உலக பணக்காரர்கள் 1000 பேர் வரிசையில் ஆயிரத்தின் அருகில் இருப்பவர் நைஜீரியாவை சேர்ந்த பெமி ஓடெடோலா ஆனால் அவர் தான் மிகவும் மகிழ்ச்சியான பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர்...
அவர் ஒரு நேர்காணலில் ஃபெமி ஓடெடோலாவை தொகுப்பாளர் பேட்டி எடுத்தார்...
"உங்களை வாழ்க்கையில் மகிழ்ச்சியான மனிதராக மாற்றியது என்ன?" என்ற கேள்விக்கு ..
ஃபெமி கூறினார்:
"நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் 4 நிலைகளை கடந்து விட்டேன், இறுதியாக உண்மையான மகிழ்ச்சியின் அர்த்தத்தை புரிந்துகொண்டேன்."
1.முதல் கட்டமாக செல்வத்தையும் வழிமுறைகளையும் குவிப்பதாக இருந்தது. ஆனால் இந்த கட்டத்தில் நான் விரும்பிய மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவில்லை.
2.பின்னர் மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் பொருட்களை சேகரிக்கும் இரண்டாம் கட்டம் வந்தது. ஆனால் இந்த விஷயத்தின் விளைவும் தற்காலிகமானது என்பதை நான் உணர்ந்தேன், மதிப்புமிக்க பொருட்களின் மீதான ஈர்ப்பு நீண்ட காலம் நீடிக்காது.
3.பின்னர் பெரிய திட்டங்களைப் பெறுவதற்கான மூன்றாம் கட்டம் வந்தது. நைஜீரியா மற்றும் ஆபிரிக்காவில் 95% டீசல் விநியோகத்தை நான் வைத்திருந்தேன்.
ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் நான் மிகப்பெரிய கப்பல் உரிமையாளராக இருந்தேன். ஆனால் இங்கே கூட நான் கற்பனை செய்த மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவே இல்லை.
4. இறுதிக்காலத்தில் தான் யதார்த்தமாக என் நண்பன் அவனுக்கு தெரிந்த பள்ளியில் ஊனமுற்ற குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி வாங்கி கொடுக்க சொன்னான், சுமார் 200 குழந்தைகள்.
என் நண்பனே கேட்டதற்காக நானும் உடனடியாக சக்கர நாற்காலிகள் வாங்கினேன்.
ஆனால் நண்பனோ நானும் அவனுடன் சென்று சக்கர நாற்காலிகளை குழந்தைகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினான். சரி நானும் மனமாறுதலுக்காக அவருடன் சென்றேன்.
அங்கே நான் சக்கர நாற்காலிகளை குழந்தைகளுக்கு என் சொந்த கைகளால் கொடுத்தேன். அப்போது அந்த குழந்தைகளின் முகங்களில் விசித்திரமான பிரகாசத்தை நான் கண்டேன். அவர்கள் அனைவரும் சக்கர நாற்காலிகளில் உட்கார்ந்து, சுற்றி நகர்ந்து வேடிக்கை பார்த்தனர்.
அவர்களின் ஆனந்தத்தை என்னால் விவரிக்கவே முடியவில்லை... அது
எனக்குள் ஏதோ சொல்லமுடியாத அற்புதத்தை உணர்ந்தேன். எல்லாம் முடிந்து நான் வெளியேற முடிவு செய்த போது குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை என் கால்களை மிகசெல்லமாக பிடித்து கொண்டது,
நான் சிரித்து கொண்டே என் கால்களை மெதுவாக விடுவிக்க முயன்றேன், ஆனால் குழந்தை என் முகத்தை உற்றுப் பார்த்து கொண்டே விடாமல் இறுக பிடித்து கொண்டது
நான் குனிந்து குழந்தையிடம் கேட்டேன்: உனக்கு வேறு ஏதாவது வேணுமா?
இந்த குழந்தை எனக்கு அளித்த பதில் மிகுந்த திருப்தியை தந்து வாழ்க்கையைப் பற்றிய எனது அணுகு முறையையும் முற்றிலுமாக மாற்றியது.
அந்த குழந்தை கூறியது இது தான்:
"நான் உங்கள் முகத்தை நினைவில் வைக்க விரும்புகிறேன், உங்களை சொர்க்கத்தில் சந்திக்கும் போது,
உங்களுக்காக கடவுளிடம் பேசி நான் உங்களுக்கு பிடித்ததை வாங்கி தருகிறேன் என்று சொல்லி அந்த சக்கர நாற்காலியில் ஏறி மற்ற குழந்தைகளுடன் விளையாட சென்று விட்டது... தெய்வத்தின் அருளை நான் அன்று தான் முழுமையாக உணர்ந்தேன்....
🙏🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கடந்த 20 ஆண்டுகளில் மாணவர்கள் பெற்ற பட்டத்தால் பயன் இல்லை: தலிபான்கள் அடாவடி
காபூல்: 'ஆப்கனில் கடந்த 2000 முதல் 2020ம் ஆண்டு வரை பள்ளி, கல்லூரி, பல்கலைகளில் மாணவர்கள் பெற்ற பட்டத்தால் எந்தப் பயனும் இல்லை' என, தலிபான்கள் தெரிவித்து உள்ளனர்.
ஆப்கனில் இருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறியவுடன் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின் ஆண்கள் தாடியை குறைக்கவோ, மழிக்கவோ கூடாது என்றும்; பெண் குழந்தைகள் பள்ளிக்கு வரக்கூடாது என்றும் பல்வேறு அடாவடி உத்தரவுகளை தலிபான்கள் பிறப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் தலிபான்களின் கல்வித்துறை அமைச்சர் அப்துல் பாகி ஹக்கானி செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளதாவது:
சோ ராமசாமி (Cho Ramaswamy, அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016), பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் என பல்வேறு பொறுப்புகளை மேற்கொண்டவர்.
சோ என அழைக்கப்பட்டவர். துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் 'அரசியல் நையாண்டி' எழுத்துக்கள் இவருக்கு 'பத்திரிக்கை உலகில்' தனி இடம் வகுத்துத் தந்தது.
சோ ராமசாமி சென்னையில் பிறந்தவர். இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும்,
'சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., அளித்த 505 வாக்குறுதிகளில், 202 வாக்குறுதிகளை, பதவிக்கு வந்த 142 நாட்களில் நிறைவேற்றி விட்டோம்.
இது மாதிரி மகத்தான சாதனைகளை, இந்தியாவில் வேறு எந்த மாநில அரசும் செய்ததில்லை' என தம்பட்டம் அடித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
தி.மு.க.,வின் 'ஸ்பெஷாலிட்டி' என்ன தெரியுமோ?'சொன்னதையும் செய்தோம்; சொல்லாததையும் செய்தோம்' என, 'புருடா'க்களை அள்ளி விடுவது தான்!பெட்ரோல் விலையை 5 ரூபாய் குறைப்பதாக சொன்னவர்கள், 3 ரூபாய் மட்டுமே குறைத்தனர். டீசல் விலையை 3 ரூபாய் குறைப்பதாக சொன்ன வாக்குறுதியை மறந்து விட்டனர்.
அருள்மிகு சுப்பிரமணிய சாமி (திருமலை அமரர் பதிகாத்த நயினார்) திருக்கோயில், தோவாளை, கன்னியாகுமரி
🇮🇳🙏1
சஷ்டி விழாவின் போது முதல்நாள் பாலமுருகன் வடிவத்திலும், சிவபெருமான் வடிவத்திலும், இரண்டாவது நாள், மூன்றாவது நாள் அர்த்தநாரீஸ்வரர் வடிவத்திலும், 4-வது நாள் சங்கர நாராயணன் வடிவத்திலும், 5-வது நாள் சக்தியின் வடிவத்திலும், 🇮🇳🙏2
6-வது நாள் போர்க்கோல முருகன் வடிவத்திலும் மூலவர் அலங்காரம் செய்யப்படுவார். வேறு நாட்களில் பக்தர்களின் வேண்டுதலுக்கேற்ப வேலன், வேடன், விருத்தன் ஆகிய கோலங்களில் மூலவரை அலங்கரிப்பதும் உண்டு. 🇮🇳🙏3
அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருப்பதிசாரம், கன்னியாகுமரி
நம்மாழ்வாரின் தாயார் பிறந்ததலம் :
திருமாலின் அம்சமான நம்மாழ்வாரைப் பெற்றெடுத்த தாய் பிறந்த பெருமை இத்திருப்பதிக்கே உரியது. 🙏🇮🇳1
குறுநாட்டுக் காரிமாறன் என்ற சிற்றரசனுக்கும், நாஞ்சில் நாட்டுத் திருவண்பரிசாரத்திலிருந்த (திருப்பதிசாரம்) திருவாழிமார்ப பிள்ளை மகளான உதயநங்கைக்கும் மணமகள் இல்லத்தில் திருமணம் நடந்தது. 🙏🇮🇳2
பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதது கண்டு வருந்திய தம்பதிகள் மகேந்திரகிரியின் அடிவாரத்திலுள்ள திருக்குறுங்குடி சென்று, அதன் வழியே ஓடும் நதியிலே நீராடி, அங்கு எழுந்தருளியிருக்கும் நம்பியிடம் குழந்தை வேண்டி நின்றனர். 🙏🇮🇳3