மகாபலி சக்கரவர்த்தியிடம் மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மூன்றடி மண் கேட்டார். மூன்றடி மண் கேட்பது இறைவன் என்பதை அறியாத மன்னர் மகாபலி சக்கரவர்த்தி தாரை வார்த்து கொடுக்க சம்மதிக்கிறார். 🙏🇮🇳1
ஆனால், மகாபலி சக்கரவர்த்தியிடம் வரம் கேட்க வந்திருப்பது மாகவிஷ்ணு என்பதை அறிந்த அசுர குல குரு சுக்கிராச்சாரியார், மன்னர் தாரை வார்க்கும் செம்புக்குடத்தின் துவாரத்தை ஒரு வண்டாக உருவெடுத்து அடைத்து விட்டார்.
🙏🇮🇳2
குருவின் இந்த செயல் அறிந்த பகவான் ஒரு குச்சியால் துவாரம் வழியாக குத்த, சுக்கிராச்சாரியார் ஒரு கண்ணை இழந்து விடுகிறார்.
🙏🇮🇳3
பிறகு சுக்கிராச்சாரியார் ஒளியிழந்த கண்ணுடன் பல தலங்களுக்கு சென்று வழிபட்டு கடைசியாக இத்தலத்திற்கு வந்து கோலவல்லி ராமரை வழிபட்டு இழந்த பார்வையை மீண்டும் பெற்றார். இதனால் தான் இத்தலம் வெள்ளி(சுக்கிரன்)யங்குடி என அழைக்கப்படுகிறது. 🙏🇮🇳4
சுக்கிராச்சாரியார் இத்தலத்தில் வந்து தவம் செய்வதற்கு மற்றொரு காரணமும் உண்டு. தேவ சிற்பியான விஸ்வகர்மா பெருமாளுக்கு அழகாக கோயில்களை கட்டி முடித்தார். இதே போல் தன்னால் கோயில்கள் கட்ட முடியவில்லையே என அசுர குல சிற்பி மயன் வருத்தப்பட்டு பிரம்மனிடம் வேண்டினார்.
🙏🇮🇳5
அதற்கு பிரம்மா இத்தலத்தில் கடும் தவம் செய்தால் பெருமாள் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என கூறினார். மயனின் தவத்தில் மகிழ்ந்த பெருமாள் சங்கு சக்ரதாரியாக காட்சி கொடுத்தார். 🙏🇮🇳6
ஆனால் மயன், தனக்கு இந்த தரிசனத்திற்கு பதில், ராமாவதார காட்சி வேண்டும் என்றார். தன் கரத்திலிருந்த சங்கு சக்கரத்தை கருடாழ்வாரிடம் கொடுத்து விட்டு கோலவில்லி ராமனாக வில் அம்புகளுடன் தரிசனம் தந்தார் பகவான். 🙏🇮🇳7
இப்படிப்பட்ட பெருமைக்குரிய தலத்தில் தவமிருக்க விரும்பி இங்கு வந்தார் சுக்கிராச்சாரியார். இதன் காரணமாகவும் இது வெள்ளியங்குடி ஆயிற்று.
🙏🇮🇳8
சிறப்பம்சங்கள் :
பெருமாளின் 108 திருப்பதிகளுள் அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயிலில் மட்டும் தான் கருடாழ்வார் சங்கு சக்கரம் ஏந்தி 4 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். 🙏🇮🇳9
இத்தலத்தில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்து வரும் காட்சியை இன்றும் காணலாம். 🙏🇮🇳10
இத்தலத்தில் உள்ள பெருமாள் கிழக்கு நோக்கி, பள்ளி கொண்ட கோலத்தில் வர்ணம் பூசப்பட்ட நிலையில் அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில், கங்கை கொண்ட சோழபுரம், அரியலூர்
பெரிய லிங்கம்:
தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் இங்கு தான் உள்ளது. தஞ்சை பெரிய கோயில் லிங்கம் 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவும் (ஆவுடையார்) கொண்டது. 🙏🇮🇳1
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது. ஆவுடையை சுற்றி பலகை கட்டி, அதன் மீது ஏறிநின்று அபிஷேகம் செய்கின்றனர். 🙏🇮🇳2
ஒரே கல்லால் ஆன மூலவர் இங்கு பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார். தஞ்சாவூரில் உள்ள லிங்கம் ஆணின் அம்சம். இங்குள்ள லிங்கம் பெண் அம்சமாகும். அங்கு உரல் வடிவம். இங்கு உடுக்கை வடிவம்.
காஞ்சி மடத்தில் ஒருநாள் மதியம் மஹா பெரியவா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரை யாரோ குறுகுறுவென பார்ப்பது போலிருக்க நிமிர்ந்தார். ஜன்னலைப் பிடித்தவாறே குட்டிக் குரங்கு ஒன்று நின்று இருந்தது.
அதற்கு வாழைப்பழம் தருமாறு பணித்தார். ஆனால், வாங்க மறுத்துவிட்டது. அதற்கு கொஞ்சம் சாதம் கொடுக்க ஏற்பாடு செய்தார். கண் மூடி திறப்பதற்குள் வேகமாக சாப்பிட்டு விட்டு, மரத்தில் ஏறி மறைந்தது.
அதன்பிறகு, இதுவே தினமும் வாடிக்கையாகி விட்டது. அதற்கு "கோவிந்தா' என்று பெயரிட்டு அழைத்தார் மஹா பெரியவா.
பாக்., சென்ற சீன கப்பலில் ஆயுதம் கடத்தல்: வழக்கு என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றம்
புதுடில்லி: பாகிஸ்தானுக்கு குஜராத் வழியாக சென்ற சீனக் கப்பலில் ஆயுதங்கள் கடத்தப்பட்ட வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.,) மாற்றப்பட்டு உள்ளது.
சீனாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரியில் சீன சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. அந்த கப்பல் குஜராத்தின் காண்ட்லா துறைமுகப் பகுதியை கடந்த போது, அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சாய ஆலைக்கு தேவையான உபகரணங்கள் கொண்டு செல்வதாக சீன கப்பலின் மாலுமிகள் விளக்கம் அளித்தனர். ஆனால் அந்த கப்பலில் ஏவுகணைகள் தயாரிப்பதற்கான உபகரணங்கள் இருந்தன. இதைத் தொடர்ந்து சீன கப்பல் பறிமுதல் செய்யப்பட்டது.
அம்பேத்கர் சாதி அரசியலை போதிக்கவில்லை: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உரை
அம்பேத்கர் சாதி அரசியலை போதிக்கவில்லை என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
பாஜக எஸ்.சி அணியின் தேசியசெயற்குழுக் கூட்டம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்றது. இதன் இறுதி அமர்வில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்று நேற்று முன்தினம் பேசியதாவது:
தூய்மை இந்தியா இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் 10 கோடி பேரின் வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் பலன் அடைந்தவர்களில் 95 சதவீதம் பேர், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி வகுப்பினர் ஆவர். உ.பி.யில் 2.61 கோடி பேருக்கு கழிப்பறை கட்ட நிதியுதவி அளிக்கப்பட்டது.
போலி வரைபடம் தயாரித்து விற்க முயற்சித்தது தெரியவந்ததால், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மீட்டனர்.மாநகராட்சியுடன் விளாங் குறிச்சி இணைவதற்கு முன், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்துக்கு கீழ் இருந்தது.
1990ல், 3.50 ஏக்கருக்கு ஸ்ரீராமகிருஷ்ணா லே-அவுட் உருவாக்கி, 34 மனைகளுக்கு உள்ளூர் திட்ட குழுமத்திடம் வரைபட அனுமதி பெறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து ஒரு வழியாக பா.ம.க., விலகி விட்டது. ஆனால் அதற்கு அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சொல்லும் காரணங்கள் தான் நகைக்கத்தக்கவை.
'அ.தி.மு.க., தலைமை சரியில்லை; கூட்டணியால் பா.ம.க.,வுக்கு எந்த லாபமும் இல்லை; கூட்டணி தர்மத்தை காக்க அ.தி.மு.க., தவறி விட்டது...' இப்படி அடுக்கடுக்கான காரணங்களை செப்பியிருக்கிறார் ராமதாஸ்.இதிலிருந்தே, ராமதாசுக்கு மனசாட்சியே இல்லை என்பது தெரிகிறது.
பா.ம.க.,வின் நிர்பந்தம் காரணமாக, வன்னியருக்கு 12.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தது, அ.தி.மு.க., அரசு தான்.காரியம் முடிந்ததும், அ.தி.மு.க., தலைமைக்கு, 'பெப்பே' காட்டியுள்ளார், ராமதாஸ். அ.தி.மு.க., தலைமைக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.