1925 முதல் 1933 வரை பெரியாருக்கு உற்ற தோழராக இராமநாதபுரம் ஜில்லா பகுதிகளில் பெரியார் கருத்துக்களை மிகச் துணிச்சலுடன் பரப்பும் பிரச்சார பீரங்கியாக செயல்வீரராகத் திகழ்ந்தவர் சிவகங்கை இராமச்சந்திர சேர்வை ஆவார். திருநெல்வேலி சுயமரியாதை
இயக்க மாநாட்டை அவரது தலைமையில்தான் பெரியார் நடத்தினார். சுயமரியாதைப் பிரச்சாரத்துக்கு தென்மாவட்டங்களில் எங்கு தடை என்றாலும் துப்பாக்கியுடன் களத்தில் நிற்கும் தோழனாகத் திகழ்ந்தார்.
1933 இல் அவர் மறையும் வரை பெரியாருடன் அவரும் அவரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரும் சுயமரியாதை இயக்கத்தில் அளப்பரிய சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். குற்றப் பரம்பரைச் சட்டத்தில் கொடுமைப்பட்ட மக்களை மீட்டது திராவிடர் இயக்கமும் பெரியாரும் தான் என்பது
இராமச்சந்திர சேர்வைக்குத் தெரியும். அதனால் தன் குடும்பத்தையும் சொந்த பந்தங்களையும் பெரியாருக்குத் துணையாக்கினார்.
1952 இல் இராஜாஜி மீண்டும் கொல்லைப்புறம் வழியாக ஆட்சியைப் பிடிக்கிறார். தகப்பன் தொழிலையே பிள்ளைகளும் செய்ய வேண்டும் என்ற
குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வருகிறார். சுமார் 6000பள்ளிகளை மீண்டும் இழுத்து மூடினார். குற்றப் பரம்பரையினரின் வாரிசுகள் என்ன செய்ய முடியும்? திருடத்தானே முடியும்? அதை எதிர்த்துக் களம் கண்டவர் -
இராஜாஜியை விரட்டி அடித்து குலக் கல்வித் திட்டத்தை ஒழித்தவர் பெரியார். அந்தக் காலத்தில் குலக் கல்வித் திட்டத்தை ஒழிக்க தனது கள்ளர், மறவர், அகமுடையர்களுக்காக தேவர் என்ன செய்தார்?
1956 இல் தஞ்சை மாவட்டம் கண்ணந்தங் குடியைச் சேர்ந்த கள்ளர் சமுதாயத்தில் பிறந்த ஆர்.எஸ். மலையப்பன் என்பவர் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தார். ஒரு நிலச் சிக்கல் தொடர்பாக அவர் எடுத்த
நிலைப்பாட்டைக் கண்டித்து அவரை வேலையை விட்டே நீக்கம் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற பார்ப்பன நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். பெரியார் கொதித்தெழுந்தார். 1956 நவம்பர் 4 ஆம் நாள் திருச்சியில் இதற்காக ஒரு சிறப்பு கண்டனக் கூட்டத்தை நடத்துகிறார்.
‘பார்ப்பான் ஆளும் நாடு கடும்புலிகள் வாழும் காடு’ என அந்தக் கூட்டத்தில்தான் முழங்கினார். நீதி கெட்டது யாரால் என்ற தலைப்பில் அந்த உரை நூலாகவே வெளிவந்துள்ளது. அந்த உரைக்காக நீதிமன்ற அவமதிப்புக்காக 1957 ஆம் ஆண்டு பெரியாருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
கள்ளர் சமுதாய கலெக்டருக்காக கடுங்காவல் தண்டனை பெற்றவர் பெரியார். 1960 செப்டம்பர் 17அன்று பெரியார் பிறந்த நாள் அன்று அதே ஆர்.எஸ். மலையப்பன் பெரியாருடன் ஒரே மேடையில் உரையாற்றினார். இன்று வரை அந்த மலையப்பனின் ஊரிலும் அவரது உறவினர்களின் வீடுகளிலும் பெரியார் சிலையும்
பெரியார் படமும் சிறப்பாக வீற்றிருக்கிறது. இன்றும் திராவிடர் கழகக் கோட்டை என்று சொல்லப்படும் பகுதியாக அப்பகுதி உள்ளது. மலையப்பன் விவகாரத்தில் முத்துராமலிங்கத் தேவரின் பங்கு என்ன?
சட்டப்படி கள்ளர்களையும் மறவர், அகமுடையார்களையும் அனைத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களையும் பார்ப்பானின் வைப்பாட்டி மகன்களென்றும் சூத்திரர்களென்றும் இழிவுபடுத்தும் இந்திய அரசியல் சட்டத்தை எரிக்குமாறு 1957 இல் பெரியார் ஆணையிட்டார்.
நூற்றுக்கணக்கான தேவர்கள் எரித்துச் சிறை சென்றார்கள். இந்த இன இழிவு ஒழிப்புப் போராட்டத்தில் தேவரின் பங்கு என்ன? மண்டல்குழு அறிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய 9 நீதிபதிகளில் ஒருவர் தேவர் சமுதாயத்தைச் சார்ந்த நீதிபதி
இரத்தினவேல் பாண்டியன். அவர் தனது தனிப்பட்ட தீர்ப்பில் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் வாழ்வுரிமைக்காக பெரியார் உழைத்த உழைப்பை சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.
குற்றப் பரம்பரையில் பிறந்தவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கியது திராவிடர் இயக்கம். அப்படிப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளே நினைவுகூறும் பெரியார் பணியை யாரோ சிலர் கேவலமாகப் பேசுவதை ஒரு முக்கியச் செய்தியாக ஒரு பெரியார் தொண்டர் என்பவரே சொல்வது வருத்தத்துக்கு உரியது.
கடும் கண்டனத்துக்கு உரியது. குற்றப் பழங்குடி சட்டத்தைப் பற்றியும் அது நடைமுறைப்படுத்தப்பட்ட காலங்களில் அப்போதைய ஆட்சியாளரின் நடவடிக்கைகள், அப்போதைய சமுதாய இயக்கங்களின் செயல்பாடுகள் ஆகிய அனைத்தையும் விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்தால் அச்சட்டம் பற்றிய பல மூட நம்பிக்கைகள் ஒழியும்.
மண்டல் கமிசன் வழக்கில் நீதியரசர் இரத்தினவேல் பாண்டியன் அவர்கள் வழங்கிய தீர்ப்புதான், இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டியது.
அதேபோன்று, கர்நாடக மாநில முதல்வர் எஸ்.ஆர்.பொம்மை அரசு, மத்திய அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்டபோது,
அது தவறு எனக் கூறி நீதியரசர் வழங்கிய தீர்ப்பு, மாநில சுயாட்சி உரிமைக்கு அரண் அமைத்தது.
1994 ஏப்ரல் 12 முதல் 97 ஏப்ரல் 30 வரை மத்திய அரசின் ஐந்தாவது ஊதியக்குழுவின் தலைவராக இருந்து அவர் வழங்கிய அறிக்கை, அனைத்து இந்தியாவிலும், இலட்சோப லட்சம் ஊழியர்களுக்குப் புதுவாழ்வு தந்தது.
1999 மே 7 முதல், 2000 ஏப்ரல் 30 வரை தென் மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலை குறித்த ஆணையத்தின் தலைவர் பொறுப்பு வகித்தார்.
காஷ்மீர் மாநிலத்தின் பிரக்போரா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை ஆணையத்தின் தலைவராக 2000 மே 16 முதல் அக்டோபர் 27 வரை பொறுப்பு ஏற்று, உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டபோதும் அஞ்சாது விசாரணை நடத்தி,குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்
அவர் தந்த 225 பக்க அறிக்கை, காவல்துறையினரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு உதவித் தொகை கிடைக்க வழி செய்தது.
2006 ஆகஸ்ட் 14 முதல், 2009 ஆகஸ்ட் 13 வரை, தேசிய பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் தலைவர் பொறுப்பு வகித்துள்ளார்.
அப்போது அவர்கள் தந்த அறிக்கை, தென் மாவட்டங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்கான ஆவணமாக அமைந்தது.
மாணவப் பருவத்திலேயே திராவிடர் கழகம் நடத்திய இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்றுக் கைதானார். பின்னர் பேரறிஞர் அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, நெல்லை மாவட்டத்தில் தி.மு.கழகத்தைக் கண் போல் காத்து வளர்த்தார்.
1965 இந்தி எதிர்ப்புப் மற்றும் விலைவாசிப் போராட்டங்களில் சிறைவாசம் ஏற்றார். அண்ணன் டாக்டர் கலைஞர் பாளையங்கோட்டைத் தனிமைச் சிறையில் இருந்தபோது, விடுமுறை நாள்கள் தவிர மற்ற அனைத்து நாள்களிலும் சிறைக்குச் சென்று பார்த்ததோடு, பேரறிஞர் அண்ணா அவர்களையும்
கலைஞரைப் பார்க்க அழைத்துச் சென்றார்.
1966 ஆம் ஆண்டு, வத்தலக்குண்டில் நடைபெற்ற தி.மு.க. மதுரை மாவட்ட மாநாட்டுக்குத் தலைமை ஏற்றுப் பேரறிஞர் அண்ணா அவர்களின் பாராட்டைப் பெற்றார். 68 ல் நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆனார். 71 ல் தமிழ்நாடு அரசு வழக்குரைஞர் ஆனார். 74 ஆம் ஆண்டு,
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனார். 88ல் தலைமை நீதிபதி (பொறுப்பு) ஆக இருந்தார். 88 டிசம்பர் 14 ல் உச்சநீதிமன்ற நீதிபதி ஆனார்.
மாநில சுயாட்சிக்கு அரண் அமைத்தவர் : ரத்தினவேல் பாண்டியன் மறைவுக்கு வைகோ இரங்கல்
சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று, சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் புகழ்மிக்க வழக்குரைஞர் செல்லப்பாண்டியன் அவர்களிடம் ஜூனியராகப் பயிற்சி பெற்றார்.
மாணவப் பருவத்திலேயே திராவிடர் கழகம் நடத்திய இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்றுக் கைதானார். பின்னர் பேரறிஞர் அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, நெல்லை மாவட்டத்தில் தி.மு.கழகத்தைக் கண் போல் காத்து வளர்த்தார்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
முதுகுளத்தூர் கலவரம் (1957) முதல் பரமக்குடி படுகொலை (2011) வரை...
1957 – அக்காலகட்டத்திலும் ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்டோர் மீது வன்முறைத் தாக்குதல் நடத்துவது என்பது ஒரு பொதுப் போக்காகும். அப்போது, நாடாளுமன்றத் தேர்தலில் நின்று முத்துராமலிங்கம் வெற்றி பெற்றார்.
ஒரே நபர் இரு பதவி வகிக்க முடியாது என்ற காரணத்தினால் அவர் தனது சட்டசபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகவே, முதுகுளத்தூர் தொகுதியில் சட்டசபைத் தேர்தல் மீண்டும் நடத்தப்பட்டது.
அதில் வெற்றி பெற்ற வேட்பாளர் சசிவர்ண 'தேவர்’ என்பவருக்கு பள்ளர்கள் வாக்களிக்கவில்லை என்ற காரணத்தால் மறவர்கள் அவர்கள் மீது தாக்குதலை நடத்தினர். இதில் 42 பேர் கொலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 10 ஆம் நாள் ஓர் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.
🖐️1946ஆம் ஆண்டு நடைபெற்றக் காங்கிரசுக் கமிட்டித் தேர்தலில் காமராசரைத் தோற்கடிக்க, முத்துராமலிங்கத் தேவரை நிறுத்தலாமா ?
🖐️காமராசர் எனும் சகாப்தம்.
🖐️காங்கிரசுத் தலைவரான பெரியார் நடத்திய அந்தப் போராட்டத்தில் எளிய தொண்டராகக் காமராசு.
சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் நமது காமராசர்தான். ஊர்தோறும் தொழில்வளம் ஏற்பட்டுள்ளது. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தைச் சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?
இப்படியொரு புகழாரத்தைக் காமராசருக்கு சூட்டியவர் யார் தெரியுமா.? தந்தை பெரியார்தான். திராவிடர் கழகத் தலைவர் பெரியார் காங்கிரசுக் கட்சியின் மாநிலக் கமிட்டித் தலைவராகவும் தேசியத் தலைவராகவும் இருந்த காமராசரை இந்த அளவிற்குப் பாராட்டவேண்டிய காரணம் என்ன? யார் இந்த காமராசர்?
1967 தேர்தல் முடிந்த நேரம், ராஜபாளையத்தில் காங்கிரசு கட்சி மாநாடு. மாநாட்டு மேடையில் தலைவர் காமராஜரும், மற்றவர்களும் உட்கார்ந்திருக்க, நானும் இருக்கிறேன்.
முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காமராசரின் நெருங்கிய நண்பருமான டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஒலிபெருக்கியில் பேசுகிறார். தேர்தலில் காங்கிரசு கட்சி தோற்றுப் போனதற்கான காரணத்தை அவர் நோக்கில் பேசிக் கொண்டிருந்தவர், திடீரென என் பக்கம் திரும்பி,
என்னை கையால் சுட்டிக்காட்டி - “இதோ, இங்கே நாத்திகம் இராமசாமி வீற்றிருக்கிறார்..... காங்கிரசு மேடையில் ஈ.வெ.ரா.வின் நாத்திகம் வந்து உட்கார்ந்ததும், காங்கிரசு தோல்விக்கு ஒரு காரணம்...” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள்ளேயே,
நம் நாட்டில் பார்ப்பன அயோக்கியர்கள் மதக்குறிப்பு என்று எதைக் குறிப்பிட்டார்கள் என்றால் ‘பசுவதையைத் தடுக்கச் சட்டம் இயற்ற வேண்டும்’ என்ற பிரச்சனைகளைக் காரணமாகக் கொண்டு காலித்தனத்தைச் செய்யத் தொடங்கி னார்கள்.
“பசுவதைத் தடுப்புப் பித்தலாட்டம்” என்றார் பெரியார். பார்ப்பனர்கள் தாங்கள்தான் காலம் காலமாகப் பசுவைத் தெய்வமாகப் போற்றி வருபவர்கள் என்றும், பசுவைக் காப்பாற்றுவது மனுதர்மம், இந்து தர்மமாகும் என்றும் கூப்பாடு போட்டார்கள். ஆனால் பார்ப்பனர்களின் முன்னோர்கள், ரிசிகள்,
முனிவர்கள் போன்ற எல்லா ஆரியர்களுக்கும் ‘பசுக்கள்’தான் விருந்து நடத்தப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பார்ப்பனர்களின் நூல்களில் இதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன.
இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் நல உதவிகள்.
இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் நல உதவிகள்
1973-ம் ஆண்டு திமுக ஆட்சியில் உருது பேசும் லெப்பைகளை தமிழ் முஸ்லீம்களைப் போல் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அனைத்திந்திய அளவில் முஸ்லீம்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்க மிஸ்ரா ஆணையம் செய்துள்ள பரிந்துரையை நடைமுறைப்படுத்துவோம், என்று திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தது.
திமுக ஆட்சியில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்கள் தலைமையில் 8.7.2006 அன்று ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் பேரறிஞர் அண்ணா