சூரியசக்தி, மாற்று எரிசக்தி ஆதாரங்களால் தெற்கு ரயில்வேக்கு ரூ.377 கோடி மிச்சம்!

சென்னை- சூரிய மின் சக்தி நிலையங்களாலும், பிற மாற்று எரிசக்தி ஆதாரங்களாலும், தெற்கு ரயில்வேக்கு 377 கோடி ரூபாய் மின் செலவு குறைந்துள்ளது.
சூரிய மின் சக்தி உள்ளிட்ட, பிற மாற்று எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்துவதன் வாயிலாக, பசுமை சூழ்நிலையை பாதுகாக்க, இந்திய ரயில்வே முயற்சி மேற்கொண்டுள்ளது. பூஜ்ய இலக்குவரும் 2030ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வில் பூஜ்ய இலக்கை அடைய திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தெற்கு ரயில்வேயில் சுற்றுச்சூழல் பசுமை பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன.
மின் சிக்கனம் மற்றும் கார்பன் உமிழ்வை குறைக்கும் நோக்கில், சூரிய சக்தி மின்சாரம், காற்றாலை மின்சாரம் மற்றும் மாற்று எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்தியதால், 2020 - 21ல், தெற்கு ரயில்வேக்கு 377 கோடி ரூபாய் மின் செலவு குறைந்துள்ளது.
டீசல் செலவுபசுமை ரயில் நிலையத்துக்கு, இந்திய பசுமை கட்டட கவுன்சிலால் வழங்கப்படும், 'பிளாட்டினம்' சான்று, கோவை ரயில் நிலையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, பசுமை ரயில் நிலைய விருது, பசுமை கட்டட ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனைக்கு, ஆற்றல் சேமிப்பு சான்றிதழ்; சென்னை தண்டையார்பேட்டை, ராயபுரம், அரக்கோணம், ஈரோடு மற்றும் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள, டீசல் லோகோ பணிமனைகளுக்கு, 'ஐ.எஸ்.ஓ., 50001' தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மின்சார ரயில் இன்ஜின் இயக்கம் 568 ஆக உயர்ந்துள்ளது. டீசல் இன்ஜின்கள் 340ல் இருந்து 120 ஆக குறைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, நடப்பு நிதியாண்டில் டீசல் செலவு 371 கோடி ரூபாயாக குறையும்.இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமலர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

4 Oct
அருள்மிகு சப்த கன்னியர் திருக்கோயில், கன்னிமார்பாளையம், திண்டுக்கல்

ஆலயத்தின் நுழைவாயிலைத் தொடர்ந்து மகாமண்டபம், அதையடுத்து அர்த்த மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்தின் வடக்குப் பகுதியில் கிழக்கு திசை நோக்கி சூல வடிவில் பெரியசாமி அருள்பாலிக்கிறார். 🙏🇮🇳1
அடுத்துள்ள கருவறையில் சப்தகன்னியர் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கின்றனர். ஆலயத்தின் தல விருட்சம் ஆவி எனப்படும் ஒரு வகை மரம். இம்மரம் ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் உள்ளது. இம்மரத்தின் அடியில் விநாயகர் அருள்பாலிக்கிறார். மேற்குப் பிரகாரத்தில் அழிஞ்சி மரம் உள்ளது.

🙏🇮🇳2
ஆதியில் சப்த கன்னியரின் திருமேனிகள் இம்மரத்தின் அடியில்தான் இருந்தன. பின்னரே தனி ஆலயம் அமைத்து கருவறையில் சப்தகன்னியர் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த அழிஞ்சி மரத்திற்கு ஊஞ்சல் மரம் என்ற பெயரும் உண்டு. கிழக்குப் பிரகாரத்தில் ஐம்பது ஆண்டுகள் பழமையான மின்னமரம் உள்ளது.🙏🇮🇳3
Read 6 tweets
4 Oct
அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில், திண்டுக்கல்

எந்த கோயிலிலும் இல்லாமல் இங்கு 2 மூலவர்கள் சன்னதி உள்ளன. திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை இங்கு காலையில் நடக்காமல் மாலை வேளைகளில் நடைபெறுகிறது. 🙏🇮🇳1
பத்மகிரி நாதர் பேரில் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாடிய தென்றல் விடு தூது இக்கோயிலின் இலக்கியப் பெருமையைப் பறை சாற்றுகிறது.

🙏🇮🇳2
பலபட்டடைச் சொக்கநாத புலவர் இயற்றிய பத்மகிரி நாதர் தென்றல் விடுதூது என்ற அரிய நூலைப் பதிப்பித்த டாக்டர் உ.வெ.சாமிநாத அய்யர் அந்நூலின் முன்னுரையில் பத்மகிரியென்பது திண்டுக்கல்லின் திருநாமம் இதற்கு திண்டீச்சுரம் என்ற திருநாமமும் உண்டு.இது தேவார வைப்புத் தலங்களில் ஒன்று என்கிறார்.🇮🇳3
Read 27 tweets
3 Oct
#படித்ததில்_பிடித்தது

உலக பணக்காரர்கள் 1000 பேர் வரிசையில் ஆயிரத்தின் அருகில் இருப்பவர் நைஜீரியாவை சேர்ந்த பெமி ஓடெடோலா ஆனால் அவர் தான் மிகவும் மகிழ்ச்சியான பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர்...
அவர் ஒரு நேர்காணலில் ஃபெமி ஓடெடோலாவை தொகுப்பாளர்  பேட்டி எடுத்தார்...

"உங்களை வாழ்க்கையில் மகிழ்ச்சியான மனிதராக மாற்றியது என்ன?" என்ற கேள்விக்கு ..
ஃபெமி கூறினார்:

"நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் 4 நிலைகளை கடந்து விட்டேன், இறுதியாக உண்மையான மகிழ்ச்சியின் அர்த்தத்தை புரிந்துகொண்டேன்."
Read 15 tweets
3 Oct
மோடியின் சாதனையும் தமிழக இந்து அறநிலையத் துறையின் அவலமும்

ஸ்டான்லி இராஜன் அவர்களின் சஞ்சிகை பகிர்வு

மோடியின் அமெரிக்க பயணத்தின் மிகபெரிய வெற்றி என்பது அமெரிக்காவுக்கு கடத்தபட்ட சிலைகளை மீட்டிருப்பது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தபட்ட அல்லது விற்கபட்ட சுமார் 157 சிலைகளை திருப்பி கொடுக்க அமெரிக்க அரசு முடிவு செய்திருக்கின்றது. இதில் பெரும்பான்மையான சிலைககள் தமிழக சிலைகள்.
இதுவரை இச்சிலைகளை மீட்க நேரு முதல் மன்மோகன்சிங் வரை எந்த அரசும் முயற்சிக்கவில்லை. வாஜ்பாய் காலத்தில் சில பொருளாதார தடைகள் இருந்ததால் அவராலும் முழு வெற்றி பெற முடியவில்லை.
Read 7 tweets
3 Oct
அரசின் ஒத்துழைப்பு வேண்டும் தலைமை நீதிபதி வலியுறுத்தல்

புதுடில்லி:"அனைவருக்கும் நீதி கிடைக்கவும், ஜனநாயகத்தை வலுபடுத்தவும், உச்ச நீதிமன்றம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா வலியுறுத்தி உள்ளார்.
டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசியதாவது:
கடந்த மே மாதம் முதல், உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகளுக்கான பணியிடங்களை நிரப்ப, 106 பெயர்களை கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. இதில் ஏழு பரிந்துரைகளுக்கு மட்டுமே மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Read 7 tweets
3 Oct
ஜல் ஜீவன் இயக்கத்தால் 5 கோடி வீடுகளுக்கு குடிநீர் : சாதித்து காட்டியதாக பிரதமர் மகிழ்ச்சி

புதுடில்லி : ''நாட்டில் 1.25 லட்சம் கிராமங்களில் உள்ள ஐந்து கோடி வீடுகளுக்கு, 'ஜல் ஜீவன்' இயக்கத்தின் வாயிலாக சுகாதாரமான குடிநீர் இணைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் பல ஆண்டுகள் ஆட்சி செய்தோர், 70 ஆண்டுகளில் செய்ததை, நாங்கள் இரண்டே ஆண்டுகளில் சாதித்து காட்டியுள்ளோம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறினார்.
நாடு முழுதும் அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்கும் நோக்கில், 'ஜல் ஜீவன்' இயக்கத்தை 2019 ஆக., 15ல் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
Read 27 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(