1. கொலுவில் பொம்மைகளுக்கிடையே இடைவெளி இருக்க வேண்டும்.
2. ஒரு படிக்கு பத்து பொம்மைகளுக்கு மேல் அனுமதியில்லை.
3. ஏழு படிகளுக்குமேல் அனுமதி இல்லை.
4. சிறப்பு அனுமதியாக தசாவதாரம் செட்டுக்கு தனிப்படி(!) அனுமதி உண்டு.
பத்து பேரும் ஒருவரே என்பதால் சமூக இடைவெளி தேவையில்லை.
5. பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அனுமதி அளித்திருப்பதால் கீதோபதேசம் செட் வைக்க அனுமதி வழங்கப்படுகிறது. உபதேசம் செய்பவர், பெறுபவர் ஆகிய இருவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். கீதோபதேசக் காட்சி தமிழில் இருக்கவேண்டும்.
6. மொத்த பொம்மைகள் அதிக பட்சம் ஐம்பது மட்டுமே இருக்கலாம்.
7. சுண்டல் வழங்கப்படலாம். ஆனால் அவை சானிடைசரால் அலம்பப்பட்டிருக்க வேண்டும்.
8. பீச் பார்க் ஆகியவை கட்டலாம். அவை காலியாக இருக்கவேண்டியது அவசியம்.
9. அனைத்து விதிகளும் சரிவர பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்க
ஒவ்வொரு படியிலும் உங்கள் செலவில் இரண்டு போலீஸ் பொம்மைகள் வைக்கப்பட வேண்டும். போலீஸ் பொம்மைகள் மேலே சொன்ன ஐம்பது பொம்மைகள் கணக்கில் சேர்க்கப்படமாட்டாது.
10. முக்கிய குறிப்பு: போலீஸ் பொம்மையின் காலடியில் அவரவர் விதிமீறலுக்கேற்ப நிஜ நூறு ரூபாய் நோட்டுகளை வைக்கலாம்.
அனைவருக்கும் இனிய பொம்மைத்திருநாள் வாழ்த்துகள்
பின்குறிப்பு: கொலுவுக்கு படிகளாக உபயோகப்படும் கம்ப்யூட்டர் டேபிள், அட்டை டப்பா, ஸ்டூல், டைனிங் டேபிள் போன்றவற்றை யாரேனும் ஆக்கிரமித்திருந்தால் இந்து சமய அறநிலையத் துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.
அதிகாரிகள் விரைந்து வந்து ஆக்கிரமிப்புகளை நீக்கி படிகளைக் கையகப்படுத்தித் தருவார்கள்.
****
மேலே சொன்ன விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.
இந்த அரசாங்கத்தின் நடவெடிக்கைகள் வைத்து பார்த்தால், இப்படி வருமோ என்று ஒரு சிந்தனை.
நீங்கள் என்ன நினக்கிறீர்கள்.
திவஸம், தர்ப்பணம் முதலான பித்ரு காரியங்களும் பரோபகாரத்தைச் சேர்ந்தவைதான் என்று நிறையச் சொல்லியாயிற்று. சிராத்தம் முதலானவை பித்ருக்கள் எங்கே, எப்படிப்பட்ட ஜன்மா எடுத்திருந்தாலும் அங்கே அவர்களுக்கு த்ருப்தி உண்டாக்கும் என்று சொன்னேன்.
ஒருத்தர்
செத்துப் போனவுடனேயே பித்ரு லோகம்போய் விடுவதில்லை; இன்னொரு ஜன்மா எடுத்து விடுவதில்லை; இறந்து போனவனின் ஜீவன் ஒரு வருஷம் பிரயாணம் பண்ணித்தான் பித்ரு ஸ்தானத்தை அடைகிறது. இதை நம் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிற மாதிரியே க்ரீக் மைதாலஜி முதலான மதாந்தரங்களிலும் சொல்லியிருக்கிறது.
ஜீவன் வைதரணி நதியைக் கடந்து யம பட்டணம் போகவேண்டும் என்று நாம் சொல்கிற மாதிரியே அவர்களும் ஒரு நதியை (Styx) சொல்லி அதைத் தாண்டி மறுலோகத்துக்கு (Hades) போக வேண்டும் என்கிறார்கள். நாம் சொல்கிற மாதிரியே யம பட்டணத்தில் இருக்கிற காவல் நாய்போல அவர்களும் ஒன்றை [Cerberus] சொல்கிறார்கள்.
"தேவைப்படாத நகைகளை அந்தத் தெய்வத்திற்கு, பயன்பாட்டிற்குத் தேவையில்லை என்று கருதுகின்ற நகைகளை, உடைந்த நகைகளை, சிறு சிறு நகைகளை - மும்பையில் இருக்கின்ற ஒன்றிய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி, அதிலிருந்து பெறப்படுகின்ற தங்கக்கட்டிகளை,
தங்க வைப்பு நிதியில் வைத்து அதில் கிடைக்கின்ற வட்டி தொகையை முழுமையாக தெய்வத் திருப்பணிகளுக்கு, திருக்கோவில்கள் வளர்ச்சிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டு இருக்கின்றோம்" : அமைச்சர் சேகர்பாபு.
தேவைப்படாத நகைகள் என்ற ஒன்று இல்லவே இல்லை. எப்போது பக்தர்கள் அதை காணிக்கையாக
ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு செலுத்தி விட்டார்களோ, அப்போதிலிருந்து அது அந்த கோவிலின் சொத்தாகி விடுகிறது. அந்த சொத்தை நிர்வகிக்க அறங்காவலர்களுக்கு மட்டுமே நிர்வகிக்க உரிமை உள்ளது. ஆனால், அந்த சொத்தை வேறு ஒருவருக்கு கொடுக்க எந்த உரிமையும் இல்லை. ஆகையால் அந்த கோவில் நகைகளின் மூலம்