லக்னோ: ‛‛கடந்த 4.5 ஆண்டுகால பா.ஜ., ஆட்சியில் உ.பி.,யில் மதக்கலவரம் ஏதும் நடக்கவில்லை'', என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உ.பி.,யில் பா.ஜ., ஆட்சி அமைந்து 4.5 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு நிருபர்களை சந்தித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: கடந்த 4.5 ஆண்டுகளை நல்ல நிர்வாகத்திற்காக அர்ப்பணித்தது மறக்க முடியாதது.
கிரிமினல்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டதுடன், அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 4.5 ஆண்டுகளில், உ.பி.,யில் மதக்கலவரம் நடக்கவில்லை.
பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்தோம். இதற்காக ரோமியோ எதிர்ப்பு படை, பெண்களுக்காக பிங்க் பூத்கள் அமைக்கப்பட்டன.
கடந்த காலத்தில் மாநிலத்தை ஆட்சி செய்தவர்கள் தங்களுக்காக வீடுகளை கட்டினர். ஆனால், நாங்கள் ஏழைகளுக்காக வீடு கட்டி கொடுத்தோம். முந்தைய அரசு போல் அல்லாமல், அரசு நிர்வாகத்தில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தினோம்.
முந்தைய ஆட்சியாளர்கள் பணியிட மாற்றத்தை ஒரு தொழிலாக செய்த நேரத்தில், சிறப்பாக பணியாற்றவும், பொது மக்கள் மத்தியில் பொறுப்பானவர்களாக செயல்படவும் ஊக்குவித்தோம். பா.ஜ., ஆட்சியில் 4.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் வெளிப்படை தன்மையுடன் செயல்பட்டோம்.
எளிதாக தொழில் செய்யும் மாநிலங்கள் பட்டியலில் உ.பி., முன்னேறியதால், மாநிலத்தில் முதலீடுகள் குவிந்து வருகிறது.
ராமர் கோயில் எப்போது கட்டப்படும் என கேள்வி எழுப்பியவர்களுக்கு, பிரதமர் அடிக்கல் நாட்டிய தினத்தில் பதில் கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மாநில அரசை எச்சரிக்கிறார் பிஷப்; தவறேதுமில்லை! சொல்கிறார் மத்திய இணை அமைச்சர்
திருவனந்தபுரம்:வெளியுறவுத் துறை இணையமைச்சரும், கேரளாவைச் சேர்ந்தவருமான முரளீதரன், ''மக்களின் உணர்வுகளை துாண்டும் வகையில் பிஷப் பேசவில்லை.
''இந்த சமூகத்துக்கும், மாநிலத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. இது மிக தீவிரமான பிரச்னை. மாநில அரசு உடனடியாக தலையிட்டு, இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தியிருக்க வேண்டும்,'' என்றார்.
கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ பிஷப், 'மாநிலத்தில் லவ் ஜிகாத், போதைப் பொருள் ஜிகாத் மூலம் இளம் பெண்களை வேட்டையாடி வருகின்றனர்' என பேசியது, பெரும் பிரச்னையாகியுள்ளது. இந்த விவகாரத்தில் பா.ஜ., மிக தீவிரமாக செயல்படுவதால், கேரள அரசுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மகாபலி சக்கரவர்த்தியிடம் மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மூன்றடி மண் கேட்டார். மூன்றடி மண் கேட்பது இறைவன் என்பதை அறியாத மன்னர் மகாபலி சக்கரவர்த்தி தாரை வார்த்து கொடுக்க சம்மதிக்கிறார். 🙏🇮🇳1
ஆனால், மகாபலி சக்கரவர்த்தியிடம் வரம் கேட்க வந்திருப்பது மாகவிஷ்ணு என்பதை அறிந்த அசுர குல குரு சுக்கிராச்சாரியார், மன்னர் தாரை வார்க்கும் செம்புக்குடத்தின் துவாரத்தை ஒரு வண்டாக உருவெடுத்து அடைத்து விட்டார்.
🙏🇮🇳2
குருவின் இந்த செயல் அறிந்த பகவான் ஒரு குச்சியால் துவாரம் வழியாக குத்த, சுக்கிராச்சாரியார் ஒரு கண்ணை இழந்து விடுகிறார்.
'நீட்' என்ற, தேசிய அளவிலான தகுதி நுழைவுத் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லாத ஒன்று' என்று ஒரு தமிழக அமைச்சர், நீட் தேர்வு நாளின் போது 'டிவி'க்கு பேட்டி கொடுத்து கொண்டிருக்கும் போது,
பின்னணியில், 'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...' என்ற பாடல் வரிகள் ஒலித்து கொண்டு இருந்தன.
இந்த நீட் அரசியல், தமிழகத்தில் அனிதாவில் ஆரம்பித்து, இந்த ஆண்டு சவுந்தர்யா வரை, 13 பிள்ளைகளுக்கும் மேலாக காவு வாங்கியுள்ளதை, கண்கள் பனிக்க, இதயம் கனக்க கடந்து போக முடியவில்லை.
'நீட் சமூக நீதிக்கு எதிரானது; கிராமப்புற ஏழை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எதிரானது; பின்தங்கிய, பட்டியல் இன மக்களை மேலே வர விடாமல் தடுப்பது...' என தொடர்ந்து கூறி, கிராமப்புற, அரசுப்பள்ளி மற்றும் பட்டியலின மக்களை, நீட்டிற்கு எதிராக திருப்ப அரசு நினைக்கிறது.
நல்ல மாற்றம் என்பது தோற்றத்திலும் இருக்க வேண்டுமென்பதில், ரொம்பவே அக்கறை காட்டுவார் மோடி. தோற்றத்துக்கு அவர் அதீத முக்கியத்துவம் காட்டுகிறார் என்று குறை சொல்பவர்கள் உண்டு.
தமிழகம் வந்தால் அவர் வேஷ்டி கட்டுவார்; ராஜஸ்தான் சென்றால் தலைப்பாகை அணிவார். அது வேஷம் கட்டும் விஷயமில்லை. நானும் உங்களில் ஒருவன் என்று மக்களிடம் காண்பிப்பதற்கான ஒரு வழிமுறை. ஆடை வடிவமைப்பிலும், அவற்றுக்கான நிறங்களைத் தேர்வு செய்வதிலும் அவர் காட்டும் அக்கறை அலாதியானது.
சுதந்திர தினம், குடியரசு தினங்களில் அவர் அணியும் தலைப்பாகையை (டர்பன்) ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது.ஒரு தலைவராக தன் தோற்றத்தை மட்டுமல்ல; தலைநகரின் தோற்றத்தையே மாற்றுவதற்கு முயன்ற முதல் பிரதமரும் மோடிதான்.