மாநில அரசை எச்சரிக்கிறார் பிஷப்; தவறேதுமில்லை! சொல்கிறார் மத்திய இணை அமைச்சர்
திருவனந்தபுரம்:வெளியுறவுத் துறை இணையமைச்சரும், கேரளாவைச் சேர்ந்தவருமான முரளீதரன், ''மக்களின் உணர்வுகளை துாண்டும் வகையில் பிஷப் பேசவில்லை.
''இந்த சமூகத்துக்கும், மாநிலத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. இது மிக தீவிரமான பிரச்னை. மாநில அரசு உடனடியாக தலையிட்டு, இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தியிருக்க வேண்டும்,'' என்றார்.
கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ பிஷப், 'மாநிலத்தில் லவ் ஜிகாத், போதைப் பொருள் ஜிகாத் மூலம் இளம் பெண்களை வேட்டையாடி வருகின்றனர்' என பேசியது, பெரும் பிரச்னையாகியுள்ளது. இந்த விவகாரத்தில் பா.ஜ., மிக தீவிரமாக செயல்படுவதால், கேரள அரசுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பெரும் சர்ச்சை
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள கோட்டயத்தின் பாலா பகுதியில் உள்ள சர்ச்சின் பிஷப், மாற ஜோசப் கலரங்காட், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில்,
'மாநிலத்தில் இளம் ஹிந்து, கிறிஸ்துவ பெண்களை குறி வைத்து லவ் ஜிகாத் மற்றும் போதைப் பொருள் ஜிகாத் நடத்தப்படுகிறது' என, குறிப்பிட்டார்.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவரது பேச்சுக்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியும், எதிர்க்கட்சியான காங்.,கும் எதிர்ப்பும், மறுப்பும் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில், 'பிஷப் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை' என, முதல்வர் பினராயி விஜயன் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பிரச்னை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படியும், பிஷப்புக்கு போதிய பாதுகாப்பை உறுதி செய்யும்படியும், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுக்கு, கட்சியின் கேரள மாநில பொதுச் செயலர் ஜார்ஜ் குரியன் கடிதம் எழுதியிருந்தார்.
இது குறித்து வெளியுறவுத் துறை இணையமைச்சரும், கேரளாவைச் சேர்ந்தவருமான முரளீதரன் கூறியுள்ளதாவது:மக்களின் உணர்வுகளை துாண்டும் வகையில் பிஷப் பேசவில்லை. மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவ மக்களை எச்சரிக்கை செய்யும் வகையிலேயே அவரது பேச்சு உள்ளது.
பிஷப்பின் பேச்சு இந்த சமூகத்துக்கும், மாநிலத்துக்கும் விடுக்கப்பட்டு உள்ள எச்சரிக்கையாகும். இது மிக தீவிரமான பிரச்னை.
மாநில அரசு உடனடியாக தலையிட்டு, இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். இந்த விஷயத்தில் பிஷப்பின் பேச்சுக்கு முஸ்லிம்களிடம் இருந்து தான் ஆட்சேபனை வந்திருக்க வேண்டும். ஆனால், முஸ்லிம்களுக்கு எதிரானதாக சித்தரிக்கும் அரசியல் இங்கு நடக்கிறது.
இது எந்த மதத்தினருக்கும், பிரிவினருக்கும் எதிரான பேச்சல்ல. ஜிகாத் முயற்சிகளுக்கு எதிராக அனைவரும் எச்சரிக்கையுடனும், ஒற்றுமையுடனும் செயல்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு உரிய தகவல்களை மாநில அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மத மாற்றம்
இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., - எம்.பி.,யுமான கே.ஜே. அல்போன்ஸ் கூறியுள்ளதாவது:மாநிலத்தில் பயங்கரவாதம் வளர்வதற்கு கம்யூ., மற்றும் காங்., கூட்டணிகளே முக்கிய காரணம்.
கேரளாவை கடந்த 25 ஆண்டுகளில் மற்றொரு தலிபான் ராஜ்ஜியமாக்க இவர்கள் முயற்சித்து வருகின்றனர். அடுத்த 5 - 10 ஆண்டுகளுக்குள் கேரளா, தலிபானாகவே மாறும் அபாயம் உள்ளது.
ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள்களை சேர்க்கும் மையமாக கேரளா மாறி வருகிறது. மற்ற மதத்தைச் சேர்ந்த பெண்களை திருமண ஆசை உட்பட பல வகைகளில் தங்களுடைய வலையில் விழ வைத்து விடுகின்றனர்.
பெண்களை பயங்கரவாத அமைப்புக்காக பணியாற்றவும், மற்ற வேலைகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேருவதற்காக, கேரளாவில் இருந்து அதிகமானோர், சிரியா உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக புகார் உள்ளது.
மேலும் இதற்காக, லவ் ஜிகாத் எனப்படும் காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி மத மாற்றம் செய்வதும் கேரளாவில் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு உட்பட பல அமைப்புகள் ஏற்கனவே விசாரித்து வருகின்றன.
இந்த நிலையில் போதைப் பொருள் ஜிகாத்தும் நடப்பதாக கேரள பிஷப் குற்றஞ்சாட்டியுள்ளார். இது, முதல்வர் பினராயி விஜயனுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
பிஷப் பேசியது என்ன?
பாலா சர்ச்சின் பிஷப் மாற ஜோசப் கலரன்காட் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது:ஜிகாதிகளின் பார்வையில் மற்ற மதத்தினர் அழிக்கப்பட வேண்டும். தங்களுடைய மதத்தை வளர்ப்பதற்காக, மற்ற மதத்தினரை அழிக்க ஜிகாதிகள் பல வழிகளை பயன்படுத்துகின்றனர்.
அதில் குறிப்பாக லவ் ஜிகாத் மற்றும் போதைப் பொருள் ஜிகாத் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
ஹிந்து, கிறிஸ்துவ இளைஞர்களை தங்கள் வலையில் விழ வைக்க, போதைப் பொருளை வினியோகிக்கின்றனர்.மாநிலத்தின் பல இடங்களில் தற்போது போதைப் பொருள், 'பார்ட்டி' நடத்தப்படுவதற்கு இதுவே காரணம்.
இதைத் தவிர, ஹிந்து மற்றும் கிறிஸ்துவ இளம் பெண்களை தங்கள் வலையில் விழ வைக்க, லவ் ஜிகாத் நடத்துகின்றனர். காதலிப்பதாக, திருமணம் செய்வதாக ஆசைகாட்டி, தங்கள் மதத்துக்கு மாற்றுகின்றனர்.
அவ்வாறு மதம் மாறும் பெண்களை பயங்கரவாத செயல்களிலும், பிற வழிகளில் பணம் சம்பாதிக்கவும் பயன்படுத்துகின்றனர்.மாநிலத்தில் போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து உள்ளது.
ஓட்டல், ஐஸ்கிரீம் பார்லர், ஜூஸ் கடைகள் பெரும்பாலும் இதுபோன்ற ஜிகாதிகளாலேயே நடத்தப்படுகின்றன. அங்கிருந்தே போதைப் பொருள் பழக்கம், புழக்கம் துவங்குகிறது.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில், கங்கை கொண்ட சோழபுரம், அரியலூர்
பெரிய லிங்கம்:
தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் இங்கு தான் உள்ளது. தஞ்சை பெரிய கோயில் லிங்கம் 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவும் (ஆவுடையார்) கொண்டது. 🙏🇮🇳1
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது. ஆவுடையை சுற்றி பலகை கட்டி, அதன் மீது ஏறிநின்று அபிஷேகம் செய்கின்றனர். 🙏🇮🇳2
ஒரே கல்லால் ஆன மூலவர் இங்கு பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார். தஞ்சாவூரில் உள்ள லிங்கம் ஆணின் அம்சம். இங்குள்ள லிங்கம் பெண் அம்சமாகும். அங்கு உரல் வடிவம். இங்கு உடுக்கை வடிவம்.
காஞ்சி மடத்தில் ஒருநாள் மதியம் மஹா பெரியவா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரை யாரோ குறுகுறுவென பார்ப்பது போலிருக்க நிமிர்ந்தார். ஜன்னலைப் பிடித்தவாறே குட்டிக் குரங்கு ஒன்று நின்று இருந்தது.
அதற்கு வாழைப்பழம் தருமாறு பணித்தார். ஆனால், வாங்க மறுத்துவிட்டது. அதற்கு கொஞ்சம் சாதம் கொடுக்க ஏற்பாடு செய்தார். கண் மூடி திறப்பதற்குள் வேகமாக சாப்பிட்டு விட்டு, மரத்தில் ஏறி மறைந்தது.
அதன்பிறகு, இதுவே தினமும் வாடிக்கையாகி விட்டது. அதற்கு "கோவிந்தா' என்று பெயரிட்டு அழைத்தார் மஹா பெரியவா.
பாக்., சென்ற சீன கப்பலில் ஆயுதம் கடத்தல்: வழக்கு என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றம்
புதுடில்லி: பாகிஸ்தானுக்கு குஜராத் வழியாக சென்ற சீனக் கப்பலில் ஆயுதங்கள் கடத்தப்பட்ட வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.,) மாற்றப்பட்டு உள்ளது.
சீனாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரியில் சீன சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. அந்த கப்பல் குஜராத்தின் காண்ட்லா துறைமுகப் பகுதியை கடந்த போது, அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சாய ஆலைக்கு தேவையான உபகரணங்கள் கொண்டு செல்வதாக சீன கப்பலின் மாலுமிகள் விளக்கம் அளித்தனர். ஆனால் அந்த கப்பலில் ஏவுகணைகள் தயாரிப்பதற்கான உபகரணங்கள் இருந்தன. இதைத் தொடர்ந்து சீன கப்பல் பறிமுதல் செய்யப்பட்டது.
அம்பேத்கர் சாதி அரசியலை போதிக்கவில்லை: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உரை
அம்பேத்கர் சாதி அரசியலை போதிக்கவில்லை என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
பாஜக எஸ்.சி அணியின் தேசியசெயற்குழுக் கூட்டம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்றது. இதன் இறுதி அமர்வில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்று நேற்று முன்தினம் பேசியதாவது:
தூய்மை இந்தியா இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் 10 கோடி பேரின் வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் பலன் அடைந்தவர்களில் 95 சதவீதம் பேர், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி வகுப்பினர் ஆவர். உ.பி.யில் 2.61 கோடி பேருக்கு கழிப்பறை கட்ட நிதியுதவி அளிக்கப்பட்டது.
போலி வரைபடம் தயாரித்து விற்க முயற்சித்தது தெரியவந்ததால், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மீட்டனர்.மாநகராட்சியுடன் விளாங் குறிச்சி இணைவதற்கு முன், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்துக்கு கீழ் இருந்தது.
1990ல், 3.50 ஏக்கருக்கு ஸ்ரீராமகிருஷ்ணா லே-அவுட் உருவாக்கி, 34 மனைகளுக்கு உள்ளூர் திட்ட குழுமத்திடம் வரைபட அனுமதி பெறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து ஒரு வழியாக பா.ம.க., விலகி விட்டது. ஆனால் அதற்கு அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சொல்லும் காரணங்கள் தான் நகைக்கத்தக்கவை.
'அ.தி.மு.க., தலைமை சரியில்லை; கூட்டணியால் பா.ம.க.,வுக்கு எந்த லாபமும் இல்லை; கூட்டணி தர்மத்தை காக்க அ.தி.மு.க., தவறி விட்டது...' இப்படி அடுக்கடுக்கான காரணங்களை செப்பியிருக்கிறார் ராமதாஸ்.இதிலிருந்தே, ராமதாசுக்கு மனசாட்சியே இல்லை என்பது தெரிகிறது.
பா.ம.க.,வின் நிர்பந்தம் காரணமாக, வன்னியருக்கு 12.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தது, அ.தி.மு.க., அரசு தான்.காரியம் முடிந்ததும், அ.தி.மு.க., தலைமைக்கு, 'பெப்பே' காட்டியுள்ளார், ராமதாஸ். அ.தி.மு.க., தலைமைக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.