"பல முறை கடைசி நபராக நான் வெளியேறும் பட்சத்தில், சுமார் மதியம் 2 மணி போல இருக்கும், நான் வருகைப் பதிவேட்டை எடுத்துக் கொண்டு ஓடி வருவேன். நான் வீட்டிற்கு வரும் வரை மூச்சு கூட விட மாட்டேன். யாராவது இருக்கிறார்களா என்று திரும்பிப் பார்த்துக் கொண்டே வருவோம். ஆனால் பயந்தாலும்,
எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் போய் தான் ஆக வேண்டும். ஏனென்றால் எங்களுக்கு பணம் தேவைப்படுகிறது", என்று சம்பா ராவத் கூறுகிறார்.
வேகமாக நடந்தபடியே அவர் சேலைத் தலைப்பால் தொடர்ந்து முக்காட்டை சரி செய்தபடியே தனது முகத்தை மூடிக் கொள்கிறார்.
தானா கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் ( MGNREGA ) கீழ் வேலைகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்று சம்பா என்னிடம் கூறுகிறார். தனது கிராமத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நீர் பாசன அகழிகள் கொண்ட ஒரு நிலத்தை அவர் சுட்டிக்காட்டி,
"இது தான் நாங்கள் வேலை பார்த்த இடம்”, என்று கூறினார். ஆனால் இந்த முறை (2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்) எங்களுக்கு நான்கு கிலோ மீட்டர் தள்ளி ஒரு இடம் வழங்கப்பட்டது, அது இதைவிட தனிமை படுத்தப்பட்ட இடம்", என்று கூறுகிறார். அங்கு நடந்து செல்வதற்கு ஒரு மணி நேரம்,
திரும்பி வருவதற்கு ஒரு மணி நேரம் ஆகும். 2005 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மைல்கல் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் (MGNREGA) நன்மைகள் மற்றும் பலவீனங்களைப் பற்றிய விவரங்களை சம்பா தெரிவிக்கிறார்.
இந்தியாவில் உள்ள கிராமப்புற குடும்பங்களுக்கு ஒரு வருடத்திற்கு 100 நாட்கள் ஊதியம் உள்ள வேலைகளை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் உள்ள மண்டல் தாலுகாவில் -
சம்பாவின் கிராமமான தானா அமைந்துள்ளது - இத்திட்டம் 2019 ஆம் ஆண்டில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) மட்டும் மிகவும் அவசியமாக தேவைப்படுகிற, ஊதியம் உள்ள வேலைகளை 8,62,533 குடும்பங்களுக்கு வழங்கியுள்ளது.
மேலும் 2013 ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தால் பில்வாராவில் மொத்தம் 60 லட்சம் குடும்பங்களுக்கு வேலை கிடைத்துள்ளது.
இந்த வருமானம் பல குடும்பங்களின் பொருளாதாரத்தை சமாளிக்க உதவியாக இருக்கிறது, மீனா சால்வியின் குடும்பம் உட்பட, 19 வயதாகும் அவர் அவரது வீட்டின் ஒரே வருமானம் ஈட்டும் நபராகவும், நோயுடன் இருக்கும் தனது பெற்றோரையும் கவனித்துக் கொண்டும் இருக்கிறார்.
மீனாவும் தனிமை படுத்தப்பட்ட இடங்களில் வேலை செய்யும் சிக்கல்களைப் பற்றி பேசுகிறார். "நான் ஏன் பயப்படுகிறேன் என்றால் நான் தனியாக வீட்டிற்கு திரும்பி வர வேண்டும், குறிப்பாக நான் தான் வேலை செய்யும் கடைசி நபராக இருக்கிறேன் என்றால்", என்று அவர் கூறுகிறார்.
இந்த ஆண்டு மே மாதம் சம்பா மேற்பார்வை செய்யும் இடத்தில் வேலை செய்யும் 25 தொழிலாளர்களும் - அனைவருமே பெண்கள் - இவ்வளவு தொலைவு தள்ளி இடம் ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தனர்.
இந்த தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு செல்ல அவர்கள் ஒத்துக் கொண்டார்கள் என்றால் அடுத்த முறை பஞ்சாயத்து இன்னும் சற்று தொலை தூரத்தில் இருக்கும் இடத்தை அவர்களுக்கு ஒதுக்கும் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள்.
"வேலை நடக்க வேண்டிய பிற இடங்கள் அருகிலேயே இருக்கின்றன", என்று சம்பா கூறுகிறார். இடையில் இருக்கும் காட்டை தாண்டாமல் எங்களால் இங்கு வர முடியாது. சில நேரங்களில் அங்கு வன விலங்குகளும், சில நேரங்களில் குடித்துவிட்டு வரும் மனிதர்களும் அங்கு இருப்பர்...",
என்று அதே இடத்தில் வேலை செய்யும் சவிதா ராவத் கூறுகிறார். ஆனால் ஒரு வார கால போராட்டத்திற்கு பிறகு அவசரமாக பணம் தேவைப்படும் சிலர் மீண்டும் வேலைக்குத் திரும்பினர். சிலர் சம்பாவுடன் சேர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர் மேலும் அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு பிறகு மாற்று இடம் ஒதுக்கப்பட்டது.
30 வயதாகும் சம்பா 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 100 நாள் வேலைத் திட்டத்தில் (MGNREGA) பணி நிலைய மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். அவர் இத்திட்டத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பணியாற்றத் துவங்கினார். மேற்பார்வையாளரும்,
தொழிலாளியும் ஒரே ஊதியத்தையே பெறுகிறார்கள் - ராஜஸ்தானில் ஒரு நாளுக்கான சம்பளம் 199 ரூபாய் ஆகும். மேற்பார்வையாளராகப் பணியாற்ற, ஒரு படித்த பெண் தொழிலாளியாக இருக்க வேண்டும்.
அவர் முந்தைய அல்லது நடப்பு நிதியாண்டில் 100 நாள் வேலை திட்டத்தில் (MGNREGA) தொழிலாளியாக குறைந்தது 50 நாட்கள் பணியாற்றி இருக்க வேண்டும், அவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்", என்று இத்திட்டத்தின் விதிகள் கூறுகின்றன.
இந்த வேலை சம்பாவுக்கு சிறிது சுதந்திரத்தை வழங்குகிறது. "எனது கணவரது குடும்பத்தினருக்கு நான் வெளியே சென்று வேலை பார்ப்பது பிடிக்கவில்லை" என்று அவர் கூறுகிறார். "வீட்டிலேயே செய்வதற்கு நிறைய வேலை எனக்கு இருக்கின்றது என்று அவர்கள் கூறுகின்றனர்.
100 நாள் வேலையில் காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை, ஒரு நாளுக்கு நான்கு மணி நேரமே வேலை செய்கிறேன். இதன் மூலம் என்னால் வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொள்ள முடிகிறது", என்று அவர் கூறுகிறார்.
தானாவில் உள்ள சம்பாவின் ஒரே ஒரு அறை கொண்ட சிமெண்ட் வீட்டில் உள்ள அலமாரியில் அவரது புகைப்படத்திற்கு அடுத்ததாக இருந்த ஒரு பதாகை: 'தானா கிராம பஞ்சாயத்துத் தலைவராக போட்டியிடுகிறார் சம்பா தேவி (பி. ஏ. பி. எட்)' என்று கூறியது.
2015 ஆம் ஆண்டு நான் கிராம தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன்... 2016 ஆம் ஆண்டு அங்கன்வாடியில் உள்ள பணிக்கும் முயற்சி செய்தேன், என்று அவர் கூறுகிறார். அதே அறையில், ஒரு மூலையில் தையல் இயந்திரம் ஒன்றும் இருந்தது - தூசி படிந்து மற்றும் பழைய துணியால்
மூடப்பட்டு இருந்தது. "நான் இதற்கு முன்னால் தையல் வேலையும் செய்தேன்", என்று சம்பா கூறுகிறார். "கிராமப் பெண்கள் அவர்களது துணியை என்னிடம் கொண்டு வந்து தைக்க கொடுப்பார்கள், நான் அவர்கள் துணியை தைப்பதற்கு இரவு முழுவதும் விழித்திருந்து தைத்துக் கொடுப்பேன்.
அதன் மூலம் மாதத்திற்கு 4,000 ரூபாய் சம்பாதித்து வந்தேன். ஆனால், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு எனது மாமியார் இறந்த பின் எனது கணவர் வீட்டு வேலைகள் அனைத்திற்கும் எனக்கு நேரம் வேண்டும் என்று கூறி என்னை தையல் வேலை செய்வதை நிறுத்தும்படி கட்டாயப்படுத்தினார்", என்று கூறுகிறார்.
அவரது கணவர் விதித்த கட்டுப்பாடுகள் சம்பாவுக்கு 100 நாள் வேலையைத் தவிர வேறு வழியைத் தரவில்லை. அவர் இப்போது இங்கே தங்கி இருக்கவில்லை, மேலும் இப்போதெல்லாம் அவர் உனக்கு என்ன விருப்பமோ அதை செய், ஆனால் வீட்டை கவனித்துக் கொள்ள உன்னால் முடிய வேண்டும் என்று கூறுகிறார்", என்கிறார் சம்பா.
சம்பாவின் கணவர் 30 வயதாகும் ஹுக்கும் ராவத், குஜராத்தில் வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவர் மாதம் சுமார் 10,000 ரூபாய் சம்பாதிக்கிறார். அவர் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தனது கிராமத்திற்கு திரும்பி வருகிறார், திரும்பிச் செல்லும் போது அவர்
சம்பாவிற்கும் அவர்களது இரண்டு மகன்களான 12 வயதாகும் லவி மற்றும் 7 வயதாகும் ஜிகர் ஆகியோருக்கு கொஞ்சம் பணத்தை கொடுத்து விட்டுச் செல்கிறார்.
People's Archive of Rural India
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல்!
(தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர்)
----------------------------------------------------------------
ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அந்த இளைஞர் ஒரு பிரபல கல்லூரி நேர்காணலுக்குச் செல்கிறார். நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. கூறப்பட்ட காரணம், “நீங்கள் இந்திவழியில் கற்றவர்” என்பதுதான்.
அந்த இளைஞர் பதற்றப்படாமல் சொல்கிறார்,
“ஓ, அப்படியா... சரி நீங்கள் எனக்கு காரணத்தை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தாருங்கள். அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு நான் ராஷ்டிரபதி பவனுக்குச் செல்கிறேன். நான் இந்தியில் படித்ததால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று கூறுகிறேன். பன்மைத்துவமான
தமிழர்கள் இப்படி சோம்பேறிகளானதின் விளைவாக தமிழகத்தில் இன்று பீகார், அசாம், மேற்குவங்காளம் போன்ற வடமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகிவிட்டது.
பயனாளியின் தினக்கூலி அதிகபட்சம் ரூ.148 ஆகும். அதாவது 1.20 கனமீட்டர் மண்ணை வெட்டி எடுத்தால் மட்டுமே ரூ.148 கிடைக்கும். (ஒரு கனமீட்டர் என்பது 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 1 மீட்டர் ஆழம் கொண்டதாகும்.)
தற்போதைய கூலிரூ.229…..
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் – (NREGS) ஆகஸ்ட் 25, 2005 ல், சட்டமானது அதை தொடர்ந்து பிப்ரவரி 6,2006ல், 100நாள் வரை நடைமுறைக்கு வந்தது…
ஆங்கிலத்திலே இரண்டு சொற்கள் உண்டு. பாப்புலர் என்றும் நொட்டோரியஸ்
என்றும் குறிப்பிடுவார்கள். நல்ல விதத்தில், நல்லமுறையில், நல்ல காரணங்களுக்காக மக்களிடம் அறிமுகமானவர்களை பாப்புலர் என்று சொல்கிறார்கள்.
தவறான காரணங்களுக்காக, வேறு வித்தியாசமான முறையில் மக்களிடம் அறிமுகமானவர்களை நொட்டோரியஸ் என்று சொல்கிறார்கள். அப்படி ரொம்பவும் நொட்டோரியஸ் என்று சொல்லக் கூடிய அளவுக்கு உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒருவர் கோயபல்ஸ். கோயபல்ஸ் என்ற பெயரை நாம் அத்தனை பேரும் கேள்விப்பட்டிருக்கிறோம்.
சீமான் என்ன ஜாதி? நாங்குநேரியில் நாம் தமிழரை சம்பவம் செய்த ஹரிநாடார் உடைத்த ரகசியம்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாங்குநேரி தேர்தலில் சாதிய வாக்குகளை பயன்படுத்த எண்ணினார் என்று ஹரி நாடார் குற்றம்சாட்டி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளிலும், புதுச்சேரியில் காமராஜர் நகரிலும் இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தமிழகத்தில் இருந்த 2 தொகுதிகளிலும் தொடக்கத்திலிருந்தே அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்நிலையில் அதிமுக வேட்பாளரான ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி பெற்றார். 2-வது இடத்தை காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரூபி மனோகரன் பெற்றார்.
மிகவும் சுவாரஸ்யமானதாக நாம் தமிழர் கட்சியை காட்டிலும் நாங்குநேரியில் சுயேட்சையாக போட்டியிட்ட ஹரிநாடார் அதிகமான வாக்குகளை பெற்றார்.