடல் சிதைந்து போயிருக்க வேண்டும் – இத்தனை களேபரத்துக்கும் இடையில் ஒரு ஜீவன் ரவுண்டு கட்டி ரசித்து ரசித்து சாப்பிட்டிருக்கிறது என்றால் அது சாதாரண ஜீவனாக இருக்க முடியுமா? பிறப்பு இறப்பு, இன்பம் துன்பம்,
வெற்றி தோல்வி என இகலோக கர்மாக்கள் அனைத்தையும் சம்சார சாகரத்தையும் கடந்த ஒரு பரஜீவனாகத் தான் இருக்க வேண்டும்; அதைத்தான் ஆதிசங்கரனின் அத்வைதம் பரமாத்மா என்கிறது. சுத்த தமிழில் பம்முற ஆத்துமா என்றும் சொல்லலாம்.
இதில் ஒரே ஒரு விசயம் மட்டும் தான் நெருடலாக உள்ளது. அண்ணன் சீமானுக்கு பிரபாகரன் அ.க74 துப்பாக்கியால் சுடும் பயிற்சியை அளித்துள்ளார். பயிற்சிக்காக ஒரு ஆஸ்திரேலிய அரிசிக் கப்பலையே தாரை வார்த்துள்ளார். அப்படி ஒரு கப்பலையே துல்லியமாக தாக்கும் ஆற்றல் கைவரப்பெற்ற சீமான்,
சுற்றிலும் குண்டுகளைப் போட்டு மக்களைக் கொன்று கொண்டிருந்த சிங்களனிடம் சமர் புரிந்து அவன் தலையை தரையில் உருட்டியிருக்க வேண்டும்; ஆனால், அண்ணன் சப்பளாங்கால் போட்டமர்ந்து இட்டிலியை உருட்டி விளையாடியது ஏன் என்பது மட்டும் புரியவில்லை.
இப்போ புது உருட்டு துவக்கம் 😀
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
புனைவு இரண்டு : உ.மு.தேவர் தனது நிலங்களை தலித் மக்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தார்.
Source : அறிவுக்குயில் -கீற்று
'உ.முத்துராமலிங்கத்தை பரம்பரைப் பணக்காரர் எனச் சொல்லும் அவரது பற்றாளர்கள் உ.முத்துராமலிங்கம் தனது நிலங்களை தலித்துகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார் என்பதைச் சற்று உரக்கவே கூவுகின்றார்கள். உ.முத்துராமலிங்கம் தனது இறப்புக்கு
முன்னர் 1960ல் தனது பங்களா இருக்கும் புளிச்சிகுளம் கிராமத்தில் 32 1/2 கிராம நிலங்களை 17 பாகங்களாகப் பிரித்திருக்கிறார். ஒரு பாகத்தை தனக்கு வைத்துவிட்டு, 16 பாகங்களை தனக்கு நெருக்கமாகவும்,
புனைவு ஒன்று: உ.மு.தேவர் பாண்டிய மன்னர் வழிமுறையில் வந்தவர்.
Source : அறிவுக்குயில் -கீற்று
திரு.முத்துராமலிங்கம் 30.10.1908ஆம் ஆண்டில் உக்கிரபாண்டி-இந்திராணி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக 'பசும்பொன்' கிராமத்தில் பிறந்து, 1938ல்
சப்-மாஜிஸ்திரேட்டாக இருந்த பிரதம நாயகம் என்பவரை இவரது ஆட்கள் கொலை செய்து விட, அச்சூழலில் மதுரைக்குப் புலம் பெயர்ந்து வாழ்ந்தவர். பின்னர் 29.10.1962ல் மதுரை திருமங்கலம் பகுதியில் இறந்து விடுகிறார். 'பசும்பொன்' கிராமத்தின் பழம் பெயர் 'தவசிகுறிச்சி'
எனவும் பிற்காலத்தில் உடையான் பசுபதியின் நினைவாக 'பசும்பொன்' என்று அழைக்கப் பட்டதாகவும் கூறுகின்றனர்.
இவ்வாறு புனையப்பட்ட 'மன்னர் பரம்பரை' கதையை பசும்பொன்னிற்கு பக்கத்தில் இருக்கும் 'முஷ்டக்குறிச்சி'யைச் சேர்ந்தவரும்,
தன்னை தமிழகத்தின் அதிபராக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் சீமான் அவர்கள் இன்னும் ஒருபடி முன்னேறி, தன்னை ஒரு ஆண்டவனாக நினைக்கத் தொடங்கியுள்ளார்.
இன்று முப்பாட்டன் முருகன் எப்படி தமிழ்க் கடவுளாகக் கொண்டாடப்படுகின்றானோ அதே போல நாளைய தலைமுறை சீமானைத் தமிழினத்தின் தனிப்பெரும் கடவுளாக வணங்கப் போகின்றது. அன்று சீமான் “நம் முப்பாட்டனான முருகன் முறுக்கேறிய தசைகளை உடையவன். அதனால் அவனை முறுக்கன் என்று அழைத்தனர்.
நாளடைவில் அதுவே முருகனாக மாறியது” என்று உருட்டியது போலவே, நாளை ஒரு தம்பி, "கட்சியிலும் வாழ்க்கையிலும் ஒரு சீமானைப் போல வாழ்ந்ததால் எனது முப்பாட்டன் சீமான் என அழைக்கப்பட்டான்" என ஹை டெசிபலில் கேட்பவர்களது காதுகள் கிழியும் வண்ணம் உருட்டிக் கொண்டிப்பான்.
கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படிப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.
`சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன்.
`கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று `கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு. மூன்றாம் பிறையில் வந்த,
`கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப் பாட்டு.
எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும். `பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு’ என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.
விருதுநகர் பெ. சீனிவாசன்
பின்னர் 1971 மார்ச் 24 முதல் 1974-ம் ஆண்டு மார்ச் 9-ந் தேதி வரை விருதுநகர் சீனிவாசன் துணை சபாநாயகராகப் பணியாற்றினார். இவர்தான் 1967 தேர்தலில் விருதுநகரில் காமராஜை தோற்கடித்தவர். இந்த விருதுநகர் சீனிவாசனே
பின்னாளில் அதிமுகவுக்கு தாவினார். 2009-ம் ஆண்டு மறையும் வரை சீனிவாசன், அதிமுகவில்தான் இருந்தார்.
இந்தி திணிப்பு காரணமாகக் காங்கிரஸ், வலுவான எதிர்ப்பை தமிழகத்தில் சம்பாதித்திருந்தது.
சீனிவாசன், மாணவர் சங்கத் தலைவராக அப்போராட்டத்தில் முக்கிய பங்குவகித்தவர்.
மேலும்,
வேறுபல காரணங்களும் காமராசரின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.
காமராசர் 1963க்குப் பிறகு, ஆட்சியை விடுத்து கட்சிப் பணியில் ஈடுபட்டுவந்தார். 1967 இல் அவர் தேர்தலில் வெற்றிபெற்றால் அவர்தான் மீண்டும் முதல்வராகும் சூழ்நிலை இருந்தது. இது,
தம்பி' படத்தை சீமான் இயக்கிய போது அதில் ஒரு காட்சி. கதாநாயகன் வீட்டின் சுவற்றில் தேவர் படம். புரட்சி பேசும் சீமான் தேவர் படத்தை வைத்திருக்கிறாரே என்றொரு விவாதம் அப்போது எழுந்தது. பார்ப்பவர்களுக்கு இதில் என்ன இருக்கிறது என்றொரு கேள்வி எழக்கூடும்.
ஆனால், பெரியாரின் பேரன் என சொல்லிக் கொள்ளும் சீமான் தேவரை படத்தில் காட்டியதுதான் முக்கியத்துவமாகிறது. இவை குறித்து கீற்று இணையதளத்தின் பேட்டியின் போது சீமானிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.
"முத்துராமலிங்கத் தேவரை கைது செய்தாத்தான் தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சனை ஒழியும்னு முதுகுளத்தூர் கலவர நேரத்தில் பெரியார் சொல்லியிருக்கார். ஆனால் உங்களோட படங்களில் முத்துராமலிங்கத் தேவரோட புகைப்படம் தொடர்ந்து இடம்பெறுகிறது..?"