டில்லி நகரின் கழுத்தை நெரித்துவிட்டீர்கள்; விவசாயிகள் அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி: ஒட்டுமொத்த டில்லி நகரின் கழுத்தை நெரித்துவிட்டு, தற்போது நகருக்குள் வந்து போராட்டம் நடத்த அனுமதி கேட்கிறீர்கள் என விவசாய சங்கங்களிடம் உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டில்லியின் புறநகர் பகுதியில் நடக்கும் போராட்டம் ஓராண்டை நிறைவு செய்தது. இதனையடுத்து கடந்த மாதம் விவசாயிகள் பாரத் பந்த் நடத்தினர்.
மனு
இந்நிலையில் விவசாயிகள் மற்றும் கிசான் மகா பஞ்சாயத்து சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:
டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 200 விவசாயிகள் சத்தியாகிரக போராட்டம் நடத்த உள்ளனர். இதற்கு அனுமதி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மக்கள் மகிழ்ந்தார்களா?
இந்த மனு நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், சி.டி.ரவிக்குமார் தலைமையிலான அமர்வில் இன்று(அக்.,1) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ஒட்டுமொத்த டில்லி நகரின் கழுத்தையும் நெரித்துவிட்டு, இப்போது, நகரின் மையப்பகுதிக்குள் வந்து போராட்டம் நடத்த விரும்புகிறீர்கள். போராட்டம் நடத்திய பகுதி அருகே இருந்த மக்கள், உங்களது போராட்டத்தால் மகிழ்ச்சி அடைந்தார்களா?
நீதித்துறையை எதிர்த்து போராட்டமா?
வேளாண் சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய நீங்கள், நீதித்துறை மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நீதிமன்றம் முறையாக முடிவு எடுக்கும்.
நீதிமன்றம் மீது நம்பிக்கை இருந்திருந்தால், போராட்டம் நடத்துவதை விட்டுவிட்டு, வழக்கை விரைவாக விசாரிக்க வலியுறுத்தியிருக்க வேண்டும். நீதித்துறை அமைப்பை எதிர்த்தும் போராட்டம் நடத்துகீறீர்களா?
மறுப்பு
நெடுஞ்சாலையை மறித்த நீங்கள், போராட்டம் அமைதியாக நடந்ததாக கூறுகிறீர்கள். குடிமக்களும் சாலைகளில் சென்று வர உரிமை உள்ளது. அவர்களின் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. நாட்டின் பாதுகாப்பிற்கும் நீங்கள் பாதிப்பு ஏற்படுத்துகிறீர்கள்.
பாதுகாப்பு துறையினரையும் நீங்கள் தடுத்து நிறுத்தி உள்ளீர்கள் என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது, நாங்கள் நெடுஞ்சாலையை மறிக்கவில்லை. போலீசார் எங்களை தடுத்துவிட்டனர் என தெரிவித்தார்.
தொடர்ந்து நீதிபதிகள், நெடுஞ்சாலையை மறிக்கும் போராட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை என்பது குறித்து அபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அரசின் ஒத்துழைப்பு வேண்டும் தலைமை நீதிபதி வலியுறுத்தல்
புதுடில்லி:"அனைவருக்கும் நீதி கிடைக்கவும், ஜனநாயகத்தை வலுபடுத்தவும், உச்ச நீதிமன்றம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா வலியுறுத்தி உள்ளார்.
டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசியதாவது:
கடந்த மே மாதம் முதல், உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகளுக்கான பணியிடங்களை நிரப்ப, 106 பெயர்களை கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. இதில் ஏழு பரிந்துரைகளுக்கு மட்டுமே மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஜல் ஜீவன் இயக்கத்தால் 5 கோடி வீடுகளுக்கு குடிநீர் : சாதித்து காட்டியதாக பிரதமர் மகிழ்ச்சி
புதுடில்லி : ''நாட்டில் 1.25 லட்சம் கிராமங்களில் உள்ள ஐந்து கோடி வீடுகளுக்கு, 'ஜல் ஜீவன்' இயக்கத்தின் வாயிலாக சுகாதாரமான குடிநீர் இணைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் பல ஆண்டுகள் ஆட்சி செய்தோர், 70 ஆண்டுகளில் செய்ததை, நாங்கள் இரண்டே ஆண்டுகளில் சாதித்து காட்டியுள்ளோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.
நாடு முழுதும் அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்கும் நோக்கில், 'ஜல் ஜீவன்' இயக்கத்தை 2019 ஆக., 15ல் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
சூரியசக்தி, மாற்று எரிசக்தி ஆதாரங்களால் தெற்கு ரயில்வேக்கு ரூ.377 கோடி மிச்சம்!
சென்னை- சூரிய மின் சக்தி நிலையங்களாலும், பிற மாற்று எரிசக்தி ஆதாரங்களாலும், தெற்கு ரயில்வேக்கு 377 கோடி ரூபாய் மின் செலவு குறைந்துள்ளது.
சூரிய மின் சக்தி உள்ளிட்ட, பிற மாற்று எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்துவதன் வாயிலாக, பசுமை சூழ்நிலையை பாதுகாக்க, இந்திய ரயில்வே முயற்சி மேற்கொண்டுள்ளது. பூஜ்ய இலக்குவரும் 2030ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வில் பூஜ்ய இலக்கை அடைய திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தெற்கு ரயில்வேயில் சுற்றுச்சூழல் பசுமை பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தொடர்ந்து பல ஆண்டுகளாக உள்நாட்டில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.
ஆனால் இதனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து மறுத்து வருகிறார். ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பது அவ்வபோது வெட்டவெளிச்சமாகிறது. இதனை மறுபடியும் நிரூபிக்கும் வகையில் ஓர் சம்பவம் நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் செயல்படும் ஐநா.,வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு தேகிரீக்-ஐ-தாலிபான். இந்த அமைப்பு சுருக்கமாக பாகிஸ்தானி தாலிபான் என்று அழைக்கப்படுகிறது. தற்போது பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியை பிடித்துள்ளது.
திருவனந்தபுரம்-''போலி மதச்சார்பின்மை கொள்கையை கடைப்பிடித்தால், இந்தியா அழிவை நோக்கித் தள்ளப்படும்,'' என, கேரள சைரோ - மலபார் கத்தோலிக்க சபையின் பலா தேவாலய பாதிரியார் ஜோசப் கலரங்கட் எச்சரித்துள்ளார்.
சர்ச்சை
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு முஸ்லிம் இளைஞர்கள், கிறிஸ்துவப் பெண்களை காதலித்து போதைக்கு அடிமையாக்கி மதம் மாற்றுவது, பயங்கரவாத அமைப்பில் சேர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக, ஜோசப் கலரங்கட் சமீபத்தில் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
வியக்க வைக்கும் எல்லோர கைலாசநாதர் திருக்கோவில்..!!
ஒற்றைக்கல்லில் ஒரு சிலையை வடித்து கேள்விப்பட்டுள்ளோம். ஆனால்இ ஒற்றைபாறையில் ஒரு கோவிலையே வடித்துள்ளார்கள் என்றால்.... இது ஆச்சர்யம் மட்டுமல்ல வியப்பிற்குரிய ஒரு விஷயமாகும்.
🙏🇮🇳1
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எல்லோராஇ குகை சிற்பங்களுக்கு பெயர் பெற்றது.
🙏🇮🇳2
மகாராஷ்டிரா மாநிலத்தில் எல்லோரா மலையில்இ குடைந்து கட்டப்பட்டிருக்கும் கோவில்தான் எல்லோரா கைலாசநாதர் திருக்கோவில். இக்கோவில் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.